Check out the new design

แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ สำหรับหนังสืออรรถาธิบายอัลกุรอานอย่างสรุป (อัลมุคตะศ็อร ฟีตัฟซีร อัลกุรอานิลกะรีม) * - สารบัญ​คำแปล


แปลความหมาย​ สูเราะฮ์: Al-A‘rāf   อายะฮ์:
وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰۤی اٰمَنُوْا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَیْهِمْ بَرَكٰتٍ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ وَلٰكِنْ كَذَّبُوْا فَاَخَذْنٰهُمْ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
7.96. நாம் எந்த ஊர்வாசிகளிடம் நம் தூதர்களை அனுப்பினோமோ அவர்கள் தங்களின் தூதர்கள் கொண்டு வந்ததை உண்மைப்படுத்தியிருந்தால், அல்லாஹ்வை நிராகரிப்பதையும் பாவங்கள் புரிவதையும் விட்டுவிட்டு அவன் கட்டளைகளைச் செயல்படுத்தி அவனை அஞ்சியிருந்தால் நன்மையின் வாயில்களையும் நாலாபுறத்தாலும் அவர்களுக்காகத் திறந்து விட்டிருப்போம். ஆயினும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவுமில்லை; தக்வாவைக் கடைப்பிடிக்கவுமில்லை. மாறாக தூதர்கள் கொண்டு வந்ததை நிராகரித்தார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருந்த பாவங்களின் காரணமாக திடீரென்று அவர்களை வேதனையால் பிடித்துக் கொண்டோம்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
اَفَاَمِنَ اَهْلُ الْقُرٰۤی اَنْ یَّاْتِیَهُمْ بَاْسُنَا بَیَاتًا وَّهُمْ نَآىِٕمُوْنَ ۟ؕ
7.97. நிராகரித்த ஊர்வாசிகள் இரவில், நிம்மதியாக அவர்கள் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் போது நம்முடைய வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா?
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
اَوَاَمِنَ اَهْلُ الْقُرٰۤی اَنْ یَّاْتِیَهُمْ بَاْسُنَا ضُحًی وَّهُمْ یَلْعَبُوْنَ ۟
7.98. அல்லது பகலில், நண்பகல் வேளையில் தங்களின் உலக காரியங்களில் மெய் மறந்து இருக்கும் போது நம்முடைய வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா?
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
اَفَاَمِنُوْا مَكْرَ اللّٰهِ ۚ— فَلَا یَاْمَنُ مَكْرَ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْخٰسِرُوْنَ ۟۠
7.99. அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அவகாசத்தையும் பலம், தாராளமான வசதிகள் என அருட்கொடைகளை வழங்கி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களைப் பிடித்ததையும் சிந்தித்துப் பாருங்கள். நிராகரித்த அந்த ஊர்வாசிகள் அல்லாஹ்வின் சூழ்ச்சியை விட்டும் மறைமுகமான திட்டத்தை விட்டும் அச்சமற்றுள்ளனரா என்ன? அழியக்கூடிய மக்கள்தாம் அல்லாஹ்வின் சூழ்ச்சியை விட்டும் அச்சமற்று இருப்பார்கள். நேர்வழிபெற்றவர்களோ அவனுடைய சூழ்ச்சியைக் குறித்து அஞ்சுவார்கள். தங்களுக்குக் கிடைத்த அருட்கொடைகளைக் கொண்டு அவர்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். தங்கள் மீது அவன் பொழிந்த அருட்கொடைகளுக்காக அவனுக்கு நன்றி செலுத்துவார்கள்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
اَوَلَمْ یَهْدِ لِلَّذِیْنَ یَرِثُوْنَ الْاَرْضَ مِنْ بَعْدِ اَهْلِهَاۤ اَنْ لَّوْ نَشَآءُ اَصَبْنٰهُمْ بِذُنُوْبِهِمْ ۚ— وَنَطْبَعُ عَلٰی قُلُوْبِهِمْ فَهُمْ لَا یَسْمَعُوْنَ ۟
7.100. தங்களின் பாவங்களின் காரணமாக அழிக்கப்பட்ட முந்தைய சமூகத்தினருக்குப் பிறகு பூமியில் வழித்தோன்றல்களாக வந்து அவர்களுக்கு நிகழ்ந்ததைக் கொண்டு படிப்பினை பெறாமல் அவர்கள் செய்தவற்றையே செய்யும் இவர்களுக்கு, அல்லாஹ் தன் வழிமுறைப்படி தான் நாடினால் அவர்களின் பாவங்களினால் அவர்களை அழித்தது போன்று இவர்களின் பாவங்களினால் இவர்களையும் அழித்துவிடுவோம் என்பது புரியவில்லையா?, அறிவுரையிலிருந்து பயனடையவோ ஞாபகமூட்டல் பலனிளக்கவோ முடியாதவாறு அவர்களின் உள்ளங்களின் மீது அவன் முத்திரையிட்டுவிடுவான்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
تِلْكَ الْقُرٰی نَقُصُّ عَلَیْكَ مِنْ اَنْۢبَآىِٕهَا ۚ— وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ۚ— فَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا مِنْ قَبْلُ ؕ— كَذٰلِكَ یَطْبَعُ اللّٰهُ عَلٰی قُلُوْبِ الْكٰفِرِیْنَ ۟
7.101. தூதரே! மேலே குறிப்பிடப்பட்ட நூஹ், ஹூத், ஸாலிஹ், லூத், ஸுஐப் ஆகியோரின் சமூகங்கள் வசித்த ஊர்களைக் குறித்தும் அவர்களின் நிராகரிப்பு, பிடிவாதம் மற்றும் அவர்களுக்கு நேர்ந்த அழிவைக் குறித்தும் நாம் உமக்கு எடுத்துரைப்பது, படிப்பினை பெறக்கூடியவர்களுக்கு படிப்பினையாகவும் அறிவுரை பெறக்கூடியவர்களுக்கு அறிவுரையாக இருப்பதற்காகவும்தான். இந்த ஊர்வாசிகளிடம் அவர்களின் தூதர்கள் தாம் உண்மையாளர்கள் என்பதற்கு தெளிவான ஆதாரங்களைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் அவரை நிராகரிப்பார்கள் என அவன் முன்பே அறிந்து வைத்திருந்ததனால் தூதர்கள் வந்தபொழுது அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. தங்களின் தூதர்களை நிராகரித்த இந்த ஊர்வாசிகளின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டது போன்றே முஹம்மதை நிராகரித்தவர்களின் உள்ளங்களிலும் முத்திரையிட்டு விடுவான். எனவே அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَمَا وَجَدْنَا لِاَكْثَرِهِمْ مِّنْ عَهْدٍ ۚ— وَاِنْ وَّجَدْنَاۤ اَكْثَرَهُمْ لَفٰسِقِیْنَ ۟
7.102. அல்லாஹ் வழங்கிய அறிவுரைகளைக் கடைப்பிடிப்பவர்களாக, தூதர்கள் அனுப்பப்பட்ட பெரும்பாலான சமூகங்களை நாம் காணவில்லை. அவர்களிடத்தில் அல்லாஹ்வின் ஏவல்களுக்கு அடிபணிதலையும் நாம் காணவில்லை. அல்லாஹ்வுக்கு அடிபணிய மறுப்பவர்களாகவே அவர்களில் பெரும்பாலானோரைக் கண்டோம்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُّوْسٰی بِاٰیٰتِنَاۤ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَظَلَمُوْا بِهَا ۚ— فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ ۟
7.103. அந்த தூதர்களுக்குப் பிறகு நாம் மூஸாவை அவரை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான சான்றுகளுடன் பிர்அவ்னிடமும் அவனுடைய சமூகத்திடமும் அனுப்பினோம். ஆனால் அவர்கள் சான்றுகளை மறுத்து நிராகரித்தார்கள். -தூதரே-! பிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமூகத்தின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. அல்லாஹ் அவர்களை மூழ்கடித்து அழித்து விட்டான். இவ்வுலகிலும் மறுவுலகிலும் சாபம் அவர்களைப் பின்தொடருமாறு செய்தான்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
وَقَالَ مُوْسٰی یٰفِرْعَوْنُ اِنِّیْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
7.104. மூஸாவை அல்லாஹ் பிர்அவ்னிடம் அனுப்பிய போது, அவர் அவனிடம் வந்து கூறினார்: “பிர்அவ்னே! படைப்புகள் அனைத்தையும் படைத்து அவர்களின் உரிமையாளனும் அவர்களின் விவகாரங்களை நிர்வகிப்பவனின் புறத்திலிருந்து நான் அனுப்பப்பட்டுள்ளேன்.”
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
ประโยชน์​ที่​ได้รับ​:
• الإيمان والعمل الصالح سبب لإفاضة الخيرات والبركات من السماء والأرض على الأمة.
1. நம்பிக்கையும் நற்காரியமும் சமூகத்தின் மீது வானங்களின் பூமியின் அருள்களும் அபிவிருத்திகளும் அருளப்படுவதற்கான காரணிகளாகும்.

• الصلة وثيقة بين سعة الرزق والتقوى، وإنْ أنعم الله على الكافرين فإن هذا استدراج لهم ومكر بهم.
2. தக்வாவிற்கும் விசாலமான வாழ்வாதாரத்திற்குமிடையே நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு வழங்கும் அருட்கொடை கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை பிடிப்பதற்காகத்தான்.

• على العبد ألا يأمن من عذاب الله المفاجئ الذي قد يأتي في أية ساعة من ليل أو نهار.
3. பகலிலோ இரவிலோ எந்த நேரத்தில் வேண்டுமானாலும் திடீரென வரக்கூடிய அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அச்சமற்று இருப்பது நம்பிக்கையாளனுக்கு உகந்ததல்ல.

• يقص القرآن أخبار الأمم السابقة من أجل تثبيت المؤمنين وتحذير الكافرين.
4. நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துவதற்காகவும் நிராகரிப்பாளர்களை எச்சரிப்பதற்காகவும் குர்ஆன் கடந்தகால சமூகங்களின் செய்திகளை எடுத்துரைக்கிறது.

 
แปลความหมาย​ สูเราะฮ์: Al-A‘rāf
สารบัญสูเราะฮ์ หมายเลข​หน้า​
 
แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ สำหรับหนังสืออรรถาธิบายอัลกุรอานอย่างสรุป (อัลมุคตะศ็อร ฟีตัฟซีร อัลกุรอานิลกะรีม) - สารบัญ​คำแปล

โดย ศูนย์ตัฟซีรเพื่อการศึกษาอัลกุรอาน

ปิด