Check out the new design

قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ سورت: ہُمّزہ   آیت:

அல்ஹுமஸா

سورہ کے بعض مقاصد:
التحذير من الاستهزاء بالمؤمنين اغترارًا بكثرة المال.
அதிகப் பணத்தினால் மயங்கி கர்வம்கொண்டு விசுவாசிகளைப் பரிகாசம் செய்வதை விட்டும் எச்சரித்தல்

وَیْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۟ۙ
104.1. மக்களைப் பற்றி அதிகம் புறம்பேசி குறைகூறித் திரிபவர்களுக்கு கடும் வேதனையும் கேடும்தான் உண்டாகும்.
عربی تفاسیر:
١لَّذِیْ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗ ۟ۙ
104.2. அவனது கவலை செல்வத்தை சேகரிப்பதும் அதனை எண்ணி எண்ணி பாதுகாப்பதும்தான். அதனைத் தவிர வேறு கவலை அவனுக்கு இல்லை.
عربی تفاسیر:
یَحْسَبُ اَنَّ مَالَهٗۤ اَخْلَدَهٗ ۟ۚ
104.3. தான் சேகரித்த செல்வங்கள் தன்னை மரணத்திலிருந்து காப்பாற்றும் என்றும் இவ்வுலக வாழ்க்கையில் நிரந்தரமாக வாழ முடியும் என்றும் அவன் எண்ணுகிறான்.
عربی تفاسیر:
كَلَّا لَیُنْۢبَذَنَّ فِی الْحُطَمَةِ ۟ؗۖ
104.4. இந்த மடையன் எண்ணுவது போலல்ல விடயம். தன்னில் வீசப்படும் அனைத்தையும் தனது கடுமையான சோதனையால் நசுக்கி உடைத்து விடும் நரக நெருப்பில் அவன் நிச்சயம் வீசப்படுவான்.
عربی تفاسیر:
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْحُطَمَةُ ۟ؕ
104.5. -தூதரே!- தன்னில் எறியப்படும் அனைத்தையும் நசுக்கிவிடும் நரக நெருப்பு என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
عربی تفاسیر:
نَارُ اللّٰهِ الْمُوْقَدَةُ ۟ۙ
104.6. நிச்சயமாக அது எரியக்கூடிய அல்லாஹ்வின் நெருப்பாகும்.
عربی تفاسیر:
الَّتِیْ تَطَّلِعُ عَلَی الْاَفْـِٕدَةِ ۟ؕ
104.7. அது மனிதனின் உடலிலிருந்து இதயம் வரை ஊடுருவிச் செல்லக்கூடியதாகும்.
عربی تفاسیر:
اِنَّهَا عَلَیْهِمْ مُّؤْصَدَةٌ ۟ۙ
104.8. நிச்சயமாக அது அதில் வேதனை செய்யப்படுபவர்களின் மீது மூடப்பட்டிருக்கும்.
عربی تفاسیر:
فِیْ عَمَدٍ مُّمَدَّدَةٍ ۟۠
104.9. அவர்களால் அதிலிருந்து வெளியேற முடியாத அளவுக்கு அவைகள் நீளமான கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும்.
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• خسران من لم يتصفوا بالإيمان وعمل الصالحات، والتواصي بالحق، والتواصي بالصبر.
1. யார் நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிதல், சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுதல், பொறுமையாக இருக்கும்படி ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுதல். ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கவில்லையோ அவர் நஷ்டமடைந்துவிட்டார்.

• تحريم الهَمْز واللَّمْز في الناس.
2. மக்களைக்குறித்து புறம்பேசி குறைகூறிக் கொண்டு திரிவது தடுக்கப்பட்டுள்ளது.

• دفاع الله عن بيته الحرام، وهذا من الأمن الذي قضاه الله له.
3. தன் புனித இல்லத்தை அல்லாஹ் பாதுகாத்தல். இது அதற்காக அல்லாஹ் முடிவுசெய்துள்ள பாதுகாப்பில் உள்ளதாகும்.

 
معانی کا ترجمہ سورت: ہُمّزہ
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ - ترجمے کی لسٹ

مرکز تفسیر للدراسات القرآنیۃ سے شائع ہوا ہے۔

بند کریں