Check out the new design

Bản dịch ý nghĩa nội dung Qur'an - 简易古兰经经注泰米尔语版 * - Mục lục các bản dịch


Ý nghĩa nội dung Chương: Al-Baqarah   Câu:
وَاِذْ قُلْنَا ادْخُلُوْا هٰذِهِ الْقَرْیَةَ فَكُلُوْا مِنْهَا حَیْثُ شِئْتُمْ رَغَدًا وَّادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُوْلُوْا حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطٰیٰكُمْ ؕ— وَسَنَزِیْدُ الْمُحْسِنِیْنَ ۟
2.58. பின்வரும் அருட்கொடையையும் நினைத்துப்பாருங்கள்: நாம் உங்களிடம் கூறினோம், பைத்துல் முகத்திஸில் நுழைந்துவிடுங்கள். அங்கு நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து தூய்மையான உணவுகளை தாராளமாக உண்ணுங்கள். அங்கு நுழையும்போது அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்களாக, எங்கள் இறைவனே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக என்று கூறியவாறு நுழையுங்கள். நாம் உங்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வோம். நன்மைகள் புரிந்தவர்களுக்கு மேலதிகமாக நன்மைகளையும் வழங்குவோம்.
Các Tafsir tiếng Ả-rập:
فَبَدَّلَ الَّذِیْنَ ظَلَمُوْا قَوْلًا غَیْرَ الَّذِیْ قِیْلَ لَهُمْ فَاَنْزَلْنَا عَلَی الَّذِیْنَ ظَلَمُوْا رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟۠
2.59. அவர்களில் அக்கிரமக்காரர்கள் செய்ய வேண்டியதையும் சொல்ல வேண்டியதையும் மாற்றிவிட்டார்கள். தங்களின் பிட்டத்தால் தவழ்ந்தவாறு, முடியில் ஒரு தானியம் என்று பரிகாசமாக திரித்துக்கூறியவாறு உள்ளே நுழைந்தார்கள். அவர்கள் மார்க்கத்தின் வரம்பை மீறி கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டதால் அநியாயக்காரர்களான அவர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை அவன் இறக்கினான்.
Các Tafsir tiếng Ả-rập:
وَاِذِ اسْتَسْقٰی مُوْسٰی لِقَوْمِهٖ فَقُلْنَا اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ ؕ— فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَیْنًا ؕ— قَدْ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ ؕ— كُلُوْا وَاشْرَبُوْا مِنْ رِّزْقِ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟
2.60. நீங்கள் பாலைவனத்தில் இருந்தபோது அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். கடுமையான தாகத்தால் பாதிக்கப்பட்டீர்கள். மூசா தன் இறைவனிடம் தண்ணீர் வேண்டி பிரார்த்தித்தார். நாம் அவரது கைத்தடியால் ஒரு பாறையில் அடிக்கும்படி கட்டளையிட்டோம். அவர் அடித்தபோது உங்களுடைய குலங்களின் எண்ணிக்கைக்கேற்ப பன்னிரண்டு நீருற்றுகள் பொங்கி எழுந்தன. உங்களிடையே பிரச்சனை மூண்டுவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு குலத்திற்கும் அவர்களுக்குரிய அருந்தும் பகுதியைத் தெளிவுபடுத்தினோம். உங்களிடம் கூறினோம், உங்களுடைய எவ்வித முயற்சியுமின்றி உங்களுக்குக் கிடைத்த அல்லாஹ்வின் உணவுகளை உண்ணுங்கள், பருகுங்கள். பூமியில் குழப்பம் செய்துகொண்டு திரியாதீர்கள்.
Các Tafsir tiếng Ả-rập:
وَاِذْ قُلْتُمْ یٰمُوْسٰی لَنْ نَّصْبِرَ عَلٰی طَعَامٍ وَّاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ یُخْرِجْ لَنَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَّآىِٕهَا وَفُوْمِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا ؕ— قَالَ اَتَسْتَبْدِلُوْنَ الَّذِیْ هُوَ اَدْنٰی بِالَّذِیْ هُوَ خَیْرٌ ؕ— اِهْبِطُوْا مِصْرًا فَاِنَّ لَكُمْ مَّا سَاَلْتُمْ ؕ— وَضُرِبَتْ عَلَیْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَآءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ كَانُوْا یَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَیَقْتُلُوْنَ النَّبِیّٖنَ بِغَیْرِ الْحَقِّ ؕ— ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟۠
2.61. மேலும் உங்கள் இறைவனது அருட்கொடைக்கு நன்றிகெட்டமுறையில் நடந்துகொண்ட சந்தர்ப்பத்தையும் நினைத்துப் பாருங்கள், அல்லாஹ் உங்களுக்கு இறக்கிய மன்னு, சல்வா என்னும் உணவுகள் உங்களுக்கு சலித்துப்போய், மாறாத ஒரே வகையான உணவுகளை எங்களால் சகிக்க முடியாது என்று கூறினீர்கள். அல்லாஹ்விடம் பிரார்த்தித்து பூமி விளைவிக்கின்ற கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை வெளியாக்கித் தருமாறு மூஸாவிடம் வேண்டினீர்கள். அதற்கு மூஸா உங்களைக் கண்டித்தவாறு, எவ்வித முயற்சியுமின்றி உங்களுக்குக் கிடைக்கின்ற மன்னு, சல்வா என்னும் சிறந்த உணவுகளுக்குப் பதிலாக அற்பப் பொருளையா வேண்டுகிறீர்கள்? இந்த பூமியிலிருந்து வெளியேறி ஏதாவது ஒரு ஊருக்குச் செல்லுங்கள். அதன் வயல்களிலும், கடைவீதிகளிலும் நீங்கள் கேட்டதைப் பெற்றுக்கொள்வீர்கள். அல்லாஹ் அவர்களுக்குத் தேர்ந்தேடுத்ததை புறக்கணித்துவிட்டு தங்களுடைய மன இச்சைகளை அவர்கள் பின்பற்றியதனால் இழிவும் வறுமையும் அவர்களைச் சூழ்ந்து கொண்டது. அல்லாஹ்வின் மார்க்கத்தைப் புறக்கணித்து அவனுடைய சான்றுகளை நிராகரித்து அவனுடைய தூதர்களை அநியாயமாக கொலை செய்ததனால் அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். இவையனைத்தும் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்து அவன் விதித்த வரம்புகளை மீறியதனால் ஏற்பட்ட விளைவுகளேயாகும்.
Các Tafsir tiếng Ả-rập:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• كل من يتلاعب بنصوص الشرع ويحرّفها فيه شَبَهٌ من اليهود، وهو مُتوعَّد بعقوبة الله تعالى.
1. மார்க்கத்தின் ஆதாரங்களுடன் விளையாடுபவர்கள், அவற்றைத் திரிப்பவர்கள் யூதர்களுக்கு ஒப்பாவார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தண்டனைக்கு உள்ளாவார்கள்.

