《古兰经》译解 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - 译解目录


含义的翻译 章: 麦尔彦   段:

ஸூரா மர்யம்

每章的意义:
إبطال عقيدة نسبة الولد لله من المشركين والنصارى، وبيان سعة رحمة الله بعباده.
முஷ்ரிகீன்களும் கிறிஸ்தவர்களும் அல்லாஹ்வுக்கு பிள்ளைகள் இருப்பதாகக் கூறும் கொள்கை தவறு என்பதை நிறுவுதலும், அடியார்களின் மீது அல்லாஹ் வைத்துள்ள பரந்த கருணையைத் தெளிவுபடுத்தலும்

كٓهٰیٰعٓصٓ ۟
19.1. (كٓهيعٓصٓ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
阿拉伯语经注:
ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهٗ زَكَرِیَّا ۟ۖۚ
19.2. இது உம் இறைவன் தன் அடியார் ஸகரிய்யாவின் மீது பொழிந்த அருளைப் பற்றிய செய்தியாகும். அதன் மூலம் படிப்பினை பெறுவதற்காக உமக்கு நாம் அதனை எடுத்துரைக்கின்றோம்.
阿拉伯语经注:
اِذْ نَادٰی رَبَّهٗ نِدَآءً خَفِیًّا ۟
19.3. அவன் தம் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும்பொருட்டு தம் இறைவனை ரகசியமான முறையில் அழைத்த போது,
阿拉伯语经注:
قَالَ رَبِّ اِنِّیْ وَهَنَ الْعَظْمُ مِنِّیْ وَاشْتَعَلَ الرَّاْسُ شَیْبًا وَّلَمْ اَكُنْ بِدُعَآىِٕكَ رَبِّ شَقِیًّا ۟
19.4. அவர் கூறினார்: “என் இறைவா! என் எலும்புகள் பலவீனமடைந்து விட்டன. என் தலையில் நரை முடியும் அதிகமாகி விட்டது. உன்னிடம் பிரார்த்தனை செய்து நான் ஏமாற்றம் அடைந்ததில்லை. மாறாக நான் பிரார்த்தனை செய்த போதெல்லாம் நீ எனக்குப் பதிலளித்துள்ளாய்.
阿拉伯语经注:
وَاِنِّیْ خِفْتُ الْمَوَالِیَ مِنْ وَّرَآءِیْ وَكَانَتِ امْرَاَتِیْ عَاقِرًا فَهَبْ لِیْ مِنْ لَّدُنْكَ وَلِیًّا ۟ۙ
19.5. நான் மரணித்த பிறகு என் உறவினர்கள் அவர்கள் உலக இன்பங்களில் மூழ்கியிருப்பதால் மார்க்கத்தின் கடமைகளை சரிவர நிறைவேற்ற மாட்டார்கள் என்று நான் அஞ்சுகிறேன். எனது மனைவியோ பிள்ளை பெறாத மலடியாக இருக்கிறாள். உன் புறத்திலிருந்து உதவிசெய்யும் பிள்ளையை எனக்கு வழங்குவாயாக.
阿拉伯语经注:
یَّرِثُنِیْ وَیَرِثُ مِنْ اٰلِ یَعْقُوْبَ ۗ— وَاجْعَلْهُ رَبِّ رَضِیًّا ۟
19.6. அவர் என்னிடமிருந்தும் யஅகூபின் குடும்பத்தினரிடம் இருந்தும் தூதுத்துவத்தை அனந்தரமாகப் பெறுவார். என் -இறைவா!- அவரை மார்க்கத்திலும், குணத்திலும், கல்வியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாக ஆக்குவாயாக.
阿拉伯语经注:
یٰزَكَرِیَّاۤ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمِ ١سْمُهٗ یَحْیٰی ۙ— لَمْ نَجْعَلْ لَّهٗ مِنْ قَبْلُ سَمِیًّا ۟
19.7. அல்லாஹ் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். “ஸகரிய்யாவே! நாம் உமக்கு நற்செய்தி கூறுகின்றோம். உமது பிரார்த்தனைக்கு நாம் விடையளித்து விட்டோம். யஹ்யா என்னும் பெயருடைய ஆண் பிள்ளையை நாம் உமக்கு வழங்குகிறோம். நாம் இதற்கு முன்னர் வேறு யாருக்கும் இந்தப் பெயரை வைத்ததில்லை” என்று அவன் அவரை அழைத்துக் கூறினான்.
阿拉伯语经注:
قَالَ رَبِّ اَنّٰی یَكُوْنُ لِیْ غُلٰمٌ وَّكَانَتِ امْرَاَتِیْ عَاقِرًا وَّقَدْ بَلَغْتُ مِنَ الْكِبَرِ عِتِیًّا ۟
19.8. அவர் அல்லாஹ்வின் வல்லமையை குறித்து வியந்தவராகக் கூறினார்: “எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்? எனது மனைவியோ பிள்ளை பெற முடியாத மலடியாக இருக்கிறாள். நானோ எலும்புகள் பலவீனமடைந்து வாழ்கையின் இறுதியான முதுமையை அடைந்துவிட்டேனே!”
阿拉伯语经注:
قَالَ كَذٰلِكَ ۚ— قَالَ رَبُّكَ هُوَ عَلَیَّ هَیِّنٌ وَّقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَیْـًٔا ۟
19.9. வானவர் கூறினார்: “விஷயம் நீர் கூறியவாறுதான். உமது மனைவியோ பிள்ளை பெறாத மலடியாகத்தான் இருக்கிறார். நிச்சயமாக நீரோ வாழ்கையின் இறுதியான முதுமையை அடைந்து எலும்புகளும் பலவீனமடைந்து விட்டன. ஆயினும் உம் இறைவன் கூறினான்: மலடியான தாயிடமிருந்தும், வாழ்வின் இறுதியை அடைந்துவிட்ட தந்தையைக் கொண்டும் யஹ்யாவை உமது இறைவன் படைப்பது எளிதானது. -ஸகரிய்யாவே!- இதற்கு முன்னர் குறிப்பிடத்தக்க ஒன்றுமே இல்லாமல் இருந்த உம்மை நான் படைக்கவில்லையா?”
阿拉伯语经注:
قَالَ رَبِّ اجْعَلْ لِّیْۤ اٰیَةً ؕ— قَالَ اٰیَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَ لَیَالٍ سَوِیًّا ۟
19.10. ஸகரிய்யா கூறினார்: “என் இறைவா! வானவர்கள் கூறிய நற்செய்தியைக் குறித்து அமைதி பெற்று அதனை அறிவிக்கக்கூடிய அடையாளமொன்றை எனக்கு ஏற்படுத்துவாயாக.” அவன் கூறினான்: “உமக்கு அளிக்கப்பட்ட நற்செய்தி நிகழும் என்பதற்கான அடையாளம், எந்த நோயும் இன்றி மூன்று நாட்கள் வரை உம்மால் மக்களுடன் பேச முடியாதிருப்பதாகும். ஆனால் எந்த நோயுமற்ற ஆரோக்கியமானவராகவே இருப்பீர்.
阿拉伯语经注:
فَخَرَجَ عَلٰی قَوْمِهٖ مِنَ الْمِحْرَابِ فَاَوْحٰۤی اِلَیْهِمْ اَنْ سَبِّحُوْا بُكْرَةً وَّعَشِیًّا ۟
19.11. ஸகரிய்யா தம் தொழுமிடத்திலிருந்து தம் மக்களிடம் வந்தார். பேசாமல் அவர்களிடம் சைகை மூலம் கூறினார்: “காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வை துதிபாடுங்கள்.”
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• الضعف والعجز من أحب وسائل التوسل إلى الله؛ لأنه يدل على التَّبَرُّؤِ من الحول والقوة، وتعلق القلب بحول الله وقوته.
1. பலவீனமும், இயலாமையும் அல்லாஹ்விடம் தொடர்பு கொள்வதற்கான மிகச் சிறந்த சாதனமாகும். ஏனெனில் நிச்சயமாக அது தன்னிடம் எந்த பலமும், சக்தியும் இல்லை என்பதை ஒத்துக்கொண்டு உள்ளம் அல்லாஹ்வுடைய பலத்தில் சக்தியில் முழுமையாக ஆதரவு வைக்க வழிவகுக்கும்.

• يستحب للمرء أن يذكر في دعائه نعم الله تعالى عليه، وما يليق بالخضوع.
2. மனிதன் தன் பிரார்த்தனையில் அல்லாஹ் தன் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூர்வதும், அவனுக்கு தகுந்த முறையில் அவனை கீழ்படிவதும் விரும்பத்தக்கதாகும்.

• الحرص على مصلحة الدين وتقديمها على بقية المصالح.
3. மார்க்க நலன்களில் ஆர்வம் கொள்வதுடன், ஏனைய நலன்களைவிட மார்க்க ரீதியான நலன்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.

• تستحب الأسماء ذات المعاني الطيبة.
4. நல்ல கருத்துக்கள் உடைய பெயர்கள் விரும்பத்தக்கவையாகும்.

