Check out the new design

Bản dịch ý nghĩa nội dung Qur'an - 简易古兰经经注泰米尔语版 * - Mục lục các bản dịch


Ý nghĩa nội dung Câu: (66) Chương: Al-Anfal
اَلْـٰٔنَ خَفَّفَ اللّٰهُ عَنْكُمْ وَعَلِمَ اَنَّ فِیْكُمْ ضَعْفًا ؕ— فَاِنْ یَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ صَابِرَةٌ یَّغْلِبُوْا مِائَتَیْنِ ۚ— وَاِنْ یَّكُنْ مِّنْكُمْ اَلْفٌ یَّغْلِبُوْۤا اَلْفَیْنِ بِاِذْنِ اللّٰهِ ؕ— وَاللّٰهُ مَعَ الصّٰبِرِیْنَ ۟
8.66. -நம்பிக்கையாளர்களே!- உங்களது பலவீனத்தை அல்லாஹ் அறிந்ததனால் அவன் உங்கள் மீது கருணை காட்டும் முகமாக உங்கள் மீதுள்ள சுமையைக் குறைத்துவிட்டான். உங்களில் ஒருவர் பத்து நிராகரிப்பாளர்களை எதிர்ப்பதற்குப் பதிலாக இரு நிராகரிப்பாளர்களை எதிர்ப்பதை அவன் உங்கள் மீது கடமையாக்கிவிட்டான். உங்களில் நூறு பொறுமையாளர்கள் இருந்தால் அவர்கள் இருநூறு நிராகரிப்பாளர்களை போரில் வெல்லலாம். உங்களில் ஆயிரம் பொறுமையாளர்கள் இருந்தால் அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு இரண்டாயிரம் நிராகரிப்பாளர்களை வெல்லலாம். அல்லாஹ் நம்பிக்கை கொண்ட பொறுமையாளர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவர்களுடன் இருக்கின்றான்.
Các Tafsir tiếng Ả-rập:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• في الآيات وَعْدٌ من الله لعباده المؤمنين بالكفاية والنصرة على الأعداء.
1. நம்பிக்கைகொண்ட தன் அடியார்களை பொறுப்பெடுத்துக் கொள்வதாகவும் எதிரிகளுக்கு எதிராக அவர்களுக்கு வெற்றியளிப்பதாகவும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

• الثبات أمام العدو فرض على المسلمين لا اختيار لهم فيه، ما لم يحدث ما يُرَخِّص لهم بخلافه.
2. எதிரிகளுக்கு முன்னால் உறுதியுடன் நிற்பது முஸ்லிம்களின் மீது கட்டாயக் கடமையாகும். அதிலே அவர்கள் வேறு எந்த தெரிவும் கிடையாது, கடமையில்லை என சலுகை வழங்கும் ஏதேனும் நிகழ்வு நடந்தாலே தவிர.

• الله يحب لعباده معالي الأمور، ويكره منهم سَفْسَافَها، ولذلك حثهم على طلب ثواب الآخرة الباقي والدائم.
3. அல்லாஹ் தன் அடியார்களுக்கு உயர்ந்த விஷயங்களை விரும்புகிறான், தாழ்ந்த விஷயங்களை வெறுக்கிறான். எனவேதான் நிலையான மறுமையின் நன்மையைத் தேடுமாறு அவர்களுக்கு ஆர்வமூட்டியுள்ளான்.

• مفاداة الأسرى أو المنّ عليهم بإطلاق سراحهم لا يكون إلا بعد توافر الغلبة والسلطان على الأعداء، وإظهار هيبة الدولة في وجه الآخرين.
4. எதிரிகளின் மீது அதிகாரம் ஏற்பட்டு முஸ்லிம் நாட்டைப் பற்றிய பயம் ஏனையோரிடம் வெளிப்படும் வரை கைதிகளுக்குப் பிணைவழங்கவோ அல்லது அவர்களை இலவசமாக விடுவித்து கருணை காட்டவோ முடியாது.

 
Ý nghĩa nội dung Câu: (66) Chương: Al-Anfal
Mục lục các chương Kinh Số trang
 
Bản dịch ý nghĩa nội dung Qur'an - 简易古兰经经注泰米尔语版 - Mục lục các bản dịch

由古兰经研究释义中心发行

Đóng lại