Check out the new design

Bản dịch ý nghĩa nội dung Qur'an - Bản dịch tiếng Tamil về diễn giải ngắn gọn Kinh Qur'an * - Mục lục các bản dịch


Ý nghĩa nội dung Câu: (251) Chương: Al-Baqarah
فَهَزَمُوْهُمْ بِاِذْنِ اللّٰهِ ۙ۫— وَقَتَلَ دَاوٗدُ جَالُوْتَ وَاٰتٰىهُ اللّٰهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهٗ مِمَّا یَشَآءُ ؕ— وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَّفَسَدَتِ الْاَرْضُ وَلٰكِنَّ اللّٰهَ ذُوْ فَضْلٍ عَلَی الْعٰلَمِیْنَ ۟
2.251. அல்லாஹ்வின் அனுமதிகொண்டு தாலூத்தின் படைகள் ஜாலூத்தின் படைகளைத் தோற்கடித்தது. தாவூத் ஜாலூத்தைக் கொன்றார். அல்லாஹ் அவருக்கு ஆட்சியதிகாரத்தையும் தூதுத்துவத்தையும் வழங்கினான். தான் நாடிய பல்வேறு கலைகளை அவருக்குக் கற்றுக்கொடுத்தான். இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் நன்மைதரக்கூடிய விஷயங்களை அவருக்கு ஒன்றுசேர்த்து வழங்கினான். மக்களில் சிலர் செய்யும் குழப்பத்தை சிலரைக் கொண்டு தடுக்கும் வழிமுறையை அல்லாஹ் ஏற்படுத்தவில்லையெனில் குழப்பவாதிகளின் ஆதிக்கத்தால் பூமி சீர்குலைந்துபோயிருக்கும். ஆயினும் அல்லாஹ் படைப்புகள் அனைத்தின்மீதும் பேரருள்புரிபவனாக இருக்கின்றான்.
Các Tafsir tiếng Ả-rập:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• من حكمة القائد أن يُعرِّض جيشه لأنواع الاختبارات التي يتميز بها جنوده ويعرف الثابت من غيره.
1. படைத்தளபதி தன் படையினரை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான் நிலைகுலையாமல் உறுதியாக இருப்பவர்களை அவரால் வேறுபடுத்தி அறியமுடியும்.

• العبرة في النصر ليست بمجرد كثرة العدد والعدة فقط، وإنما معونة الله وتوفيقه أعظم الأسباب للنصر والظَّفَر.
2. வெற்றி ஆள்பலத்தைக் கொண்டோ ஆயுதபலத்தைக்கொண்டோ கிடைக்காது. அவன் உடன் இருத்தலும், அல்லாஹ்வின் உதவியும் அருளுமே வெற்றிக்கான மிகப்பிரதான காரணிகளாகும்.

• لا يثبت عند الفتن والشدائد إلا من عَمَرَ اليقينُ بالله قلوبَهم، فمثل أولئك يصبرون عند كل محنة، ويثبتون عند كل بلاء.
3. கஷ்டங்களிலும் சோதனைகளிலும் அல்லாஹ்வின்மீது உறுதியான நம்பிக்கைகொண்டவர்கள்தாம் நிலைகுலையாமல் உறுதியாக இருக்கிறார்கள். இவர்கள்தாம் ஒவ்வொரு கஷ்டத்திலும் பொறுமையை மேற்கொள்கிறார்கள். ஒவ்வொரு சோதனையிலும் உறுதியாக இருக்கிறார்கள்.

• الضراعة إلى الله تعالى بقلب صادق متعلق به من أعظم أسباب إجابة الدعاء، ولا سيما في مواطن القتال.
4. உண்மையான உள்ளத்தோடு அல்லாஹ்விடம் மன்றாடுதல் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான முக்கியமான காரணியாகும், குறிப்பாக போர்ச் சமயங்களில்.

• من سُنَّة الله تعالى وحكمته أن يدفع شر بعض الخلق وفسادهم في الأرض ببعضهم.
5. பூமியில் சிலர் செய்யும் தீங்குகளையும் குழப்பங்களையும் அல்லாஹ் வேறு சிலரால் தடுக்கிறான். இது அல்லாஹ்வின் வழிமுறையாகும்.

 
Ý nghĩa nội dung Câu: (251) Chương: Al-Baqarah
Mục lục các chương Kinh Số trang
 
Bản dịch ý nghĩa nội dung Qur'an - Bản dịch tiếng Tamil về diễn giải ngắn gọn Kinh Qur'an - Mục lục các bản dịch

Do Trung tâm Diễn giải Nghiên cứu Kinh Qur'an phát hành.

Đóng lại