Check out the new design

แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ สำหรับหนังสืออรรถาธิบายอัลกุรอานอย่างสรุป (อัลมุคตะศ็อร ฟีตัฟซีร อัลกุรอานิลกะรีม) * - สารบัญ​คำแปล


แปลความหมาย​ สูเราะฮ์: An-Naml   อายะฮ์:
وَاِنَّهٗ لَهُدًی وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِیْنَ ۟
27.77. நிச்சயமாக அது (குர்ஆன்) அதன்படி செயல்படும் நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கின்றது.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
اِنَّ رَبَّكَ یَقْضِیْ بَیْنَهُمْ بِحُكْمِهٖ ۚ— وَهُوَ الْعَزِیْزُ الْعَلِیْمُ ۟ۚ
27.78. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் மறுமை நாளில் நம்பிக்கைகொண்ட, நிராகரித்த மனிதர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பான். அவன் நம்பிக்கையாளனுக்கு கருணை காட்டுவான். நிராகரிப்பாளனைத் தண்டிப்பான். தன் எதிரிகளைத் தண்டிக்கும் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. அவன் நன்கறிந்தவன். சத்தியவாதியும் அசத்தியவாதியும் அவனுக்கு மாறிவிடமாட்டார்கள்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
فَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ— اِنَّكَ عَلَی الْحَقِّ الْمُبِیْنِ ۟
27.79. உமது எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக. நிச்சயமாக நீர் தெளிவான சத்தியத்தில் இருக்கின்றீர்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
اِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰی وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوْا مُدْبِرِیْنَ ۟
27.80. தூதரே ! நிச்சயமாக அல்லாஹ்வை நிராகரித்ததனால் உள்ளங்கள் இறந்தவர்களை உம்மால் செவியுறச் செய்ய முடியாது. சத்தியத்தை கேட்க முடியாமல் யாரை அல்லாஹ் செவிடாக்கிவிட்டானோ அவர்கள் உம்மை புறக்கணித்து திரும்பிச் சென்றால் அவர்களுக்கு உமது அழைப்பை உம்மால் செவியுறச் செய்ய முடியாது.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَمَاۤ اَنْتَ بِهٰدِی الْعُمْیِ عَنْ ضَلٰلَتِهِمْ ؕ— اِنْ تُسْمِعُ اِلَّا مَنْ یُّؤْمِنُ بِاٰیٰتِنَا فَهُمْ مُّسْلِمُوْنَ ۟
27.81. சத்தியத்தைவிட்டும் பார்வைகள் குருடானவர்களுக்கு உம்மால் வழிகாட்ட முடியாது. அவர்களுக்காக கவலைப்பட்டு உம்மை நீரே வருத்திக் கொள்ளாதீர். நம்முடைய வசனங்களை நம்புவோருக்கே சத்தியத்தைப் புரியச் செய்ய முடியும். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் ஏவலுக்குக் கட்டுப்பட்டவர்கள்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَاِذَا وَقَعَ الْقَوْلُ عَلَیْهِمْ اَخْرَجْنَا لَهُمْ دَآبَّةً مِّنَ الْاَرْضِ تُكَلِّمُهُمْ ۙ— اَنَّ النَّاسَ كَانُوْا بِاٰیٰتِنَا لَا یُوْقِنُوْنَ ۟۠
27.82. அவர்கள் தொடர்ந்தும் நிராகரிப்பு மற்றும் பாவங்களில் ஈடுபட்டதனால் வேதனை உறுதியாகி, தீயவர்கள் மட்டும் எஞ்சிவிட்டால், மறுமை நாள் நெருங்கும் போது அதன் மிகப் பெரும் அடையாளங்களில் ஒன்றை வெளிப்படுத்துவோம். “நம் தூதரின் மீது இறக்கப்பட்ட வசனங்களை மக்கள் நம்பாமல் இருந்தார்கள்” என அவர்களுக்குப் புரியும் மொழியில் பேசும் பூமியிலிருந்து வெளிப்படும் ஒரு விலங்கே அந்த அடையாளமாகும்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَیَوْمَ نَحْشُرُ مِنْ كُلِّ اُمَّةٍ فَوْجًا مِّمَّنْ یُّكَذِّبُ بِاٰیٰتِنَا فَهُمْ یُوْزَعُوْنَ ۟
27.83. -தூதரே!- நாம் ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் நம்முடைய வசனங்களை பொய்ப்பித்த தலைவர்களை கூட்டமாக ஒன்றுதிரட்டும் நாளை நினைவுகூர்வீராக. அவர்களில் முன்னோர், பின்னோர் அனைவரும் மீட்டப்பட்டு பின்பு விசாரணைக்காக இழுத்துவரப்படுவார்கள்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
حَتّٰۤی اِذَا جَآءُوْ قَالَ اَكَذَّبْتُمْ بِاٰیٰتِیْ وَلَمْ تُحِیْطُوْا بِهَا عِلْمًا اَمَّاذَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
