Check out the new design

Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm * - Indise ng mga Salin


Salin ng mga Kahulugan Surah: Al-Mā’idah   Ayah:
وَمَا لَنَا لَا نُؤْمِنُ بِاللّٰهِ وَمَا جَآءَنَا مِنَ الْحَقِّ ۙ— وَنَطْمَعُ اَنْ یُّدْخِلَنَا رَبُّنَا مَعَ الْقَوْمِ الصّٰلِحِیْنَ ۟
5.84. அல்லாஹ்வையும், அவன் இறக்கிய, முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சத்தியத்தையும் நம்பிக்கைகொள்வதற்கும் நமக்குமிடையில் தடையாக என்ன இருக்க முடியும்? நாங்கள் தூதர்களுடனும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனது தண்டனையை அஞ்சிய அவர்களைப் பின்பற்றுபவர்களுடனும் சேர்ந்து சுவனம் செல்லவே விரும்புகிறோம்.
Ang mga Tafsir na Arabe:
فَاَثَابَهُمُ اللّٰهُ بِمَا قَالُوْا جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ— وَذٰلِكَ جَزَآءُ الْمُحْسِنِیْنَ ۟
5.85. அவர்கள் நம்பிக்கை கொண்டு சத்தியத்தையும் ஏற்றுக் கொண்டதனால் அல்லாஹ் அவர்களுக்குச் சுவனங்களைக் கூலியாகக் கொடுத்தான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இதுதான் சத்தியத்தைப் பின்பற்றுவதிலும் எவ்வித கட்டுப்பாடும் நிபந்தனையுமின்றி சத்தியத்திற்கு சிறந்த முறையில் கட்டுப்படுபவர்களுக்கான கூலியாகும்.
Ang mga Tafsir na Arabe:
وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟۠
5.86. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து அவன் தன் தூதர்மீது இறக்கிய வசனங்களை பொய்யெனக் கூறியவர்கள்தாம் நரகவாசிகள். அவர்களே எரியும் நெருப்பிற்கு உரியவர்கள். அங்கிருந்து ஒருபோதும் அவர்களால் வெளியேறவே முடியாது.
Ang mga Tafsir na Arabe:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُحَرِّمُوْا طَیِّبٰتِ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَكُمْ وَلَا تَعْتَدُوْا ؕ— اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُعْتَدِیْنَ ۟
5.87. அல்லாஹ்வை நம்பியவர்களே! உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட உணவுகள், குடிபானங்கள், திருமணம் ஆகிய இன்பங்களை தடைசெய்துவிடாதீர்கள். துறவரம், வழிபாடு எனக் கருதி அவற்றைத் தடைசெய்துவிடாதீர்கள். அல்லாஹ் தடைசெய்தவற்றின் வரம்புகளை மீறிவிடாதீர்கள். தான் விதித்த வரம்புகளை மீறக்கூடியவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. மாறாக அவர்களை வெறுக்கிறான்.
Ang mga Tafsir na Arabe:
وَكُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ حَلٰلًا طَیِّبًا ۪— وَّاتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اَنْتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ ۟
5.88. அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அனுமதிக்கப்பட்ட தூய்மையான உணவுகளை உண்ணுங்கள். அபகரிக்கப்பட்ட அல்லது அறுவறுக்கத்தக்கது போன்ற தடைசெய்யப்பட்டவற்றை உண்ணாதீர்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் மீதுதான் நீங்கள் நம்பிக்கைகொண்டுள்ளீர்கள். அவன் மீதான உங்களின் நம்பிக்கை அவனை அஞ்சுவதைக் கட்டாயமாக்கிவிடுகிறது.
Ang mga Tafsir na Arabe:
لَا یُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِیْۤ اَیْمَانِكُمْ وَلٰكِنْ یُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَیْمَانَ ۚ— فَكَفَّارَتُهٗۤ اِطْعَامُ عَشَرَةِ مَسٰكِیْنَ مِنْ اَوْسَطِ مَا تُطْعِمُوْنَ اَهْلِیْكُمْ اَوْ كِسْوَتُهُمْ اَوْ تَحْرِیْرُ رَقَبَةٍ ؕ— فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ ثَلٰثَةِ اَیَّامٍ ؕ— ذٰلِكَ كَفَّارَةُ اَیْمَانِكُمْ اِذَا حَلَفْتُمْ ؕ— وَاحْفَظُوْۤا اَیْمَانَكُمْ ؕ— كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
5.89. நம்பிக்கையாளர்களே! சத்தியம் செய்வதை நாடாது உங்களின் நாவில் வெளிப்பட்டுவிடும் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களிடம் கணக்குக் கேட்க மாட்டான். நீங்கள் உறுதியான நோக்கத்துடன் செய்யும் சத்தியங்களை முறித்து விட்டால்தான் அவன் உங்களிடம் கணக்குக் கேட்பான். நீங்கள் உள்ளத்தில் உறுதிகொண்டு நாவினால் மொழிந்த சத்தியங்களை முறித்துவிட்டால் பின்வரும் மூன்றில் நீங்கள் விரும்பும் ஒன்றைச் செய்தால் சத்தியத்தை முறித்த பாவத்தை அல்லாஹ் அழித்துவிடுவான். உங்களின் ஊரிலுள்ள நடுநிலையான உணவிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் (ஒவ்வொரு ஏழைக்கும் அரை ஸாவு அளவு உணவுப்பொருள் கொடுக்கப்பட வேண்டும்) அல்லது அவர்களுக்கு தகுந்த ஆடை வழங்க வேண்டும் அல்லது நம்பிக்கைகொண்ட ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். தனது சத்தியத்திற்குப் பரிகாரம் செய்வதற்கு மேற்குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் எதையும் பெறாதவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்று பரிகாரம் செய்யட்டும். இதுதான் நீங்கள் முறித்துவிட்ட சத்தியங்களுக்கான பரிகாரமாகும். அல்லாஹ்வின் மீது பொய்ச்சத்தியம் செய்வது, அதிகமாக சத்தியம் செய்வது, சத்தியத்தின் படி செயற்படாமை ஆகியவற்றை விட்டும் உங்களது சத்தியங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். சத்தியத்தின் படி செயற்படாமை சிறந்ததாக இருந்தால் அதனை முறித்துவிடுங்கள். சிறந்ததைச் செய்து உங்களது சத்தியங்களுக்குப் பரிகாரம் செய்து விடுங்கள். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்ததற்காக நீங்கள் அவனுக்கு நன்றிசெலுத்தும்பொருட்டு சத்தியங்களுக்குப் பரிகாரத்தைத் தெளிவுபடுத்தியது போன்று ஹலால், ஹராம் பற்றிய தெளிவான தன் சட்டங்களை அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
Ang mga Tafsir na Arabe:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَیْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّیْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
5.90. அல்லாஹ்வை நம்பியவர்களே! அறிவை மழுங்கடிக்கும் மதுவும் இருதரப்பும் பணயம் வைத்து ஆடுகின்ற சூதாட்டமும் இணைவைப்பாளர்கள் புனிதமாகக் கருதி பலிபீடத்திற்காக அல்லது வணங்குவதற்காக நட்டுவைத்திருக்கும் கல்லும் அவர்களுக்காக மறைவில் பங்குவைக்கப்பட்டிருப்பதை அறிவதற்காக பயன்படுத்தப்படும் அம்பும் ஷைத்தான் அழகுபடுத்தியுள்ள பாவமான செயல்களாகும். எனவே அவற்றிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். இவ்வுலகில் கண்ணியமான வாழ்வையும் மறுமையில் சுவன இன்பத்தையும் அடைவீர்கள்.
Ang mga Tafsir na Arabe:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• الأمر بتوخي الطيب من الأرزاق وترك الخبيث.
1. தூய்மையான உணவுகளையே தேடுமாறும் கெட்ட உணவுகளை விட்டு விடுமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.

