Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Numri i faqes:close

external-link copy
265 : 2

وَمَثَلُ الَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ وَتَثْبِیْتًا مِّنْ اَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ اَصَابَهَا وَابِلٌ فَاٰتَتْ اُكُلَهَا ضِعْفَیْنِ ۚ— فَاِنْ لَّمْ یُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟

தங்கள் செல்வங்களை அல்லாஹ்வின் திருப்தியைத் தேடியும் தங்கள் உள்ளங்களில் (இறை நம்பிக்கையை) உறுதிப்படுத்துவதற்காகவும் தர்மம் புரிகிறவர்களின் (தர்மத்திற்கு) உதாரணம், உயர்ந்த பூமி(யாகிய மலை)யிலுள்ள ஒரு தோட்டத்தின் உதாரணத்தைப் போன்றாகும். அதை அடைமழை அடைந்தது. ஆகவே, அது இரு மடங்குகளாக தன் பலனைத் தந்தது. அதைப் பெருமழை அடையாவிட்டாலும் சிறு தூறல் (அடைவது போதும்). அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன். info
التفاسير:

external-link copy
266 : 2

اَیَوَدُّ اَحَدُكُمْ اَنْ تَكُوْنَ لَهٗ جَنَّةٌ مِّنْ نَّخِیْلٍ وَّاَعْنَابٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ— لَهٗ فِیْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِ ۙ— وَاَصَابَهُ الْكِبَرُ وَلَهٗ ذُرِّیَّةٌ ضُعَفَآءُ ۖۚ— فَاَصَابَهَاۤ اِعْصَارٌ فِیْهِ نَارٌ فَاحْتَرَقَتْ ؕ— كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ ۟۠

உங்களில் ஒருவர் தமக்கு பேரிச்சங்கனிகள் இன்னும் திராட்சைகளின் ஒரு தோட்டம் இருந்து, அதன் கீழ் ஆறுகள் ஓட, அதில் எல்லாப் பழங்களும் அவருக்கு இருக்க, முதுமை அவரை அடைந்து, இயலாத குழந்தைகளும் அவருக்கு இருக்க, நெருப்புள்ள புயல் காற்று அதை அடைந்து அது எரித்து விடுவதை விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக, அல்லாஹ் அத்தாட்சிகளை உங்களுக்கு இவ்வாறு விவரிக்கிறான். info
التفاسير:

external-link copy
267 : 2

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِنْ طَیِّبٰتِ مَا كَسَبْتُمْ وَمِمَّاۤ اَخْرَجْنَا لَكُمْ مِّنَ الْاَرْضِ ۪— وَلَا تَیَمَّمُوا الْخَبِیْثَ مِنْهُ تُنْفِقُوْنَ وَلَسْتُمْ بِاٰخِذِیْهِ اِلَّاۤ اَنْ تُغْمِضُوْا فِیْهِ ؕ— وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَنِیٌّ حَمِیْدٌ ۟

நம்பிக்கையாளர்களே! நீங்கள் சம்பாதித்ததிலும், நாம் உங்களுக்கு பூமியிலிருந்து வெளியாக்கியதிலும் உள்ள நல்லவற்றிலிருந்து தர்மம் புரியுங்கள். அதில் கெட்டதை தர்மம் புரிய நாடாதீர்கள். (கெட்டது உங்களுக்கு கொடுக்கப்பட்டால்) கண் மூடியவர்களாகவே தவிர நீங்கள் அதை வாங்குபவர்கள் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா செல்வன், பெரும் புகழாளன் என்பதை அறியுங்கள். info
التفاسير:

external-link copy
268 : 2

اَلشَّیْطٰنُ یَعِدُكُمُ الْفَقْرَ وَیَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ ۚ— وَاللّٰهُ یَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا ؕ— وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟

ஷைத்தான் உங்களுக்கு வறுமையை அச்சுறுத்தி, மானக்கேடான (கஞ்சத்தனத்)தை உங்களுக்கு ஏவுகிறான். அல்லாஹ் (உங்கள் தர்மத்திற்கு) தன்னிடமிருந்து மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் விசாலமானவன், மிக அறிந்தவன். info
التفاسير:

external-link copy
269 : 2

یُّؤْتِی الْحِكْمَةَ مَنْ یَّشَآءُ ۚ— وَمَنْ یُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِیَ خَیْرًا كَثِیْرًا ؕ— وَمَا یَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ ۟

அல்லாஹ், தான் நாடியவர்களுக்கு ஞானத்தை தருகிறான். ஞானம் தரப்படுகிறவர் திட்டமாக அதிக நன்மை தரப்பட்டார். அறிவாளிகளைத் தவிர (பிறர்) உபதேசம் பெறமாட்டார். info
التفاسير: