Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்கஸஸ்   வசனம்:
وَلَمَّا تَوَجَّهَ تِلْقَآءَ مَدْیَنَ قَالَ عَسٰی رَبِّیْۤ اَنْ یَّهْدِیَنِیْ سَوَآءَ السَّبِیْلِ ۟
28.22. அவர் மத்யனை முன்னோக்கிச் சென்றபோது கூறினார்: “என் இறைவன் நான் வழிதவறிவிடாமல் இருக்க எனக்கு சிறந்த வழியைக் காட்டுவான்.”
அரபு விரிவுரைகள்:
وَلَمَّا وَرَدَ مَآءَ مَدْیَنَ وَجَدَ عَلَیْهِ اُمَّةً مِّنَ النَّاسِ یَسْقُوْنَ ؗ۬— وَوَجَدَ مِنْ دُوْنِهِمُ امْرَاَتَیْنِ تَذُوْدٰنِ ۚ— قَالَ مَا خَطْبُكُمَا ؕ— قَالَتَا لَا نَسْقِیْ حَتّٰی یُصْدِرَ الرِّعَآءُ ٚ— وَاَبُوْنَا شَیْخٌ كَبِیْرٌ ۟
28.23. அவர், நீர் புகட்டும் மத்யனின் நீர் நிலையை அடைந்தபோது அங்கு தங்களின் கால்நடைகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருந்த மக்கள் கூட்டமொன்றைக் கண்டார். அவர்களுக்கு முன்னால் இரண்டு பெண்கள் தங்களின் ஆடுகளை மக்கள் புகட்டும் வரை நீர் நிலையைவிட்டுத் தடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். மூஸா அவர்களிடம் கேட்டார்: “உங்களுக்கு என்னவாயிற்று? ஏன் நீங்களும் மக்களுடன் சேர்ந்து உங்கள் கால்நடைகளுக்கு நீர் புகட்டவில்லை?” அவர்கள் இருவரும் கூறினார்கள்: “தாமதிப்பது எமது வழமை, ஏனெனில் மேய்ப்பாளர்களுடன் கலந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் செல்லும் வரை நாங்கள் எங்களின் ஆடுகளுக்கு நீர் புகட்ட முடியாது. எங்களின் தந்தை வயது முதிர்ந்தவராக இருக்கின்றார். அவரால் நீர் புகட்ட முடியாது. எனவே எங்களின் கால்நடைகளுக்கு நாங்கள் நீர் புகட்ட வேண்டிய நிர்ப்பந்தமாயிற்று.
அரபு விரிவுரைகள்:
فَسَقٰی لَهُمَا ثُمَّ تَوَلّٰۤی اِلَی الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّیْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَیَّ مِنْ خَیْرٍ فَقِیْرٌ ۟
28.24. மூஸா அவர்களின் மீது இரக்கம் கொண்டு அவர்களின் கால்நடைகளுக்கு நீர் புகட்டினார். பின்னர் நிழலின்பால் ஒதுங்கி ஓய்வெடுத்தார். இறைவனிடம் தன் தேவையை சூசகமாகக் கூறி அவர் பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! நிச்சயமாக நீ எனக்கு வழங்கும் எந்த நலவுக்கும் நிச்சயமாக நான் தேவையுடையவனே.”
அரபு விரிவுரைகள்:
فَجَآءَتْهُ اِحْدٰىهُمَا تَمْشِیْ عَلَی اسْتِحْیَآءٍ ؗ— قَالَتْ اِنَّ اَبِیْ یَدْعُوْكَ لِیَجْزِیَكَ اَجْرَ مَا سَقَیْتَ لَنَا ؕ— فَلَمَّا جَآءَهٗ وَقَصَّ عَلَیْهِ الْقَصَصَ ۙ— قَالَ لَا تَخَفْ ۫— نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
28.25. அவர்கள் இருவரும் சென்று தங்களின் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினார்கள். அவர் அவர்களில் ஒருத்தியைமூஸாவை அழைத்து வருமாறு அனுப்பினார். அவள் வெட்கத்தோடு வந்து மூஸாவிடம் கூறினாள்: “நிச்சயமாக நீர் எங்களின் கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டியதற்குக் கூலி வழங்குவதற்காக என் தந்தை உங்களை அழைக்கின்றார்.” மூஸா அந்தப் பெண்களின் தந்தையிடம் வந்தபோது நடந்த எல்லா சம்பவங்களையும் கூறினார். அதற்கு அவர் அவரை அமைதிப்படுத்தி கூறினார்: “பயப்படாதீர். நீர் அநியாயக்கார மக்களான ஃபிர்அவ்னிடமிருந்து அவனுடைய சமூகத்தினரிடமிருந்தும் தப்பிவிட்டீர். ஏனெனில் மத்யன் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. இங்கு அவர்களால் உமக்குத் தீங்கிழைக்க முடியாது.”
