Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى سۈرە: مائىدە   ئايەت:
اُحِلَّ لَكُمْ صَیْدُ الْبَحْرِ وَطَعَامُهٗ مَتَاعًا لَّكُمْ وَلِلسَّیَّارَةِ ۚ— وَحُرِّمَ عَلَیْكُمْ صَیْدُ الْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا ؕ— وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟
5.96. நீரிலுள்ள பிராணிகளை வேட்டையாடுவதும் கடல் உங்களுக்காக கரை ஒதுக்கிவிடும் - உயிருள்ள அல்லது இறந்த - பிராணிகளும் உங்களில் ஊரில் இருப்பவர்களுக்கும் பயணிகளாக இருப்பவர்களுக்கும் பயன்பெறும் பொருட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஹஜ் அல்லது உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும் வரை நிலத்தில் வேட்டையாடுவது உங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். மறுமைநாளில் நீங்கள் அவன் பக்கமே திரும்ப வேண்டும். உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
ئەرەپچە تەپسىرلەر:
جَعَلَ اللّٰهُ الْكَعْبَةَ الْبَیْتَ الْحَرَامَ قِیٰمًا لِّلنَّاسِ وَالشَّهْرَ الْحَرَامَ وَالْهَدْیَ وَالْقَلَآىِٕدَ ؕ— ذٰلِكَ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ وَاَنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
5.97. கஃபா என்னும் ஆலயத்தை அல்லாஹ் மக்களின் மார்க்கத்தை சீர்ப்படுத்துவதாகவும் வாழ்விற்குப் பாதுகாப்பாகவும் அமைத்துள்ளான். இதனை மையப்படுத்தியே அவர்களின் மார்க்க நலன்களான தொழுகை, ஹஜ், உம்ரா ஆகியவையும் புனித பூமியில் அமைதி, அனைத்து வகையான கனிகளும் கிடைத்தல் போன்ற உலக நலன்களும் நிகழ்கின்றன. (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப்) ஆகிய புனித மாதங்களில் மற்றவர்கள் அவர்களுடன் போரிடுவதிலிருந்து அபயமளிக்கக்கூடியதாக ஆக்கியுள்ளான். பலிப்பிராணியையும் ஹரமை நோக்கி கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கு அடையாளமாக கழுத்தில் பட்டைகட்டப்பட்ட பிராணியையும் அதைக்கொண்டு செல்லக்கூடியவர்களுக்கு எந்தத் தீங்கிழைப்பதிலிருந்து அபயமளிக்கக்கூடியதாக ஆக்கியுள்ளான். அவ்வாறான அருளை அல்லாஹ் உங்கள் மீது சொரிந்திருப்பது, வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அல்லாஹ் அறிவான், அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். உங்களுக்கு நலன்கள் ஏற்படுவதற்கும் தீங்குகள் நிகழ முன் அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்குமுரிய அச்சட்டங்களை அவன் விதியாக்கியமை தனது அடியார்களுக்குப் பொருத்தமானவற்றை அவன் அறிந்துள்ளான் என்பதற்குரிய சான்றாகும்.
ئەرەپچە تەپسىرلەر:
اِعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ وَاَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟ؕ
5.98. மனிதர்களே! தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அல்லாஹ் கடுமையாகத் தண்டிக்கக்கூடியவன் என்பதையும் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மிகவும் மன்னிக்கக்கூடியவன், அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
مَا عَلَی الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ ۟
5.99. அல்லாஹ் கட்டளையிட்டதை எடுத்துரைப்பதைத் தவிர தூதர் மீது எந்தக் கடமையும் இல்லை. மக்களுக்கு நேர்வழி அளிக்கும் அதிகாரம் அவரிடம் இல்லை. அது அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது. நீங்கள் வெளிப்படுத்தும், மறைத்துவைக்கும் நேர்வழியையும் வழிகேட்டையும் அவன் அறிவான். அதற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
ئەرەپچە تەپسىرلەر:
قُلْ لَّا یَسْتَوِی الْخَبِیْثُ وَالطَّیِّبُ وَلَوْ اَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِیْثِ ۚ— فَاتَّقُوا اللّٰهَ یٰۤاُولِی الْاَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟۠
100. தூதரே! நீர் கூறுவீராக: “ஒவ்வொரு பொருளிலும் நல்லவையும் தீயவையும் சமமாக முடியாது” தீயவற்றின் பெருக்கம் உம்மை வியப்பில் ஆழ்த்தினாலும் சரியே. பெருக்கம் சிறப்பிற்கான அடையாளம் அல்ல. அறிவுடையோரே! தீயவற்றை விட்டு விட்டு நல்லவற்றில் ஈடுபட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் நரகத்திலிருந்து தப்பித்து சுவனத்தைப் பெறுவீர்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَسْـَٔلُوْا عَنْ اَشْیَآءَ اِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ ۚ— وَاِنْ تَسْـَٔلُوْا عَنْهَا حِیْنَ یُنَزَّلُ الْقُرْاٰنُ تُبْدَ لَكُمْ ؕ— عَفَا اللّٰهُ عَنْهَا ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ حَلِیْمٌ ۟
5.101. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்குத் தேவையில்லாத, உங்களின் மார்க்க விவகாரங்களுக்குப் பயனளிக்காத விஷயங்களை உங்கள் தூதரிடம் கேட்காதீர்கள். அவை உங்களுக்கு வெளிப்பட்டால் அவற்றின் சிரமத்தினால் உங்களுக்குக் கவலையே ஏற்படும். உங்கள் தூதருக்கு வஹி இறங்கிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் கேட்பதற்குத் தடுக்கப்பட்டவற்றைக் குறித்து நீங்கள் கேட்டால் அவை உங்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டுவிடும். இது அல்லாஹ்வுக்கு மிகவும் இலகுவானது. எவற்றைக் குறித்து குர்ஆன் எதுவும் கூறவில்லையோ அவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். எனவே அவற்றைக் குறித்து கேட்காதீர்கள். நீங்கள் அவை குறித்து கேட்டால் அவற்றைக் குறித்த சட்டங்கள் உங்களுக்குத் இறக்கப்பட்டுவிடும். அடியார்கள் திருந்தும் பட்சத்தில் அவர்களின் பாவங்களை அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், அவற்றிற்காக தண்டனையளிக்காமல் பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான்.
ئەرەپچە تەپسىرلەر:
قَدْ سَاَلَهَا قَوْمٌ مِّنْ قَبْلِكُمْ ثُمَّ اَصْبَحُوْا بِهَا كٰفِرِیْنَ ۟
5.102. உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் இது போன்றவைக் குறித்து கேட்டார்கள். அவர்களுக்கு அவை விதியாக்கப்பட்டவுடன் அதன்படி செயல்படவில்லை. அதன் காரணமாக அவர்கள் நிராகரிப்பாளர்களாகிவிட்டார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
مَا جَعَلَ اللّٰهُ مِنْ بَحِیْرَةٍ وَّلَا سَآىِٕبَةٍ وَّلَا وَصِیْلَةٍ وَّلَا حَامٍ ۙ— وَّلٰكِنَّ الَّذِیْنَ كَفَرُوْا یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ ؕ— وَاَكْثَرُهُمْ لَا یَعْقِلُوْنَ ۟
5.103. அல்லாஹ் உங்களுக்கு கால்நடைகளை அனுமதிக்கப்பட்டதாக ஆக்கியுள்ளான். இணைவைப்பாளர்கள் தமது சிலைகளுக்காக தங்களுக்குத் தாங்களே தடைசெய்து கொண்டவற்றை அவன் தடைசெய்யவில்லை. பஹீரா - குறிப்பிட்ட குட்டிகளை ஈன்ற பின்னர் காது அறுக்கப்பட்ட பெண் ஒட்டகம், சாயிபா - குறிப்பிட்ட வயதினை அடைந்த, சிலைகளுக்காக நேர்ந்துவிடப்பட்ட பெண் ஒட்டகம், வஸீலா - தொடர்ந்து பெண் குட்டிகளை ஈன்ற ஒட்டகம், ஹாமீ - பல ஒட்டகங்கள் உருவாவதற்குக் காரணமான ஆண் ஒட்டகம் இவையனைத்தையும் அல்லாஹ் தடைசெய்துவிட்டதாக இணைவைப்பாளர்கள் அபாண்டமாகக் கூறினார்கள். நிராகரிப்பாளர்களில் பெரும்பாலோர் சத்தியத்தையும் அசத்தியத்தையும் அனுமதிக்கப்பட்டவற்றையும் தடைசெய்யப்பட்டவற்றையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• الأصل في شعائر الله تعالى أنها جاءت لتحقيق مصالح العباد الدنيوية والأخروية، ودفع المضار عنهم.
1. அல்லாஹ் ஏற்படுத்திய புனிதக் கிரியைகளின் நோக்கம் அடியார்களின் இவ்வுலக மற்றும் மறுவுலக நன்மைகளை அடைவதும் அவர்களை விட்டும் தீங்குகளைத் தடுப்பதுமாகும்.

• عدم الإعجاب بالكثرة، فإنّ كثرة الشيء ليست دليلًا على حِلِّه أو طِيبه، وإنما الدليل يكمن في الحكم الشرعي.
2. பெரும்பான்மையைக் கொண்டு வியக்கக்கூடாது. ஒரு விடயம் அனுமதி அல்லது சிறந்தது என்பதற்கு பெரும்பான்மை ஒருபோதும் ஆதாரமல்ல. மார்க்கத் தீர்ப்பே ஆதாரமாகும்.

• من أدب المُسْتفتي: تقييد السؤال بحدود معينة، فلا يسوغ السؤال عما لا حاجة للمرء ولا غرض له فيه.
3.மார்க்கத் தீர்ப்புக் கேட்பவருக்கான ஒழுங்குகளில் ஒன்றுதான் குறிப்பிட்ட எல்லைகளுடன் அதனை வரையறுத்துக்கொள்வதாகும். மனிதனுக்கு அவசியமற்ற தேவையில்லாதவற்றைப் பற்றிக் கேட்கக் கூடாது.

• ذم مسالك المشركين فيما اخترعوه وزعموه من محرمات الأنعام ك: البَحِيرة، والسائبة، والوصِيلة، والحامي.
4. பஹீரா, ஸாஇபா, வஸீலா, ஹாம் ஆகிய பெயர்களில் தாமாகக் கண்டுபிடித்து தடைசெய்யப்பட்டவை எனக் கருதும் இணைவைப்பாளர்களின் நடைமுறைகள் கண்டிக்கப்பட்டுள்ளன.

 
مەنالار تەرجىمىسى سۈرە: مائىدە
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى - تەرجىمىلەر مۇندەرىجىسى

قۇرئان تەتقىقاتى تەپسىر مەركىزى چىقارغان.

تاقاش