แปล​ความหมาย​อัลกุรอาน​ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - สารบัญ​คำแปล


แปลความหมาย​ อายะฮ์: (49) สูเราะฮ์: At-Tawbah
وَمِنْهُمْ مَّنْ یَّقُوْلُ ائْذَنْ لِّیْ وَلَا تَفْتِنِّیْ ؕ— اَلَا فِی الْفِتْنَةِ سَقَطُوْا ؕ— وَاِنَّ جَهَنَّمَ لَمُحِیْطَةٌ بِالْكٰفِرِیْنَ ۟
9.49. “அல்லாஹ்வின் தூதரே! போரை விட்டு பின்தங்குவதற்கு எனக்கு அனுமதியளியுங்கள். என்னை உங்களுடன் புறப்படுமாறு கட்டாயப்படுத்தி எதிரிகளின் - ரோமானியரின் - பெண்களால் நான் பாதிக்கப்பட்டு பாவத்தில் விழுந்துவிட காரணமாகிவிடாதீர்கள்” என்று நயவஞ்சகர்களில் சிலர் உம்மிடம் போலியான சாக்குப்போக்குகளைக் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவதைவிட பெரும் சோதனைகளான நயவஞ்சகம், போருக்குப் புறப்படாமல் பின்தங்குதல் ஆகியவற்றில் அவர்கள் விழுந்துவிட்டார்கள். மறுமை நாளில் நரகம் நிராகரிப்பாளர்களைச் சூழ்ந்திருக்கும். எவரும் அதிலிருந்து தப்பமுடியாது. தப்புவதற்கான எந்த வழியையும் அவர்கள் பெறமாட்டார்கள்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
ประโยชน์​ที่​ได้รับ​:
• دأب المنافقين السعي إلى إلحاق الأذى بالمسلمين عن طريق الدسائس والتجسس.
1. சூழ்ச்சிகள் மற்றும் வேவு பார்ப்பதன் மூலம் முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவைக்க முயற்சி செய்வது நயவஞ்சகர்களின் வழக்கமாகும்.

• التخلف عن الجهاد مفسدة كبرى وفتنة عظمى محققة، وهي معصية لله ومعصية لرسوله.
2. போருக்குச் செல்லாது பின்தங்குவது பெரும் சீர்கேடும் குழப்பமுமாகும். மேலும் அது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்வதுமாகும்.

• في الآيات تعليم للمسلمين ألا يحزنوا لما يصيبهم؛ لئلا يَهِنوا وتذهب قوتهم، وأن يرضوا بما قدَّر الله لهم، ويرجوا رضا ربهم؛ لأنهم واثقون بأن الله يريد نصر دينه.
3. மேற்கூறப்பட்ட வசனங்களிலில் முஸ்லிம்களுக்கு பின்வரும் போதனைகள் உள்ளன: முஸ்லிம்கள் பலமிழந்து அவர்களது பலம் குன்றிவிடாமலிருக்கும் பொருட்டு தங்களுக்கு நேர்ந்த துன்பங்களைக் கண்டு கவலையடையக்கூடாது; அவர்களுக்கு அல்லாஹ் விதித்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அவனுடைய திருப்தியையே ஆதரவு வைக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் தன் மார்க்கத்திற்கு உதவி செய்தே தீருவான் என்பதை அவர்கள் உறுதியாக நம்பக்கூடியவர்களாவர்.

• من علامات ضعف الإيمان وقلة التقوى التكاسل في أداء الصلاة والإنفاق عن غير رضا ورجاء للثواب.
4. தொழுகையை நிறைவேற்றுவதில் சோம்பலும் மனவிருப்பமின்றி, நன்மையை எதிர்பார்க்காமல் செலவளிப்பதும் பலவீனமான நம்பிக்கை மற்றும் இறையச்சம் மற்றும் நம்பிக்கைக் குறைபாட்டின் அடையாளமாகும்.

 
แปลความหมาย​ อายะฮ์: (49) สูเราะฮ์: At-Tawbah
สารบัญสูเราะฮ์ หมายเลข​หน้า​
 
แปล​ความหมาย​อัลกุรอาน​ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - สารบัญ​คำแปล

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

ปิด