یٰیَحْیٰی خُذِ الْكِتٰبَ بِقُوَّةٍ ؕ— وَاٰتَیْنٰهُ الْحُكْمَ صَبِیًّا ۟ۙ
19.12. அவருக்கு யஹ்யா பிறந்தார். யஹ்யா உரையாடும் வயதை அடைந்த போது நாம் அவரிடம் கூறினோம்: “யஹ்யாவே! தவ்ராத்தை உறுதியுடன் பற்றிக் கொள்வீராக.” அவர் சிறுவராக இருந்த போதே நாம் அவருக்குப் புரிதலையும், கல்வியையும், உறுதியையும் வழங்கினோம்.”
阿拉伯语经注:
وَّحَنَانًا مِّنْ لَّدُنَّا وَزَكٰوةً ؕ— وَكَانَ تَقِیًّا ۟ۙ
19.13. நாம் நம் புறத்திலிருந்து அவருக்கு அருளை வழங்கினோம். பாவங்களிலிருந்து அவரைத் தூய்மைப்படுத்தினோம். அவர் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவராக இருந்தார்.
阿拉伯语经注:
وَّبَرًّا بِوَالِدَیْهِ وَلَمْ یَكُنْ جَبَّارًا عَصِیًّا ۟
19.14. அவர் தம் தாய், தந்தையருக்கு உபகாரம் செய்யக்கூடியவராகவும், மிருதுவாக, அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளக்கூடியவராகவும் இருந்தார். அவர் தம் இறைவனுக்கும், அவ்விருவருக்கும் கட்டுப்படாமல் கர்வம் கொள்ளக்கூடியவராக இருக்கவில்லை. இறைவனின் கட்டளைக்கோ, தாய், தந்தையரின் கட்டளைக்கோ மாறாகச் செயல்படக்கூடியவராகவும் இருக்கவில்லை.
阿拉伯语经注:
وَسَلٰمٌ عَلَیْهِ یَوْمَ وُلِدَ وَیَوْمَ یَمُوْتُ وَیَوْمَ یُبْعَثُ حَیًّا ۟۠
19.15. அவர் பிறந்த நாளிலும், மரணித்து வாழ்விலிருந்து வெளியேறும் நாளிலும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளிலும் அல்லாஹ்விடமிருந்து சாந்தியும், பாதுகாப்பும் அவருக்கு உண்டாகட்டும். இந்த மூன்று இடங்களும் மனிதன் மிகவும் அஞ்சக்கூடிய இடங்களாகும். இவற்றில் அவன் பாதுகாப்புப் பெற்றுவிட்டால் ஏனைய இடங்களில் எந்த அச்சமும் கொள்ளவேண்டியதில்லை.
阿拉伯语经注:
وَاذْكُرْ فِی الْكِتٰبِ مَرْیَمَ ۘ— اِذِ انْتَبَذَتْ مِنْ اَهْلِهَا مَكَانًا شَرْقِیًّا ۟ۙ
19.16. -தூதரே!- உமக்கு இறக்கப்பட்ட குர்ஆனில் மர்யமைக் குறித்து நினைவு கூர்வீராக. அவர் தம் குடும்பத்தாரை விட்டு தனித்து தூரமாகி கிழக்குத் திசையிலுள்ள ஓரிடத்திற்குச் சென்று விட்டார்.
阿拉伯语经注:
فَاتَّخَذَتْ مِنْ دُوْنِهِمْ حِجَابًا ۫— فَاَرْسَلْنَاۤ اِلَیْهَا رُوْحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِیًّا ۟
19.17. தான் இறைவனை வணங்கும் போது தன் சமூகத்தார் யாரும் தன்னைப் பார்க்காதவண்ணம் ஒரு திரையை ஏற்படுத்திக் கொண்டார். நாம் அவரிடம் ஜிப்ரீலை அனுப்பினோம். அவர் குறைகளற்ற மனித உருவில் மர்யமுக்கு முன்னால் தோன்றினார். தம்முடன் நிச்சயமாக அவர் தீய விஷயத்தை நாடுகிறார் என்று எண்ணிப் மர்யம் பயந்துவிட்டார்.
阿拉伯语经注:
قَالَتْ اِنِّیْۤ اَعُوْذُ بِالرَّحْمٰنِ مِنْكَ اِنْ كُنْتَ تَقِیًّا ۟
19.18. மர்யம் அவரை குறைகளற்ற மனித உருவில் தன்னை நெருங்கி வருவதைக் கண்டபோது கூறினார்: “-எ மனிதா!- நீ அல்லாஹ்வை பயந்து அஞ்சக் கூடியவராக இருந்தால் நான் உம்மால் ஏற்படும் தீங்கினை விட்டு அளவிலாக் கருணையாளனிடம் பாதுகாவல் தேடுகிறேன்.”
阿拉伯语经注:
قَالَ اِنَّمَاۤ اَنَا رَسُوْلُ رَبِّكِ ۖۗ— لِاَهَبَ لَكِ غُلٰمًا زَكِیًّا ۟
19.19. ஜிப்ரீல் கூறினார்: “நான் மனிதர் அல்ல. உம் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதராவேன். உமக்கு தூய்மையான குழந்தையை நன்கொடையாக வழங்குவதற்காக அவன் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளான்.”
阿拉伯语经注:
قَالَتْ اَنّٰی یَكُوْنُ لِیْ غُلٰمٌ وَّلَمْ یَمْسَسْنِیْ بَشَرٌ وَّلَمْ اَكُ بَغِیًّا ۟
19.20. மர்யம் ஆச்சரியமாகக் கேட்டார்: “எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்? கணவரோ, மற்றவர்களோ என்னை நெருங்கியதில்லையே! பிள்ளை உண்டாவதற்கு நான் விபச்சாரியும் அல்லவே!?
阿拉伯语经注:
قَالَ كَذٰلِكِ ۚ— قَالَ رَبُّكِ هُوَ عَلَیَّ هَیِّنٌ ۚ— وَلِنَجْعَلَهٗۤ اٰیَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّا ۚ— وَكَانَ اَمْرًا مَّقْضِیًّا ۟
19.21. ஜிப்ரீல் அவரிடம் கூறினார்: “விஷயம் நீர் கூறியவாறு, கணவரோ மற்றவர்களோ உம்மைத் தீண்டியதுமில்லை. விபச்சாரியாகவும் இருக்கவில்லை. ஆனால் உம் இறைவன் கூறுகிறான், தந்தையின்றி ஒரு குழந்தையை பிறக்கவைப்பது எனக்கு மிகவும் எளிதானது. நாம் அதனை மக்களுக்கு நம் வல்லமையை அறிவிக்கும் சான்றாகவும் உமக்கும் அவரை நம்பியோருக்கும் நமது அருளாகவும் இருப்பதற்காக அவ்வாறு செய்கிறோம். இவ்வாறு உம் குழந்தையைப் படைப்பது லவ்ஹுல் மஹ்ஃபூல் ஏட்டில் எழுதப்பட்ட, அல்லாஹ்வின் நிர்ணயிக்கப்பட்ட விதியாகும்.
阿拉伯语经注:
فَحَمَلَتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِیًّا ۟
19.22. வானவர் ஊதிய பிறகு அவள் கர்ப்பமுற்றாள். அதனை எடுத்துக்கொண்டு மக்களை விட்டும் தூரமான இடத்திற்குச் சென்றுவிட்டாள்.
阿拉伯语经注:
فَاَجَآءَهَا الْمَخَاضُ اِلٰی جِذْعِ النَّخْلَةِ ۚ— قَالَتْ یٰلَیْتَنِیْ مِتُّ قَبْلَ هٰذَا وَكُنْتُ نَسْیًا مَّنْسِیًّا ۟
19.23. பிரசவ வேதனை அவரை பேரீச்சை மரத்தின் தண்டின்பால் கொண்டு சென்றது. மர்யம் கூறினாள்: “நான் இந்த நாளுக்கு முன்னரே இறந்து போயிருக்க வேண்டுமே! மக்கள் என்னைப் பற்றி தவறாக எண்ணாமல் இருக்க நான் நினைவுகூரப்படாத ஒரு பொருளாக, இருந்திருக்க வேண்டுமே!
阿拉伯语经注:
فَنَادٰىهَا مِنْ تَحْتِهَاۤ اَلَّا تَحْزَنِیْ قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِیًّا ۟
19.24. மர்யமின் பாதங்களுக்குக் கீழ்ப்புறமிருந்து மர்யமை ஈஸா அழைத்துக் கூறினார்: “கவலைப்படாதீர். அல்லாஹ் உமக்குக் கீழே ஒரு நீரோடையை ஏற்படுத்தியுள்ளான். அதிலிருந்து நீர் பருகலாம்”
阿拉伯语经注:
وَهُزِّیْۤ اِلَیْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسٰقِطْ عَلَیْكِ رُطَبًا جَنِیًّا ۟ؗ
19.25. பேரீச்சை தண்டுப் பகுதியைப் பிடித்து அசைப்பீராக. அது கனிந்த புதிய பேரீச்சைகளை உம் பக்கம் உதிர்க்கும்.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• الصبر على القيام بالتكاليف الشرعية مطلوب.
1. மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

• علو منزلة بر الوالدين ومكانتها عند الله، فالله قرنه بشكره.
2. பெற்றோருக்கு உபகாரம் புரிவது அல்லாஹ்விடத்தில் மிக உயர்ந்த அந்தஸ்துமிக்கதாகும். எனவேதான் அதனை தனக்கு நன்றி செலுத்துவதுடன் இணைத்துக் கூறியுள்ளான்.

• مع كمال قدرة الله في آياته الباهرة التي أظهرها لمريم، إلا أنه جعلها تعمل بالأسباب ليصلها ثمرة النخلة.
3. மர்யமுக்காக அல்லாஹ் வெளிப்படுத்திய பாரிய அத்தாட்சிகள் அல்லாஹ்வின் பரிபூரண வல்லமையாக இருந்தாலும் அவருக்கு பேரீச்ச மரத்தின் பழம் கிடைக்க காரண காரியங்களில் ஈடுபட வைத்தான்.

فَكُلِیْ وَاشْرَبِیْ وَقَرِّیْ عَیْنًا ۚ— فَاِمَّا تَرَیِنَّ مِنَ الْبَشَرِ اَحَدًا ۙ— فَقُوْلِیْۤ اِنِّیْ نَذَرْتُ لِلرَّحْمٰنِ صَوْمًا فَلَنْ اُكَلِّمَ الْیَوْمَ اِنْسِیًّا ۟ۚ
19.26. பேரீச்சம் பழங்களை உண்டு நீரை அருந்துவீராக. உமது குழந்தையைக் கொண்டு மகிழ்ச்சியடைவீராக. கவலைப்படாதீர். மக்களில் யாரையேனும் சந்திக்க நேரிட்டு குழந்தையைக் குறித்து உம்மிடம் கேட்டால், “நான் என் இறைவனுக்காக பேசாமல் மௌன விரதம் மேற்கொண்டுள்ளேன். இன்று நான் மக்களில் யாருடனும் பேச மாட்டேன்” என்று கூறுவீராக.
阿拉伯语经注:
فَاَتَتْ بِهٖ قَوْمَهَا تَحْمِلُهٗ ؕ— قَالُوْا یٰمَرْیَمُ لَقَدْ جِئْتِ شَیْـًٔا فَرِیًّا ۟
19.27. மர்யம் தம் மகனை சுமந்துகொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவருடைய சமூகத்தார் அவரிடம் வெறுப்போடு கூறினார்கள்: “மர்யமே! நீ பெரும் பாவமான காரியத்தைச் செய்து விட்டாயே! தந்தையின்றி ஒரு குழந்தையைக் கொண்டு வந்துவிட்டாயே!”
阿拉伯语经注:
یٰۤاُخْتَ هٰرُوْنَ مَا كَانَ اَبُوْكِ امْرَاَ سَوْءٍ وَّمَا كَانَتْ اُمُّكِ بَغِیًّا ۟ۖۚ
19.28. வணக்க வழிபாட்டில் ஹாரூனைப் போன்றவளே! (அவர் நல்ல மனிதர்) உன் தந்தையும், தாயும் விபச்சாரம் செய்வோராக இருக்கவில்லை! நீ தூய்மையான நற்பெயருள்ள குடும்பத்திலிருந்து வந்த பெண்ணாயிற்றே! எவ்வாறு தந்தையின்றி ஒரு குழந்தையைக் கொண்டு வந்துள்ளாய்?
阿拉伯语经注:
فَاَشَارَتْ اِلَیْهِ ۫ؕ— قَالُوْا كَیْفَ نُكَلِّمُ مَنْ كَانَ فِی الْمَهْدِ صَبِیًّا ۟
19.29. அவர் தொட்டிலில் இருந்த தம் மகன் ஈஸாவின்பால் சுட்டிக் காட்டினார். அதற்கு அவர்கள் ஆச்சரியமாகக் கேட்டார்கள்: “தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் நாங்கள் எவ்வாறு பேசுவது?”
阿拉伯语经注:
قَالَ اِنِّیْ عَبْدُ اللّٰهِ ۫ؕ— اٰتٰىنِیَ الْكِتٰبَ وَجَعَلَنِیْ نَبِیًّا ۟ۙ
19.30. அப்போது ஈஸா கூறினார்: நிச்சயமாக “நான் அல்லாஹ்வின் அடியாராவேன். அவன் எனக்கு இன்ஜீலை வழங்கி என்னை அவனின் நபிமார்களில் ஒருவராகவும் ஆக்கியுள்ளான்.
阿拉伯语经注:
وَّجَعَلَنِیْ مُبٰرَكًا اَیْنَ مَا كُنْتُ ۪— وَاَوْصٰنِیْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَیًّا ۟ۙ
19.31. நான் எங்கிருந்தாலும் என்னை அடியார்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடியவராக ஆக்கியுள்ளான். என் வாழ்நாள் முழுவதும் தொழுகையை நிறைவேற்றும்படியும், ஸகாத்தை வழங்கும்படியும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்.
阿拉伯语经注:
وَّبَرًّا بِوَالِدَتِیْ ؗ— وَلَمْ یَجْعَلْنِیْ جَبَّارًا شَقِیًّا ۟
19.32. என் தாய்க்கு நன்மை செய்யக்கூடியவனாக என்னை ஆக்கியுள்ளான். என் இறைவனுக்குக் கட்டுப்படாத கர்வம் கொண்டவனாக, அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவனாக அவன் என்னை ஆக்கவில்லை.
阿拉伯语经注:
وَالسَّلٰمُ عَلَیَّ یَوْمَ وُلِدْتُّ وَیَوْمَ اَمُوْتُ وَیَوْمَ اُبْعَثُ حَیًّا ۟
19.33. நான் பிறந்த நாளிலும் மரணிக்கும் நாளிலும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் மறுமைநாளிலும் ஷைத்தானைவிட்டும் அவனுடைய உதவியாளர்களைவிட்டும் என் இறைவன் என்னைப் பாதுகாத்துள்ளான். இந்த மூன்று கடினமான சூழ்நிலைகளிலும் ஷைத்தான் என்னைத் தீண்டவில்லை.”
阿拉伯语经注:
ذٰلِكَ عِیْسَی ابْنُ مَرْیَمَ ۚ— قَوْلَ الْحَقِّ الَّذِیْ فِیْهِ یَمْتَرُوْنَ ۟
19.34. இந்தப் பண்புகளால் வர்ணிக்கப்பட்டவர்தான் மர்யமின் மகன் ஈஸா ஆவார். இதுதான் அவருடைய விஷயத்தில் உண்மையான தகவலாகும். அவருடைய விஷயத்தில் சந்தேகம் கொண்டு முரண்பட்டு வழிகெட்டவர்கள் கூறும் விஷயம் உண்மையல்ல.
阿拉伯语经注:
مَا كَانَ لِلّٰهِ اَنْ یَّتَّخِذَ مِنْ وَّلَدٍ ۙ— سُبْحٰنَهٗ ؕ— اِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟ؕ
19.35. மகனை ஏற்படுத்திக்கொள்வது அல்லாஹ்வுக்கு தேவையானது அல்ல. அவன் அதனை விட்டும் தூய்மையானவன். அவன் ஏதேனும் ஒன்றை நாடினால் அவன் அவ்விடயத்தில் ‘ஆகு’ என்று கூறி போதுமாக்கிக் கொள்வான். நிச்சயமாக அது ஆகிவிடும். அது அவனுக்கு முடியாதது அல்ல. அவ்வாறானவன் பிள்ளையை விட்டும் பரிசுத்தமானவன்.
阿拉伯语经注:
وَاِنَّ اللّٰهَ رَبِّیْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ— هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟
19.36. அல்லாஹ்தான் என் இறைவனும் உங்கள் அனைவரின் இறைவனும் ஆவான். வணக்க வழிபாட்டை அவனுக்கு மட்டுமே உரித்தாக்கிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குக் கூறிய வழியே அல்லாஹ்வின் திருப்தியின்பால் கொண்டு சேர்க்கும் நேரான வழியாகும்.
阿拉伯语经注:
فَاخْتَلَفَ الْاَحْزَابُ مِنْ بَیْنِهِمْ ۚ— فَوَیْلٌ لِّلَّذِیْنَ كَفَرُوْا مِنْ مَّشْهَدِ یَوْمٍ عَظِیْمٍ ۟
19.37. ஈஸாவின் விஷயத்தில் முரண்படுவோர் முரண்பட்டு, அவரது கூட்டத்துக்கு மத்தியிலேயே பல பிரிவினர்களாக ஆகிவிட்டனர். அவரை நம்பிய சிலர் கூறினார்கள், “அவர் இறைத் தூதர்” என்று. யூதர்களைப் போன்ற இன்னும் சிலர் அவரை மறுத்தனர். பல பிரிவினர்கள் அவருடைய விடயத்தில் எல்லை மீறினர் அவர்களில் சிலர் கூறினர் அவர் இறைவன் என்று, இன்னும் சிலர் கூறினார்கள் “அவர் அல்லாஹ்வின் மகன் என்று.” அதனை விட்டும் அல்லாஹ் பரிசுத்தமாகி விட்டான். நிகழ்வுகள், விசாரணை, தண்டனை போன்ற வரப்போகும் மகத்தான மறுமை நாளில் அவர் விஷயத்தில் கருத்துவேறுபாடு கொண்டவர்களுக்கு கேடு உள்ளது.
阿拉伯语经注:
اَسْمِعْ بِهِمْ وَاَبْصِرْ ۙ— یَوْمَ یَاْتُوْنَنَا لٰكِنِ الظّٰلِمُوْنَ الْیَوْمَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
19.38. மறுமை நாளில் அவர்கள் எவ்வளவு சிறந்த முறையில் கேட்பார்கள், பார்ப்பார்கள்! கேட்பது பயனளிக்காத போது கேட்பார்கள். பார்ப்பது பயனளிக்காத போது பார்ப்பார்கள். ஆனால் இவ்வுலக வாழ்வில் அநியாயம் இழைத்தவர்கள் நேரான வழியை விட்டு தெளிவான வழிகேட்டில் உள்ளார்கள். மறுமைக்காக அவர்கள் எந்த முன்னேற்பாடும் செய்வதில்லை. தங்களின் அநியாயத்தில் இருந்து கொண்டிருக்கும் போதே திடீரென அது அவர்களிடம் வந்து விடும்.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• في أمر مريم بالسكوت عن الكلام دليل على فضيلة الصمت في بعض المواطن .
1. பேசாமல் மௌனமாக இருக்கமாறு மர்யம் (அலை) அவர்களுக்கு ஏவியதில் சில இடங்களில் மௌனமாக இருப்பது சிறந்தது என்பதற்கான ஆதாரமுண்டு.

• نذر الصمت كان جائزًا في شرع من قبلنا، أما في شرعنا فقد دلت السنة على منعه.
வாய்மூடி அமைதியாக(மௌனவிரதம்) இருப்பதற்கு நேர்ச்சை செய்வது எமக்கு முன்னோரின் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. எமது மார்க்கத்தில் அது தடையாகும் என்பது நபிமொழியில் இடம்பெற்றுள்ளது.

• أن ما أخبر به القرآن عن كيفية خلق عيسى هو الحق القاطع الذي لا شك فيه، وكل ما عداه من تقولات باطل لا يليق بالرسل.
3. நிச்சயமாக ஈஸா அலை அவர்கள் எவ்வாறு படைக்கப்பட்டார்கள் என்பது தொடர்பாக அல்குர்ஆன் தெரிவிக்கும் தகவலே சந்தேகமற்ற திட்டவட்டமான உண்மையாகும். அதனைத் தவிரவுள்ள அனைத்து அவதூறுகளும் தூதர்களுக்குப் பொருத்தமற்ற பொய்களாகும்.

• في الدنيا يكون الكافر أصم وأعمى عن الحق، ولكنه سيبصر ويسمع في الآخرة إذا رأى العذاب، ولن ينفعه ذلك.
4. இவ்வுலகில் நிராகரிப்பாளன் சத்தியத்தை விட்டும் செவிடனாகவும், குருடனாகவும் இருப்பான். ஆனால் மறுமையில் வேதனையைக் கண்டதும் பார்ப்பான், கேட்பான். அது அவனுக்கு பலனளிக்கப் போவதேயில்லை.

وَاَنْذِرْهُمْ یَوْمَ الْحَسْرَةِ اِذْ قُضِیَ الْاَمْرُ ۘ— وَهُمْ فِیْ غَفْلَةٍ وَّهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
19.39. -தூதரே!- மக்கள் வருத்தப்படும் நாளைக்குறித்து அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக. அந்த நாளில் தீய செயல்கள் செய்தவன் தான் செய்த தீய செயல்களுக்காக வருத்தப்படுவான். நற்செயல்கள் செய்தவன் தான் இன்னும் அதிகமாக வழிப்பட்டு நற்செயல்கள் செய்யவில்லையே என்று வருத்தப்படுவான். அடியார்களின் பதிவேடுகள் அனைத்தும் சுருட்டப்பட்டுவிடும். அவர்களின் கணக்குகள் முடிக்கப்படும். ஒவ்வொருவரும் தான் முற்படுத்திய செயல்களின்பால் சென்றுவிடுவார்கள். அவர்களோ மறுமையின் மீது அலட்சியமாக இருக்கிறார்கள். தங்களின் உலக வாழ்வில் மயங்கியுள்ளார்கள். அவர்கள் மறுமை நாளை நம்புவதில்லை.
阿拉伯语经注:
اِنَّا نَحْنُ نَرِثُ الْاَرْضَ وَمَنْ عَلَیْهَا وَاِلَیْنَا یُرْجَعُوْنَ ۟۠
19.40. படைப்புகள் அனைத்தும் அழிந்த பிறகு நிச்சயமாக நாமே நிலைத்திருப்போம். பூமிக்கும் அதிலுள்ளோருக்கும் நாமே உரிமையாளர்களாவோம். ஏனெனில் அவர்கள் அழிந்து விடுவார்கள். அவர்களுக்கு பிறகு நாம் எஞ்சியிருப்போம். அவர்களுக்கு நாமே உரிமையாளர்கள். அவர்களுடைய விடயத்தில் நாம் விரும்பியதைச் செயல்படுத்துவோம். விசாரைணைக்கும், கூலி பெறவும் மறுமை நாளில் அவர்கள் நம்மிடம் மட்டுமே திரும்பிவர வேண்டும்.
阿拉伯语经注:
وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِبْرٰهِیْمَ ؕ۬— اِنَّهٗ كَانَ صِدِّیْقًا نَّبِیًّا ۟
19.41. -தூதரே!- உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனில் இப்ராஹீமை பற்றிய செய்தியை நினைவு கூர்வீராக. அவர் உண்மையாளராகவும், அல்லாஹ்வின் சான்றுகளை உண்மைப்படுத்தக்கூடியவராகவும், அல்லாஹ்விடம் இருந்து அனுப்பப்பட்ட நபியாகவும் இருந்தார்.
阿拉伯语经注:
اِذْ قَالَ لِاَبِیْهِ یٰۤاَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا یَسْمَعُ وَلَا یُبْصِرُ وَلَا یُغْنِیْ عَنْكَ شَیْـًٔا ۟
19.42. அவர் தம் தந்தை ஆஸரிடம் கூறினார்: “என் தந்தையே! நீங்கள் அழைத்தால் உங்களின் பிரார்த்தனையைச் செவியேற்க முடியாத, நீங்கள் வணங்கினால் உங்கள் வணக்கத்தைப் பார்க்க முடியாத, உங்களுக்கு நன்மையளிக்கவோ உங்களை விட்டு தீங்கினை அகற்றவோ சக்திபெறாத, அல்லாஹ் அல்லாத சிலைகளை ஏன் வணங்குகிறீர்கள்?
阿拉伯语经注:
یٰۤاَبَتِ اِنِّیْ قَدْ جَآءَنِیْ مِنَ الْعِلْمِ مَا لَمْ یَاْتِكَ فَاتَّبِعْنِیْۤ اَهْدِكَ صِرَاطًا سَوِیًّا ۟
19.43. என் தந்தையே! உங்களிடம் வராத அறிவு நிச்சயமாக வஹியின் மூலம் என்னிடம் வந்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு நேரான வழியைக் காட்டுகிறேன்.
阿拉伯语经注:
یٰۤاَبَتِ لَا تَعْبُدِ الشَّیْطٰنَ ؕ— اِنَّ الشَّیْطٰنَ كَانَ لِلرَّحْمٰنِ عَصِیًّا ۟
19.44. என் தந்தையே! ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு அவனை வணங்காதீர்கள். நிச்சயமாக ஷைத்தான் அளவிலாக் கருணையாளனின் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவனாக இருக்கின்றான். ஆதமுக்கு சிரம் பணியுமாறு அவன் அவனுக்கு ஏவிய போது அவன் சிரம்பணியவில்லை.
阿拉伯语经注:
یٰۤاَبَتِ اِنِّیْۤ اَخَافُ اَنْ یَّمَسَّكَ عَذَابٌ مِّنَ الرَّحْمٰنِ فَتَكُوْنَ لِلشَّیْطٰنِ وَلِیًّا ۟
19.45. என் தந்தையே! நிச்சயமாக நீங்கள் நிராகரித்த நிலையிலேயே மரணித்து விட்டால் அளவிலாக் கருணையாளனிடமிருந்து ஏதேனும் வேதனை உங்களைத் தாக்கிவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். அப்போது நீங்கள் வேதனையில் ஷைத்தானுடன் நட்பு வைத்ததால் அவனுக்கு தோழனாகி விடுவீர்கள்.
阿拉伯语经注:
قَالَ اَرَاغِبٌ اَنْتَ عَنْ اٰلِهَتِیْ یٰۤاِبْرٰهِیْمُ ۚ— لَىِٕنْ لَّمْ تَنْتَهِ لَاَرْجُمَنَّكَ وَاهْجُرْنِیْ مَلِیًّا ۟
19.46. ஆஸர் தம் மகன் இப்ராஹீமிடம் கூறினார்: “இப்ராஹீமே! நான் வணங்கும் என்னுடைய சிலைகளை நீ புறக்கணிக்கிறாயா? நீ என் சிலைகளைத் திட்டுவதை நிறுத்தவில்லையென்றால் நான் உன்னைக் கல்லால் அடிப்பேன். நீண்ட காலத்திற்கு என்னை விட்டுப் பிரிந்துவிடு. என்னுடன் பேசாதே. என்னுடன் சேரவும் வேண்டாம்”
阿拉伯语经注:
قَالَ سَلٰمٌ عَلَیْكَ ۚ— سَاَسْتَغْفِرُ لَكَ رَبِّیْ ؕ— اِنَّهٗ كَانَ بِیْ حَفِیًّا ۟
19.47. இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறினார்: “என்னிடமிருந்து உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும். நீங்கள் வெறுக்கக்கூடிய எதுவும் என் மூலம் உங்களுக்கு ஏற்படாது. நான் உங்களுக்காக என் இறைவனிடம் மன்னிப்பையும், நேர்வழியையும் வேண்டுவேன். நிச்சயமாக அவன் என்மீது மிகுந்த பரிவுடையவனாக இருக்கின்றான்.
阿拉伯语经注:
وَاَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَاَدْعُوْا رَبِّیْ ۖؗ— عَسٰۤی اَلَّاۤ اَكُوْنَ بِدُعَآءِ رَبِّیْ شَقِیًّا ۟
19.48. நான் உங்களையும் அல்லாஹ்வைவிடுத்து நீங்கள் வணங்கும் தெய்வங்களையும் விட்டு பிரிந்துவிடுகிறேன். நான் என் இறைவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்கின்றேன். அவனுக்கு இணையாக எதையும் ஆக்க மாட்டேன். அப்பொழுதுதான் நான் பிரார்த்தித்தால் அவன் மறுக்க மாட்டான். அவ்வாறு மறுத்தால் அவனைப் பிரார்த்திப்பதில் நான் துர்பாக்கியசாலியாகி விடுவேன்.
阿拉伯语经注:
فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا یَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۙ— وَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ— وَكُلًّا جَعَلْنَا نَبِیًّا ۟
19.49. அவர் அந்த மக்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கும் தெய்வங்களையும் விட்டுவிட்ட போது குடும்பத்தை இழந்ததற்கு பகரமாக அவரது மகன் இஸ்ஹாக்கையும் பேரன் யஃகூபையும் நாம் அவருக்கு வழங்கினோம். அவர்கள் இருவரையும் நாம் நபியாக ஆக்கினோம்.
阿拉伯语经注:
وَوَهَبْنَا لَهُمْ مِّنْ رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِیًّا ۟۠
19.50. நம் அருளால் அவர்களுக்கு தூதுத்துவத்துடன் ஏராளமான நன்மைகளையும் வழங்கினோம். அடியார்களின் நாவுகளில் அவர்களைப் பற்றிய தொடரான நற்புகழையும் ஏற்படுத்தினோம்.
阿拉伯语经注:
وَاذْكُرْ فِی الْكِتٰبِ مُوْسٰۤی ؗ— اِنَّهٗ كَانَ مُخْلَصًا وَّكَانَ رَسُوْلًا نَّبِیًّا ۟
19.51. -தூதரே!- உமக்கு இறக்கப்பட்ட குர்ஆனில் மூஸாவின் செய்தியை குறித்து நினைவுகூர்வீராக. நிச்சயமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதராகவும் நபியாகவும் இருந்தார்.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• لما كان اعتزال إبراهيم لقومه مشتركًا فيه مع سارة، ناسب أن يذكر هبتهما المشتركة وحفيدهما، ثم جاء ذكر إسماعيل مستقلًّا مع أن الله وهبه إياه قبل إسحاق.
1. இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மனைவி ஸாராவுடன் சேர்ந்து தனது சமுதாயத்தைப் பிரிந்ததனால் அவ்விருவருக்கும் பொதுவாக வழங்கப்பட்ட அன்பளிப்பையும் அவர்களது பேரப் பிள்ளையையும் குறிப்பிடுவதே பொருத்தமாகும். அதனால் தான் இஸ்ஹாக் (அலை) அவர்களுக்கு முன் இஸ்மாஈல் (அலை) அவர்களை நிச்சயமாக அல்லாஹ் அன்பளிப்பாக வழங்கியிருந்தும் அவரைப் பற்றி தனியாக பின்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

