Bản dịch ý nghĩa nội dung Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Mục lục các bản dịch


Ý nghĩa nội dung Câu: (54) Chương: Chương Al-'Araf
اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ ۫— یُغْشِی الَّیْلَ النَّهَارَ یَطْلُبُهٗ حَثِیْثًا ۙ— وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍ بِاَمْرِهٖ ؕ— اَلَا لَهُ الْخَلْقُ وَالْاَمْرُ ؕ— تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟
7.54. மனிதர்களே! வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி ஆறுநாட்களில் படைத்தவனே உங்கள் இறைவனாவான். பின்னர் அவன் தன் கண்ணியத்திற்குத் தக்கவாறு அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான். நம்மால் அது எவ்வாறு என்பதை உணர்ந்து கொள்ள முடியாது அவன் இரவின் இருளை பகலின் வெளிச்சத்தைக் கொண்டும் பகலின் வெளிச்சத்தை இரவின் இருளைக் கொண்டும் போக்குகிறான். அவற்றில் ஒவ்வொன்றும் மற்றதை வேகமாக தாமதமின்றி பின்தொடர்கிறது. இது சென்றுவிட்டால் அது நுழைந்து விடும். அவன் சூரியனையும் சந்திரனையும் படைத்துள்ளான். வசப்படுத்தப்பட்டுள்ள நட்சத்திரங்களையும் படைத்துள்ளான். அறிந்து கொள்ளுங்கள், படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனைத் தவிர வேறு படைப்பாளன் இருக்கிறானா? அதிகாரம் அனைத்தும் அவனிடமே உள்ளது. அவன் நலவும் உபகாரமும் மகத்தானதும் அதிகமானதுமாகும். கண்ணியம், பரிபூரணம் ஆகிய பண்புகளை உடைய அவன் உலகிலுள்ள அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவனாவான்.
Các Tafsir tiếng Ả-rập:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• القرآن الكريم كتاب هداية فيه تفصيل ما تحتاج إليه البشرية، رحمة من الله وهداية لمن أقبل عليه بقلب صادق.
1. குர்ஆன் நேர்வழிகாட்டும் வேதமாகும். அதில் மனிதனுக்குத் தேவையான அனைத்தும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அது அல்லாஹ்வின் கருணையின் காரணமாகவும் உண்மையான எண்ணத்துடன் அவனை நோக்கி வருவோருக்கு வழிகாட்டுவதற்காகவுமே இவ்வாறு செய்துள்ளான்.

• خلق الله السماوات والأرض في ستة أيام لحكمة أرادها سبحانه، ولو شاء لقال لها: كوني فكانت.
2. வானங்களையும் பூமியையும் தான் விரும்பும் ஒரு நோக்கத்திற்காகவே அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்துள்ளான். அவன் நாடியிருந்தால் ‘ஆகு’ என்று கூறியிருப்பான். அது ஆகியிருக்கும்.

• يتعين على المؤمنين دعاء الله تعالى بكل خشوع وتضرع حتى يستجيب لهم بفضله.
3. அல்லாஹ் தன் அருளால் தமக்குப் பதிலளிக்க வேண்டுமெனில் பூரண பணிவோடும் உள்ளச்சத்தோடும் அவனிடம் பிரார்த்திப்பது நம்பிக்கையாளர்களின் மீது அவசியமாகும்.

• الفساد في الأرض بكل صوره وأشكاله منهيٌّ عنه.
4. பூமியில் குழப்பம் ஏற்படுத்தும் அனைத்து முறைகளும் தடைசெய்யப்பட்டவையே.

 
Ý nghĩa nội dung Câu: (54) Chương: Chương Al-'Araf
Mục lục các chương Kinh Số trang
 
Bản dịch ý nghĩa nội dung Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Mục lục các bản dịch

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Đóng lại