Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Indise ng mga Salin


Salin ng mga Kahulugan Ayah: (111) Surah: An-Nahl
یَوْمَ تَاْتِیْ كُلُّ نَفْسٍ تُجَادِلُ عَنْ نَّفْسِهَا وَتُوَفّٰی كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
16.111. -தூதரே!- ஒவ்வொரு மனிதனும் தனக்காக வாதிடும் அந்த நாளை நினைவு கூர்வீராக. அவன் அந்த நாளின் கடுமையினால் வேறு எவருக்காகவும் வாதாட மாட்டான். ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த நன்மை தீமைக்கேற்ப முழுமையாக கூலி வழங்கப்படும். நன்மைகள் குறைக்கப்பட்டோ, தீமைகள் அதிகரிக்கப்பட்டோ அவர்கள் மீது அநீதி இழைக்கப்பட மாட்டாது.
Ang mga Tafsir na Arabe:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• الجزاء من جنس العمل؛ فإن أهل القرية لما بطروا النعمة بُدِّلوا بنقيضها، وهو مَحْقُها وسَلْبُها ووقعوا في شدة الجوع بعد الشبع، وفي الخوف والهلع بعد الأمن والاطمئنان، وفي قلة موارد العيش بعد الكفاية.
1. செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும். அந்த ஊர்வாசிகள் அருட்கொடைகளுக்கு (நன்றி செலுத்தாமல்) கர்வம் கொண்டபோது அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வயிறு நிறைய உணவு, அமைதி, நிம்மதி, பாதுகாப்பு, செழிப்பான வாழ்க்கை ஆகியவை கடுமையான பசி, பயம், வருமானப் பற்றாக்குறை மிகுந்த வாழ்க்கையாக மாற்றப்பட்டு, அழிக்கப்பட்டு விட்டது.

• وجوب الإيمان بالله وبالرسل، وعبادة الله وحده، وشكره على نعمه وآلائه الكثيرة، وأن العذاب الإلهي لاحقٌ بكل من كفر بالله وعصاه، وجحد نعمة الله عليه.
2. அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கைகொள்வதும் அவனை மட்டுமே வணங்குவதும் அவன் நம் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதும் கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள், அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுபவர்கள், அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்த மறுப்பவர்கள் ஆகியவர்களைத்தான் இறைவேதனை தாக்கும்.

• الله تعالى لم يحرم علينا إلا الخبائث تفضلًا منه، وصيانة عن كل مُسْتَقْذَر.
3. அல்லாஹ் தன் அருளின் காரணமாகவும் அறுவருக்கத்தக்கவற்றை விட்டும் பாதுகாப்பதற்காகவுமே நம்மீது தீயவைகளை மாத்திரம் தடைசெய்துள்ளான்.

 
Salin ng mga Kahulugan Ayah: (111) Surah: An-Nahl
Indise ng mga Surah Numero ng Pahina
 
Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Indise ng mga Salin

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Isara