அரபு விரிவுரைகள்:
قَالَتْ اِحْدٰىهُمَا یٰۤاَبَتِ اسْتَاْجِرْهُ ؗ— اِنَّ خَیْرَ مَنِ اسْتَاْجَرْتَ الْقَوِیُّ الْاَمِیْنُ ۟
28.26. இரு பெண்களில் ஒருத்தி கூறினாள்: “நம் ஆடுகளை மேய்ப்பதற்கு இவரை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். பலத்தையும் அமானிதத்தையும் ஒருசேர பெற்றுள்ள இவரே நீங்கள் வேலைக்கு அமர்த்துவதற்கு மிகவும் தகுதியானவர். பலத்தினால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியைச் செவ்வனே செய்வார். அமானிதத்தினால் நம்பி ஒப்படைப்பதைப் பாதுகாப்பார்.
அரபு விரிவுரைகள்:
قَالَ اِنِّیْۤ اُرِیْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَی ابْنَتَیَّ هٰتَیْنِ عَلٰۤی اَنْ تَاْجُرَنِیْ ثَمٰنِیَ حِجَجٍ ۚ— فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ ۚ— وَمَاۤ اُرِیْدُ اَنْ اَشُقَّ عَلَیْكَ ؕ— سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰلِحِیْنَ ۟
28.27. அவர்களின் தந்தை மூஸாவிடம் கூறினார்: “நீர் எட்டு ஆண்டுகள் என் ஆடுகளை மேய்க்க வேண்டும் என்பதை மஹராக -மணக்கொடையாக- ஆக்கி இரு பெண்களில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தர விரும்புகிறேன். நீர் பத்து ஆண்டுகள் நிறைவு செய்தால் அது நீர் செய்யும் உபகாரமாகும். உமக்கு கட்டாயம் அல்ல. நிச்சயமாக உடன்படிக்கை எட்டு ஆண்டுகள் தான். அதற்கு மேல் உள்ளவை விரும்பத்தக்கதுதான். உனக்கு சிரமமாக இருப்பதை நான் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் ஒப்பந்தங்களை முறிக்காமல் நிறைவேற்றும் நல்லவர்களில் ஒருவராக என்னை நீர் காண்பீர்.
அரபு விரிவுரைகள்:
قَالَ ذٰلِكَ بَیْنِیْ وَبَیْنَكَ ؕ— اَیَّمَا الْاَجَلَیْنِ قَضَیْتُ فَلَا عُدْوَانَ عَلَیَّ ؕ— وَاللّٰهُ عَلٰی مَا نَقُوْلُ وَكِیْلٌ ۟۠
28.28. மூஸா அவரிடம் கூறினார்: “இதுதான் உமக்கும் எனக்குமுள்ள ஒப்பந்தமாகும். இரண்டு தவணைகளில் எதை நிறைவேற்றினாலும் நான் என்னிடமுள்ள ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றியவனாவேன். எனவே என்னிடம் அதிகமாக வேண்டாதீர். நம்முடைய ஒப்பந்தத்திற்கு அல்லாஹ்வே பொறுப்பாளனாகவும் கண்காணிப்பாளனாகவும் இருக்கின்றான்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• الالتجاء إلى الله طريق النجاة في الدنيا والآخرة.
1. அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுவது இவ்வுலகிலும் மறுவுலகிலும் தப்புவதற்கான வழியாகும்.

• حياء المرأة المسلمة سبب كرامتها وعلو شأنها.
2.முஸ்லிமான பெண்ணின் நாணமே அவளின் கண்ணியத்திற்கும் உயர்வுக்கும் காரணம் ஆகும்.

• مشاركة المرأة بالرأي، واعتماد رأيها إن كان صوابًا أمر محمود.
3. அபிப்பிராயத்தில் பெண்ணும் கலந்துகொண்டு, அவளது ஆலோசனை சரியானதாக இருந்தால் அதன்படி செயல்படுவது புகழத்தக்க விடயமாகும்.

• القوة والأمانة صفتا المسؤول الناجح.
4. பலமும் அமானிதமும் வெற்றிகரமான பொறுப்பாளனின் இரு பண்புகளாகும்.

• جواز أن يكون المهر منفعة.
5. மணக்கொடை பயனாகவும் இருக்கலாம்.

 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்கஸஸ்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு - மொழிபெயர்ப்பு அட்டவணை

வெளியீடு அல்குர்ஆன் ஆய்வுகளுக்கான தப்ஸீர் மையம்

மூடுக