Check out the new design

Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - Përkthimi tamilisht - Omer Sherif * - Përmbajtja e përkthimeve

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

Përkthimi i kuptimeve Surja: En Nur   Ajeti:
اِنَّ الَّذِیْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ ؕ— لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّكُمْ ؕ— بَلْ هُوَ خَیْرٌ لَّكُمْ ؕ— لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ ۚ— وَالَّذِیْ تَوَلّٰی كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِیْمٌ ۟
நிச்சயமாக (நபியின் மனைவியின் மீது) இட்டுக்கட்டியவர்கள் உங்களில் உள்ள ஒரு குழுவினர்தான். அதை உங்களுக்கு தீமையாக கருதாதீர்கள். மாறாக, அதுவும் உங்களுக்கு ஒரு நன்மைதான். அவர்களில் ஒவ்வொருவருக்கும் - பாவத்தில் அவர் எதை செய்தாரோ - அதனுடைய தண்டனை உண்டு. இன்னும், அவர்களில் யார் அதில் (-இட்டுக்கட்டுவதில்) பெரியதை பொறுப்பெடுத்து செய்தாரோ (-இந்த பழியை அதிகம் பரப்பினாரோ) அவருக்கு பெரிய தண்டனை உண்டு.
Tefsiret në gjuhën arabe:
لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَیْرًا ۙ— وَّقَالُوْا هٰذَاۤ اِفْكٌ مُّبِیْنٌ ۟
நீங்கள் அதைக் கேட்டபோது நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி (-தங்களில் யார் மீது ஆதாரமின்றி இட்டுக்கட்டப்பட்டதோ அவரைப் பற்றி) நல்லதை எண்ணியிருக்க வேண்டாமா! இன்னும், இது தெளிவான இட்டுக்கட்டப்பட்ட (பொய்யான) செய்தியாகும் என்று சொல்லியிருக்க வேண்டாமா!
Tefsiret në gjuhën arabe:
لَوْلَا جَآءُوْ عَلَیْهِ بِاَرْبَعَةِ شُهَدَآءَ ۚ— فَاِذْ لَمْ یَاْتُوْا بِالشُّهَدَآءِ فَاُولٰٓىِٕكَ عِنْدَ اللّٰهِ هُمُ الْكٰذِبُوْنَ ۟
அவர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா! ஆக, அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லை எனில் அவர்கள்தான் அல்லாஹ்விடம் பொய்யர்கள் ஆவார்கள்.
Tefsiret në gjuhën arabe:
وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ لَمَسَّكُمْ فِیْ مَاۤ اَفَضْتُمْ فِیْهِ عَذَابٌ عَظِیْمٌ ۟ۚ
இம்மையிலும் மறுமையிலும் உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் கருணையும் இல்லாதிருந்தால் நீங்கள் எதில் ஈடுபட்டீர்களோ அதன் காரணமாக உங்களுக்கு பெரிய தண்டனை கிடைத்திருக்கும்.
Tefsiret në gjuhën arabe:
اِذْ تَلَقَّوْنَهٗ بِاَلْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَفْوَاهِكُمْ مَّا لَیْسَ لَكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَیِّنًا ۖۗ— وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِیْمٌ ۟
ஏனெனில், நீங்கள் உங்கள் நாவுகளால் அதை உங்களுக்குள் (ஒருவர் மற்றவருக்கு) அறிவித்துக் கொண்டீர்கள். இன்னும், உங்களுக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதை உங்கள் வாய்களால் கூறுகிறீர்கள். இன்னும், அதை மிக இலகுவாக (-சாதாரணமாக) கருதுகிறீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் மிகப்பெரியதாக இருக்கிறது.
Tefsiret në gjuhën arabe:
وَلَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ مَّا یَكُوْنُ لَنَاۤ اَنْ نَّتَكَلَّمَ بِهٰذَا ۖۗ— سُبْحٰنَكَ هٰذَا بُهْتَانٌ عَظِیْمٌ ۟
இன்னும், அதை நீங்கள் கேள்வியுற்றபோது, “இதை நாங்கள் பேசுவது எங்களுக்கு ஆகுமானதல்ல, அல்லாஹ்வே! நீ மிகப் பரிசுத்தமானவன், இது பெரிய அபாண்டமான பேச்சாகும்” என்று நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா!
Tefsiret në gjuhën arabe:
یَعِظُكُمُ اللّٰهُ اَنْ تَعُوْدُوْا لِمِثْلِهٖۤ اَبَدًا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟ۚ
நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு செயலின் பக்கம் நீங்கள் மீள்வதிலிருந்து (நீங்கள் விலகி இருக்க வேண்டும் என்று) அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான்.
Tefsiret në gjuhën arabe:
وَیُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
இன்னும், அல்லாஹ் உங்களுக்கு (தனது) வசனங்க(ள் வாயிலாக தேவையான மார்க்க சட்டங்க)ளை விவரிக்கிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
Tefsiret në gjuhën arabe:
اِنَّ الَّذِیْنَ یُحِبُّوْنَ اَنْ تَشِیْعَ الْفَاحِشَةُ فِی الَّذِیْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۙ— فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
நிச்சயமாக (விபச்சாரம், ஆபாசங்கள், பழிபோடுதல் போன்ற) அசிங்கமான செயல்(கள்) நம்பிக்கையாளர்களுக்கிடையில் பரவுவதை எவர்கள் விரும்புவார்களோ அவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனை இம்மையிலும் மறுமையிலும் உண்டு. அல்லாஹ்தான் (உங்களுக்கு நன்மை தரும் சட்டங்களை) நன்கறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
Tefsiret në gjuhën arabe:
وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟۠
அல்லாஹ்வின் அருளும் அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால், இன்னும், நிச்சயமாக அல்லாஹ் மிக இரக்கமுள்ளவனாகவும் மகா கருணையுள்ளவனாகவும் இல்லாதிருந்தால் (அல்லாஹ்வின் தண்டனையால் நீங்கள் அழிந்து போயிருப்பீர்கள்).
Tefsiret në gjuhën arabe:
 
Përkthimi i kuptimeve Surja: En Nur
Përmbajtja e sureve Numri i faqes
 
Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - Përkthimi tamilisht - Omer Sherif - Përmbajtja e përkthimeve

Përkthyer nga shejkh Umer Sherif bin Abdul-Selam.

Mbyll