Check out the new design

قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ سورت: انبیاء   آیت:
وَجَعَلْنٰهُمْ اَىِٕمَّةً یَّهْدُوْنَ بِاَمْرِنَا وَاَوْحَیْنَاۤ اِلَیْهِمْ فِعْلَ الْخَیْرٰتِ وَاِقَامَ الصَّلٰوةِ وَاِیْتَآءَ الزَّكٰوةِ ۚ— وَكَانُوْا لَنَا عٰبِدِیْنَ ۟ۙ
21.73. நாம் அவர்களை தலைவர்களாக ஆக்கினோம். மக்கள் அவர்கள் மூலம் நலவில் வழிகாட்டலைப் பெறுகின்றனர். அவர்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குமாறு அவனுடைய அனுமதியுடன் மக்களை அழைக்கின்றனர். நாம் அவர்களுக்கு, “நற்செயல்களைச் செய்யுங்கள்; தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுங்கள்; ஸகாத்தை வழங்குங்கள் என்று வஹி அறிவித்தோம். அவர்கள் நமக்கு அடிபணிந்தவர்களாக இருந்தார்கள்.
عربی تفاسیر:
وَلُوْطًا اٰتَیْنٰهُ حُكْمًا وَّعِلْمًا وَّنَجَّیْنٰهُ مِنَ الْقَرْیَةِ الَّتِیْ كَانَتْ تَّعْمَلُ الْخَبٰٓىِٕثَ ؕ— اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فٰسِقِیْنَ ۟ۙ
21.74. நாம் லூத்திற்கு பிரச்சினைகளுக்குரியவர்களிடையே தீர்ப்பு வழங்கும் திறமையையும் மார்க்க அறிவையும் வழங்கினோம். மானக்கேடான காரியத்தை செய்துவந்த சதூம் என்ற அந்த ஊர்மக்களின் மீது இறங்கிய வேதனையிலிருந்து நாம் அவரைப் பாதுகாத்தோம். நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனுக்கு அடிபணியாமல் குழப்பம் செய்யும் மக்களாக இருந்தார்கள்.
عربی تفاسیر:
وَاَدْخَلْنٰهُ فِیْ رَحْمَتِنَا ؕ— اِنَّهٗ مِنَ الصّٰلِحِیْنَ ۟۠
21.75. அவருடைய சமூகத்தைத் தாக்கிய வேதனையிலிருந்து அவரைக் காப்பாற்றி நம் அருளில் அவரைப் பிரவேசிக்கச் செய்தோம். நிச்சயமாக அவர் நம் கட்டளையைச் செயல்படுத்தும், நாம் தடுத்தவற்றிலிருந்து விலகியிருக்கும் நல்லவர்களில் ஒருவராக இருந்தார்.
عربی تفاسیر:
وَنُوْحًا اِذْ نَادٰی مِنْ قَبْلُ فَاسْتَجَبْنَا لَهٗ فَنَجَّیْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ۚ
21.76. -தூதரே!- நூஹின் சம்பவத்தை நினைவு கூர்வீராக. இப்ராஹீமுக்கும் லூத்திற்கும் முன்னர் அவர் அல்லாஹ்வை அழைத்தார். நாம் அவர் வேண்டியதை அளித்து அவருக்குப் பதிலளித்தோம். அவரையும் நம்பிக்கைகொண்ட அவருடைய குடும்பத்தினரையும் பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றினோம்.
عربی تفاسیر:
وَنَصَرْنٰهُ مِنَ الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ؕ— اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فَاَغْرَقْنٰهُمْ اَجْمَعِیْنَ ۟
21.77. நாம் அவரை வலுப்படுத்தும் விதமாக வழங்கிய அவருடைய நம்பகத்தன்மையை அறிவிக்கக்கூடிய சான்றுகளை நிராகரித்த அவரது சமூகத்தின் சூழ்ச்சியிலிருந்து நாம் அவரைக் காப்பாற்றினோம். நிச்சயமாக அவர்கள் குழப்பம் விளைக்கும் தீய மக்களாக இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்து அழித்துவிட்டோம்.
عربی تفاسیر:
وَدَاوٗدَ وَسُلَیْمٰنَ اِذْ یَحْكُمٰنِ فِی الْحَرْثِ اِذْ نَفَشَتْ فِیْهِ غَنَمُ الْقَوْمِ ۚ— وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِیْنَ ۟ۙ
