Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Numri i faqes:close

external-link copy
23 : 27

اِنِّیْ وَجَدْتُّ امْرَاَةً تَمْلِكُهُمْ وَاُوْتِیَتْ مِنْ كُلِّ شَیْءٍ وَّلَهَا عَرْشٌ عَظِیْمٌ ۟

நிச்சயமாக நான் (அங்கு) ஒரு பெண்ணை, அவள் அவர்களை (-அந்நாட்டு மக்களை) ஆட்சி செய்கின்றவளாகக் கண்டேன். (ஆட்சிக்கு தேவையான) எல்லாம் அவள் வழங்கப்பட்டு இருக்கிறாள். அவளுக்கு சொந்தமான ஒரு பெரிய (-விலை உயர்ந்த, மதிக்கத்தக்க) அரச கட்டிலும் உள்ளது. info
التفاسير:

external-link copy
24 : 27

وَجَدْتُّهَا وَقَوْمَهَا یَسْجُدُوْنَ لِلشَّمْسِ مِنْ دُوْنِ اللّٰهِ وَزَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِیْلِ فَهُمْ لَا یَهْتَدُوْنَ ۟ۙ

அவளையும் அவளுடைய மக்களையும் அல்லாஹ்வை அன்றி சூரியனுக்கு சிரம் பணிந்து வணங்குகின்றவர்களாக கண்டேன். ஷைத்தான் அவர்களுக்கு அவர்களின் (இந்த இணைவைப்பு) செயல்களை அலங்கரித்து விட்டான். ஆகவே, அவர்களை (நேரான) பாதையிலிருந்து அவன் தடுத்து விட்டான். ஆகவே, அவர்கள் நேர்வழி பெறவில்லை. info
التفاسير:

external-link copy
25 : 27

اَلَّا یَسْجُدُوْا لِلّٰهِ الَّذِیْ یُخْرِجُ الْخَبْءَ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَیَعْلَمُ مَا تُخْفُوْنَ وَمَا تُعْلِنُوْنَ ۟

வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை (-மழை மற்றும் தாவரங்களை) வெளிப்படுத்துகின்ற, இன்னும் நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அறிகின்ற அல்லாஹ்விற்கு அவர்கள் சிரம் பணியாமல் இருப்பதற்காக (அவன் அவர்களது ஷிர்க்கான செயல்களை அலங்கரித்துக் காட்டினான்). info
التفاسير:

external-link copy
26 : 27

اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِیْمِ ۟

அல்லாஹ் -அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை, மகத்தான அர்ஷுடைய அதிபதி (அவன்). info
التفاسير:

external-link copy
27 : 27

قَالَ سَنَنْظُرُ اَصَدَقْتَ اَمْ كُنْتَ مِنَ الْكٰذِبِیْنَ ۟

அவர் (ஸுலைமான்) கூறினார்: நீ உண்மை கூறினாயா? அல்லது பொய்யர்களில் ஆகிவிட்டாயா? என்று நாம் ஆராய்ந்து பார்ப்போம். info
التفاسير:

external-link copy
28 : 27

اِذْهَبْ بِّكِتٰبِیْ هٰذَا فَاَلْقِهْ اِلَیْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَانْظُرْ مَاذَا یَرْجِعُوْنَ ۟

எனது இந்தக் கடிதத்தை எடுத்துச் செல்! இதை அவர்கள் முன் நீ போடு! பிறகு, அவர்களை விட்டு விலகி இரு! அவர்கள் என்ன பதில் தருகிறார்கள் என்று நீ பார்! info
التفاسير:

external-link copy
29 : 27

قَالَتْ یٰۤاَیُّهَا الْمَلَؤُا اِنِّیْۤ اُلْقِیَ اِلَیَّ كِتٰبٌ كَرِیْمٌ ۟

அவள் (-அரசி) கூறினாள்: பிரமுகர்களே! நிச்சயமாக - ஒரு கண்ணியமான கடிதம் என்னிடம் அனுப்பப்பட்டுள்ளது. info
التفاسير:

external-link copy
30 : 27

اِنَّهٗ مِنْ سُلَیْمٰنَ وَاِنَّهٗ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟ۙ

நிச்சயமாக அது ஸுலைமானிடமிருந்து (அனுப்பப்பட்டுள்ளது). நிச்சயமாக (அதில் எழுதப்பட்ட) செய்தியாவது: பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... info
التفاسير:

external-link copy
31 : 27

اَلَّا تَعْلُوْا عَلَیَّ وَاْتُوْنِیْ مُسْلِمِیْنَ ۟۠

என்னிடம் நீங்கள் பெருமை காட்டாதீர்கள்! (முரண்டு பிடித்து கர்வம் கொண்டு என் கட்டளையை மீறி விடாதீர்கள்!) என்னிடம் பணிந்தவர்களாக வந்து விடுங்கள்! info
التفاسير:

external-link copy
32 : 27

قَالَتْ یٰۤاَیُّهَا الْمَلَؤُا اَفْتُوْنِیْ فِیْۤ اَمْرِیْ ۚ— مَا كُنْتُ قَاطِعَةً اَمْرًا حَتّٰی تَشْهَدُوْنِ ۟

அவள் கூறினாள்: பிரமுகர்களே! எனது இந்த காரியத்தில் நீங்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள். நான் ஒரு காரியத்தை நீங்கள் என்னிடம் ஆஜராகி (கருத்து தெரிவிக்கி)ன்ற வரை முடிவு செய்பவளாக இல்லை. info
التفاسير:

external-link copy
33 : 27

قَالُوْا نَحْنُ اُولُوْا قُوَّةٍ وَّاُولُوْا بَاْسٍ شَدِیْدٍ ۙ۬— وَّالْاَمْرُ اِلَیْكِ فَانْظُرِیْ مَاذَا تَاْمُرِیْنَ ۟

அவர்கள் கூறினர்: நாங்கள் (உடல்) பலமுடையவர்கள், (எதிரிகளை தாக்க தேவையான) கடும் வலிமை உடையவர்கள். முடிவு உன்னிடம் இருக்கிறது. ஆகவே, நீ (கருதுவதை அல்லது) உத்தரவிடுவதை நன்கு நீ யோசித்துக்கொள்! info
التفاسير:

external-link copy
34 : 27

قَالَتْ اِنَّ الْمُلُوْكَ اِذَا دَخَلُوْا قَرْیَةً اَفْسَدُوْهَا وَجَعَلُوْۤا اَعِزَّةَ اَهْلِهَاۤ اَذِلَّةً ۚ— وَكَذٰلِكَ یَفْعَلُوْنَ ۟

அவள் கூறினாள்: “நிச்சயமாக மன்னர்கள் ஓர் ஊருக்குள் நுழைந்து விட்டால் அதை சின்னா பின்னப்படுத்தி விடுவார்கள். அந்த ஊர் வாசிகளில் உள்ள கண்ணியவான்களை இழிவானவர்களாக ஆக்கிவிடுவார்கள்.” (ஆகவே, இவர்களும்) அப்படித்தான் செய்வார்கள். info
التفاسير:

external-link copy
35 : 27

وَاِنِّیْ مُرْسِلَةٌ اِلَیْهِمْ بِهَدِیَّةٍ فَنٰظِرَةٌ بِمَ یَرْجِعُ الْمُرْسَلُوْنَ ۟

“நிச்சயமாக நான் அவர்களிடம் (என் அரசவை தூதர்களுடன்) ஓர் அன்பளிப்பை அனுப்புகிறேன். (நான் அனுப்பிய அந்த) தூதர்கள் என்ன பதில் திரும்பக் கொண்டு வருகிறார்கள் என்று பார்க்கிறேன்.” (அதன் பின்னர் முடிவு செய்கிறேன்.) info
التفاسير: