Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى سۈرە: مائىدە   ئايەت:
وَحَسِبُوْۤا اَلَّا تَكُوْنَ فِتْنَةٌ فَعَمُوْا وَصَمُّوْا ثُمَّ تَابَ اللّٰهُ عَلَیْهِمْ ثُمَّ عَمُوْا وَصَمُّوْا كَثِیْرٌ مِّنْهُمْ ؕ— وَاللّٰهُ بَصِیْرٌ بِمَا یَعْمَلُوْنَ ۟
5.71. வாக்குறுதிகளையும் ஒப்பந்தங்களையும் மீறியது, தூதர்களை நிராகரித்தது, அவர்களைக் கொலைசெய்தது ஆகிய செயல்களால் தங்களுக்கு எந்த தீங்கும் நேராது என்று அவர்கள் எண்ணினார்கள். மாறாக அவர்கள் எண்ணிப்பார்க்காத விளைவு அவர்களுக்கு ஏற்பட்டது. அவர்கள் சத்தியத்தை விட்டும் குருடாகிவிட்டனர். எனவே அவர்களால் நேர்வழியை அடையமுடியவில்லை. சத்தியத்தைக் கேட்பதை விட்டும் அவர்கள் செவிடாகிவிட்டார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்கள் மீது அருள்செய்தான். அதன் பின்னரும் அவர்கள் சத்தியத்தை விட்டும் குருடாகிவிட்டார்கள். அதனைச் செவியேற்பதை விட்டும் செவிடாகிவிட்டார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு இவ்வாறு நிகழ்ந்தது. அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். எதுவும் அவர்களைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
ئەرەپچە تەپسىرلەر:
لَقَدْ كَفَرَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِیْحُ ابْنُ مَرْیَمَ ؕ— وَقَالَ الْمَسِیْحُ یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّیْ وَرَبَّكُمْ ؕ— اِنَّهٗ مَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَیْهِ الْجَنَّةَ وَمَاْوٰىهُ النَّارُ ؕ— وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ ۟
5.72. மர்யமின் மகன் ஈஸாதான் அல்லாஹ் என்று கூறி தெய்வீகத் தன்மையை அல்லாஹ் அல்லாதவருக்கு வழங்கியதனால் கிறிஸ்தவர்கள் நிராகரித்துவிட்டார்கள். மாறாக ஈஸாவே இஸ்ராயீலின் மக்களிடம் பின்வருமாறுதான் கூறினார்: “இஸ்ராயீலின் மக்களே, அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அவனே என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். அடிமைத்துவத்தில் நாம் அனைவரும் சமமானவர்கள்தாம். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியவர் நிரந்தரமாக சுவனத்தை விட்டுத் தடுக்கப்படுவார். அவரது தங்குமிடம் நரகமாகும். அல்லாஹ்விடத்தில் அவருக்கு உதவிபெற்றுக்கொடுப்பவர் யாரும் இல்லை. காத்திருக்கும் வேதனையிலிருந்து காப்பாற்றக்கூடியவர் எவரும் இருக்கமாட்டார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
لَقَدْ كَفَرَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ ثَالِثُ ثَلٰثَةٍ ۘ— وَمَا مِنْ اِلٰهٍ اِلَّاۤ اِلٰهٌ وَّاحِدٌ ؕ— وَاِنْ لَّمْ یَنْتَهُوْا عَمَّا یَقُوْلُوْنَ لَیَمَسَّنَّ الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
5.73. நிச்சயமாக அல்லாஹ் மூவரில் - பிதா, மகன், பரிசுத்த ஆவி - ஒன்றிணைந்தவன் என்று கூறிய கிறிஸ்தவர்கள் நிராகரித்து விட்டார்கள். அவர்களின் இந்தக் கூற்றை விட்டும் அல்லாஹ் மிக உயர்ந்தவன். அல்லாஹ் பலர் அல்ல. அவன் ஒருவனே. அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. அவர்களின் இந்த மோசமான கூற்றிலிருந்து அவர்கள் விலகிக்கொள்ளவில்லையெனில் வேதனைமிக்க தண்டனை அவர்களை அடைந்தே தீரும்.
ئەرەپچە تەپسىرلەر:
اَفَلَا یَتُوْبُوْنَ اِلَی اللّٰهِ وَیَسْتَغْفِرُوْنَهٗ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
5.74. அவர்களின் இந்த வார்த்தையிலிருந்து பாவமன்னிப்புக் கோரியவர்களாக அல்லாஹ்வின்பால் அவர்கள் மீள வேண்டாமா? தமது இணைவைப்பிலிருந்து அவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோர வேண்டாமா? என்ன பாவம் செய்திருந்தாலும் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை அவன் மன்னிக்கக்கூடியவன், அது அவனை நிராகரிப்பதாக இருந்தாலும் சரியே. அவன் நம்பிக்கையாளர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
ئەرەپچە تەپسىرلەر:
مَا الْمَسِیْحُ ابْنُ مَرْیَمَ اِلَّا رَسُوْلٌ ۚ— قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ ؕ— وَاُمُّهٗ صِدِّیْقَةٌ ؕ— كَانَا یَاْكُلٰنِ الطَّعَامَ ؕ— اُنْظُرْ كَیْفَ نُبَیِّنُ لَهُمُ الْاٰیٰتِ ثُمَّ انْظُرْ اَنّٰی یُؤْفَكُوْنَ ۟
5.75. மர்யமின் மகன் ஈஸா தூதர்களில் ஒரு தூதர் மாத்திரமே. அவர்கள் மரணித்தது போலவே இவரும் மரணிப்பவரே. அவரது தாய் மர்யம் அதிகமாக உண்மையுரைக்கும் உண்மைப்படுத்தும் பெண்மணியாக இருந்தார். இருவருக்கும் உணவுத் தேவை இருப்பதனால் இருவரும் உணவு உண்பவர்களாக இருந்தார்கள். உணவுத் தேவை உள்ளவர்கள் எவ்வாறு இறைவனாக இருக்க முடியும்? தூதரே! ஏகத்துவத்தை அறிவிக்கக்கூடிய, அல்லாஹ் அல்லாதவர்களுக்கு தெய்வீகத் தன்மையை வழங்கும் அவர்களின் எல்லைமீறல் தவறு என நிருபிக்கக்கூடிய, அத்தாட்சிகளை எவ்வாறு தெளிவுபடுத்துகின்றோம் என்பதை கவனமாகப் பார்ப்பீராக, இருந்தும் அவர்கள் இந்த அத்தாட்சிகளை மறுக்கத்தான் செய்கிறார்கள். அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய தெளிவான அத்தாட்சிகளை அவர்கள் கண்ட பின்னரும் எவ்வாறு அவர்கள் சத்தியத்தை விட்டும் திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனித்துப் பார்ப்பீராக.
ئەرەپچە تەپسىرلەر:
قُلْ اَتَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَمْلِكُ لَكُمْ ضَرًّا وَّلَا نَفْعًا ؕ— وَاللّٰهُ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
5.76. தூதரே! அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதை மறுத்துக் கூறுவீராக: “உங்களுக்குப் பலனளிக்காத உங்களை விட்டும் தீங்கை அகற்ற முடியாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்? அவை இயலாதவையாயிற்றே? இயலாமையை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். அல்லாஹ் மாத்திரமே நீங்கள் கூறுவதைச் செவியேற்கக்கூடியவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு தப்பமுடியாது. உங்களின் செயல்களை அவன் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
ئەرەپچە تەپسىرلەر:
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِیْ دِیْنِكُمْ غَیْرَ الْحَقِّ وَلَا تَتَّبِعُوْۤا اَهْوَآءَ قَوْمٍ قَدْ ضَلُّوْا مِنْ قَبْلُ وَاَضَلُّوْا كَثِیْرًا وَّضَلُّوْا عَنْ سَوَآءِ السَّبِیْلِ ۟۠
5.77. தூதரே! கிறிஸ்தவர்களிடம் கூறுவீராக: உங்களுக்கு ஏவப்பட்ட சத்தியத்தைப் பின்பற்றுவதில் வரம்பு மீறிவிடாதீர்கள். நேர்வழியை விட்டுத் தானும் வழிதவறி அதிகமான மக்களையும் வழிகெடுத்த வழிகேடர்களான உங்களது முன்னோர்களைப் பின்பற்றி மர்யமின் மகன் ஈஸாவுடன் நீங்கள் நடந்து கொண்டது போன்று கண்ணிப்படுத்துமாறு ஏவப்பட்ட தூதர்களைக் கண்ணியப்படுத்துவதில் எல்லையைத் தாண்டி அவர்களுக்கு தெய்வீகத்தன்மை இருப்பதாக நம்பிவிடாதீர்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• بيان كفر النصارى في زعمهم ألوهية المسيح عليه السلام، وبيان بطلانها، والدعوةُ للتوبة منها.
1. கிறிஸ்தவர்கள் ஈஸாவுக்கு தெய்வீகத்தன்மை இருப்பதாக வாதிட்டதால் அவர்கள் நிராகரிப்பாளர்கள் என்பதும் அந்த வாதம் தவறு என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிலிருந்து மீளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

• من أدلة بشرية المسيح وأمه: أكلهما للطعام، وفعل ما يترتب عليه.
2. ஈஸாவும் அவரது தாயும் மனிதர்களே என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றுதான் அவ்விருவரும் உணவு உண்பதும் அதன் விளைவுகளில் ஈடுபடுவதாகும்.

• عدم القدرة على كف الضر وإيصال النفع من الأدلة الظاهرة على عدم استحقاق المعبودين من دون الله للألوهية؛ لكونهم عاجزين.
3. பலனளிப்பதற்கும் தீங்கைத் தடுப்பதற்கும் சக்தியின்மை அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுபவை வணக்கத்திற்குத் தகுதியானவர்கள் அல்ல என்பதற்கான தெளிவான ஆதாரங்களில் ஒன்றாகும். ஏனெனில் அவர்கள் அதற்கு இயலாதவர்களாவர்.

• النهي عن الغلو وتجاوز الحد في معاملة الصالحين من خلق الله تعالى.
4. அல்லாஹ்வின் படைப்பினங்களில் நல்லோரை மதிப்பதில் வரம்புமீறி மிகைப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

 
مەنالار تەرجىمىسى سۈرە: مائىدە
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى - تەرجىمىلەر مۇندەرىجىسى

قۇرئان تەتقىقاتى تەپسىر مەركىزى چىقارغان.

تاقاش