• التأدب واللطف والرفق في محاورة الوالدين واختيار أفضل الأسماء في مناداتهما.
2. பெற்றோருடன் உரையாடும் போது ஒழுக்கம், மிருதுவான தன்மை, மென்மை ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். அவர்களை அழைக்க அழகிய பெயர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

• المعاصي تمنع العبد من رحمة الله، وتغلق عليه أبوابها، كما أن الطاعة أكبر الأسباب لنيل رحمته.
3. பாவங்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் அடியானைத் தடுக்கின்றன. அதன் வாயில்களை அவனுக்கு அடைத்து விடுகின்றன. அதே வேளை நிச்சயமாக அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது அவனுடைய அருளைப் பெறுவதற்கான மிகப்பெரிய காரணியாக இருக்கின்றது.

• وعد الله كل محسن أن ينشر له ثناءً صادقًا بحسب إحسانه، وإبراهيم عليه السلام وذريته من أئمة المحسنين.
4. நன்மைசெய்யும் ஒவ்வொருவருக்கும் அவருடைய உபகாரத்திற்கேற்ப நற்பெயரை ஏற்படுத்துவதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான். இப்ராஹீம் (அலை) அவர்களும் அவரது சந்ததியினரும் உபகாரிகளின் தலைவர்களாவர்.

وَنَادَیْنٰهُ مِنْ جَانِبِ الطُّوْرِ الْاَیْمَنِ وَقَرَّبْنٰهُ نَجِیًّا ۟
19.52. மூஸா (அலை) அவர்கள் இருந்த இடத்திற்கு வலது புறத்தில் இருந்த மலைப் பகுதியிலிருந்து நாம் அவரை அழைத்தோம். அவருடன் இரகசியமாகப் பேசுவதற்காக அவரை நெருக்கமாக்கினோம். அங்கு அல்லாஹ் தன் பேச்சை மூசாவுக்கு செவியுறச் செய்தான்.
阿拉伯语经注:
وَوَهَبْنَا لَهٗ مِنْ رَّحْمَتِنَاۤ اَخَاهُ هٰرُوْنَ نَبِیًّا ۟
19.53. நாம் -அவர் மீது கொண்ட நம் கருணையினாலும் அருளினாலும்-, அவர் தன் இறைவனிடம் வேண்டிக்கொண்டதற்கேற்ப, அவரது சகோதரர் ஹாரூனையும் நபியாக ஆக்கினோம்.
阿拉伯语经注:
وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِسْمٰعِیْلَ ؗ— اِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِیًّا ۟ۚ
19.54. -தூதரே!- உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனில் இஸ்மாயீலின் சம்பவத்தையும் நினைவுகூர்வீராக. நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார். தாம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றினார். அவர் தூதராகவும் நபியாகவும் இருந்தார்.
阿拉伯语经注:
وَكَانَ یَاْمُرُ اَهْلَهٗ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ ۪— وَكَانَ عِنْدَ رَبِّهٖ مَرْضِیًّا ۟
19.55. அவர் தம் குடும்பத்தினரை தொழுகையை நிறைவேற்றும்படியும், ஸகாத்தை வழங்கும்படியும் ஏவக்கூடியவராக இருந்தார். அவர் தம் இறைவனிடத்தில் பிரியத்திற்குரியவராக இருந்தார்.
阿拉伯语经注:
وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِدْرِیْسَ ؗ— اِنَّهٗ كَانَ صِدِّیْقًا نَّبِیًّا ۟ۗۙ
19.56. -தூதரே!- உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனில் இத்ரீஸ் அவர்களின் தகவலையும் நினைவுகூர்வீராக. நிச்சயமாக அவர் உண்மையாளராகவும், தம் இறைவனின் சான்றுகளை உண்மைப்படுத்தக்கூடியவராகவும் இருந்தார். அவர் அல்லாஹ்வின் நபிமார்களில் ஒருவராகவும் இருந்தார்.
阿拉伯语经注:
وَّرَفَعْنٰهُ مَكَانًا عَلِیًّا ۟
19.57. நாம் அவருக்கு தூதுத்துவத்தை வழங்கி அவரது புகழை உயர்த்தினோம். எனவே அவர் உயர்ந்த அந்தஸ்துடையவராக இருந்தார்.
阿拉伯语经注:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ مِنْ ذُرِّیَّةِ اٰدَمَ ۗ— وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ ؗ— وَّمِنْ ذُرِّیَّةِ اِبْرٰهِیْمَ وَاِسْرَآءِیْلَ ؗ— وَمِمَّنْ هَدَیْنَا وَاجْتَبَیْنَا ؕ— اِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِیًّا ۟
19.58. ஸகரிய்யா முதல் இத்ரீஸ் வரை இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தூதர்கள் அனைவருக்கும் தூதுப்பணியை அளித்து அல்லாஹ் அவர்கள் மீது அருள்புரிந்துள்ளான். அவர்கள் ஆதமின் சந்ததியிலும், நூஹுடன் நாம் கப்பலில் சுமந்து சென்றவர்களிலும், இப்ராஹீம் மற்றும் யஅகூபின் வழித்தோன்றல்களிலும், நாம் இஸ்லாத்தின்பால் நேர்வழி அளித்தவர்களிலும் உள்ளவர்களாவர். நாம் அவர்களைத் தேர்ந்தெடுத்து தூதர்களாக ஆக்கினோம். அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் ஓதப்படுவதைச் செவியுற்றால் அவன் மீதுள்ள பயத்தால் அழுதவர்களாக, அவனுக்குச் சிரம்பணிபவர்களாக இருந்தார்கள்.
阿拉伯语经注:
فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ فَسَوْفَ یَلْقَوْنَ غَیًّا ۟ۙ
19.59. தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தூதர்களுக்குப் பிறகு தீய வழிகேடர்கள் வந்தார்கள். அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள். அதனை நிறைவேற்ற வேண்டிய முறைப்படி நிறைவேற்றவில்லை. விபச்சாரம் போன்ற தங்களின் மனம் ஆசை வைக்கும் பாவங்களில் ஈடுபட்டார்கள். விரைவில் அவர்கள் நரகத்தில் தீங்கினையும், ஏமாற்றத்தையும் சந்திப்பார்கள்.
阿拉伯语经注:
اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَاُولٰٓىِٕكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ وَلَا یُظْلَمُوْنَ شَیْـًٔا ۟ۙ
19.60. ஆயினும் தாம் செய்த தவறுகளுக்கும், பாவங்களுக்கும் மன்னிப்புக் கோரி அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்டவர்களைத் தவிர. இந்த பண்புகளைப் பெற்றவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். அவர்கள் செய்த செயல்களின் நன்மைகள் எதுவும் குறைக்கப்படாது. அது குறைவாக இருந்தாலும் சரியே.
阿拉伯语经注:
جَنّٰتِ عَدْنِ ١لَّتِیْ وَعَدَ الرَّحْمٰنُ عِبَادَهٗ بِالْغَیْبِ ؕ— اِنَّهٗ كَانَ وَعْدُهٗ مَاْتِیًّا ۟
19.61. அளவிலாக் கருணையாளன் தன் நல்லடியார்களுக்கு அவர்களை நுழைவிப்பதாக, மறைவாக இருக்கும் போது வாக்களித்த, நிலையான, தங்குமிடமான சுவனங்களில் அவர்கள் நுழைவார்கள். அவர்கள் அவற்றைக் காணாமலே நம்பிக்கை கொண்டார்கள். சுவனத்தைத் தருவான் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி -மறைவாக இருந்தாலும்- அது சந்தேகம் இல்லாமல் நிறைவேறியே தீரும்.
阿拉伯语经注:
لَا یَسْمَعُوْنَ فِیْهَا لَغْوًا اِلَّا سَلٰمًا ؕ— وَلَهُمْ رِزْقُهُمْ فِیْهَا بُكْرَةً وَّعَشِیًّا ۟
19.62. அவர்கள் அங்கு மோசமான பேச்சையோ, வீணான வார்த்தையையோ செவியுற மாட்டார்கள். மாறாக ஒருவருக்கொருவர் சலாம் கூறுவதையும் வானவர்கள் அவர்களுக்கு கூறும் சலாமையும்தான் செவியுறுவார்கள். அங்கு அவர்களுக்கு காலையிலும், மாலையிலும் அவர்கள் விரும்புகின்ற உணவு கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
阿拉伯语经注:
تِلْكَ الْجَنَّةُ الَّتِیْ نُوْرِثُ مِنْ عِبَادِنَا مَنْ كَانَ تَقِیًّا ۟
19.63. இப்படிப்பட்ட தன்மைகளையுடைய சுவனத்தைத்தான் நம் கட்டளைகளைச் செயல்படுத்தி, நாம் தடுத்துள்ளவற்றிலிருந்து தவிர்ந்திருக்கக்கூடிய நம் அடியார்களுக்கு நாம் சொந்தமாக்குகின்றோம்.
阿拉伯语经注:
وَمَا نَتَنَزَّلُ اِلَّا بِاَمْرِ رَبِّكَ ۚ— لَهٗ مَا بَیْنَ اَیْدِیْنَا وَمَا خَلْفَنَا وَمَا بَیْنَ ذٰلِكَ ۚ— وَمَا كَانَ رَبُّكَ نَسِیًّا ۟ۚ
19.64. -ஜிப்ரீலே!- முஹம்மதிடம் நீர் கூறும்: “நிச்சயமாக வானவர்கள் தாங்களாவே சுயமாக இறங்குவதில்லை. அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படியே இறங்குகிறார்கள். நாங்கள் முன்னோக்கும் மறுமையின் விஷயமும், பின்னால் விட்டுவிடும் உலகத்தின் விஷயமும், உலகம் மற்றும் மறுமைக்கு மத்தியில் இருப்பவையும் அல்லாஹ்வுக்கே உரியன. -தூதரே!- உம் இறைவன் எதையும் மறந்துவிடுபவன் அல்ல.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• حاجة الداعية دومًا إلى أنصار يساعدونه في دعوته.
1. ஓர் அழைப்பாளர் தன் அழைப்புப் பணியில் எப்போதும் தனக்கு உதவிசெய்யக்கூடிய உதவியாளர்களின்பால் தேவையுடையவராக இருக்கின்றார்.

