పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - అనువాదాల విషయసూచిక


భావార్ధాల అనువాదం సూరహ్: సూరహ్ అత్-తూర్   వచనం:

ஸூரா அத்தூர்

ఈ సూరహ్ (అధ్యాయం) యొక్క ప్రయోజనాలు:
الحجج والبراهين لرد شبهات المكذبين للنبي صلى الله عليه وسلم.
நபியவர்களை மறுத்தோரின் சந்தேகங்களுக்கு மறுப்புவழங்குவதற்கான சான்றுகளும் ஆதாரங்களும்.

وَالطُّوْرِ ۟ۙ
52.1. அல்லாஹ் எந்த மலை மீதிருந்து மூஸாவுடன் பேசினானோ அந்த மலையைக் கொண்டு சத்தியம் செய்கின்றான்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَكِتٰبٍ مَّسْطُوْرٍ ۟ۙ
52.2,3. எழுதப்பட்ட புத்தகமான குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
فِیْ رَقٍّ مَّنْشُوْرٍ ۟ۙ
(முன்னர்) இறக்கப்பட்ட வேதங்களைப் போன்று விரிக்கப்பட்ட காகிதத்தில்
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَّالْبَیْتِ الْمَعْمُوْرِ ۟ۙ
52.4. வானத்தில் வானவர்கள் அல்லாஹ்வை வணங்குவதன்மூலம் செழிப்பாக்கும் ஆலயத்தைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَالسَّقْفِ الْمَرْفُوْعِ ۟ۙ
52.5. பூமிக்கு முகடாக இருக்கின்ற உயரமான வானத்தைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَالْبَحْرِ الْمَسْجُوْرِ ۟ۙ
52.6. நீரால் நிரம்பியுள்ள கடலைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ ۟ۙ
52.7. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் அளிக்கும் வேதனை நிராகரிப்பாளர்களின்மீது சந்தேகம் இல்லாமல் நிகழ்ந்தே தீரும்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
مَّا لَهٗ مِنْ دَافِعٍ ۟ۙ
52.8. அதனை அவர்களை விட்டும் தடுக்கக்கூடியவரோ, அது அவர்கள் மீது இறங்காமல் தடுப்பவரோ யாரும் இல்லை.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
یَّوْمَ تَمُوْرُ السَّمَآءُ مَوْرًا ۟
52.9. மறுமை நாளை அறிவிக்கும் விதமாக வானம் ஆட்டம் காணும் நாளில்
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَّتَسِیْرُ الْجِبَالُ سَیْرًا ۟ؕ
52.10. மலைகள் அவற்றின் இடங்களிலிருந்து நகர்ந்து செல்லும்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
فَوَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟ۙ
52.11. அந்த நாளில் அல்லாஹ்பொய்ப்பிப்பாளர்களுக்கு வாக்களித்த வேதனையை மறுத்தவர்களுக்கு அழிவும் இழப்புமே உண்டாகும்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
الَّذِیْنَ هُمْ فِیْ خَوْضٍ یَّلْعَبُوْنَ ۟ۘ
52.12. அவர்கள் வீணான விஷயங்களில் மூழ்கி விளையாடிக்கொண்டிருந்தார்கள். மறுமையைக் குறித்தோ மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதைக் குறித்தோ அவர்கள் பொருட்படுத்தவில்லை.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
یَوْمَ یُدَعُّوْنَ اِلٰی نَارِ جَهَنَّمَ دَعًّا ۟ؕ
52.13. அவர்கள் நரக நெருப்பில் பலமாகத் தள்ளப்படும் நாளில்
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
هٰذِهِ النَّارُ الَّتِیْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ ۟
52.14. அவர்களைப் பழிக்கும்விதமாக அவர்களிடம் கூறப்படும்: “இதுதான் உங்களின் தூதர்கள் உங்களுக்கு அச்சமூட்டிய நரகமாகும். இதைத்தான் நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
ఈ పేజీలోని వచనాల ద్వారా లభించే ప్రయోజనాలు:
• الكفر ملة واحدة وإن اختلفت وسائله وتنوع أهله ومكانه وزمانه.
1. நிராகரிப்பு, நிராகரிப்பாளர்கள் பலவாறாக பிரிந்து கிடந்தாலும், அதன் வழிவகைகள், இடங்கள், காலகட்டங்கள் மாறுபட்டாலும் அவை ஒரே மார்க்கம்தான்.

• شهادة الله لرسوله صلى الله عليه وسلم بتبليغ الرسالة.
2. நபியவர்கள் தூதுப்பணியை நிறைவேற்றி விட்டார்கள் என்பதற்கான அல்லாஹ்வே சாட்சி.

• الحكمة من خلق الجن والإنس تحقيق عبادة الله بكل مظاهرها.
3. அல்லாஹ் மனிதர்கள் மற்றும் ஜின்களைப் படைத்த நோக்கம் வணக்க வழிபாட்டின் எல்லா வெளிப்பாடுகளோடும் அவனை வணங்க வேண்டும் என்பதற்காகத்தான்.

• سوف تتغير أحوال الكون يوم القيامة.
4. பிரபஞ்சத்தின் நிலைமைகள் மறுமை நாளில் மாறிவிடும்.

اَفَسِحْرٌ هٰذَاۤ اَمْ اَنْتُمْ لَا تُبْصِرُوْنَ ۟
52.15. நீங்கள் காணும் இந்த வேதனையும் சூனியமா? அல்லது நீங்கள் அதனைப் பார்க்கவில்லையா?
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اِصْلَوْهَا فَاصْبِرُوْۤا اَوْ لَا تَصْبِرُوْا ۚ— سَوَآءٌ عَلَیْكُمْ ؕ— اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
52.16. இந்த நெருப்பின் வெப்பத்தைச் சுவைத்து அனுபவியுங்கள். நீங்கள் அதன் வெப்பத்தை பொறுமையாக சகித்துக் கொள்ளுங்கள் அல்லது சகித்துக் கொள்ளாமலிருங்கள். பொறுமைகொள்வதும் பொறுமை கொள்ளாமல் இருப்பதும் இரண்டும் உங்களுக்கு ஒன்றுதான். இன்றைய தினம் நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த நிராகரிப்பு, பாவங்கள் ஆகியவற்றுக்குத்தான் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّنَعِیْمٍ ۟ۙ
52.17. நிச்சயமாக தங்கள் இறைவனின் -கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி- அவனை அஞ்சக்கூடியவர்கள் சுவனங்களிலும் என்றும் முடிவுறாத மகத்தான அருட்கொடையிலும் இருப்பார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
فٰكِهِیْنَ بِمَاۤ اٰتٰىهُمْ رَبُّهُمْ ۚ— وَوَقٰىهُمْ رَبُّهُمْ عَذَابَ الْجَحِیْمِ ۟
52.18. அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய உணவுப் பொருள்கள், பானங்கள் மற்றும் மண உறவுகளின் இன்பங்களைக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களின் இறைவன் அவர்களை நரக வேதனையிலிருந்து பாதுகாப்பான். அவர்கள் தாங்கள் விரும்பிய இன்பங்களைப் பெற்று கலங்கம் ஏற்படுத்துபவற்றிலிருந்து பாதுகாவல் பெற்று வெற்றி பெறுவார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟ۙ
52.19. அவர்களிடம் கூறப்படும்: “உங்கள் மனம் விரும்புவதை மகிழ்ச்சியாக உண்ணுங்கள், பருகுங்கள், உண்ணுபவற்றினாலோ, பருகுபவற்றினாலோ தீங்கோ, பாதிப்போ ஏற்பட்டு விடும் என்று பயப்படாதீர்கள். இவைகள் நீங்கள் உலகில் செய்த நற்செயல்களுக்கான கூலியாகும்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
مُتَّكِـِٕیْنَ عَلٰی سُرُرٍ مَّصْفُوْفَةٍ ۚ— وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِیْنٍ ۟
52.20. அவர்கள் அலங்கரிக்கப்பட்ட, ஒன்றை ஒன்று முன்னோக்கியதாக இருக்கும் சாய்வு இருக்கைகளில் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். நாம் அவர்களை விசாலமான விழிகளையுடைய வெண்மையான பெண்களுக்கு மணமுடித்து வைப்போம்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَاتَّبَعَتْهُمْ ذُرِّیَّتُهُمْ بِاِیْمَانٍ اَلْحَقْنَا بِهِمْ ذُرِّیَّتَهُمْ وَمَاۤ اَلَتْنٰهُمْ مِّنْ عَمَلِهِمْ مِّنْ شَیْءٍ ؕ— كُلُّ امْرِىۢ بِمَا كَسَبَ رَهِیْنٌ ۟
52.21. நம்பிக்கையாளர்களையும் நம்பிக்கையில் அவர்களைப் பின்பற்றிய அவர்களின் சந்ததியினரையும் அவர்களின் சந்ததியினால் அவர்கள் கண்குளிர்ச்சியடையும் பொருட்டு நாம் ஒன்றுசேர்த்து வைப்போம். அந்த சந்ததியினர் தங்கள் செயல்களின் மூலம் முந்தையவர்களின் நிலையை அடையாவிட்டாலும் சரியே. நாம் அவர்களின் நற்செயல்களின் கூலியில் எதையும் குறைத்துவிட மாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் செய்த தீய செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான். அவனைத்தவிர யாரும் அவனது செயல்களில் எந்த ஒன்றையும் சுமக்க முடியாது.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَاَمْدَدْنٰهُمْ بِفَاكِهَةٍ وَّلَحْمٍ مِّمَّا یَشْتَهُوْنَ ۟
52.22. இந்த சுவனவாசிகளுக்கு பல வகையான பழங்களையும் அவர்கள் விரும்பும் அனைத்துவிதமான மாமிசத்தையும் நாம் வழங்குவோம்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
یَتَنَازَعُوْنَ فِیْهَا كَاْسًا لَّا لَغْوٌ فِیْهَا وَلَا تَاْثِیْمٌ ۟
52.23. அங்கு அவர்களுக்கிடையே மதுக்கிண்ணங்கள் பரிமாறப்படும். அதனைக் குடிப்பதால் உலகில் ஏற்படுவதுபோன்று போதையின் காரணமாக வீணான பேச்சு, பாவமான காரியங்கள் எதுவும் நடைபெறாது.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَیَطُوْفُ عَلَیْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَاَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُوْنٌ ۟
52.24. அவர்களுக்குப் பணிவிடைக்காக நியமிக்கப்பட்ட சிறுவர்கள் அவர்களைச் சுற்றி சுற்றி வருவார்கள். தோல் வெண்மையிலும் தெளிவிலும் அவர்கள் சிப்பியில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள முத்துகளைப் போன்றிருப்பார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَسَآءَلُوْنَ ۟
52.25. சுவனவாசிகள் ஒருவரையொருவர் முன்னோக்குவார்கள். ஒருவர் மற்றவரிடம் உலகில் அவர்களின் நிலையைக் குறித்துக் கேட்பார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
قَالُوْۤا اِنَّا كُنَّا قَبْلُ فِیْۤ اَهْلِنَا مُشْفِقِیْنَ ۟
52.26. அவர்கள் பதிலளிப்பார்கள்: “நிச்சயமாக நாங்கள் உலகில் எங்கள் குடும்பத்தினரிடையே அல்லாஹ்வின் வேதனையை அஞ்சக்கூடியவர்களாக இருந்தோம்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
فَمَنَّ اللّٰهُ عَلَیْنَا وَوَقٰىنَا عَذَابَ السَّمُوْمِ ۟
52.27. அல்லாஹ் எங்கள்மீது அருள்புரிந்து எங்களுக்கு இஸ்லாம் என்னும் நேரான வழியைக் காட்டினான். வெப்பம் மிகுந்த வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றினான்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اِنَّا كُنَّا مِنْ قَبْلُ نَدْعُوْهُ ؕ— اِنَّهٗ هُوَ الْبَرُّ الرَّحِیْمُ ۟۠
52.28. நிச்சயமாக நாங்கள் எங்களின் உலக வாழ்வில் அவனையே வணங்கிக் கொண்டிருந்தோம். நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றும்படி அவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம். நிச்சயமாக அவன் தன் அடியார்களுக்கு வழங்கிய வாக்குறுதியை சிறந்த முறையில் நிறைவேற்றுபவனாகவும் உண்மையாளனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். எம்மீது அவனது நலவு, கருணையினால்தான் அவன் எங்களுக்கு நம்பிக்கையின்பால் வழிகாட்டி எங்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்தான். நரகத்தைவிட்டும் தூரமாக்கினான்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
فَذَكِّرْ فَمَاۤ اَنْتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَّلَا مَجْنُوْنٍ ۟ؕ
52.29. -தூதரே!- குர்ஆனைக் கொண்டு நினைவூட்டுவீராக. அல்லாஹ் உம்மீது நம்பிக்கை மற்றும் அறிவு ஆகியவற்றை அருளியிருப்பதால் நீர் ஜின்னை வைத்து சோதிடம் பார்ப்பவராகவும் இல்லை. பைத்தியகாரராகவும் இல்லை.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اَمْ یَقُوْلُوْنَ شَاعِرٌ نَّتَرَبَّصُ بِهٖ رَیْبَ الْمَنُوْنِ ۟
52.30. அல்லது இந்த பொய்ப்பிப்பாளர்கள் “நிச்சயமாக முஹம்மது தூதர் அல்ல. மாறாக அவர் ஒரு கவிஞர். மரணம் வந்து அவரை வாரிச் சென்றுவிடும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதனால் அவரிலிருந்து நாம் விடைபெற்றுவிடலாம்” என்று கூறுகிறார்களா?
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
قُلْ تَرَبَّصُوْا فَاِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُتَرَبِّصِیْنَ ۟ؕ
52.31. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “என் மரணத்தை எதிர்பாருங்கள். என்னை நீங்கள் பொய்ப்பித்ததனால் நானும் உங்கள் மீது இறங்கப்போகும் வேதனையை எதிர்பார்க்கிறேன்.”
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
ఈ పేజీలోని వచనాల ద్వారా లభించే ప్రయోజనాలు:
• الجمع بين الآباء والأبناء في الجنة في منزلة واحدة وإن قصر عمل بعضهم إكرامًا لهم جميعًا حتى تتم الفرحة.
1. தந்தையரும் அவர்களின் சந்ததியினரும் செயல்களின் அடிப்படையில் சிலர் குறைவானவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் கௌரவித்து, சந்தோசம் முழுமையடைவதற்காக சுவர்க்கத்தில் ஒரே படித்தரத்தில் ஒன்றுசேர்க்கப்படுவார்கள்.

• خمر الآخرة لا يترتب على شربها مكروه.
2. மறுமையில் வழங்கப்படும் மதுவை அருந்துவதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

• من خاف من ربه في دنياه أمّنه في آخرته.
3. யார் உலகில் தம் இறைவனை அஞ்சினாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் பாதுகாப்பு வழங்குவான்.

اَمْ تَاْمُرُهُمْ اَحْلَامُهُمْ بِهٰذَاۤ اَمْ هُمْ قَوْمٌ طَاغُوْنَ ۟ۚ
52.32. மாறாக அவர்களின் அறிவு “நிச்சயமாக அவர் ஒரு ஜோதிடர், பைத்தியக்காரர் என்று கூறத் தூண்டுகிறதா?” அவர்கள் ஒரு மனிதனிடம் சேர்ந்து இருக்க முடியாத விஷயங்களை சேர்த்துக் கூறுகிறார்கள். மாறாக அவர்கள் வரம்புகளை மீறக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே மார்க்கத்தின் பக்கமோ, பகுத்தறிவின் பக்கமோ அவர்கள் திரும்ப மாட்டார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اَمْ یَقُوْلُوْنَ تَقَوَّلَهٗ ۚ— بَلْ لَّا یُؤْمِنُوْنَ ۟ۚ
52.33. அல்லது நிச்சயமாக முஹம்மது இந்தக் குர்ஆனை சுயமாகப் புனைந்துள்ளார். அவருக்கு வஹி அறிவிக்கப்படவில்லை என்று கூறுகிறார்களா? அவர் அதனை சுயமாகப் புனைந்து கூறவில்லை. மாறாக அவர்கள் நம்பிக்கைகொள்ளாமல் கர்வம்கொள்ளும் மக்களாக இருக்கிறார்கள். அதனால் அவர் அதனை சுயமாகப் புனைந்துள்ளார் என்று கூறுகிறார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
فَلْیَاْتُوْا بِحَدِیْثٍ مِّثْلِهٖۤ اِنْ كَانُوْا صٰدِقِیْنَ ۟ؕ
52.34. நிச்சயமாக அவர் அதனை சுயமாகப் புனைந்துள்ளார் என்ற கூற்றில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்கள் அதுபோன்ற செய்தியை புனைந்து கொண்டுவரட்டும்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اَمْ خُلِقُوْا مِنْ غَیْرِ شَیْءٍ اَمْ هُمُ الْخٰلِقُوْنَ ۟ؕ
52.35. அல்லது அவர்கள் அவர்களை படைக்கும் படைப்பாளனின்றி படைக்கப்பட்டார்களா? அல்லது தங்களைத் தாங்களே அவர்கள் படைத்துக் கொண்டார்களா? படைப்பாளனின்றி எந்தப் படைப்பும் உருவாகிவிட முடியாது. யாரும் தம்மை தாமாகப் படைத்துவிட முடியாது. பிறகு ஏன் அவர்கள் தங்களைப் படைத்தவனை வணங்குவதில்லை?
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اَمْ خَلَقُوا السَّمٰوٰتِ وَالْاَرْضَ ۚ— بَلْ لَّا یُوْقِنُوْنَ ۟ؕ
52.36. அல்லது அவர்கள் வானங்களையும் பூமியையும் படைத்தார்களா? மாறாக அல்லாஹ்தான் அவர்களைப் படைத்தான் என்பதை அவர்கள் உறுதியாக நம்பாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அவனை உறுதியாக நம்பியிருந்தால் அவன் ஒருவனையே ஏற்றுக் கொண்டிருப்பார்கள். அவனுடைய தூதரின்மீது நம்பிக்கைகொண்டிருப்பார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اَمْ عِنْدَهُمْ خَزَآىِٕنُ رَبِّكَ اَمْ هُمُ الْمُصَۜیْطِرُوْنَ ۟ؕ
52.37. அல்லது அவர்களிடத்தில் உம் இறைவனின் வாழ்வாதார அருட்களஞ்சியங்கள் இருக்கின்றனவா? அவற்றை அவர்கள் தாம் நாடியவர்களுக்கு வழங்குகிறார்களா? மேலும் நபித்துவத்தையும் தாம் நாடியவர்களுக்கு வழங்கி தாம் நாடியவர்களுக்குத் தடுப்பதற்கு அவர்களிடமா நாட்டம் உள்ளது? அல்லது அவர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப செயற்படும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்களா?
