Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

அல்ஹுமஸா

Purposes of the Surah:
التحذير من الاستهزاء بالمؤمنين اغترارًا بكثرة المال.
அதிகப் பணத்தினால் மயங்கி கர்வம்கொண்டு விசுவாசிகளைப் பரிகாசம் செய்வதை விட்டும் எச்சரித்தல் info

external-link copy
1 : 104

وَیْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۟ۙ

104.1. மக்களைப் பற்றி அதிகம் புறம்பேசி குறைகூறித் திரிபவர்களுக்கு கடும் வேதனையும் கேடும்தான் உண்டாகும். info
التفاسير:

external-link copy
2 : 104

١لَّذِیْ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗ ۟ۙ

104.2. அவனது கவலை செல்வத்தை சேகரிப்பதும் அதனை எண்ணி எண்ணி பாதுகாப்பதும்தான். அதனைத் தவிர வேறு கவலை அவனுக்கு இல்லை. info
التفاسير:

external-link copy
3 : 104

یَحْسَبُ اَنَّ مَالَهٗۤ اَخْلَدَهٗ ۟ۚ

104.3. தான் சேகரித்த செல்வங்கள் தன்னை மரணத்திலிருந்து காப்பாற்றும் என்றும் இவ்வுலக வாழ்க்கையில் நிரந்தரமாக வாழ முடியும் என்றும் அவன் எண்ணுகிறான். info
التفاسير:

external-link copy
4 : 104

كَلَّا لَیُنْۢبَذَنَّ فِی الْحُطَمَةِ ۟ؗۖ

104.4. இந்த மடையன் எண்ணுவது போலல்ல விடயம். தன்னில் வீசப்படும் அனைத்தையும் தனது கடுமையான சோதனையால் நசுக்கி உடைத்து விடும் நரக நெருப்பில் அவன் நிச்சயம் வீசப்படுவான். info
التفاسير:

external-link copy
5 : 104

وَمَاۤ اَدْرٰىكَ مَا الْحُطَمَةُ ۟ؕ

104.5. -தூதரே!- தன்னில் எறியப்படும் அனைத்தையும் நசுக்கிவிடும் நரக நெருப்பு என்னவென்று உமக்கு அறிவித்தது எது? info
التفاسير:

external-link copy
6 : 104

نَارُ اللّٰهِ الْمُوْقَدَةُ ۟ۙ

104.6. நிச்சயமாக அது எரியக்கூடிய அல்லாஹ்வின் நெருப்பாகும். info
التفاسير:

external-link copy
7 : 104

الَّتِیْ تَطَّلِعُ عَلَی الْاَفْـِٕدَةِ ۟ؕ

104.7. அது மனிதனின் உடலிலிருந்து இதயம் வரை ஊடுருவிச் செல்லக்கூடியதாகும். info
التفاسير:

external-link copy
8 : 104

اِنَّهَا عَلَیْهِمْ مُّؤْصَدَةٌ ۟ۙ

104.8. நிச்சயமாக அது அதில் வேதனை செய்யப்படுபவர்களின் மீது மூடப்பட்டிருக்கும். info
التفاسير:

external-link copy
9 : 104

فِیْ عَمَدٍ مُّمَدَّدَةٍ ۟۠

104.9. அவர்களால் அதிலிருந்து வெளியேற முடியாத அளவுக்கு அவைகள் நீளமான கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும். info
التفاسير:
Benefits of the verses in this page:
• خسران من لم يتصفوا بالإيمان وعمل الصالحات، والتواصي بالحق، والتواصي بالصبر.
1. யார் நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிதல், சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுதல், பொறுமையாக இருக்கும்படி ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுதல். ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கவில்லையோ அவர் நஷ்டமடைந்துவிட்டார். info

• تحريم الهَمْز واللَّمْز في الناس.
2. மக்களைக்குறித்து புறம்பேசி குறைகூறிக் கொண்டு திரிவது தடுக்கப்பட்டுள்ளது. info

• دفاع الله عن بيته الحرام، وهذا من الأمن الذي قضاه الله له.
3. தன் புனித இல்லத்தை அல்லாஹ் பாதுகாத்தல். இது அதற்காக அல்லாஹ் முடிவுசெய்துள்ள பாதுகாப்பில் உள்ளதாகும். info