Check out the new design

Bản dịch ý nghĩa nội dung Qur'an - 泰米尔语翻译 - 欧玛尔·谢里夫 * - Mục lục các bản dịch

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

Ý nghĩa nội dung Chương: Al-Mujadalah   Câu:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا نَاجَیْتُمُ الرَّسُوْلَ فَقَدِّمُوْا بَیْنَ یَدَیْ نَجْوٰىكُمْ صَدَقَةً ؕ— ذٰلِكَ خَیْرٌ لَّكُمْ وَاَطْهَرُ ؕ— فَاِنْ لَّمْ تَجِدُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
நம்பிக்கையாளர்களே! நீங்கள் தூதரிடம் கூடிப்பேசினால் நீங்கள் கூடிப் பேசுவதற்கு முன்னர் (ஏழைகளுக்கு) தர்மம் செய்யுங்கள்! அது உங்களுக்கு மிகச் சிறந்ததும் மிக பரிசுத்தமானதும் ஆகும். நீங்கள் (எதையும் தர்மம் செய்ய) வசதி பெறவில்லை என்றால் (அல்லாஹ் உங்களை மன்னித்து விடுவான். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.
Các Tafsir tiếng Ả-rập:
ءَاَشْفَقْتُمْ اَنْ تُقَدِّمُوْا بَیْنَ یَدَیْ نَجْوٰىكُمْ صَدَقٰتٍ ؕ— فَاِذْ لَمْ تَفْعَلُوْا وَتَابَ اللّٰهُ عَلَیْكُمْ فَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ— وَاللّٰهُ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟۠
உங்கள் உரையாடலுக்கு முன்னர் தர்மங்கள் செய்வதை (-அப்படி செய்தால் வறுமை வந்துவிடுமோ என) நீங்கள் பயப்படுகிறீர்களா? நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால், அல்லாஹ்வும் உங்களை மன்னித்துவிட்டதால் (உங்கள் மீது குற்றமில்லை.) ஆகவே, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்! இன்னும், ஸகாத்தை கொடுங்கள்! இன்னும், அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Các Tafsir tiếng Ả-rập:
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ تَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَیْهِمْ ؕ— مَا هُمْ مِّنْكُمْ وَلَا مِنْهُمْ ۙ— وَیَحْلِفُوْنَ عَلَی الْكَذِبِ وَهُمْ یَعْلَمُوْنَ ۟ۚ
அல்லாஹ் கோபித்த மக்(களாகிய யூதர்)களை நண்பர்களாக எடுத்துக் கொண்ட (நய)வ(ஞ்சக)ர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? அவர்கள் (-நயவஞ்சகர்கள்) உங்களை சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் அவர்களை (-யூதர்களை) சேர்ந்தவர்களும் இல்லை. அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுக்கு முன்னர்) பொய்யான விஷயத்தின் மீது சத்தியம் செய்கிறார்கள்.
Các Tafsir tiếng Ả-rập:
اَعَدَّ اللّٰهُ لَهُمْ عَذَابًا شَدِیْدًا ؕ— اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
அல்லாஹ், அவர்களுக்கு கடுமையான தண்டனையை ஏற்படுத்தி இருக்கிறான். நிச்சயமாக அவர்கள் செய்துகொண்டிருந்தவை (அனைத்தும்) மிகக் கெட்டவையாகும்.
Các Tafsir tiếng Ả-rập:
اِتَّخَذُوْۤا اَیْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ فَلَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟
அவர்கள் தங்கள் சத்தியங்களை (தாங்கள் தப்பிப்பதற்கு) ஒரு கேடயமாக எடுத்துக் கொண்டனர். ஆக, அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் (பாமர மக்களை) தடுக்கிறார்கள். ஆகவே, இழிவுதரக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு.
Các Tafsir tiếng Ả-rập:
لَنْ تُغْنِیَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا ؕ— اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ؕ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
அல்லாஹ்விடம் (அவனது தண்டனையிலிருந்து) எதையும் அவர்களின் செல்வங்களோ அவர்களின் பிள்ளைகளோ அவர்களை விட்டும் அறவே தடுக்க மாட்டார்கள். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்,
Các Tafsir tiếng Ả-rập:
یَوْمَ یَبْعَثُهُمُ اللّٰهُ جَمِیْعًا فَیَحْلِفُوْنَ لَهٗ كَمَا یَحْلِفُوْنَ لَكُمْ وَیَحْسَبُوْنَ اَنَّهُمْ عَلٰی شَیْءٍ ؕ— اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْكٰذِبُوْنَ ۟
அல்லாஹ் அவர்கள் அனைவரையும் எழுப்பும் நாளில் (அந்த நரகத்தில் அவர்கள் நுழைவார்கள்). ஆக, அவர்கள் அவனுக்கு முன் சத்தியம் செய்வார்கள், உங்களுக்கு முன் அவர்கள் சத்தியம் செய்வது போன்று. (இந்த சத்தியத்தின் மூலம்) அவர்கள் (புத்தி கூர்மையான) ஒரு செயல் மீது நிச்சயமாக தாங்கள் இருப்பதாக எண்ணுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள்தான் பொய்யர்கள்!
Các Tafsir tiếng Ả-rập:
اِسْتَحْوَذَ عَلَیْهِمُ الشَّیْطٰنُ فَاَنْسٰىهُمْ ذِكْرَ اللّٰهِ ؕ— اُولٰٓىِٕكَ حِزْبُ الشَّیْطٰنِ ؕ— اَلَاۤ اِنَّ حِزْبَ الشَّیْطٰنِ هُمُ الْخٰسِرُوْنَ ۟
ஷைத்தான் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றான். ஆகவே, அல்லாஹ்வின் நினைவை அவர்களுக்கு மறக்கவைத்து விட்டான். அவர்கள்தான் ஷைத்தானின் கட்சியினர் ஆவார்கள். அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக ஷைத்தானின் கட்சியினர்தான் நஷ்டவாளிகள் ஆவார்கள்.
Các Tafsir tiếng Ả-rập:
اِنَّ الَّذِیْنَ یُحَآدُّوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗۤ اُولٰٓىِٕكَ فِی الْاَذَلِّیْنَ ۟
நிச்சயமாக அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முரண்படுகிறவர்கள், அவர்கள் (தோற்கடிக்கப்பட்ட) மிக இழிவானவர்களில் சேர்ந்துவிடுவார்கள்.
Các Tafsir tiếng Ả-rập:
كَتَبَ اللّٰهُ لَاَغْلِبَنَّ اَنَا وَرُسُلِیْ ؕ— اِنَّ اللّٰهَ قَوِیٌّ عَزِیْزٌ ۟
“நிச்சயமாக நானும் எனது தூதர்களும்தான் வெல்வோம்” என்று அல்லாஹ் விதித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமை உள்ளவன், மிகைத்தவன் ஆவான்.
Các Tafsir tiếng Ả-rập:
 
Ý nghĩa nội dung Chương: Al-Mujadalah
Mục lục các chương Kinh Số trang
 
Bản dịch ý nghĩa nội dung Qur'an - 泰米尔语翻译 - 欧玛尔·谢里夫 - Mục lục các bản dịch

谢赫·欧玛尔·谢里夫·本·阿卜杜·赛俩目翻译

Đóng lại