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اَمْ لَهُمْ سُلَّمٌ یَّسْتَمِعُوْنَ فِیْهِ ۚ— فَلْیَاْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ؕ
52.38. அல்லது அவர்களிடத்தில் ஏணி இருந்து அதன்மூலம் அவர்கள் வானத்தில் ஏறி அல்லாஹ் அறிவிக்கும் வஹியைச் செவியுற்று நிச்சயமாக தாங்கள் சத்தியத்தில் இருக்கின்றோம் என்பதை அறிந்துகொண்டார்களா? அவர்களில் அவ்வாறு வஹியைச் செவியுற்றவர் நிச்சயமாக தாங்கள் சத்தியத்தில் இருப்பதாக வாதிடுவதற்குத் தெளிவான ஆதாரத்தைக் கொண்டுவரட்டும்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اَمْ لَهُ الْبَنٰتُ وَلَكُمُ الْبَنُوْنَ ۟ؕ
52.39. அல்லது அவனுக்கு நீங்கள் வெறுக்கும் பெண் பிள்ளைகளா? உங்களுக்கு நீங்கள் விரும்பும் ஆண் பிள்ளைகளா?
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اَمْ تَسْـَٔلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَ ۟ؕ
52.40. -தூதரே!- உம் இறைவனிடமிருந்து நீர் எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக அவர்களிடம் கூலி கேட்கின்றீரா? அதன் காரணமாக அவர்கள் சுமக்க முடியாத அளவுக்கு பொறுப்பு சாட்டப்பட்டு விட்டார்களா?
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اَمْ عِنْدَهُمُ الْغَیْبُ فَهُمْ یَكْتُبُوْنَ ۟ؕ
52.41. அல்லது அவர்களிடத்தில் மறைவான ஞானம் இருந்து அவர்கள் அறியும் மறைவான விடயங்களை மக்களுக்காக எழுதிக் கொண்டிருக்கிறார்களா? அதிலிருந்து தாங்கள் நாடியதை அவர்களுக்கு அறிவிக்கிறார்களா?
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اَمْ یُرِیْدُوْنَ كَیْدًا ؕ— فَالَّذِیْنَ كَفَرُوْا هُمُ الْمَكِیْدُوْنَ ۟ؕ
52.42. அல்லது இந்த பொய்ப்பிப்பாளர்கள் உமக்கு எதிராகவும் உம் மார்க்கத்திற்கு எதிராகவும் சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா? அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொள்வீராக. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்கள்தாம் சூழ்ச்சியால் பாதிக்கப்படுவார்கள். நீர் அல்ல.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اَمْ لَهُمْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ ؕ— سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یُشْرِكُوْنَ ۟
52.43. அல்லது அவர்களுக்கு அல்லாஹ்வைத்தவிர உண்மையான வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இருக்கின்றானா? அவர்கள் இணைத்துக்கூறும் இணைகளிலிருந்து அவன் தூய்மையானவன். மேற்குறிப்பிட்டவை அனைத்தும் நிகழவும் இல்லை. நிகழப்போவதும் சாத்தியமில்லை.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَاِنْ یَّرَوْا كِسْفًا مِّنَ السَّمَآءِ سَاقِطًا یَّقُوْلُوْا سَحَابٌ مَّرْكُوْمٌ ۟
