Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

மர்யம்

external-link copy
1 : 19

كٓهٰیٰعٓصٓ ۟

காஃப், ஹா, யா, ஐன், ஸாத். info
التفاسير:

external-link copy
2 : 19

ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهٗ زَكَرِیَّا ۟ۖۚ

(இது,) உமது இறைவன் தன் அடியார் ஸகரிய்யாவுக்கு அருள் புரிந்ததை நினைவு கூர்வதாகும். info
التفاسير:

external-link copy
3 : 19

اِذْ نَادٰی رَبَّهٗ نِدَآءً خَفِیًّا ۟

அவர் தன் இறைவனை மறைவாக அழைத்தபோது, info
التفاسير:

external-link copy
4 : 19

قَالَ رَبِّ اِنِّیْ وَهَنَ الْعَظْمُ مِنِّیْ وَاشْتَعَلَ الرَّاْسُ شَیْبًا وَّلَمْ اَكُنْ بِدُعَآىِٕكَ رَبِّ شَقِیًّا ۟

அவர் கூறினார்: என் இறைவா! நிச்சயமாக நான் எலும்பு என்னில் பலவீனமடைந்து விட்டது. தலை நரையால் வெளுத்து விட்டது. என் இறைவா! உன்னிடம் (நான்) பிரார்த்தித்ததில் துர்பாக்கியவனாக (பிரார்த்தனை நிராகரிக்கப்பட்டவனாக) நான் ஆகமாட்டேன். info
التفاسير:

external-link copy
5 : 19

وَاِنِّیْ خِفْتُ الْمَوَالِیَ مِنْ وَّرَآءِیْ وَكَانَتِ امْرَاَتِیْ عَاقِرًا فَهَبْ لِیْ مِنْ لَّدُنْكَ وَلِیًّا ۟ۙ

நிச்சயமாக நான் எனக்குப் பின்னால் உறவினர்களைப் பயப்படுகிறேன். என் மனைவி மலடியாக இருக்கிறாள். ஆகவே, எனக்கு உன் புறத்திலிருந்து ஒரு வாரிசைத் தா! info
التفاسير:

external-link copy
6 : 19

یَّرِثُنِیْ وَیَرِثُ مِنْ اٰلِ یَعْقُوْبَ ۗ— وَاجْعَلْهُ رَبِّ رَضِیًّا ۟

அவர் எனக்கும் வாரிசாக ஆகுவார். இன்னும் யஅகூபுடைய கிளையினருக்கும் வாரிசாக ஆகுவார். என் இறைவா! அவரை பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்கு! info
التفاسير:

external-link copy
7 : 19

یٰزَكَرِیَّاۤ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمِ ١سْمُهٗ یَحْیٰی ۙ— لَمْ نَجْعَلْ لَّهٗ مِنْ قَبْلُ سَمِیًّا ۟

ஸகரிய்யாவே! நிச்சயமாக நாம் உமக்கு ஒரு ஆண் குழந்தையைக் கொண்டு நற்செய்தி தருகிறோம். அதன் பெயர் யஹ்யா. இதற்கு முன் அதற்கு ஒப்பானவரை (அந்த பெயர் உடையவரை) நாம் படைக்கவில்லை. info
التفاسير:

external-link copy
8 : 19

قَالَ رَبِّ اَنّٰی یَكُوْنُ لِیْ غُلٰمٌ وَّكَانَتِ امْرَاَتِیْ عَاقِرًا وَّقَدْ بَلَغْتُ مِنَ الْكِبَرِ عِتِیًّا ۟

அவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு எப்படி குழந்தை கிடைக்கும்? என் மனைவி மலடியாக இருக்கிறாள். நானோ முதுமையின் எல்லையை அடைந்து விட்டேன்.” info
التفاسير:

external-link copy
9 : 19

قَالَ كَذٰلِكَ ۚ— قَالَ رَبُّكَ هُوَ عَلَیَّ هَیِّنٌ وَّقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَیْـًٔا ۟

(அல்லாஹ்) கூறினான்: “அப்படித்தான். அது எனக்கு மிக எளிது. திட்டமாக இதற்கு முன்னர் நீர் ஒரு பொருளாக இருக்காதபோது நான் உன்னைப் படைத்திருக்கிறேன்” என்று உம் இறைவன் கூறினான். info
التفاسير:

external-link copy
10 : 19

قَالَ رَبِّ اجْعَلْ لِّیْۤ اٰیَةً ؕ— قَالَ اٰیَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَ لَیَالٍ سَوِیًّا ۟

அவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு ஓர் அத்தாட்சியை ஏற்படுத்து!” அவன் கூறினான்: “மூன்று இரவுகள் (நாட்கள்) நீர் சுகமாக இருக்க, மக்களிடம் பேசாமல் இருப்பதுதான் உமக்கு அத்தாட்சியாகும்.” info
التفاسير:

external-link copy
11 : 19

فَخَرَجَ عَلٰی قَوْمِهٖ مِنَ الْمِحْرَابِ فَاَوْحٰۤی اِلَیْهِمْ اَنْ سَبِّحُوْا بُكْرَةً وَّعَشِیًّا ۟

அவர் தனது மக்களுக்கு முன் தொழுமிடத்திலிருந்து வெளியேறி வந்தார். அவர்களை நோக்கி “காலையிலும் மாலையிலும் (அல்லாஹ்வை) துதியுங்கள்” என்று ஜாடை காண்பித்தார். info
التفاسير: