Check out the new design

Bản dịch ý nghĩa nội dung Qur'an - Bản dịch tiếng Tamil về diễn giải ngắn gọn Kinh Qur'an * - Mục lục các bản dịch


Ý nghĩa nội dung Câu: (102) Chương: Al-Nisa'
وَاِذَا كُنْتَ فِیْهِمْ فَاَقَمْتَ لَهُمُ الصَّلٰوةَ فَلْتَقُمْ طَآىِٕفَةٌ مِّنْهُمْ مَّعَكَ وَلْیَاْخُذُوْۤا اَسْلِحَتَهُمْ ۫— فَاِذَا سَجَدُوْا فَلْیَكُوْنُوْا مِنْ وَّرَآىِٕكُمْ ۪— وَلْتَاْتِ طَآىِٕفَةٌ اُخْرٰی لَمْ یُصَلُّوْا فَلْیُصَلُّوْا مَعَكَ وَلْیَاْخُذُوْا حِذْرَهُمْ وَاَسْلِحَتَهُمْ ۚ— وَدَّ الَّذِیْنَ كَفَرُوْا لَوْ تَغْفُلُوْنَ عَنْ اَسْلِحَتِكُمْ وَاَمْتِعَتِكُمْ فَیَمِیْلُوْنَ عَلَیْكُمْ مَّیْلَةً وَّاحِدَةً ؕ— وَلَا جُنَاحَ عَلَیْكُمْ اِنْ كَانَ بِكُمْ اَذًی مِّنْ مَّطَرٍ اَوْ كُنْتُمْ مَّرْضٰۤی اَنْ تَضَعُوْۤا اَسْلِحَتَكُمْ ۚ— وَخُذُوْا حِذْرَكُمْ ؕ— اِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْكٰفِرِیْنَ عَذَابًا مُّهِیْنًا ۟
4.102. தூதரே! போர்ச்சமயத்தில் நீர் படையில் இருந்து அவர்களுக்குத் தொழுகை நடத்த விரும்பினால் அவர்களை இரண்டு அணியினராக பிரித்துக் கொள்வீராக. ஒரு அணியினர் உம்முடன் தொழுவதற்காக நிற்கட்டும். தங்களுடைய ஆயுதங்களையும் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். மற்றொரு அணியினர் உங்களைப் பாதுகாக்கட்டும். முதல் அணியினர் இமாமுடன் ஒரு ரக்அத் தொழுதபிறகு இரண்டாவது ரக்அத்தை தாமாகவே நிறைவேற்றிக் கொள்ளட்டும். அவர்கள் தொழுதவுடன் உங்களுக்குப் பின்னாலிருந்து எதிரிகளின் திசையை நோக்கி நிற்கட்டும். உங்களைப் பாதுகாத்துக் கொண்டிருந்த இரண்டாவது அணியினர் வந்து இரண்டாவது ரக்அத்தில் இமாமுடன் இணைந்துகொள்ளட்டும். இமாம் சலாம் கொடுத்தபிறகு அவர்கள் மீதமுள்ள ஒரு ரக்அத்தை நிறைவேற்றிக் கொள்ளட்டும். அவர்கள் தங்களின் ஆயுதங்களை வைத்துக் கொண்டு எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கட்டும். நிராகரிப்பாளர்கள் நீங்கள் உங்களின் ஆயுதங்களையும் தளபாடங்களையும் விட்டு கவனக்குறைவாக இருக்கும் சமயத்தில் உங்களைத் திடீரெனத் தாக்கிவிடலாம் என்று ஆசைகொள்கிறார்கள். மழையினாலோ உங்களுக்கு ஏற்பட்ட நோயினாலோ நீங்கள் உங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் உங்கள்மீது எவ்விதக் குற்றமுமில்லை. உங்களால் இயன்றவற்றின் மூலம் உங்கள் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு இழிவுதரும் வேதனையைத் தயார்செய்து வைத்துள்ளான்.
Các Tafsir tiếng Ả-rập:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• استحباب صلاة الخوف وبيان أحكامها وصفتها.
1. யுத்தநேரத் தொழுகைக்கான அனுமதியும், அதற்கான சட்டங்கள் அமைப்பு பற்றிய தெளிவுபடுத்ததலும்

• الأمر بالأخذ بالأسباب في كل الأحوال، وأن المؤمن لا يعذر في تركها حتى لو كان في عبادة.
2. எல்லா சூழ்நிலைகளிலும் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. வணக்கத்தில் ஈடுபட்டிருந்தாலும் கூட நம்பிக்கையாளன் அவற்றை விடுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை.

• مشروعية دوام ذكر الله تعالى على كل حال، فهو حياة القلوب وسبب طمأنينتها.
3. எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவுகூர வேண்டும். அதுதான் உள்ளத்திற்கு உயிரூட்டும், நிம்மதியை ஏற்படுத்தும்.

• النهي عن الضعف والكسل في حال قتال العدو، والأمر بالصبر على قتاله.
4.எதிரியுடன் போரிடும் போது பலவீனம், சோம்பல் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளதுடன் பொறுமையைக் கடைபிடிக்குமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.

 
Ý nghĩa nội dung Câu: (102) Chương: Al-Nisa'
Mục lục các chương Kinh Số trang
 
Bản dịch ý nghĩa nội dung Qur'an - Bản dịch tiếng Tamil về diễn giải ngắn gọn Kinh Qur'an - Mục lục các bản dịch

Do Trung tâm Diễn giải Nghiên cứu Kinh Qur'an phát hành.

Đóng lại