Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Numri i faqes:close

external-link copy
220 : 2

فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؕ— وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الْیَتٰمٰی ؕ— قُلْ اِصْلَاحٌ لَّهُمْ خَیْرٌ ؕ— وَاِنْ تُخَالِطُوْهُمْ فَاِخْوَانُكُمْ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ ؕ— وَلَوْ شَآءَ اللّٰهُ لَاَعْنَتَكُمْ ؕ— اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟

அநாதைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: அவர்களைச் சீர்திருத்துவது மிக நன்றே! நீங்கள் அவர்களைச் சேர்த்துக் கொண்டால் (அவர்கள்) உங்கள் சகோதரர்களே! சீர்செய்பவனிலிருந்து சீர்கெடுப்பவனை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் நாடினால் உங்களைச் சிரமப்படுத்தி இருப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான் ஆவான். info
التفاسير:

external-link copy
221 : 2

وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰی یُؤْمِنَّ ؕ— وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَیْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ ۚ— وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِیْنَ حَتّٰی یُؤْمِنُوْا ؕ— وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَیْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْ ؕ— اُولٰٓىِٕكَ یَدْعُوْنَ اِلَی النَّارِ ۖۚ— وَاللّٰهُ یَدْعُوْۤا اِلَی الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖ ۚ— وَیُبَیِّنُ اٰیٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟۠

இணைவைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை மணக்காதீர்கள். திட்டமாக, நம்பிக்கையாளரான ஓர் அடிமைப் பெண் இணைவைப்பவளை விடச் சிறந்தவள், அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே! இணைவைக்கும் ஆண்களுக்கு அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் (நம்பிக்கையாளரான பெண்ணை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். திட்டமாக நம்பிக்கையாளரான ஓர் அடிமை இணைவைப்பவனைவிடச் சிறந்தவர், அவர் உங்களைக் கவர்ந்தாலும் சரியே. அவர்கள் (இணைவைப்பவர்கள்) நரகத்திற்கு அழைக்கிறார்கள். அல்லாஹ் தன் கட்டளைக் கொண்டு சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான்; மக்களுக்குத் தன் வசனங்களை அவர்கள் உபதேசம் பெறுவதற்காக விவரிக்கிறான். info
التفاسير:

external-link copy
222 : 2

وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الْمَحِیْضِ ؕ— قُلْ هُوَ اَذًی ۙ— فَاعْتَزِلُوا النِّسَآءَ فِی الْمَحِیْضِ ۙ— وَلَا تَقْرَبُوْهُنَّ حَتّٰی یَطْهُرْنَ ۚ— فَاِذَا تَطَهَّرْنَ فَاْتُوْهُنَّ مِنْ حَیْثُ اَمَرَكُمُ اللّٰهُ ؕ— اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیْنَ وَیُحِبُّ الْمُتَطَهِّرِیْنَ ۟

மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: "அது ஓர் இடையூறாகும். எனவே, மாதவிடாயில் பெண்களை விட்டு விலகிவிடுங்கள். அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களுடன் உறவு கொள்ளாதீர்கள். அவர்கள் முழுமையாகச் சுத்தமாகிவிட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் வாருங்கள்." நிச்சயமாக அல்லாஹ் பாவத்திலிருந்து மீளுபவர்களை நேசிக்கிறான்; பரிசுத்தமானவர்களை நேசிக்கிறான். info
التفاسير:

external-link copy
223 : 2

نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ ۪— فَاْتُوْا حَرْثَكُمْ اَنّٰی شِئْتُمْ ؗ— وَقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّكُمْ مُّلٰقُوْهُ ؕ— وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ ۟

உங்கள் மனைவிகள் உங்களுக்கு விளைநிலங்கள். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் நாடியவாறு வாருங்கள். உங்களுக்காக (நன்மை களை) முற்படுத்துங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக நீங்கள் அவனைச் சந்திக்கக்கூடியவர்கள் என்பதையும் அறியுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. info
التفاسير:

external-link copy
224 : 2

وَلَا تَجْعَلُوا اللّٰهَ عُرْضَةً لِّاَیْمَانِكُمْ اَنْ تَبَرُّوْا وَتَتَّقُوْا وَتُصْلِحُوْا بَیْنَ النَّاسِ ؕ— وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟

நீங்கள் நன்மை செய்ய மாட்டீர்கள். அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்கள் மற்றும் மக்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்ய மாட்டீர்கள் என்ற உங்கள் சத்தியங்களுக்கு வலுவாக அல்லாஹ்வை ஆக்காதீர்கள். அல்லாஹ் செவியுறுபவன், மிக அறிபவன். info
التفاسير: