Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - அப்துல் ஹமீத் பாகவி * - மொழிபெயர்ப்பு அட்டவணை

XML CSV Excel API
Please review the Terms and Policies

மொழிபெயர்ப்பு அத்தியாயம்: ஆலஇம்ரான்   வசனம்:
وَاِذْ اَخَذَ اللّٰهُ مِیْثَاقَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ لَتُبَیِّنُنَّهٗ لِلنَّاسِ وَلَا تَكْتُمُوْنَهٗ ؗۗ— فَنَبَذُوْهُ وَرَآءَ ظُهُوْرِهِمْ وَاشْتَرَوْا بِهٖ ثَمَنًا قَلِیْلًا ؕ— فَبِئْسَ مَا یَشْتَرُوْنَ ۟
187. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் ‘‘(உங்களுக்குக் கொடுக்கப்பட்ட) வேதத்தை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அதை மூடி மறைத்துவிடக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (நபியே! அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. (எனினும்) அவர்கள் (தங்களின்) இவ்வுறுதிமொழியைத் தங்கள் முதுகுப்புறமாக எறிந்துவிட்டு இதற்குப் பிரதியாகச் சொற்ப கிரயத்தைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் பெற்றுக்கொண்டது மகா கெட்டதாகும்.
அரபு விரிவுரைகள்:
لَا تَحْسَبَنَّ الَّذِیْنَ یَفْرَحُوْنَ بِمَاۤ اَتَوْا وَّیُحِبُّوْنَ اَنْ یُّحْمَدُوْا بِمَا لَمْ یَفْعَلُوْا فَلَا تَحْسَبَنَّهُمْ بِمَفَازَةٍ مِّنَ الْعَذَابِ ۚ— وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
188. (நபியே!) எவர்கள் தாங்கள் செய்த (அற்ப) காரியத்தைப் பற்றி மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாத (நன்மையான) காரியங்களைப் பற்றியும், (தாம் செய்ததாக மக்கள்) தம்மைப் புகழ்வதை விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்று நிச்சயமாக (ஒரு காலமும்) நீர் எண்ண வேண்டாம். கண்டிப்பாக அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.
அரபு விரிவுரைகள்:
وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠
189. வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அனைத்தின் மீதும் அல்லாஹ் பேராற்றலுடையவன் ஆவான்.
அரபு விரிவுரைகள்:
اِنَّ فِیْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ لَاٰیٰتٍ لِّاُولِی الْاَلْبَابِ ۟ۚۖ
190. வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
அரபு விரிவுரைகள்:
الَّذِیْنَ یَذْكُرُوْنَ اللّٰهَ قِیٰمًا وَّقُعُوْدًا وَّعَلٰی جُنُوْبِهِمْ وَیَتَفَكَّرُوْنَ فِیْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ— رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا ۚ— سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ ۟
191. இவர்கள் நின்ற நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதை ஆராய்ச்சி செய்வார்கள். மேலும், ‘‘எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணாக படைக்கவில்லை. நீ மிகத்தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக!
அரபு விரிவுரைகள்:
رَبَّنَاۤ اِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ اَخْزَیْتَهٗ ؕ— وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ ۟
192. எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ எவர்களை (நரக) நெருப்பில் நுழைத்து விட்டாயோ அவர்களை நிச்சயமாக நீ இழிவுபடுத்திவிட்டாய். (அத்தகைய) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (ஒருவரும்) இல்லை.
அரபு விரிவுரைகள்:
رَبَّنَاۤ اِنَّنَا سَمِعْنَا مُنَادِیًا یُّنَادِیْ لِلْاِیْمَانِ اَنْ اٰمِنُوْا بِرَبِّكُمْ فَاٰمَنَّا ۖۗ— رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَیِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ ۟ۚ
193. எங்கள் இறைவனே! (உன்) தூதரின் அழைப்பை நாங்கள் நிச்சயமாக செவியுற்றோம். (அவர்) எங்களை நம்பிக்கையின்பக்கம் அழைத்து ‘‘உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள்'' என்று கூறினார். நாங்களும் (அவ்வாறே) நம்பிக்கை கொண்டோம். ஆதலால், எங்கள் இறைவனே! நீ எங்கள் குற்றங்களை மன்னிப்பாயாக! எங்கள் பாவங்களை எங்களை விட்டும் அகற்றிடுவாயாக! (முடிவில்) நல்லவர்களுடன் எங்கள் உயிரை கைப்பற்றுவாயாக!
அரபு விரிவுரைகள்:
رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدْتَّنَا عَلٰی رُسُلِكَ وَلَا تُخْزِنَا یَوْمَ الْقِیٰمَةِ ؕ— اِنَّكَ لَا تُخْلِفُ الْمِیْعَادَ ۟
194. எங்கள் இறைவனே! உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்கு தந்தருள் புரிவாயாக! மறுமை நாளில் நீ எங்களை இழிவுபடுத்தி விடாதே! நிச்சயமாக நீ வாக்குறுதி தவறுபவனல்ல'' (என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்.)
அரபு விரிவுரைகள்:
 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: ஆலஇம்ரான்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - அப்துல் ஹமீத் பாகவி - மொழிபெயர்ப்பு அட்டவணை

அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் பாகவி மூலம் மொழிபெயர்க்கப்பட்டது.

மூடுக