Check out the new design

Bản dịch ý nghĩa nội dung Qur'an - 简易古兰经经注泰米尔语版 * - Mục lục các bản dịch


Ý nghĩa nội dung Chương: Al-'Araf   Câu:
قَالَ الْمَلَاُ الَّذِیْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لَنُخْرِجَنَّكَ یٰشُعَیْبُ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَكَ مِنْ قَرْیَتِنَاۤ اَوْ لَتَعُوْدُنَّ فِیْ مِلَّتِنَا ؕ— قَالَ اَوَلَوْ كُنَّا كٰرِهِیْنَ ۟ۚ
7.88. ஷு ஐபின் சமூகத்தில் கர்வம் கொண்ட பெரியவர்களும் தலைவர்களும் கூறினார்கள்: “ ஷு ஐபே! உம்மையும், உம்மை உண்மைப்படுத்தியவர்களையும் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றிவிடுவோம் அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்.” ஷு ஐப் சிந்தித்து ஆச்சரியப்பட்டவராகக் கூறினார்: “நீங்கள் பின்பற்றும் மார்க்கம் அசத்தியமானது என்பதை அறிந்து அதனை நாங்கள் வெறுத்த போதிலும் உங்களின் மார்க்கத்தை நாங்கள் பின்பற்றுவதா?.”
Các Tafsir tiếng Ả-rập:
قَدِ افْتَرَیْنَا عَلَی اللّٰهِ كَذِبًا اِنْ عُدْنَا فِیْ مِلَّتِكُمْ بَعْدَ اِذْ نَجّٰىنَا اللّٰهُ مِنْهَا ؕ— وَمَا یَكُوْنُ لَنَاۤ اَنْ نَّعُوْدَ فِیْهَاۤ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ رَبُّنَا ؕ— وَسِعَ رَبُّنَا كُلَّ شَیْءٍ عِلْمًا ؕ— عَلَی اللّٰهِ تَوَكَّلْنَا ؕ— رَبَّنَا افْتَحْ بَیْنَنَا وَبَیْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَاَنْتَ خَیْرُ الْفٰتِحِیْنَ ۟
7.89. நீங்கள் இருக்கும் இணைவைப்பையும் நிராகரிப்பையும் விட்டு அல்லாஹ் தன் அருளால் எங்களைக் காப்பாற்றிய பிறகு நாம் அவற்றை ஏற்றுக் கொண்டால் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர்களாவோம். எங்கள் இறைவனான அல்லாஹ் நாடினாலே தவிர உங்களுடைய மார்க்கத்தின்பால் திரும்புவது எங்களுக்கு உகந்ததல்ல. அனைத்தும் அவனுடைய நாட்டத்துக்கு உட்பட்டதாகும். எங்கள் இறைவன் தன் அறிவால் அனைத்தையும் சூழ்ந்துள்ளான். அவற்றில் எதுவும் அவனை விட்டு மறையாது. நேரான வழியில் அவன் எங்களை நிலைத்திருக்கச் செய்வதற்காகவும் நரகத்தின் வழிகளை விட்டும் எங்களைப் பாதுகாப்பதற்காகவும் அவனையே நாங்கள் சார்ந்துள்ளோம். எங்கள் இறைவா! எங்களுக்கும் சத்தியத்தை நிராகரித்த எங்கள் சமூகத்திற்குமிடையே தீர்ப்பளிப்பாயாக. அநியாயக்காரர்களுக்கு எதிராக சத்தியத்தைப் பின்பற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிவாயாக. எங்கள் இறைவா! நீயே மிகச் சிறந்த தீர்ப்பு வழங்கக்கூடியவன்.
Các Tafsir tiếng Ả-rập:
وَقَالَ الْمَلَاُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ لَىِٕنِ اتَّبَعْتُمْ شُعَیْبًا اِنَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَ ۟
7.90. அவரது சமூகத்தில் ஏகத்துவ அழைப்பை மறுத்து நிராகரிக்கும் தலைவர்களும் பெரியவர்களும் ஸுஐபையும் அவரது மார்க்கத்தையும் விட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தவர்களாகக் கூறினார்கள்: “எங்கள் சமூகமே! நீங்கள் உங்களினதும் உங்கள் முன்னோர்களினதும் மார்க்கத்தை விட்டுவிட்டு ஸுஐபின் மார்க்கத்தைப் பின்பற்றினால் நிச்சயம் அழிவுக்குள்ளானவர்களே.”
Các Tafsir tiếng Ả-rập:
فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِیْ دَارِهِمْ جٰثِمِیْنَ ۟
7.91. கடுமையான பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. தங்கள் வீடுகளில் முகங்குப்புற வீழ்ந்தவர்களாகவும் அசைவற்ற சடங்களாகவும் செத்து மடிந்தார்கள்.
Các Tafsir tiếng Ả-rập:
الَّذِیْنَ كَذَّبُوْا شُعَیْبًا كَاَنْ لَّمْ یَغْنَوْا فِیْهَا ۛۚ— اَلَّذِیْنَ كَذَّبُوْا شُعَیْبًا كَانُوْا هُمُ الْخٰسِرِیْنَ ۟