• عِظَمُ فضل الله تعالى على بني إسرائيل، وفي مقابل ذلك شدة جحودهم وعنادهم وإعراضهم عن الله وشرعه.
2. இஸ்ராயீலின் மக்களுக்கு அல்லாஹ் பெரும் அருள்புரிந்திருந்தான். ஆனால் அவர்களோ சத்தியத்தை மறுத்தல், பிடிவாதம், அல்லாஹ்வையும் அவனது மார்க்கத்தையும் புறக்கணித்தல் ஆகிய பண்புகளால் அவற்றை எதிர்கொண்டார்கள்.

• أن من شؤم المعاصي وتجاوز حدود الله تعالى ما ينزل بالمرء من الذل والهوان، وتسلط الأعداء عليه.
3. மனிதனுக்கு ஏற்படும் இழிவு கேவலம் எதிரிகளின் ஆதிக்கம் என்பவை பாவங்கள் மற்றும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவதன் விபரீதங்களில் ஒன்றாகும்.

 
Ý nghĩa nội dung Chương: Al-Baqarah
Mục lục các chương Kinh Số trang
 
Bản dịch ý nghĩa nội dung Qur'an - 简易古兰经经注泰米尔语版 - Mục lục các bản dịch

由古兰经研究释义中心发行

Đóng lại