Bản dịch ý nghĩa nội dung Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Mục lục các bản dịch


Ý nghĩa nội dung Câu: (5) Chương: Chương Al-Fatihah
اِیَّاكَ نَعْبُدُ وَاِیَّاكَ نَسْتَعِیْنُ ۟ؕ
1.5. அனைத்து வகையான வணக்கங்களையும் கீழ்ப்படிதலையும் உனக்கு மாத்திரமே நிறைவேற்றுவோம். உனக்கு இணையாக யாரையும் ஆக்கமாட்டோம்.எங்களுடைய எல்லா விஷயங்களிலும் உன்னிடம் மாத்திரமே நாங்கள் உதவி தேடுகிறோம்.உன் கைவசமே நன்மைகள் அனைத்தும் உள்ளன. உன்னைத்தவிர வேறு உதவியாளன் இல்லை.
Các Tafsir tiếng Ả-rập:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• افتتح الله تعالى كتابه بالبسملة؛ ليرشد عباده أن يبدؤوا أعمالهم وأقوالهم بها طلبًا لعونه وتوفيقه.
1. அடியார்கள் தங்களின் செயல்களையும் பேச்சுகளையும் அல்லாஹ்வின் பெயர் கூறி அவனிடம் உதவிதேடிய நிலையில் தொடங்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுப்பதற்காகவே அவன் தனது வேதத்தை"பிஸ்மில்லாஹ்"என்று தொடங்குகிறான்.

• من هدي عباد الله الصالحين في الدعاء البدء بتمجيد الله والثناء عليه سبحانه، ثم الشروع في الطلب.
2. பிரார்த்தனையில் முதன்மையாக அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்த பிறகு தம் வேண்டுதலை முன்வைப்பது அல்லாஹ்வுடைய நல்லடியார்களின் வழிமுறையாகும்.

• تحذير المسلمين من التقصير في طلب الحق كالنصارى الضالين، أو عدم العمل بالحق الذي عرفوه كاليهود المغضوب عليهم.
3. கிறித்தவர்களைப் போன்று சத்தியத்தைத் தேடுவதில் அலட்சியமாக இருந்து வழிகெட்டுப்போவதோ, அல்லது யூதர்களைப் போன்று அறிந்துகொண்ட சத்தியத்தைப் பின்பற்றாமல் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகுவதோ கூடாது என்று முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது.

• دلَّت السورة على أن كمال الإيمان يكون بإخلاص العبادة لله تعالى وطلب العون منه وحده دون سواه.
4. வணக்க வழிபாட்டை மனத்தூய்மையோடு அல்லாஹ்வுக்கு மட்டுமே அர்ப்பணித்தல், வேறு யாரிடமும் இல்லாமல் அவனிடம் மட்டுமே உதவிதேடுதல் ஆகியவை மூலமே ஈமான் பரிபூரணமடைகிறது என்பதையும் இந்த அத்தியாயம் உணர்த்துகிறது.

 
Ý nghĩa nội dung Câu: (5) Chương: Chương Al-Fatihah
Mục lục các chương Kinh Số trang
 
Bản dịch ý nghĩa nội dung Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Mục lục các bản dịch

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Đóng lại