• إثبات صفة الكلام لله تعالى.
2. அல்லாஹ்வுக்கு பேச்சு எனும் பண்பு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

• صدق الوعد محمود، وهو من خلق النبيين والمرسلين، وضده وهو الخُلْف مذموم.
3. வாக்குறுதியில் உண்மையாக நடந்துகொள்வது புகழுக்குரியதாகும். இது இறைத்தூதர்கள், நபிமார்களின் பண்பாகும். அதற்கு மாற்றமாக வாக்குறுதிக்கு மாறுசெய்வது இகழுக்குரியதாகும்.

• إن الملائكة رسل الله بالوحي لا تنزل على أحد من الأنبياء والرسل من البشر إلا بأمر الله.
4. நிச்சயமாக வானவர்கள் வஹியைக் கொண்டுவரும் அல்லாஹ்வின் தூதர்களாவர். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படியே அன்றி மனிதர்களான தூதர், நபிமார்களில் எவர் மீதும் இறங்குவதில்லை.

رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِعِبَادَتِهٖ ؕ— هَلْ تَعْلَمُ لَهٗ سَمِیًّا ۟۠
19.65. வானங்களையும், பூமியையும், அவையிரண்டிற்கு இடையிலுள்ளவற்றையும் படைத்தவனும், அவற்றின் அதிபதியும், அவற்றை நிர்வகிப்பவனுமாகிய அந்த இறைவனை மட்டுமே வணங்குவீராக. அவனே வணக்கத்திற்குத் தகுதியானவன். அவனை வணங்குவதில் உறுதியாக நிலைத்திருப்பீராக. வணக்கத்திலே அவனுக்கு கூட்டு சேரக்கூடிய ஒப்பான, நிகரானவர் யாரும் இல்லை.
阿拉伯语经注:
وَیَقُوْلُ الْاِنْسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوْفَ اُخْرَجُ حَیًّا ۟
19.66. மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் நிராகரிப்பாளன் பரிகாசமாகக் கூறுகிறான்: “நான் இறந்துவிட்டால் என் கப்ரிலிருந்து மீண்டும் இரண்டாவது தடவையாக உயிர்கொடுத்து எழுப்பப்படுவேனா? நிச்சயமாக இது சாத்தியமற்றது.”
阿拉伯语经注:
اَوَلَا یَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ یَكُ شَیْـًٔا ۟
19.67. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இவன், முன்னர் அவன் எதுவாகவும் இல்லாமல் இருந்த நிலையில் நாம் அவனைப் படைத்தோம் என்பதை நினைத்துப் பார்க்கவில்லையா? இரண்டாவதாகப் படைக்க முடியும் என்பதற்கு முதலில் படைத்ததை ஆதாரமாகக் கொள்ளமாட்டானா. நிச்சயமாக இரண்டாவதாகப் படைப்பது மிகவும் எளிதானது.
阿拉伯语经注:
فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّیٰطِیْنَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِیًّا ۟ۚ
19.68. -தூதரே!- உம் இறைவனின் மீது ஆணையாக, நிச்சயமாக அவர்களை கப்ருகளிலிருந்து, அவர்களை வழிகெடுத்த அவர்களின் ஷைத்தான்களோடு அவர்களை மஹ்ஸர் மைதானத்தில் வெளியேற்றி, பின்பு அவர்களை முழங்காளிட வைத்து இழிவுபடுத்தி நரகத்தின் வாயில்களை நோக்கி இழுத்துச் சென்றே தீருவோம்.
阿拉伯语经注:
ثُمَّ لَنَنْزِعَنَّ مِنْ كُلِّ شِیْعَةٍ اَیُّهُمْ اَشَدُّ عَلَی الرَّحْمٰنِ عِتِیًّا ۟ۚ
19.69. பின்னர் வழிகெட்ட ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் பாவம் புரிவதில் தீவிரமாக இருந்த அவர்களது தலைவர்களை கடுமையாக இழுத்தெடுப்போம்.
阿拉伯语经注:
ثُمَّ لَنَحْنُ اَعْلَمُ بِالَّذِیْنَ هُمْ اَوْلٰی بِهَا صِلِیًّا ۟
19.70. பின்பு நரகத்தில் நுழைந்து அதன் வெப்பத்தையும், துன்பத்தையும் அனுபவிப்பதற்குத் தகுதியானவர்களை நாம் நன்கறிவோம்.
阿拉伯语经注:
وَاِنْ مِّنْكُمْ اِلَّا وَارِدُهَا ۚ— كَانَ عَلٰی رَبِّكَ حَتْمًا مَّقْضِیًّا ۟ۚ
19.71. -மனிதர்களே!- உங்களிலுள்ள ஒவ்வொருவரும் நரகத்தின் மீதுள்ள அந்த பாதையை கடந்தே தீர வேண்டும். அவ்வாறு கடப்பது அல்லாஹ் ஏற்படுத்திய விதியாகும். அவனுடைய விதியை யாராலும் மாற்ற முடியாது.
阿拉伯语经注:
ثُمَّ نُنَجِّی الَّذِیْنَ اتَّقَوْا وَّنَذَرُ الظّٰلِمِیْنَ فِیْهَا جِثِیًّا ۟
19.72. இவ்வாறு பாதையை கடந்த பிறகு தம் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களை நாம் பாதுகாத்திடுவோம். அநியாயக்காரர்களை மண்டியிட்டவர்களாக அப்படியே விட்டு விடுவோம். அவர்களால் அதிலிருந்து தப்ப முடியாது.
阿拉伯语经注:
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلَّذِیْنَ اٰمَنُوْۤا ۙ— اَیُّ الْفَرِیْقَیْنِ خَیْرٌ مَّقَامًا وَّاَحْسَنُ نَدِیًّا ۟
19.73. நம் தூதர் மீது இறக்கப்பட்ட தெளிவான நம் வசனங்கள் மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டால் நிராகரிப்பாளர்கள் நம்பிக்கையாளர்களைப் பார்த்துக் கேட்கிறார்கள்: “இரு பிரிவினரில் யார் நல்ல வசிப்பிடத்தையும், தங்குமிடத்தையும் பெற்றுள்ளார்கள்? யாருடைய சபையும், கூட்டமும் சிறந்தது? எங்களின் கூட்டத்தினரா? அல்லது உங்களின் கூட்டத்தினரா?”
阿拉伯语经注:
وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَحْسَنُ اَثَاثًا وَّرِﺋْﻴًﺎ ۟
19.74. தம்மிடமுள்ள சடரீதியான முன்னேற்றத்தைக் கொண்டு பெருமையடிக்கும் இந்த நிராகரிப்பாளர்களுக்கு முன்னால் நாம் அழித்த எத்தனையோ சமூகங்கள் உள்ளன! அவர்கள் இவர்களைவிட அதிக செல்வமுடையவர்களாவும் பெறுமதியான ஆடை மற்றும் உடம்பு ஆகியவற்றால் அழகிய தோற்றமுடையவர்களாகவும் இருந்தார்கள்.
阿拉伯语经注:
قُلْ مَنْ كَانَ فِی الضَّلٰلَةِ فَلْیَمْدُدْ لَهُ الرَّحْمٰنُ مَدًّا ۚ۬— حَتّٰۤی اِذَا رَاَوْا مَا یُوْعَدُوْنَ اِمَّا الْعَذَابَ وَاِمَّا السَّاعَةَ ؕ۬— فَسَیَعْلَمُوْنَ مَنْ هُوَ شَرٌّ مَّكَانًا وَّاَضْعَفُ جُنْدًا ۟
19.75. -தூதரே!- நீர் கூறுவீராக: “யார் வழிகேட்டில் தடுமாறித் திரிகிறாரோ அவர் மென்மேலும் வழிகெட வேண்டுமென்பதற்காக அளவிலாக் கருணையாளன் அவருக்கு அவகாசம் வழங்குவான். அவர்கள் இவ்வுலகில் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட விரைவான வேதனையையோ மறுமை நாளில் தாமதமான வேதனையையோ கண்ணால் காணும் போது தீய வசிப்பிடத்தையும் குறைவான உதவியாளர்களையும் பெற்றவர்கள் நம்பிக்கையாளர்களின் கூட்டமா? அல்லது அவர்களின் கூட்டமா? என்பதை அறிந்துகொள்வார்கள்.
阿拉伯语经注:
وَیَزِیْدُ اللّٰهُ الَّذِیْنَ اهْتَدَوْا هُدًی ؕ— وَالْبٰقِیٰتُ الصّٰلِحٰتُ خَیْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَیْرٌ مَّرَدًّا ۟
19.76. அவர்கள் மென்மேலும் வழிகெட்டுச் செல்ல வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு அவன் அவகாசம் அளிப்பதுபோல நேர்வழிபெற்றவர்களின் நம்பிக்கையையும், கீழ்ப்படிதலையும் அவன் அதிகரிக்கச் செய்கிறான். -தூதரே!- நிரந்தர சந்தோசத்தின்பால் இட்டுச் செல்லும் நற்செயல்களே உம் இறைவனிடத்தில் பயனுள்ள கூலியையும், சிறந்த முடிவையும் பெற்றுத்தரக்கூடியதாகும்.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• على المؤمنين الاشتغال بما أمروا به والاستمرار عليه في حدود المستطاع.
1. நம்பிக்கையாளர்கள் தங்களுக்கு கட்டளையிடப்பட்ட செயல்களில் ஈடுபட வேண்டும். தங்களால் இயன்ற அளவு அதில் நிலைத்திருக்க வேண்டும்.