52.44. அவர்கள் வானத்திலிருந்து ஒரு துண்டு கீழே விழுவதைப் பார்த்தாலும் அதைக்குறித்து “வழக்கத்தைப்போன்று ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த மேகங்கள்தான்” என்று கூறுவார்கள். அதனைக் கொண்டு படிப்பினை பெறுவதுமில்லை, நம்பிக்கைகொள்வதுமில்லை.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
فَذَرْهُمْ حَتّٰی یُلٰقُوْا یَوْمَهُمُ الَّذِیْ فِیْهِ یُصْعَقُوْنَ ۟ۙ
52.45. -தூதரே!- அவர்கள் வேதனை செய்யப்படும் நாளான மறுமையைச் சந்திக்கும்வரை அவர்களின் பிடிவாதத்திலும் நிராகரிப்பிலும் அவர்களை விட்டுவிடுவீராக.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
یَوْمَ لَا یُغْنِیْ عَنْهُمْ كَیْدُهُمْ شَیْـًٔا وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟ؕ
52.46. அந்நாளில் அவர்களின் சூழ்ச்சி சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ அவர்களுக்குப் பயனளிக்காது. அவர்கள் வேதனையிலிருந்து காப்பாற்றப்பட்டு உதவிசெய்யப்பட மாட்டார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَاِنَّ لِلَّذِیْنَ ظَلَمُوْا عَذَابًا دُوْنَ ذٰلِكَ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
52.47. நிச்சயமாக இணைவைத்தல் மற்றும் பாவங்கள் மூலம் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு மறுமையின் வேதனைக்கு முன்னால் இவ்வுலகில் கொலையும் கைதும் கப்ரில் மண்ணறை வேதனையும் உள்ளது. ஆனாலும் அவர்களில் பெரும்பாலானோர் இதனை அறிய மாட்டார்கள். அதனால்தான் தமது நிராகரிப்பில் நிலைத்திருக்கிறார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَاِنَّكَ بِاَعْیُنِنَا وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِیْنَ تَقُوْمُ ۟ۙ
52.48. -தூதரே!- உம் இறைவனின் தீர்ப்பிற்காக, அவனுடைய மார்க்க சட்டத்திற்காக பொறுமையாக இருப்பீராக. நிச்சயமாக நீர் நம்முடைய கண்காணிப்பிலும் பாதுகாப்பிலும் இருக்கின்றீர். தூக்கத்திலிருந்து எழும் போது உம் இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَمِنَ الَّیْلِ فَسَبِّحْهُ وَاِدْبَارَ النُّجُوْمِ ۟۠
52.49. இரவிலும் உம் இறைவனைப் புகழ்வீராக. அவனுக்காகத் தொழுவீராக. பகலின் பிரகாசத்தால் நட்சத்திரங்கள் மறையும் சமயத்தில் அதிகாலைத் தொழுகையைத் தொழுவீராக.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
ఈ పేజీలోని వచనాల ద్వారా లభించే ప్రయోజనాలు:
• الطغيان سبب من أسباب الضلال.
1. வரம்புமீறல் வழிகேட்டிற்கான காரணிகளில் ஒன்றாகும்.

• أهمية الجدال العقلي في إثبات حقائق الدين.
2.மார்க்கத்தின் யதார்த்தங்களை நிறுவுவதில் பகுத்தறிவு ரீதியான வாதத்தின் முக்கியத்துவம்.

• ثبوت عذاب البَرْزَخ.
3. மண்ணறையின் வேதனை உறுதியாகிறது.

 
భావార్ధాల అనువాదం సూరహ్: సూరహ్ అత్-తూర్
సూరాల విషయసూచిక పేజీ నెంబరు
 
పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - అనువాదాల విషయసూచిక

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

మూసివేయటం