Check out the new design

Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm * - Indise ng mga Salin


Salin ng mga Kahulugan Surah: Al-Baqarah   Ayah:
اَلَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَعْرِفُوْنَهٗ كَمَا یَعْرِفُوْنَ اَبْنَآءَهُمْ ؕ— وَاِنَّ فَرِیْقًا مِّنْهُمْ لَیَكْتُمُوْنَ الْحَقَّ وَهُمْ یَعْلَمُوْنَ ۟ؔ
2.146. நம்மால் வேதம் வழங்கப்பட்ட யூத, கிருஸ்தவ அறிஞர்கள் தங்கள் பிள்ளைகளை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி அறிவதைப்போல் முஹம்மத் (ஸல்) அவர்களது தூதுத்துவத்தின் அடையாளங்களில் ஒன்றான கிப்லா மாற்றத்தைப் பற்றியும் முழுமையாக அறிவார்கள். இருந்தும் அவர்களில் ஒருபிரிவினர், அவர் கொண்டு வந்த சத்தியத்தை பொறாமையினால் மறைக்கிறார்கள். அறிந்துகொண்டே அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்.
Ang mga Tafsir na Arabe:
اَلْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِیْنَ ۟۠
2.147. தூதரே! இதுதான் உமது இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். இதன் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம்கொள்வோரில் ஒருவராகிவிடாதீர்.
Ang mga Tafsir na Arabe:
وَلِكُلٍّ وِّجْهَةٌ هُوَ مُوَلِّیْهَا فَاسْتَبِقُوْا الْخَیْرٰتِ ؔؕ— اَیْنَ مَا تَكُوْنُوْا یَاْتِ بِكُمُ اللّٰهُ جَمِیْعًا ؕ— اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
2.148. ஒவ்வொரு சமூகத்திற்கும் வெளிப்படையான அல்லது மறைமுகமான ஒரு முன்னோக்கு திசை இருக்கின்றது. எனவே அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சட்டங்களும், கிப்லாவும் வெவ்வெறாக இருக்கின்றன. அவை அல்லாஹ்வின் சட்டங்களாக, கட்டளைகளாக இருக்கும்வரை அவர்களின் வெவ்வேறுதிசைகள் எந்தத் தீங்கையும் அளிக்காது. எனவே நம்பிக்கையாளர்களே, உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட நற்செயல்களை விரைந்து செய்யுங்கள். உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்கு கூலி வழங்குவதற்காக நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் மறுமைநாளில் ஒன்றுதிரட்டுவான். அவன் ஒவ்வொன்றின்மீதும் பேராற்றலுடையவன். உங்களை ஒன்று சேர்ப்பதும் கூலிவழங்குவதும் அவனால் முடியாத காரியமல்ல.
Ang mga Tafsir na Arabe:
وَمِنْ حَیْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ؕ— وَاِنَّهٗ لَلْحَقُّ مِنْ رَّبِّكَ ؕ— وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
2.149. தூதரே! நீரும் உம்மைப் பின்பற்றுபவர்களும் எந்த இடத்திலிருந்து வெளியேறினாலும், எங்கிருந்தாலும் தொழவிரும்பினால் கஅபாவை முன்னோக்கிக் கொள்ளுங்கள். இது உம் இறைவன் உமக்கு அறிவித்த உண்மையாகும். நீங்கள் செய்யும் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. அவன் அவற்றை நன்கறிவான். அவற்றிற்கேற்பவே உங்களுக்கு கூலி வழங்குவான்.
Ang mga Tafsir na Arabe:
وَمِنْ حَیْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ؕ— وَحَیْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ۙ— لِئَلَّا یَكُوْنَ لِلنَّاسِ عَلَیْكُمْ حُجَّةٌ ۗ— اِلَّا الَّذِیْنَ ظَلَمُوْا مِنْهُمْ ۗ— فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِیْ ۗ— وَلِاُتِمَّ نِعْمَتِیْ عَلَیْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟ۙۛ
2.150. தூதரே! நீர் எந்த இடத்திலிருந்து வெளியேறினாலும், தொழவிரும்பினால் கஅபாவை முன்னோக்கிக் கொள்வீராக. நம்பிக்கையாளர்களே! நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் தொழவிரும்பினால் அதன் திசையை முன்னோக்கிக் கொள்ளுங்கள். இது ஏனெனில், அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மக்களிடம் உங்களுக்கு எதிராக வாதம் புரிய எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான். அநியாயக்காரர்கள் தங்களின் பிடிவாதத்தில்தான் நிலைத்திருப்பார்கள். அவர்கள் அபத்தமான ஆதாரங்களைக் கொண்டும் உங்களுக்கு எதிராக வாதாடுவார்கள். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள். உங்கள் இறைவன் கட்டளையிட்டதைச் செயல்படுத்தி, தடுத்தவற்றிலிருந்து விலகி அவனுக்கு மட்டுமே அஞ்சுங்கள். மற்ற சமூகங்களிலிருந்து உங்களை வேறுபடுத்தி, உங்கள்மீது அவன் பொழிந்த அருட்கொடைகளை முழுமைப்படுத்துவதற்காகவும், மனிதர்களுக்கான மிகச் மிகச் சிறந்த கிப்லாவை உங்களுக்கு காட்டித்தருவதற்காகவுமே கஅபாவை முன்னோக்குமாறு அவன் உங்களுக்கு கட்டளையிட்டுள்ளான்.
Ang mga Tafsir na Arabe:
كَمَاۤ اَرْسَلْنَا فِیْكُمْ رَسُوْلًا مِّنْكُمْ یَتْلُوْا عَلَیْكُمْ اٰیٰتِنَا وَیُزَكِّیْكُمْ وَیُعَلِّمُكُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَیُعَلِّمُكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ ۟ؕۛ
2.151. அதுபோன்று இன்னுமொரு அருட்கொடையையும் நாம் உங்களுக்கு அளித்துள்ளோம். அது, உங்களிலிருந்தே ஒரு தூதரை உங்களிடம் அனுப்பியுள்ளோம். அவர் நம்முடைய வசனங்களை உங்களுக்கு எடுத்துரைக்கின்றார்; நன்மையான விஷயங்களைச் செய்யுமாறு உங்களைத் தூண்டி, தீமையான, இழிவான விஷயங்ளை விட்டும் உங்களைத் தடுத்து உங்களைத் தூய்மைப்படுத்துகின்றார்; குர்ஆனையும், சுன்னாவையும் உங்களுக்கு போதிக்கின்றார்; நீங்கள் அறியாத ஈருலக விஷயங்களையும் உங்களுக்கு கற்றுக் கொடுக்கின்றார்.
Ang mga Tafsir na Arabe:
فَاذْكُرُوْنِیْۤ اَذْكُرْكُمْ وَاشْكُرُوْا لِیْ وَلَا تَكْفُرُوْنِ ۟۠
2.152. உங்களின் உள்ளத்தாலும் உடலுறுப்புக்களாலும் என்னை நினைவுகூருங்கள். உங்களைப் பாராட்டி, பாதுகாத்து நான் உங்களை நினைவுகூருவேன். செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும். நான் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துங்கள். அவற்றை மறுத்து, தடைசெய்யப்பட்ட விஷயங்களுக்காகப் பயன்படுத்தி நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்ளாதீர்கள்.
Ang mga Tafsir na Arabe:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اسْتَعِیْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ— اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِیْنَ ۟
2.153. நம்பிக்கைகொண்டவர்களே! எனக்குக் கட்டுப்படுவதற்கும் எனது கட்டளைக்கு அடிபணிவதற்கும் பொறுமையைக் கொண்டும் தொழுகைகையைக் கொண்டும் உதவிதேடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். அவர்களுக்கு பாக்கியம் அளித்து உதவியும் புரிகின்றான்.
Ang mga Tafsir na Arabe:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• إطالة الحديث في شأن تحويل القبلة؛ لما فيه من الدلالة على نبوة محمد صلى الله عليه وسلم.
1. கிப்லா மாற்றத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களது நபித்துவத்திற்கான சான்று உள்ளது என்பதனால் தான் அது சம்பந்தமாக விரிவாக பேசப்பட்டுள்ளது.

• ترك الجدال والاشتغالُ بالطاعات والمسارعة إلى الله أنفع للمؤمن عند ربه يوم القيامة.
2. தர்க்கம் செய்வதை விட்டுவிட்டு, அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிகின்ற விஷயங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வது மறுமையில் நம்பிக்கையாளனுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்றாகும்.

• أن الأعمال الصالحة الموصلة إلى الله متنوعة ومتعددة، وينبغي للمؤمن أن يسابق إلى فعلها؛ طلبًا للأجر من الله تعالى.
அல்லாஹ்விடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் நற்காரியங்கள் பல்வேறுபட்டவையாகும். அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து அவற்றைச் செய்ய முன்வருவது விசுவாசியின் கடமையாகும்.

• عظم شأن ذكر الله -جلّ وعلا- حيث يكون ثوابه ذكر العبد في الملأ الأعلى.
4. அல்லாஹ்வை நினைவுகூறுவது மிகப்பெரும் வணக்கமாகும். அதற்கான கூலி சிறந்த சபையில் அடியானைப் பற்றி குறிப்பிடப்படுவதாகும்.

 
Salin ng mga Kahulugan Surah: Al-Baqarah
Indise ng mga Surah Numero ng Pahina
 
Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm - Indise ng mga Salin

Inilabas ng Markaz Tafsīr Lid-Dirāsāt Al-Qur’ānīyah (Sentro ng Tafsīr Para sa mga Pag-aaral Pang-Qur’an).

Isara