• وُرُود جميع الخلائق على النار - أي: المرور على الصراط، لا الدخول في النار - أمر واقع لا محالة.
2. படைப்புகள் அனைத்தும் நரகத்தின் மேலுள்ள(ஸிராத் எனும்) பாதையைக் கடக்க வேண்டுமென்பது -அதாவது அதன் மேல் கடப்பது மாறாக நரகில் நுழைவதல்ல-சந்தேகமில்லாமல் நடந்தே தீரும்.

• أن معايير الدين ومفاهيمه الصحيحة تختلف عن تصورات الجهلة والعوام.
3. நிச்சயமாக மார்க்கத்தின் அளவுகோல்கள், அதன் சரியான கருத்தாக்கங்கள் என்பன அறிவீனர்களினதும், பொதுமக்களினதும் சிந்தனைகளுக்கு மாற்றமானவையாகும்.

• من كان غارقًا في الضلالة متأصلًا في الكفر يتركه الله في طغيان جهله وكفره، حتى يطول اغتراره، فيكون ذلك أشد لعقابه.
4. யார் வழிகேட்டில் மூழ்கி நிராகரிப்பில் புரள்கிறானோ அவனது அறியாமை மற்றும் நிராகரிப்பு ஆகிய எல்லை மீறலில் அல்லாஹ் அவனை விட்டுவிடுகிறான். அவனது ஏமாற்றம் நீடித்து அவனது தண்டனை கடினமாவதற்காக அவ்வாறு செய்கிறான்.

• يثبّت الله المؤمنين على الهدى، ويزيدهم توفيقًا ونصرة، وينزل من الآيات ما يكون سببًا لزيادة اليقين مجازاةً لهم.
5. அல்லாஹ் விசுவாசிகளை நேர்வழியின் மீது உறுதிப்படுத்துகிறான். அவர்களுக்கு மென்மேலும் உதவி செய்கிறான். அவர்களுக்கான கூலியாக உறுதியை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கக்கூடிய அத்தாட்சிகளை அவன் இறக்குகின்றான்.

