Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - அப்துல் ஹமீத் பாகவி * - மொழிபெயர்ப்பு அட்டவணை

XML CSV Excel API
Please review the Terms and Policies

மொழிபெயர்ப்பு அத்தியாயம்: ஆலஇம்ரான்   வசனம்:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا لَنْ تُغْنِیَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا ؕ— وَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
116. நிச்சயமாக (வேதத்தையுடையவர்களில்) எவர்கள் (மறுமையை) நிராகரிக்கிறார் களோ அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய சந்ததிகளும், (அந்நாளில்) அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து அவர்களை ஒரு சிறிதும் காப்பாற்றி விடாது. அவர்கள் நரகவாசிகள்தான். அதில் என்றென்றும் அவர்கள் தங்கி விடுவார்கள்.
அரபு விரிவுரைகள்:
مَثَلُ مَا یُنْفِقُوْنَ فِیْ هٰذِهِ الْحَیٰوةِ الدُّنْیَا كَمَثَلِ رِیْحٍ فِیْهَا صِرٌّ اَصَابَتْ حَرْثَ قَوْمٍ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَاَهْلَكَتْهُ ؕ— وَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰكِنْ اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
117. இவ்வுலக வாழ்க்கையில் (இஸ்லாமிற்கு எதிராக) அவர்கள் செலவு செய்யும் பொருளின் உதாரணம், ஒரு காற்றைப்போல் இருக்கிறது. அது (அளவு கடந்து) குளிர்ந்து (பனிப்புயலாகித்) தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்ட ஒரு வகுப்பாரின் பயிரில் பட்டு அதை அழித்து விட்டது. அல்லாஹ் இவர்களுக்கு ஒன்றும் தீங்கிழைத்து விடவில்லை. எனினும், இவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
அரபு விரிவுரைகள்:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا بِطَانَةً مِّنْ دُوْنِكُمْ لَا یَاْلُوْنَكُمْ خَبَالًا ؕ— وَدُّوْا مَا عَنِتُّمْ ۚ— قَدْ بَدَتِ الْبَغْضَآءُ مِنْ اَفْوَاهِهِمْ ۖۚ— وَمَا تُخْفِیْ صُدُوْرُهُمْ اَكْبَرُ ؕ— قَدْ بَیَّنَّا لَكُمُ الْاٰیٰتِ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ ۟
118. நம்பிக்கையாளர்களே! உங்(கள் மார்க்கத்தை சேர்ந்தவர்)களையன்றி (மற்றவர்களை) உங்களுக்கு மிக நெருக்கமானவர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. உங்களுக்குத் துன்பம் ஏற்படுவதை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய வாய்(ச் சொற்)களைக் கொண்டே (அவர்களுடைய) பகைமை வெளிப்பட்டுவிட்டது. (உங்களைப் பற்றி) அவர்களுடைய உள்ளங்கள் மறைத்திருப்பவையோ மிகக் கொடியவை. நிச்சயமாக நாம் (அவர்களுடைய) அடையாளங்களை உங்களுக்கு விவரித்துவிட்டோம். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளலாம்.).
அரபு விரிவுரைகள்:
هٰۤاَنْتُمْ اُولَآءِ تُحِبُّوْنَهُمْ وَلَا یُحِبُّوْنَكُمْ وَتُؤْمِنُوْنَ بِالْكِتٰبِ كُلِّهٖ ۚ— وَاِذَا لَقُوْكُمْ قَالُوْۤا اٰمَنَّا ۖۗۚ— وَاِذَا خَلَوْا عَضُّوْا عَلَیْكُمُ الْاَنَامِلَ مِنَ الْغَیْظِ ؕ— قُلْ مُوْتُوْا بِغَیْظِكُمْ ؕ— اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
119. (நம்பிக்கையாளர்களே!) இவர்களையா நீங்கள் நேசிக்கிறீர்கள்! அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் (அவர்களுடைய) வேதங்கள் அனைத்தையும் நம்பிக்கை கொள்கிறீர்கள். (அவர்கள் உங்கள் வேதத்தை நம்பிக்கை கொள்வதில்லை. எனினும்) அவர்கள் உங்களைச் சந்தித்தால், ‘‘(உங்கள் வேதத்தையும்) நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்'' என்று (பொய்) கூறுகின்றனர். உங்களைவிட்டு விலகினாலோ (உங்கள் மீதுள்ள) கோபத்தினால் தங்கள் (கை) விரல்களையே கடித்துக் கொள்கின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘உங்கள் கோபத்திலேயே நீங்கள் சாவீர்களாக! நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிவான்.''
அரபு விரிவுரைகள்:
اِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ ؗ— وَاِنْ تُصِبْكُمْ سَیِّئَةٌ یَّفْرَحُوْا بِهَا ؕ— وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا لَا یَضُرُّكُمْ كَیْدُهُمْ شَیْـًٔا ؕ— اِنَّ اللّٰهَ بِمَا یَعْمَلُوْنَ مُحِیْطٌ ۟۠
120. உங்களுக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அவர்களை வருந்தச் செய்கிறது. உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டாலோ அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே, நீங்கள் பொறுமையுடன் இருந்து (அவர்களை விட்டு) விலகியிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எத்தகைய தீங்கையும் விளைவித்து விடாது. (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய செயல்களை நன்கு சூழ்ந்து கொள்வான்.
அரபு விரிவுரைகள்:
وَاِذْ غَدَوْتَ مِنْ اَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِیْنَ مَقَاعِدَ لِلْقِتَالِ ؕ— وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟ۙ
121. (நபியே!) நீர் உமது குடும்பத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டு(ச் சென்று) நம்பிக்கை கொண்டவர்களை போர்க்களத்தில் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்ப்பீராக!. (அனைத்தையும்) அல்லாஹ் செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
அரபு விரிவுரைகள்:
 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: ஆலஇம்ரான்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - அப்துல் ஹமீத் பாகவி - மொழிபெயர்ப்பு அட்டவணை

அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் பாகவி மூலம் மொழிபெயர்க்கப்பட்டது.

மூடுக