แปล​ความหมาย​อัลกุรอาน​ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - สารบัญ​คำแปล


แปลความหมาย​ อายะฮ์: (4) สูเราะฮ์: Al-Hadīd
هُوَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ ؕ— یَعْلَمُ مَا یَلِجُ فِی الْاَرْضِ وَمَا یَخْرُجُ مِنْهَا وَمَا یَنْزِلُ مِنَ السَّمَآءِ وَمَا یَعْرُجُ فِیْهَا ؕ— وَهُوَ مَعَكُمْ اَیْنَ مَا كُنْتُمْ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
57.4. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அது ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. அவன் கண்சிமிட்டும் நேரத்தை விட குறுகிய நேரத்தில் அவற்றைப் படைப்பதற்கு சக்தியுடையவன்தான். பின்னர் அவன் அர்ஷின்மீது தன் கண்ணியத்திற்கேற்ப உயர்ந்து விட்டான். பூமியில் நுழையக்கூடிய மழைநீர், விதை, ஏனையவை, அதிலிருந்து வெளிப்படக்கூடிய தாவரங்கள், கனிமங்கள், ஏனையவை, வானத்திலிருந்து இறங்கக்கூடிய மழை, வஹி, ஏனையவை, அதன்பால் ஏறக்கூடிய வானவர்கள், அடியார்களின் செயல்கள் மற்றும் ஆன்மாக்கள் ஆகிய அனைத்தையும் அவன் அறிகிறான். -மனிதர்களே!- நீங்கள் எங்கிருந்த போதிலும் தன் அறிவால் அவன் உங்களுடேனேயே இருக்கின்றான். உங்களின் எந்த விடயமும் அவனைவிட்டு மறைவாக இல்லை. நீங்கள் செய்பவற்றை அவன் பார்க்கக்கூடியவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
ประโยชน์​ที่​ได้รับ​:
• المال مال الله، والإنسان مُسْتَخْلَف فيه.
1. செல்வம் அல்லாஹ்வுக்குரியது. மனிதன் அதற்கு பிரதிநிதியாகத்தான் ஆக்கப்பட்டுள்ளான்.

• تفاوت درجات المؤمنين بحسب السبق إلى الإيمان وأعمال البر.
2. நம்பிக்கை, நற்செயல்கள் ஆகியவற்றின்பால் முந்துவதற்கேற்ப நம்பிக்கையாளர்களின் படித்தரங்கள் வேறுபடும்.

• الإنفاق في سبيل الله سبب في بركة المال ونمائه.
3. அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வது செல்வங்களில் பரக்கத்தும் அபிவிருத்தியும் ஏற்படக் காரணமாகும்.

 
แปลความหมาย​ อายะฮ์: (4) สูเราะฮ์: Al-Hadīd
สารบัญสูเราะฮ์ หมายเลข​หน้า​
 
แปล​ความหมาย​อัลกุรอาน​ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - สารบัญ​คำแปล

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

ปิด