اَفَرَءَیْتَ الَّذِیْ كَفَرَ بِاٰیٰتِنَا وَقَالَ لَاُوْتَیَنَّ مَالًا وَّوَلَدًا ۟ؕ
19.77. -தூதரே!- நம்முடைய சான்றுகளையும் மறுத்து, எச்சரிக்கைகளையும் நிராகரித்தவனை நீர் பார்த்தீரா? அவன் கூறுகிறான்: “நான் மரணித்து, மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டாலும் ஏராளமான செல்வங்களும், பிள்ளைகளும் வழங்கப்படுவேன்.”
阿拉伯语经注:
اَطَّلَعَ الْغَیْبَ اَمِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۟ۙ
19.78. அவன் மறைவானவற்றை அறிந்து, அவன் கூறுவதை ஆதாரப்பூர்வமாகத்தான் கூறுகிறானா? அல்லது திடமாக தன்னை சுவனத்தில் நுழைத்துவிட வேண்டும், தனக்கு ஏராளமான செல்வங்களையும், பிள்ளைகளையும் வழங்க வேண்டும் என்று தன் இறைவனிடம் ஏதேனும் வாக்குறுதி பெற்றுள்ளானா?
阿拉伯语经注:
كَلَّا ؕ— سَنَكْتُبُ مَا یَقُوْلُ وَنَمُدُّ لَهٗ مِنَ الْعَذَابِ مَدًّا ۟ۙ
19.79. அவன் நினைப்பது போலல்ல விடயம். அவன் கூறுவதையும் செய்வதையும் நாம் எழுதிக் கொண்டிருக்கிறோம். அவன் பொய் கூறுவதால் அவனுக்கு வேதனைக்கு மேல் வேதனையை அதிகப்படுத்துவோம்.
阿拉伯语经注:
وَّنَرِثُهٗ مَا یَقُوْلُ وَیَاْتِیْنَا فَرْدًا ۟
19.80. அவனை அழித்த பிறகு அவன் விட்டுச்சென்ற செல்வங்களுக்கும், பிள்ளைகளுக்கும் நாமே உரிமையாளர்களாவோம். அவன் அனுபவித்துக் கொண்டிருந்த பணமும், பதவியும் பறிக்கப்பட்டு, மறுமை நாளில் நம்மிடம் தனியாகவே வருவான்.
阿拉伯语经注:
وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لِّیَكُوْنُوْا لَهُمْ عِزًّا ۟ۙ
19.81. தங்களுக்கு உதவுவார்கள் என்று இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வைவிடுத்து வேறு தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
阿拉伯语经注:
كَلَّا ؕ— سَیَكْفُرُوْنَ بِعِبَادَتِهِمْ وَیَكُوْنُوْنَ عَلَیْهِمْ ضِدًّا ۟۠
19.82. அவர்கள் நினைப்பது போலல்ல விடயம். அல்லாஹ்வைவிடுத்து அவர்கள் வணங்கும் தெய்வங்கள், மறுமை நாளில் இணைவைப்பாளர்கள் தங்களை வணங்கியதையே மறுத்துவிடும். அவர்களை விட்டு நீங்கி அவர்களுக்கு எதிரிகளாகிவிடும்.
阿拉伯语经注:
اَلَمْ تَرَ اَنَّاۤ اَرْسَلْنَا الشَّیٰطِیْنَ عَلَی الْكٰفِرِیْنَ تَؤُزُّهُمْ اَزًّا ۟ۙ
19.83. -தூதரே!- நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக நாம் ஷைத்தான்களை அனுப்பி நிராகரிப்பாளர்களின் மீது அவர்களை ஆதிக்கம் கொள்ளச் செய்கிறோம். அவர்கள் இந்த நிராகரிப்பாளர்களை பாவங்கள் செய்வதன் பக்கமும் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் தடுப்பதன் பக்கமும் நன்கு தூண்டுகிறார்கள்.
阿拉伯语经注:
فَلَا تَعْجَلْ عَلَیْهِمْ ؕ— اِنَّمَا نَعُدُّ لَهُمْ عَدًّا ۟ۚ
19.84. -தூதரே!- அல்லாஹ் அவர்களை விரைவாக அழிக்க வேண்டுமென அவனிடம் அவசரமாக கோரிக்கை வைக்க வேண்டாம். நாம் அவர்களின் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு அளிக்கப்பட்ட அவகாச நேரம் முடிந்தவுடன் நாம் அவர்களுக்குத் தகுந்த விதத்தில் அவர்களை தண்டிப்போம்.
阿拉伯语经注:
یَوْمَ نَحْشُرُ الْمُتَّقِیْنَ اِلَی الرَّحْمٰنِ وَفْدًا ۟ۙ
19.85. -தூதரே!- அல்லாஹ்வின் கட்டளைகளை நடைமுறைப்படுத்தி, விலக்கல்களைத் தவிர்ந்து அவனை அஞ்சியவர்களை கௌரவமாகவும், கண்ணியமாகவும் அவர்களின் இறைவனிடம் குழுவாக நாம் ஒன்று திரட்டும் மறுமை நாளை நினைவுகூர்வீராக.
阿拉伯语经注:
وَّنَسُوْقُ الْمُجْرِمِیْنَ اِلٰی جَهَنَّمَ وِرْدًا ۟ۘ
19.86. நிராகரிப்பாளர்களை தாகமுள்ளவர்களாக நரகத்தை நோக்கி இழுத்துச் செல்வோம்.
阿拉伯语经注:
لَا یَمْلِكُوْنَ الشَّفَاعَةَ اِلَّا مَنِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۟ۘ
19.87. இந்த நிராகரிப்பாளர்கள் தங்களில் சிலருக்குப் பரிந்துரை செய்யும் அதிகாரம் பெற்றிருக்க மாட்டார்கள். ஆயினும் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்டு இவ்வுலகில் அல்லாஹ்விடம் ஒப்பந்தம் பெற்றவர்களைத் தவிர.
阿拉伯语经注:
وَقَالُوا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا ۟ؕ
19.88. அல்லாஹ் தனக்கு ஒரு மகனை எடுத்துக் கொண்டான் என்று யூதர்களும் கிருஸ்தவர்களும் சில இணைவைப்பாளர்களும் கூறுகிறார்கள்.
阿拉伯语经注:
لَقَدْ جِئْتُمْ شَیْـًٔا اِدًّا ۟ۙ
19.89. -இவ்வாறு கூறுபவர்களே!- நீங்கள் பெரும் ஒரு தவறை இழைத்துவிட்டீர்கள்.
阿拉伯语经注:
تَكَادُ السَّمٰوٰتُ یَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنْشَقُّ الْاَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا ۟ۙ
19.90. இந்த தீய வார்த்தையினால் வானங்கள் வெடித்து விடலாம்; பூமி துண்டு துண்டாகி விடலாம்; மலைகள் இடிந்து விழலாம்.
阿拉伯语经注:
اَنْ دَعَوْا لِلرَّحْمٰنِ وَلَدًا ۟ۚ
19.91. இவையனைத்தும் அவர்கள் அளவிலாக் கருணையாளனுக்கு ஒரு மகனை இணைத்துக்கூறினார்கள் என்பதனால்தான். இவ்வாறு ஏற்படுத்திக் கொள்வதை விட்டும் அவன் மிக மிக உயர்ந்தவன்.
阿拉伯语经注:
وَمَا یَنْۢبَغِیْ لِلرَّحْمٰنِ اَنْ یَّتَّخِذَ وَلَدًا ۟ؕ
19.92. மகனை ஏற்படுத்திக் கொள்வது அளவிலாக் கருணையாளனுக்கு உகந்த விஷயமல்ல. எனெனில் அவன் அதனை விட்டும் பரிசுத்தமானவன்.
阿拉伯语经注:
اِنْ كُلُّ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ اِلَّاۤ اٰتِی الرَّحْمٰنِ عَبْدًا ۟ؕ
19.93. நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியில் உள்ள வானவர்கள், மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவரும் மறுமை நாளில் தங்கள் இறைவனிடம் பணிந்தவர்களாக வந்தே ஆக வேண்டும்.
阿拉伯语经注:
لَقَدْ اَحْصٰىهُمْ وَعَدَّهُمْ عَدًّا ۟ؕ
19.94. அவன் அவர்கள் அனைவரையும் அறிவால் சூழ்ந்துள்ளான். அவர்களைக் கணக்கிட்டு வைத்துள்ளான். அவர்களில் எதுவும் அவனை விட்டு மறைவாக முடியாது.
阿拉伯语经注:
وَكُلُّهُمْ اٰتِیْهِ یَوْمَ الْقِیٰمَةِ فَرْدًا ۟
19.95. எந்த உதவியாளனும், சொத்துக்களும் இன்றி அவர்களில் ஒவ்வொருவரும் மறுமை நாளில் அவனிடம் தனியாகவே வருவார்கள்.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• تدل الآيات على سخف الكافر وسَذَاجة تفكيره، وتَمَنِّيه الأماني المعسولة، وهو سيجد نقيضها تمامًا في عالم الآخرة.
1. நிராகரிப்பாளர்களின் அறியாமையையும், மேலோட்டமான சிந்தனையையும் அவன் வைத்திருக்கும் நப்பாசைகளையும் குறித்த வசனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. மறுவுலகில் அதற்கு முற்றுமுழுதாக மாற்றமானதையே கண்டுகொள்வான்.

• سلَّط الله الشياطين على الكافرين بالإغواء والإغراء بالشر، والإخراج من الطاعة إلى المعصية.
2. அல்லாஹ் ஷைத்தான்களை நிராகரிப்பாளர்கள் மீது சாட்டியுள்ளான். அவர்கள் இவர்களை வழிகெடுக்கிறார்கள். தீங்கு செய்யத் தூண்டுகிறார்கள். (இறைவனை) வழிபாடுவதை விட்டும் மாறுசெய்வதன்பால் கொண்டுசெல்கிறார்கள்.

• أهل الفضل والعلم والصلاح يشفعون بإذن الله يوم القيامة.
3. சிறப்பிற்குரியவர்களும், அறிஞர்களும், நல்லவர்களும் அல்லாஹ்வின் அனுமதிகொண்டு மறுமை நாளில் பரிந்துரை செய்வார்கள்.

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَیَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا ۟
19.96. நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுக்கு விருப்பமான நற்செயல்களில் ஈடுபட்டவர்களை தானும் நேசித்து, தனது அடியார்களுக்கும் அவர்களை நேசிக்கச் செய்து அவர்கள் மீது அன்பை ஏற்படுத்துவான்.
阿拉伯语经注:
فَاِنَّمَا یَسَّرْنٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِیْنَ وَتُنْذِرَ بِهٖ قَوْمًا لُّدًّا ۟
19.97. -தூதரே!- நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை உமது மொழியில் இறக்கி இலகுபடுத்தியுள்ளோம். அது, என் கட்டளைகளைச் செயல்படுத்தி நான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி என்னை அஞ்சக்கூடியவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவதற்காகவும் சத்தியத்திற்குக் கட்டுப்படாமல் கர்வம் கொள்ளுவதிலும் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய கடும் பகையான கூட்டத்தை நீர் எச்சரிப்பதற்காகவும்தான்.
阿拉伯语经注:
وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ ؕ— هَلْ تُحِسُّ مِنْهُمْ مِّنْ اَحَدٍ اَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًا ۟۠
19.98. உம் சமூகத்திற்கு முன்னர் நாம் அழித்த சமூகங்கள் எவ்வளவோ உள்ளன. இன்று அவர்களில் யாரையாவது நீர் உணர்கிறீரா? அல்லது அவர்களின் ஏதேனும் சத்தத்தையேனும் செவியுறுகிறீரா? அல்லாஹ் அனுமதிக்கும் போது அவர்களுக்கு நேர்ந்தது மற்றவர்களுக்கும் நேரும்.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• ليس إنزال القرآن العظيم لإتعاب النفس في العبادة، وإذاقتها المشقة الفادحة، وإنما هو كتاب تذكرة ينتفع به الذين يخشون ربهم.
1. மகத்தான குர்ஆன் இறக்கப்பட்டதன் நோக்கம் மனதை வணக்க வழிபாட்டில் களைப்படையச் செய்வதற்காகவோ எல்லை மீறிய சிரமத்தை ஏற்படுத்தவோ அல்ல. நிச்சயமாக அது அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்கள் பயனடைய நினைவூட்டும் வேதம் மாத்திரமே.

• قَرَن الله بين الخلق والأمر، فكما أن الخلق لا يخرج عن الحكمة؛ فكذلك لا يأمر ولا ينهى إلا بما هو عدل وحكمة.
2. அல்லாஹ் படைப்பதையும், கட்டளையிடுவதையும் ஒன்றுசேர்த்துக் கூறியுள்ளான். எவ்வாறு படைப்பு நோக்கமின்றி இருக்காதோ அது போன்றே, நோக்கமற்ற, நீதியற்ற வீணான கட்டளைகளையோ, விலக்கல்களையோ அவன் பிறப்பிக்கமாட்டான்.

• على الزوج واجب الإنفاق على الأهل (المرأة) من غذاء وكساء ومسكن ووسائل تدفئة وقت البرد.
3. குடும்பத்துக்காக (மனைவிக்கு) செலவழிப்பது கணவன் மீது கடமையாகும். அவளுக்குத் தேவையான உணவு, ஆடை, தங்குமிடம் குளிரின் போது வெப்பமூட்டும் சாதனங்கள் ஆகியவையும் அவற்றில் அடங்கும்.

 
含义的翻译 章: 麦尔彦
章节目录 页码
 
《古兰经》译解 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - 译解目录

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

关闭