• عدم المؤاخذة على الحلف عن غير عزم للقلب، والمؤاخذة على ما كان عن عزم القلب ليفعلنّ أو لا يفعلنّ.
2. உள உறுதியின்றி செய்யப்படும் சத்தியங்களுக்கு குற்றமில்லை. செய்வேன் அல்லது செய்யமாட்டேன் என உளப்பூர்வமாக செய்யப்படும் சத்தியங்களுக்குத்தான் குற்றம்பிடிக்கப்படும்.

• بيان أن كفارة اليمين: إطعام عشرة مساكين، أو كسوتهم، أو عتق رقبة مؤمنة، فإذا لم يستطع المكفِّر عن يمينه الإتيان بواحد من الأمور السابقة، فليكفِّر عن يمينه بصيام ثلاثة أيام.
3. சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரம், பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது ஆடை வழங்க வேண்டும் அல்லது நம்பிக்கைகொண்ட ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ஒருவர் மேற்குறிப்பிட்ட எதையும் செய்ய சக்திபெறவில்லையெனில் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்.

• قوله تعالى: ﴿... إنَّمَا الْخَمْرُ ...﴾ هي آخر آية نزلت في الخمر، وهي نص في تحريمه.
4. மதுபானம் சம்பந்தமான இங்கு இடம்பெற்றுள்ள வசனமே மதுபானம் சம்பந்தமாக இறங்கிய இறுதி வசனமாகும். இது மதுபானத்தை தெளிவாகவும் முழுமையாகவும் தடுக்கும் வசனமாகும்.

 
Salin ng mga Kahulugan Surah: Al-Mā’idah
Indise ng mga Surah Numero ng Pahina
 
Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm - Indise ng mga Salin

Inilabas ng Markaz Tafsīr Lid-Dirāsāt Al-Qur’ānīyah (Sentro ng Tafsīr Para sa mga Pag-aaral Pang-Qur’an).

Isara