Check out the new design

แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ สำหรับหนังสืออรรถาธิบายอัลกุรอานอย่างสรุป (อัลมุคตะศ็อร ฟีตัฟซีร อัลกุรอานิลกะรีม) * - สารบัญ​คำแปล


แปลความหมาย​ อายะฮ์: (104) สูเราะฮ์: An-Nisā’
وَلَا تَهِنُوْا فِی ابْتِغَآءِ الْقَوْمِ ؕ— اِنْ تَكُوْنُوْا تَاْلَمُوْنَ فَاِنَّهُمْ یَاْلَمُوْنَ كَمَا تَاْلَمُوْنَ ۚ— وَتَرْجُوْنَ مِنَ اللّٰهِ مَا لَا یَرْجُوْنَ ؕ— وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟۠
4.104. நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களான உங்களது எதிரிகளைத் தேடுவதில் பலவீனமடைந்து விடாதீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட உயிர்ச் சேதங்களினாலும் காயங்களினாலும் நீங்கள் வலியை உணர்ந்தால் உங்களைப்போல நிராகரிப்பாளர்களும் வலியை உணரத்தான் செய்கிறார்கள். உங்களுக்கு ஏற்பட்டதுபோன்று அவர்களுக்கும் ஏற்பட்டே உள்ளது. அவர்களின் பொறுமை உங்களின் பொறுமையைவிட அதிகமாகிவிடக்கூடாது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்விடம் எதிர்பார்க்காத உதவியையும் நன்மையையும் நீங்கள் அவனிடம் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் தன் அடியார்களின் நிலமைகளை நன்கறிந்தவன். தனது நிர்வாகத்திலும் சட்டமியற்றுவதிலும் அவன் ஞானம்மிக்கவன்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
ประโยชน์​ที่​ได้รับ​:
• استحباب صلاة الخوف وبيان أحكامها وصفتها.
1. யுத்தநேரத் தொழுகைக்கான அனுமதியும், அதற்கான சட்டங்கள் அமைப்பு பற்றிய தெளிவுபடுத்ததலும்

• الأمر بالأخذ بالأسباب في كل الأحوال، وأن المؤمن لا يعذر في تركها حتى لو كان في عبادة.
2. எல்லா சூழ்நிலைகளிலும் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. வணக்கத்தில் ஈடுபட்டிருந்தாலும் கூட நம்பிக்கையாளன் அவற்றை விடுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை.

• مشروعية دوام ذكر الله تعالى على كل حال، فهو حياة القلوب وسبب طمأنينتها.
3. எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவுகூர வேண்டும். அதுதான் உள்ளத்திற்கு உயிரூட்டும், நிம்மதியை ஏற்படுத்தும்.

• النهي عن الضعف والكسل في حال قتال العدو، والأمر بالصبر على قتاله.
4.எதிரியுடன் போரிடும் போது பலவீனம், சோம்பல் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளதுடன் பொறுமையைக் கடைபிடிக்குமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.

 
แปลความหมาย​ อายะฮ์: (104) สูเราะฮ์: An-Nisā’
สารบัญสูเราะฮ์ หมายเลข​หน้า​
 
แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ สำหรับหนังสืออรรถาธิบายอัลกุรอานอย่างสรุป (อัลมุคตะศ็อร ฟีตัฟซีร อัลกุรอานิลกะรีม) - สารบัญ​คำแปล

โดย ศูนย์ตัฟซีรเพื่อการศึกษาอัลกุรอาน

ปิด