《古兰经》译解 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - 译解目录


含义的翻译 段: (69) 章: 伊斯拉仪
اَمْ اَمِنْتُمْ اَنْ یُّعِیْدَكُمْ فِیْهِ تَارَةً اُخْرٰی فَیُرْسِلَ عَلَیْكُمْ قَاصِفًا مِّنَ الرِّیْحِ فَیُغْرِقَكُمْ بِمَا كَفَرْتُمْ ۙ— ثُمَّ لَا تَجِدُوْا لَكُمْ عَلَیْنَا بِهٖ تَبِیْعًا ۟
17.69. அல்லது முதலில் உங்களைப் பாதுகாத்த அல்லாஹ்வின் அருளை நீங்கள் நிராகரித்து நடந்துகொண்டதனால் உங்களை அவன் மீண்டும் கடலுக்கு திரும்பச்செய்து கடும் காற்றை அனுப்பி உங்களை மூழ்கடித்துவிடலாம் என்பதைக்குறித்து அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் நாம் உங்களுக்குச் செய்ததைக் குறித்து நம்மிடம் உங்களுக்குச் சார்பாக கேள்விகேட்பவர் எவரையும் நீங்கள் பெறமாட்டீர்கள்.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• الإنسان كفور للنعم إلا من هدى الله.
1. மனிதன் அருட்கொடைகளை மிக அதிகமாக மறுக்கக்கூடியவனாக இருக்கின்றான். அல்லாஹ் நேர்வழிகாட்டியவர்களைத் தவிர.

• كل أمة تُدْعَى إلى دينها وكتابها، هل عملت به أو لا؟ والله لا يعذب أحدًا إلا بعد قيام الحجة عليه ومخالفته لها.
2. ஒவ்வொரு சமூகமும் அதனுடைய மார்க்கம் மற்றும் வேதத்தின்பால் அழைக்கப்படும். அவர்கள் அதனடிப்படையில் செயல்பட்டார்களா? இல்லையா? (என்று விசாரிக்கப்படுவார்கள்). அல்லாஹ் எந்த ஒரு மனிதரையும், ஆதாரம் கிடைத்த பின் அதற்கு மாற்றம் செய்தாலேயன்றி தண்டிக்க மாட்டான்.

• عداوة المجرمين والمكذبين للرسل وورثتهم ظاهرة بسبب الحق الذي يحملونه، وليس لذواتهم.
3. குற்றவாளிகளும் பொய்பித்தவர்களும் தூதர்களையும் அவர்களது வாரிசுகளையும் எதிர்ப்பது வெளிப்படையானது. அதற்குக் காரணம் அவர்கள் சுமந்திருக்கும் சத்தியமேயாகும். மாறாக அவர்களல்ல.

• الله تعالى عصم النبي من أسباب الشر ومن البشر، فثبته وهداه الصراط المستقيم، ولورثته مثل ذلك على حسب اتباعهم له.
4. அல்லாஹ் நபியை தீங்குகளின் காரணங்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் பாதுகாத்துள்ளான். அவரை உறுதிப்படுத்தி நேரான பாதைக்கு வழிகாட்டியுள்ளான். அவர்களது வாரிசுகள் அவர்களைப் பின்பற்றுவதற்கேற்ப அவற்றைப் பெறுவார்கள்.

 
含义的翻译 段: (69) 章: 伊斯拉仪
章节目录 页码
 
《古兰经》译解 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - 译解目录

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

关闭