7.92. ஸுஐபை நிராகரித்தவர்கள் அனைவரும் அழிந்துவிட்டார்கள். அவர்கள் தங்கள் வீடுகளில் வசிக்காதவர்களைப் போல, எதையும் அனுபவிக்காதவர்களைப் போல ஆகிவிட்டார்கள். ஸுஐபை நிராகரித்தவர்களே நஷ்டவாளிகளாகினர். ஏனெனில் அவர்கள் தங்களையும் தங்களுக்குச் சொந்தமானதையும் இழந்துவிட்டார்கள்.பொய்கூறும் இந்த நிராகரிப்பாளர்கள் கூறுவது போல் அவரது சமூகத்தின் நம்பிக்கையாளர்கள் நஷ்டவாளிகளாகி விடவில்லை.
Các Tafsir tiếng Ả-rập:
فَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسٰلٰتِ رَبِّیْ وَنَصَحْتُ لَكُمْ ۚ— فَكَیْفَ اٰسٰی عَلٰی قَوْمٍ كٰفِرِیْنَ ۟۠
7.93. அவர்கள் அழிந்த போது அவர்களின் தூதர் ஸுஐப் அவர்களை விட்டுச் சென்றவராகக் கூறினார்: “என் சமூகமே! என் இறைவன் உங்களுக்கு எடுத்துரைக்குமாறு எனக்குக் கட்டளையிட்டதை நான் உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். நான் உங்களுக்கு அறிவுரை வழங்கினேன். ஆனால் நீங்கள் என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவில்லை. என் வழிகாட்டுதலுக்குக் கட்டுப்படவில்லை. அல்லாஹ்வை நிராகரித்து அந்த நிராகரிப்பில் நிலைத்திருக்கும் ஒரு சமூகத்தின் மீது நான் எவ்வாறு கவலை கொள்வேன்?”
Các Tafsir tiếng Ả-rập:
وَمَاۤ اَرْسَلْنَا فِیْ قَرْیَةٍ مِّنْ نَّبِیٍّ اِلَّاۤ اَخَذْنَاۤ اَهْلَهَا بِالْبَاْسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّهُمْ یَضَّرَّعُوْنَ ۟
7.94. நாம் எந்த ஊருக்கு தூதர்களை அனுப்பினாலும் அங்குள்ளவர்கள் நிராகரித்தால் அவர்கள் நிராகரிப்பையும் கர்வத்தையும் விட்டு விட்டு அல்லாஹ்வுக்கு அடிபணியும் பொருட்டு வறுமையாலும், நோயாலும், கஷ்டத்தாலும் அவர்களைப் பிடிப்போம். மறுக்கும் சமூகங்களின் விடயத்தில் அல்லாஹ்வின் நியதியைக் குறிப்பிடுவதன் மூலம் குறைஷிகளுக்கும் நிராகரிக்கும்,பொய்ப்பிக்கும் ஒவ்வொருவருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையே இதுவாகும்.
Các Tafsir tiếng Ả-rập:
ثُمَّ بَدَّلْنَا مَكَانَ السَّیِّئَةِ الْحَسَنَةَ حَتّٰی عَفَوْا وَّقَالُوْا قَدْ مَسَّ اٰبَآءَنَا الضَّرَّآءُ وَالسَّرَّآءُ فَاَخَذْنٰهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
7.95. பின்னர் கஷ்டம் நோய் ஆகியவற்றைக் கொண்டு அவர்களைத் தண்டித்த பிறகு அவர்களுக்கு நன்மையையும், விசாலத்தையையும், அமைதியையும் வழங்குகிறோம். எந்த அளவுக்கெனில் அவர்களும் பல்கிப் பெருகி அவர்களது சொத்துக்களும் அதிகரித்துவிடுகின்றன. அவர்கள் கூறுகிறார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட இன்பங்களும் துன்பங்களும் நமது முன்னோர்களுக்கு இதற்கு முன் நிகழ்ந்த ஒரு வழமையான நிகழ்வுதான்.” தங்களுக்குக் கிடைத்த தண்டனையின் மூலம் படிப்பினையே நாடப்பட்டது என்பதையும் வழங்கப்பட்ட அருட்கொடையின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இறைவன் பிடிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லை. அவர்கள் வேதனையை உணராமலும் அதனை எதிர்பார்க்காமலும் இருந்த சமயத்தில் திடீரென வேதனையால் நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம்.
Các Tafsir tiếng Ả-rập:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• من مظاهر إكرام الله لعباده الصالحين أنه فتح لهم أبواب العلم ببيان الحق من الباطل، وبنجاة المؤمنين، وعقاب الكافرين.
1. அல்லாஹ் தன் நல்லடியார்களுக்கு வழங்கியுள்ள கண்ணியத்தின் வெளிப்பாடு, அசத்தியத்திலிருந்து சத்தியத்தை தெளிவாக்கியும், நம்பிக்கையாளர்களைக் காப்பாற்றியும், நிராகரிப்பாளர்களுக்குத் தண்டனை அளித்தும், கல்வியின் வாயில்களை அவர்களுக்குத் திறந்து வைத்துள்ளான்.

• من سُنَّة الله في عباده الإمهال؛ لكي يتعظوا بالأحداث، ويُقْلِعوا عما هم عليه من معاص وموبقات.
2. அடியார்கள் நிகழ்வுகளைக் கொண்டு படிப்பினை பெற வேண்டும் என்பதற்காகவும், பாவங்களையும் அழிவில் தள்ளிவிடக்கூடியவற்றையும் விட்டுவிட வேண்டும் என்பதற்காகவும் அவர்களுக்கு அவகாசம் அளிப்பது அல்லாஹ்வின் வழிமுறையாகும்.

• الابتلاء بالشدة قد يصبر عليه الكثيرون، ويحتمل مشقاته الكثيرون، أما الابتلاء بالرخاء فالذين يصبرون عليه قليلون.
3. கஷ்டங்களால் ஏற்படும் சோதனைகளை பெரும்பாலோர் சில வேளை பொறுமையுடன் எதிர்கொண்டு விடுகிறார்கள். அதன் சிரமங்களை அவர்கள் தாங்கிக்கொள்கின்றனர். அருட்கொடைகளால் ஏற்படும் சோதனைகளை குறைவானவர்களே பொறுமையுடன் எதிர்கொள்கிறார்கள்.

 
Ý nghĩa nội dung Chương: Al-'Araf
Mục lục các chương Kinh Số trang
 
Bản dịch ý nghĩa nội dung Qur'an - 简易古兰经经注泰米尔语版 - Mục lục các bản dịch

由古兰经研究释义中心发行

Đóng lại