Check out the new design

قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ سورت: انبیاء   آیت:
وَمِنَ الشَّیٰطِیْنِ مَنْ یَّغُوْصُوْنَ لَهٗ وَیَعْمَلُوْنَ عَمَلًا دُوْنَ ذٰلِكَ ۚ— وَكُنَّا لَهُمْ حٰفِظِیْنَ ۟ۙ
21.82. கடலில் மூழ்கி முத்து போன்றனவற்றை கண்டெடுக்கும், கட்டட நிர்மாணம் போன்ற ஏனைய வேலைகளில் ஈடுபடும் ஷைத்தான்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். நாம் அவர்களின் எண்ணிக்கையையும், செயல்பாடுகளையும் கண்காணிப்போராக இருந்தோம். அவற்றில் எதுவும் நம்மைவிட்டு தப்பிவிடாது.
عربی تفاسیر:
وَاَیُّوْبَ اِذْ نَادٰی رَبَّهٗۤ اَنِّیْ مَسَّنِیَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟ۚۖ
21.83. -தூதரே!- அய்யூபின் சம்பவத்தையும் நினைவு கூர்வீராக. துன்பம் அவரைத் தாக்கியபோது அவர் தம் இறைவனிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! நான் நோயால் பாதிக்கப்பட்டு என் குடும்பத்தையும் இழந்து விட்டேன். நீ அனைவருக்கும் மிகச் சிறந்த கருணையாளனாக இருக்கின்றாய். எனவே எனக்கு ஏற்பட்ட துன்பத்தை என்னை விட்டும் திருப்பி விடுவாயாக.”
عربی تفاسیر:
فَاسْتَجَبْنَا لَهٗ فَكَشَفْنَا مَا بِهٖ مِنْ ضُرٍّ وَّاٰتَیْنٰهُ اَهْلَهٗ وَمِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَذِكْرٰی لِلْعٰبِدِیْنَ ۟
21.84. நாம் அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித்தோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவர் இழந்த அவருடைய குடும்பத்தையும், பிள்ளைகளையும் அவருக்கு வழங்கினோம். அவர்களைப் போன்றவர்களையும் அவருக்கு வழங்கினோம். இவையனைத்தையும் நம்மிடமிருந்துள்ள கருணையாகவும், அய்யூபைப் போன்று பொறுமையாக இருப்பதற்காக அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு வணங்கும் ஒவ்வொருவருக்கும் நினைவூட்டலாகவும் நாம் செய்தோம்.
عربی تفاسیر:
وَاِسْمٰعِیْلَ وَاِدْرِیْسَ وَذَا الْكِفْلِ ؕ— كُلٌّ مِّنَ الصّٰبِرِیْنَ ۟
21.85. -தூதரே!- இஸ்மாயீல், இத்ரீஸ், துல்கிஃப்ல் ஆகியோரை நினைவு கூர்வீராக. அவர்களில் ஒவ்வொருவரும் துன்பங்களிலும் அல்லாஹ் அவர்கள் மீது சுமத்திய கட்டளைகளை நிறைவேற்றுவதிலும் பொறுமையைக் கடைபிடிப்பவர்களாக இருந்தார்கள்.
عربی تفاسیر:
وَاَدْخَلْنٰهُمْ فِیْ رَحْمَتِنَا ؕ— اِنَّهُمْ مِّنَ الصّٰلِحِیْنَ ۟
21.86. நாம் அவர்களை நம் அருளில் பிரவேசிக்கச் செய்து நபிமார்களாக ஆக்கினோம். அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்தோம். நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனுக்கு வழிப்பட்டு நற்செயல் புரிந்த, அந்தரங்கத்திலும், வெளிப்படையிலும் தங்களை சீர்படுத்திக் கொண்ட அல்லாஹ்வின் நல்லடியார்களாக இருந்தார்கள்.
عربی تفاسیر:
وَذَا النُّوْنِ اِذْ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنْ لَّنْ نَّقْدِرَ عَلَیْهِ فَنَادٰی فِی الظُّلُمٰتِ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ۖۗ— اِنِّیْ كُنْتُ مِنَ الظّٰلِمِیْنَ ۟ۚۖ
