Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Numri i faqes:close

external-link copy
45 : 27

وَلَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا اَنِ اعْبُدُوا اللّٰهَ فَاِذَا هُمْ فَرِیْقٰنِ یَخْتَصِمُوْنَ ۟

திட்டவட்டமாக நாம் ஸமூது (மக்களு)க்கு அவருடைய சகோதரர் ஸாலிஹை (தூதராக) அனுப்பினோம், “நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்” (என்று கட்டளையி டுவதற்காக). ஆனால், அவர்கள் அப்போது தங்களுக்குள் தர்க்கித்துக் கொள்கின்ற இரண்டு பிரிவுகளாக ஆகிவிட்டனர். info
التفاسير:

external-link copy
46 : 27

قَالَ یٰقَوْمِ لِمَ تَسْتَعْجِلُوْنَ بِالسَّیِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ ۚ— لَوْلَا تَسْتَغْفِرُوْنَ اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟

அவர் (ஸாலிஹ்) கூறினார்: என் மக்களே! நன்மைக்கு (இறைவனின் அருளுக்கு) முன்னதாக தீமையை (தண்டனையை) ஏன் அவசரப்படுகிறீர்கள்? அல்லாஹ்விடம் நீங்கள் (எல்லோரும்) பாவமன்னிப்புத் தேடமாட்டீர்களா? நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள். info
التفاسير:

external-link copy
47 : 27

قَالُوا اطَّیَّرْنَا بِكَ وَبِمَنْ مَّعَكَ ؕ— قَالَ طٰٓىِٕرُكُمْ عِنْدَ اللّٰهِ بَلْ اَنْتُمْ قَوْمٌ تُفْتَنُوْنَ ۟

அவர்கள் கூறினர்: “உம்மாலும் உம்முடன் உள்ளவர்களாலும் நாங்கள் துற்சகுணம் அடைந்தோம்.” அவர் கூறினார்: (மாறாக) உங்கள் துன்பத்தின் காரணம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. (உங்கள் செயலுக்கு ஏற்ப அவன் உங்களிடம் நடந்து கொள்கிறான்.) மாறாக, நீங்கள் சோதிக்கப்படுகின்ற மக்கள். info
التفاسير:

external-link copy
48 : 27

وَكَانَ فِی الْمَدِیْنَةِ تِسْعَةُ رَهْطٍ یُّفْسِدُوْنَ فِی الْاَرْضِ وَلَا یُصْلِحُوْنَ ۟

அப்பட்டணத்தில் ஒன்பது பேர் இருந்தனர். அவர்கள் (அங்கு) பூமியில் குழப்பம் செய்தனர், சீர்திருத்தம் செய்யவில்லை. (நன்மை செய்யாமல் பாவம் செய்து வந்தனர்.) info
التفاسير:

external-link copy
49 : 27

قَالُوْا تَقَاسَمُوْا بِاللّٰهِ لَنُبَیِّتَنَّهٗ وَاَهْلَهٗ ثُمَّ لَنَقُوْلَنَّ لِوَلِیِّهٖ مَا شَهِدْنَا مَهْلِكَ اَهْلِهٖ وَاِنَّا لَصٰدِقُوْنَ ۟

அவர்கள் தங்களுக்குள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறினர்: “நிச்சயமாக நாங்கள் அவரையும் அவருடைய குடும்பத்தையும் கொன்று விடுவோம். பிறகு, அவருடைய பொறுப்பாளருக்கு, ‘அவ(ரும் அவ)ரது குடும்பம் கொல்லப்பட்ட இடத்திற்கு நாம் ஆஜராகவில்லை, நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்கள்’ என்று கூறுவோம்.” info
التفاسير:

external-link copy
50 : 27

وَمَكَرُوْا مَكْرًا وَّمَكَرْنَا مَكْرًا وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟

அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர். நாம் ஒரு சூழ்ச்சி செய்தோம். அவர்கள் (நமது சூழ்ச்சியை) உணர மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
51 : 27

فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ مَكْرِهِمْ ۙ— اَنَّا دَمَّرْنٰهُمْ وَقَوْمَهُمْ اَجْمَعِیْنَ ۟

அவர்களின் சூழ்ச்சியின் முடிவு எப்படி ஆகியது என்று (நபியே!) நீர் பார்ப்பீராக! (அதன் முடிவு:) நிச்சயமாக நாம் அவர்களையும் அவர்களின் மக்கள் அனைவரையும் (தரைமட்டமாக) அழித்து விட்டோம். info
التفاسير:

external-link copy
52 : 27

فَتِلْكَ بُیُوْتُهُمْ خَاوِیَةً بِمَا ظَلَمُوْا ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟

இதோ அவர்கள் தீமை செய்ததால் அவர்க(ள் அழிக்கப்பட்ட பின்னர் அவர்க)ளது வீடுகள் வெறுமையாக இருக்கின்றன. அறிகின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. info
التفاسير:

external-link copy
53 : 27

وَاَنْجَیْنَا الَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟

நம்பிக்கை கொண்டவர்களை நாம் பாதுகாத்தோம். அவர்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) அஞ்சிக் கொண்டிருந்தனர். info
التفاسير:

external-link copy
54 : 27

وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْفَاحِشَةَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ ۟

இன்னும் லூத்தையும் (நாம் அனுப்பினோம்). அவர் தம் மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! நீங்கள் மகா அசிங்கமான செயலை செய்கிறீர்கள். (இதன் அசிங்கத்தையும் கேவலத்தையும்) நீங்கள் அறியத்தான் செய்கிறீர்கள். info
التفاسير:

external-link copy
55 : 27

اَىِٕنَّكُمْ لَتَاْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَآءِ ؕ— بَلْ اَنْتُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ ۟

பெண்கள் அன்றி ஆண்களிடமா நீங்கள் இச்சையை தீர்க்கிறீர்கள். மாறாக, நீங்கள் (அல்லாஹ்விற்கு செய்யவேண்டிய கடமையையும் அதை மீறுவதால் உங்களுக்கு நிகழப்போகும் தண்டனையையும்) அறியாத மக்கள் ஆவீர்கள். (என்று கூறினார்). info
التفاسير: