Check out the new design

Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm * - Indise ng mga Salin


Salin ng mga Kahulugan Surah: Al-Baqarah   Ayah:
فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؕ— وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الْیَتٰمٰی ؕ— قُلْ اِصْلَاحٌ لَّهُمْ خَیْرٌ ؕ— وَاِنْ تُخَالِطُوْهُمْ فَاِخْوَانُكُمْ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ ؕ— وَلَوْ شَآءَ اللّٰهُ لَاَعْنَتَكُمْ ؕ— اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
2.220. இவ்வுலகிலும் மறுவுலகிலும் உங்களுக்குப் பயன்தரக்கூடிய விஷயங்களைக் குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே அவன் இவற்றை விதித்துள்ளான். தூதரே! உம்முடைய தோழர்கள் அநாதைகளை பொறுப்பேற்பது குறித்து, அவர்களுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? உணவு, வசிப்பிடம் ஆகிய செவினங்களில் அவர்களின் செல்வங்களை தங்களின் செல்வங்களோடு சேர்த்து செலவளிக்கலாமா? என்றெல்லாம் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் அவர்களுக்குக் கூறுவீராக: அவர்களின் செல்வங்களை உங்களின் செல்வங்களோடு கலக்காமலும், அவற்றிலிருந்து இலாபத்தைப் பெறாமலும் நீங்கள் அவர்களின் செல்வங்களைப் பராமரிப்பது அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்ததும் அதிகக் கூலியை பெற்றுத்தரக்கூடியதுமாகும். அதுவே அவர்களது செல்வத்துக்கும் சிறந்ததும் பாதுகாப்புமாகும். நீங்கள் அவர்களின் செல்வங்களை உங்களின் செல்வங்களோடு சேர்த்து செலவளிப்பதும் எவ்விதக் குற்றமுமில்லை. அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களாவர். சகோதரர்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்வார்கள். ஒருவர் மற்றவரின் விவகாரங்களில் பங்கெடுப்பார்கள். பொறுப்பாளிகளில் யார் அநாதைகளின் செல்வங்களை தங்களின் செல்வங்களோடு சேர்த்து அபகரிக்க நாடுபவர்கள், யார் அவற்றை முறையாக பராமரிக்க நாடுபவர்கள் என்பதையும் அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் நாடினால் அநாதைகளின் விவகாரத்தில் உங்களைச் சிரமத்தில் ஆழ்த்தியிருப்பான். ஆயினும் அவன் அவர்களுடன் நடந்துகொள்ளும் முறையை இலகுவாக்கித்தந்துள்ளான். ஏனெனில் மார்க்கம் இலகுவானது. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தனது படைப்பு, திட்டமிடல், சட்டமியற்றல் ஆகியவற்றில் அவன் ஞானம்மிக்கவன்.
Ang mga Tafsir na Arabe:
وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰی یُؤْمِنَّ ؕ— وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَیْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ ۚ— وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِیْنَ حَتّٰی یُؤْمِنُوْا ؕ— وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَیْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْ ؕ— اُولٰٓىِٕكَ یَدْعُوْنَ اِلَی النَّارِ ۖۚ— وَاللّٰهُ یَدْعُوْۤا اِلَی الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖ ۚ— وَیُبَیِّنُ اٰیٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟۠
2.221. அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கும் பெண்களை -அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே நம்பி, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்வரை - மணமுடிக்காதீர்கள். அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்ட அடிமைப்பெண் சிலைகளை வணங்கும் சுதந்திரமான பெண்ணைவிடச் சிறந்தவளாவாள், அவள் அழகாலும் செல்வத்தாலும் உங்களைக் கவர்ந்தபோதிலும் சரியே. அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கும் ஆண்களுக்கு முஸ்லிமான பெண்ணை மணமுடித்துக் கொடுக்காதீர்கள். அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்ட ஆண் அடிமை இணைவைக்கும் சுதந்திரமானவனை விடச் சிறந்தவனாவான், அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே. இந்த இணைவைக்கும் ஆண்களும் பெண்களும் தங்களின் சொல்லாலும் செயலாலும் நரகத்தின் பக்கம் இட்டுச் செல்லும் விஷயங்களின்பால் அழைக்கிறார்கள். அல்லாஹ், சுவனத்தில்பால் இட்டுச் செல்லும் நற்செயல்களின் பக்கமும், தனது அருளினால் பாவங்களை மன்னிப்பதன் பக்கமும் அழைக்கிறான். மக்கள் அல்லாஹ்வின் வசனங்களிலிருந்து படிப்பினை பெற்று அதன்படி செயல்படுவார்கள் என்பதற்காக அவன் அவர்களுக்கு தன் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.
Ang mga Tafsir na Arabe:
وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الْمَحِیْضِ ؕ— قُلْ هُوَ اَذًی ۙ— فَاعْتَزِلُوا النِّسَآءَ فِی الْمَحِیْضِ ۙ— وَلَا تَقْرَبُوْهُنَّ حَتّٰی یَطْهُرْنَ ۚ— فَاِذَا تَطَهَّرْنَ فَاْتُوْهُنَّ مِنْ حَیْثُ اَمَرَكُمُ اللّٰهُ ؕ— اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیْنَ وَیُحِبُّ الْمُتَطَهِّرِیْنَ ۟
2.222. தூதரே! மாதவிடாய் குறித்து உம்முடைய தோழர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். அவர்களைக் குறித்து நீர் கூறுவீராக: மாதவிடாய் ஆணுக்கும் பெண்ணுக்கும் தீங்காகும். எனவே அச்சமயங்களில் நீங்கள் பெண்களுடன் உடலுறவுகொள்ளாதீர்கள். இரத்தம் நின்று குளித்துத் தூய்மையாகும்வரை உடலுறவுக்காக அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மையடைந்துவிட்டால் அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ளபடி அவர்களது பெண்ணுறுப்பில் உடலுறவு கொள்ளலாம். அல்லாஹ் அதிகமாக பாவமன்னிப்புக் கோருபவர்களையும் அழுக்குகளிலிருந்து மிகத்தூய்மையாக இருப்பவர்களையும் நேசிக்கிறான்.
Ang mga Tafsir na Arabe:
نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ ۪— فَاْتُوْا حَرْثَكُمْ اَنّٰی شِئْتُمْ ؗ— وَقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّكُمْ مُّلٰقُوْهُ ؕ— وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ ۟
2.223. விளைச்சல்களைத் தரும் நிலத்தைப் போல் உங்களின் மனைவியர் உங்களுக்குக் குழந்தைகளைப் பெற்றுத்தரும் விளைநிலங்களாவர். எனவே உங்கள் விளைநிலமாகிய பெண்ணுறுப்பில் நீங்கள் எத்திசையிலிருந்தும் விரும்பியவாறு உறவுகொள்ளலாம். நற்செயல்களைச் செய்வதன் மூலம் உங்களுக்காக நீங்கள் சேர்த்து வையுங்கள். அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடி, நல்ல குழந்தைகளைப் பெறுவதற்காக மனைவியுடன் உடலுறவுகொள்வதும் நற்செயல்களில் உள்ளடங்கியவைதான். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனைப் அஞ்சிக்கொள்ளுங்கள். மறுமைநாளில் நீங்கள் அவனைச் சந்திக்கக்கூடியவர்கள் என்பதையும் நீங்கள் அவனுக்கு முன்னால் நிற்கக்கூடியவர்கள் என்பதையும் அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். தூதரே! தங்கள் இறைவனை சந்திக்கும்போது, அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் நிரந்தர இன்பம் மற்றும் அவனுடைய திருமுகத்தைக் காணுதல் ஆகியவற்றைக் கொண்டு நம்பிக்கைகயாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
Ang mga Tafsir na Arabe:
وَلَا تَجْعَلُوا اللّٰهَ عُرْضَةً لِّاَیْمَانِكُمْ اَنْ تَبَرُّوْا وَتَتَّقُوْا وَتُصْلِحُوْا بَیْنَ النَّاسِ ؕ— وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
2.224. அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்து; நன்மையான, இறையச்சமுள்ள செயல், மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துதல் ஆகிய செயல்களுக்குத் தடையை எற்படுத்திக்கொள்ளவேண்டாம். நீங்கள் நன்மையான ஒரு செயலை விட்டுவிடுவதற்கு சத்தியம் செய்தால் அதனை விட்டுவிடாமல் செய்துவிடுங்கள். சத்தியத்திற்காக பரிகாரம் செய்துவிடுங்கள். நீங்கள் பேசக்கூடியவற்றை அல்லாஹ் செவியேற்கக்கூடியவன்; உங்களின் செயல்களை அவன் நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Ang mga Tafsir na Arabe:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• تحريم النكاح بين المسلمين والمشركين، وذلك لبُعد ما بين الشرك والإيمان.
1. இணைவைப்பாளர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே திருமண உறவு தடைசெய்யப்பட்டுள்ளது. இது ஈமானுக்கும் ஷிர்க்கிற்கும் இடையேயுள்ள தூரத்தினாலாகும்.

• دلت الآية على اشتراط الولي عند عقد النكاح؛ لأن الله تعالى خاطب الأولياء لمّا نهى عن تزويج المشركين.
2. திருமண ஒப்பந்தத்திற்கு பெண்ணின் பொறுப்பாளர் (வலீ) அவசியமாகும். ஏனெனில் அல்லாஹ் "இணைவைப்பாளர்களுக்கு மணமுடித்துக் கொடுக்காதீர்கள்" என்று பெண்ணின் பொறுப்பாளர்களை நோக்கியே உரையாடுகின்றான்.

• حث الشريعة على الطهارة الحسية من النجاسات والأقذار، والطهارة المعنوية من الشرك والمعاصي.
3. அசுத்தம் போன்ற வெளிரங்கமான அழுக்குகளிலிருந்தும் ஷிர்க், பாவங்கள் போன்ற ஆன்மரீதியான அழுக்குகளிலிருந்தும் தூய்மையாக இருக்கும்படி மார்க்கம் வலியுறுத்துகிறது.

• ترغيب المؤمن في أن يكون نظره في أعماله - حتى ما يتعلق بالملذات - إلى الدار الآخرة، فيقدم لنفسه ما ينفعه فيها.
4. இறைவிசுவாசியின் உடல்ரீதியான இன்பம் உட்பட அவனது அனைத்து காரியங்களிலும் அவனது பார்வை மறுமையை நோக்கியதாக இருக்கவேண்டும். அங்கு பயன்தருபவற்றையை முற்படுத்தி அனுப்பிவைக்க வேண்டும்.

 
Salin ng mga Kahulugan Surah: Al-Baqarah
Indise ng mga Surah Numero ng Pahina
 
Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm - Indise ng mga Salin

Inilabas ng Markaz Tafsīr Lid-Dirāsāt Al-Qur’ānīyah (Sentro ng Tafsīr Para sa mga Pag-aaral Pang-Qur’an).

Isara