21.87. -தூதரே!- மீனுடையவரான யூனுஸையும் நினைவு கூர்வீராக. அவர் தம் இறைவனிடம் அனுமதி பெறாமல் தம் சமூகம் பாவத்தில் பிடிவாதமாக இருந்ததனால் அவர்கள் மீது கோபம்கொண்டு சென்றுவிட்டார். அவர் சென்றுவிட்டதற்காக நாம் அவரைத் தண்டித்து அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தமாட்டோம் என்று நிச்சயமாக அவர் எண்ணிக் கொண்டார். மீன் அவரை விழுங்கிய போது கடும் நெருக்கடியாலும், சிறையாலும் அவர் சோதிக்கப்பட்டார். அவர் தம் பாவத்தை ஒத்துக்கொண்டவராக, மன்னிப்புக்கோரி, மீனின் வயிறு, கடல், இரவு ஆகிய இருள்களில் இருந்தவாறு பிரார்த்தனை செய்தார். அவர் கூறினார்: “உன்னைத் தவிர உண்மையாக வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்.”
عربی تفاسیر:
فَاسْتَجَبْنَا لَهٗ ۙ— وَنَجَّیْنٰهُ مِنَ الْغَمِّ ؕ— وَكَذٰلِكَ نُـجِی الْمُؤْمِنِیْنَ ۟
21.88. நாம் அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித்து இருள்களிலிருந்தும், மீன் வயிற்றிலிருந்தும் அவரை வெளியேற்றி கடும் துன்பத்திலிருந்து அவரைக் காப்பாற்றினோம். நாம் யூனுஸை துன்பத்திலிருந்து காப்பாற்றியது போன்றே துன்பத்தில் அகப்பட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் நம்பிக்கையாளர்களையும் காப்பாற்றுகின்றோம்.
عربی تفاسیر:
وَزَكَرِیَّاۤ اِذْ نَادٰی رَبَّهٗ رَبِّ لَا تَذَرْنِیْ فَرْدًا وَّاَنْتَ خَیْرُ الْوٰرِثِیْنَ ۟ۚۖ
21.89. -தூதரே!- ஸகரிய்யாவையும் நினைவு கூர்வீராக. அவர் தம் இறைவனிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: “இறைவா எனக்கு வாரிசின்றி என்னைத் தனியாக விட்டுவிடாதே. நீயே நிலைத்திருப்பவர்களில் மிகச் சிறந்தவன். எனவே எனக்குப் பிறகு நிலைத்து இருக்கக்கூடிய ஒரு பிள்ளையை எனக்கு வழங்குவாயாக.”
عربی تفاسیر:
فَاسْتَجَبْنَا لَهٗ ؗ— وَوَهَبْنَا لَهٗ یَحْیٰی وَاَصْلَحْنَا لَهٗ زَوْجَهٗ ؕ— اِنَّهُمْ كَانُوْا یُسٰرِعُوْنَ فِی الْخَیْرٰتِ وَیَدْعُوْنَنَا رَغَبًا وَّرَهَبًا ؕ— وَكَانُوْا لَنَا خٰشِعِیْنَ ۟
21.90. நாம் அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித்து அவருக்கு யஹ்யா என்னும் மகனை வழங்கினோம். அவருடைய மனைவியையும் சரிப்படுத்தினோம். குழந்தைப்பேறு அற்ற அவருடைய மனைவி அதிகம் குழந்தைகள் பெறக்கூடியவளாக ஆகிவிட்டாள். நிச்சயமாக ஸகரிய்யா, அவருடைய மனைவி, மகன் அனைவரும் நற்செயல்களின்பால் விரையக்கூடியவர்களாக, நம்மிடம் கூலியை எதிர்பார்த்தும், நம்மிடம் உள்ள தண்டனையை அஞ்சியும் நம்மை அழைப்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் நமக்குப் பணிந்து நடக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• الصلاح سبب للرحمة.
1. நேர்மை அன்பைப் பெறும் காரணியாகும்.

• الالتجاء إلى الله وسيلة لكشف الكروب.
2. அல்லாஹ்வின்பால் அடைக்கலம் தேடுவது துன்பத்தைப் போக்குவதற்கான ஒரு வழிமுறையாகும்.

• فضل طلب الولد الصالح ليبقى بعد الإنسان إذا مات.
3. மனிதன் மரணித்த பின் வாழ வேண்டும் என்பதற்காக நற்செயல் செய்யும் பிள்ளையைக் கேட்பதன் சிறப்பு.

• الإقرار بالذنب، والشعور بالاضطرار لله وشكوى الحال له، وطاعة الله في الرخاء من أسباب إجابة الدعاء وكشف الضر.
4. தவறை ஏற்றுக்கொள்வது, அல்லாஹ்விடம் நிரப்பந்தத்தை உணர்தல், நிலமையை அவனிடம் முறையிடல், இன்பத்தில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படல் என்பன பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு துன்பம் நீங்குவதற்கான காரணிகளாகும்.

 
معانی کا ترجمہ سورت: انبیاء
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ - ترجمے کی لسٹ

مرکز تفسیر للدراسات القرآنیۃ سے شائع ہوا ہے۔

بند کریں