27.84. தொடர்ந்து அவர்கள் இழுத்துச் செல்லப்படுவார்கள். விசாரணைக்கான இடத்தை வந்தடைந்தவுடன், அல்லாஹ் அவர்களைக் கண்டித்தவாறு கேட்பான்: “நான் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய, என் மார்க்கத்தை உள்ளடக்கிய என் வசனங்களை நீங்கள் மறுத்தீர்களா? அவற்றை நீங்கள் மறுக்க, அவை அசத்தியம் என்பதை நீங்கள் முழுமையாக அறியவுமில்லை. அல்லது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஏற்றுக் கொண்டீர்களா அல்லது நிராகரித்தீர்களா?
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَوَقَعَ الْقَوْلُ عَلَیْهِمْ بِمَا ظَلَمُوْا فَهُمْ لَا یَنْطِقُوْنَ ۟
27.85. அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய அத்தாட்சிகளையும் பொய்ப்பித்து அவர்கள் செய்த அக்கிரமத்தின் காரணமாக அவர்கள் மீது வேதனை இறங்கியது. அவர்களது இயலாமையினாலும் ஆதாரங்கள் தவறானவை என்பதனாலும் தங்களைத் தற்காத்துக் கொள்ள அவர்களால் எதுவும் பேச முடியாது.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
اَلَمْ یَرَوْا اَنَّا جَعَلْنَا الَّیْلَ لِیَسْكُنُوْا فِیْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
27.86. மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுப்பவர்கள் நிச்சயமாக தூக்கத்தின் மூலம் அவர்கள் ஓய்வெடுப்பதற்காக இரவையும் தங்களின் பணிகளில் ஈடுபடுவதற்காக பிரகாசமான பகலையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம் என்பதைப் பார்க்கவில்லையா? நிச்சயமாக திரும்பத் திரும்ப இடம்பெறும் இந்த மரணத்திலும் அதன்பின் உயிர்கொடுத்து எழுப்புதலிலும் நம்பிக்கைகொள்ளும் மக்களுக்கு தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَیَوْمَ یُنْفَخُ فِی الصُّوْرِ فَفَزِعَ مَنْ فِی السَّمٰوٰتِ وَمَنْ فِی الْاَرْضِ اِلَّا مَنْ شَآءَ اللّٰهُ ؕ— وَكُلٌّ اَتَوْهُ دٰخِرِیْنَ ۟
27.87. -தூதரே!- சூர் ஊதுவதற்கு பொறுப்பு சாட்டப்பட்ட வானவர் இரண்டாவது சூர் ஊதும் நாளை நினைவுகூர்வீராக. அல்லாஹ் தன் அருளால் அதனை விட்டும் விதிவிலக்குச் செய்தோரைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் பதற்றமடைந்துவிடுவார்கள். அந்நாளில் அவனுடைய படைப்புகள் அனைத்தும் அவனுக்குக் கட்டுப்பட்டவையாக, பணிந்தவையாக அவனிடம் வரும்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَتَرَی الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَّهِیَ تَمُرُّ مَرَّ السَّحَابِ ؕ— صُنْعَ اللّٰهِ الَّذِیْۤ اَتْقَنَ كُلَّ شَیْءٍ ؕ— اِنَّهٗ خَبِیْرٌ بِمَا تَفْعَلُوْنَ ۟
27.88. அந்த நாளில் நீர் மலைகளைக் கண்டு அவை நகராமல் உறுதியாக இருக்கும் என்று எண்ணுவீர். உண்மையில் அவை மேகத்தைப் போன்று வேகமாக நடந்து செல்லும். அவை அல்லாஹ்வின் படைப்பாகும். அவனே அதனை நடத்திச் செல்கின்றான். நிச்சயமாக நீங்கள் செய்வதை அவன் நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்கு கூலி வழங்குவான்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
ประโยชน์​ที่​ได้รับ​:
• أهمية التوكل على الله.
1. அல்லாஹ்வையே முழுக்க முழுக்க சார்ந்திருப்பதன் முக்கியத்துவம் தெளிவாகிறது.

• تزكية النبي صلى الله عليه وسلم بأنه على الحق الواضح.
2. நிச்சயமாக நபியவர்கள் தெளிவான சத்தியத்தில் இருக்கிறார்கள் என்ற நற்சான்று.

• هداية التوفيق بيد الله، وليست بيد الرسول صلى الله عليه وسلم.
3. நேர்வழி அளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அது தூதரிடம் இல்லை.

• دلالة النوم على الموت، والاستيقاظ على البعث.
4. தூக்கம் மரணத்திற்கான ஆதாரமாகும். விழிப்பு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்கான ஆதாரமாகும்.

 
แปลความหมาย​ สูเราะฮ์: An-Naml
สารบัญสูเราะฮ์ หมายเลข​หน้า​
 
แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ สำหรับหนังสืออรรถาธิบายอัลกุรอานอย่างสรุป (อัลมุคตะศ็อร ฟีตัฟซีร อัลกุรอานิลกะรีม) - สารบัญ​คำแปล

โดย ศูนย์ตัฟซีรเพื่อการศึกษาอัลกุรอาน

ปิด