แปล​ความหมาย​อัลกุรอาน​ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - สารบัญ​คำแปล


แปลความหมาย​ อายะฮ์: (10) สูเราะฮ์: Al-Mumtahanah
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا جَآءَكُمُ الْمُؤْمِنٰتُ مُهٰجِرٰتٍ فَامْتَحِنُوْهُنَّ ؕ— اَللّٰهُ اَعْلَمُ بِاِیْمَانِهِنَّ ۚ— فَاِنْ عَلِمْتُمُوْهُنَّ مُؤْمِنٰتٍ فَلَا تَرْجِعُوْهُنَّ اِلَی الْكُفَّارِ ؕ— لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ یَحِلُّوْنَ لَهُنَّ ؕ— وَاٰتُوْهُمْ مَّاۤ اَنْفَقُوْا ؕ— وَلَا جُنَاحَ عَلَیْكُمْ اَنْ تَنْكِحُوْهُنَّ اِذَاۤ اٰتَیْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّ ؕ— وَلَا تُمْسِكُوْا بِعِصَمِ الْكَوَافِرِ وَسْـَٔلُوْا مَاۤ اَنْفَقْتُمْ وَلْیَسْـَٔلُوْا مَاۤ اَنْفَقُوْا ؕ— ذٰلِكُمْ حُكْمُ اللّٰهِ ؕ— یَحْكُمُ بَیْنَكُمْ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
60.10. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! நம்பிக்கைகொண்ட பெண்கள் நிராகரிப்பாளர்கள் வசிக்கும் ஊரிலிருந்து புலம்பெயர்ந்து உங்களிடம் வந்தால் அவர்கள் உண்மையாகவே நம்பிக்கைகொண்டுள்ளார்களா என்பதை சோதித்துப் பாருங்கள். அவர்களின் நம்பிக்கையை அல்லாஹ்வே நன்கறிந்தவன். அவர்களின் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவை எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. இவ்வாறு சோதித்ததற்குப் பிறகு அவர்கள் நம்பிக்கைகொண்ட பெண்கள்தாம் என்பதை நீங்கள் அறிந்துகொண்டால் அவர்களை நிராகரிப்பாளர்களாக இருக்கும் அவர்களின் கணவர்களிடம் திருப்பி அனுப்பிவிடாதீர்கள். நம்பிக்கைகொண்ட பெண்களுக்கு நிராகரிப்பாளர்களை மணமுடித்துக் கொள்வது அனுமதிக்கப்பட்டதல்ல. நிராகரிப்பாளர்கள் நம்பிக்கைகொண்ட பெண்களை மணமுடித்துக் கொள்ளக் கூடாது. அவர்களின் கணவர்கள் செலவழித்த மணக்கொடைகளை அந்தக் கணவர்களுக்கு அளித்துவிடுங்கள். -நம்பிக்கையாளர்களே!- அவர்களின் இத்தா காலஅளவு நிறைவடைந்த பிறகு மணக்கொடைகளை அளித்து அவர்களை நீங்கள் மணந்துகொள்வதில் எந்தக் குற்றமும் இல்லை. யாருடைய மனைவி நிராகரிப்பவளாக இருக்கிறாளோ அல்லது இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுகிறாளோ அவளை மனைவியாக வைத்துக்கொள்ளவேண்டாம். ஏனெனில் அவள் நிராகரித்ததனால் இருவருடைய இருந்த திருமண உறவு முறிந்துவிட்டது. நிராகரிப்பாளர்களிடம் மதம்மாறிச் சென்ற உங்கள் மனைவிக்கு நீங்கள் வழங்கிய மணக்கொடைகளைக் கேளுங்கள். நிராகரிப்பாளர்களும் நம்பிக்கைகொண்ட பெண்களுக்கு அவர்கள் அளித்த மணக்கொடைகளைக் கேட்கட்டும். இவ்வாறு மேற்கூறப்பட்டவாறு இரு சாராரும் மணக்கொடைகளை திருப்பியளிப்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். அவன் உங்களிடையே தான் நாடியவாறு தீர்ப்பளிக்கிறான். அவன் தன் அடியார்களின் நிலைகளையும் செயல்களையும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. தன் அடியார்களுக்கு அவன் வழங்கிய சட்டங்களில் அவன் ஞானம் மிக்கவன்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
ประโยชน์​ที่​ได้รับ​:
• في تصريف الله القلب من العداوة إلى المودة، ومن الكفر إلى الإيمان إشارة إلى أن قلوب العباد بين إصبعين من أصابعه سبحانه، فليطلب العبد منه الثبات على الإيمان.
1. அல்லாஹ் உள்ளங்களை பகைமையிலிருந்து நட்பிற்கும் நிராகரிப்பிலிருந்து நம்பிக்கையை நோக்கியும் திருப்பிவிடுவது, உள்ளங்கள் அவனின் இரு விரல்களுக்கிடையில் இருக்கின்றன என்பதையே குறிக்கின்றது. எனவே அடியான் அல்லாஹ்விடமே நம்பிக்கையில் உறுதியைக் கோர வேண்டும்.

• التفريق في الحكم بين الكفار المحاربين والمسالمين.
2. போரிடக்கூடிய நிராகரிப்பாளர்களுக்கும் சமாதானம் பேணக்கூடிய நிராகரிப்பாளர்களுக்குமிடையே சட்டத்தில் வேறுபாடு உள்ளது.

• حرمة الزواج بالكافرة غير الكتابية ابتداءً ودوامًا، وحرمة زواج المسلمة من كافر ابتداءً ودوامًا.
3. வேதக்காரர்களல்லாத நிராகரித்த பெண்களை மணமுடிப்பதும் (அவர்களுடன் வாழ்வை) தொடர்வதும் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். முஸ்லிமான் பெண் ஒரு காபிரை திருமணம் செய்வதும் அதேபோன்று அதில் தொடர்ந்து இருப்பதும் தடைசெய்யப்பட்டதாகும்.

 
แปลความหมาย​ อายะฮ์: (10) สูเราะฮ์: Al-Mumtahanah
สารบัญสูเราะฮ์ หมายเลข​หน้า​
 
แปล​ความหมาย​อัลกุรอาน​ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - สารบัญ​คำแปล

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

ปิด