21.78. -தூதரே!- தாவூதையும் அவருடைய மகன் சுலைமானையும் நினைவு கூர்வீராக. அவர்கள் தங்களிடம் வந்த இரு வழக்காளிகளின் விஷயத்தில் தீர்ப்பளித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வழக்காளிகளில் ஒருவருடைய ஆடுகள் இரவில் மற்றவரின்பயிரில் புகுந்து அதனை நாசமாக்கிவிட்டன. தாவூதும் சுலைமானும் தீர்ப்பளிப்பதை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்களின் தீர்ப்பில் எதுவும் நம்மைவிட்டு மறைவாக இல்லை.
عربی تفاسیر:
فَفَهَّمْنٰهَا سُلَیْمٰنَ ۚ— وَكُلًّا اٰتَیْنَا حُكْمًا وَّعِلْمًا ؗ— وَّسَخَّرْنَا مَعَ دَاوٗدَ الْجِبَالَ یُسَبِّحْنَ وَالطَّیْرَ ؕ— وَكُنَّا فٰعِلِیْنَ ۟
21.79. நாம் தாவூதை விட அவருடைய மகன் சுலைமானுக்கு அந்த வழக்கைப் புரிய வைத்தோம். நாம் இருவருக்கும் நபித்துவத்தையும் மார்க்க சட்டதிட்டங்களின் அறிவையும் வழங்கியிருந்தோம். நாம் சுலைமானுக்கு மட்டும் சிறப்பினை வழங்கவில்லை. தாவூதுக்கு மலைகளை வசப்படுத்திக் கொடுத்தோம். அவை அவருடன் சேர்ந்து அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருந்தன. நாம் அவருக்குப் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம். நாமே அந்த விளக்கத்தையும், தீர்ப்பு வழங்குவதையும், அறிவையும், வசப்படுத்தலையும் வழங்குவோராயிருந்தோம்.
عربی تفاسیر:
وَعَلَّمْنٰهُ صَنْعَةَ لَبُوْسٍ لَّكُمْ لِتُحْصِنَكُمْ مِّنْ بَاْسِكُمْ ۚ— فَهَلْ اَنْتُمْ شٰكِرُوْنَ ۟
21.80. உங்கள் உடலை ஆயுதம் பதம்பார்க்காமல் இருக்க நாம் சுலைமானை விடுத்து தாவூதுக்கு போர்க்கவசங்கள் செய்யும் கலையைக் கற்றுக் கொடுத்தோம். -மனிதர்களே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த இந்த அருட்கொடைக்கு நீங்கள் நன்றிசெலுத்துவீர்களா?
عربی تفاسیر:
وَلِسُلَیْمٰنَ الرِّیْحَ عَاصِفَةً تَجْرِیْ بِاَمْرِهٖۤ اِلَی الْاَرْضِ الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا ؕ— وَكُنَّا بِكُلِّ شَیْءٍ عٰلِمِیْنَ ۟
21.81. நாம் சுலைமானுக்கு வேகமாக வீசக்கூடிய காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவரது கட்டளைப்படி நாம் அருள்செய்திருந்த ஷாம் தேசத்திற்குச் செல்லும். அங்கு நபிமார்களை அனுப்பி பல நலவுகளை ஏற்படுத்தி அதில் அபிவிருத்தி செய்திருந்தோம். நாம் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவர்களாக இருக்கின்றோம். எதுவும் நம்மை விட்டு மறைவாக இல்லை.
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• فعل الخير والصلاة والزكاة، مما اتفقت عليه الشرائع السماوية.
1. நலவு செய்தல், தொழுகை, ஸகாத் ஆகியவற்றில் வானலோக ஷரீஅத்துகள் (மார்க்கங்கள்) ஒன்றுபட்டுள்ளன.

• ارتكاب الفواحش سبب في وقوع العذاب المُسْتَأْصِل.
2. மானக்கேடான காரியங்களில் ஈடுபடுவது பூண்டோடு அழித்துவிடும் வேதனை நிகழ்வதற்கான ஒரு காரணமாகும்.

• الصلاح سبب في الدخول في رحمة الله.
3. நேர்மை இறையருளில் நுழைவதற்குக் காரணமாக இருக்கின்றது.

• الدعاء سبب في النجاة من الكروب.
4. பிரார்த்தனை துன்பங்களிலிருந்து தப்புவதற்கான ஒரு காரணமாகும்.

 
معانی کا ترجمہ سورت: انبیاء
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ - ترجمے کی لسٹ

مرکز تفسیر للدراسات القرآنیۃ سے شائع ہوا ہے۔

بند کریں