Check out the new design

《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 * - 译解目录


含义的翻译 章: 拜格勒   段:
وَاِذْ یَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَیْتِ وَاِسْمٰعِیْلُ ؕ— رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ؕ— اِنَّكَ اَنْتَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
2.127. தூதரே! இப்ராஹீமும் இஸ்மாயீலும் கஅபாவின் அத்திவாரங்களை எழுப்பிக் கொண்டிருந்ததை நினைவுகூர்வீராக. அவர்கள் மிகுந்த பணிவோடு, எங்கள் இறைவனே, எங்களிடமிருந்து இந்த கஃபாவை நிர்மாணித்தல் உட்பட எங்கள் செயல்களை ஏற்றுக்கொள்வாயாக. நிச்சயமாக நீ எமது பிரார்த்தனைகளை அங்கீகரிப்பவனாகவும், எங்களின் எண்ணங்களையும் செயல்களையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றாய் என்று பிரார்த்தனை செய்தார்கள்.
阿拉伯语经注:
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَیْنِ لَكَ وَمِنْ ذُرِّیَّتِنَاۤ اُمَّةً مُّسْلِمَةً لَّكَ ۪— وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَیْنَا ۚ— اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟
2.128. எங்கள் இறைவனே, உனக்கு முழுமையாகக் கட்டுப்பட்டவர்களாக எங்களை ஆக்குவாயாக. நாங்கள் உனக்கு இணையாக யாரையும் ஆக்க மாட்டோம். எங்களின் சந்ததியிலிருந்து உனக்குக் கட்டுப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்குவாயாக. உன்னை வணங்கும் முறையை எமக்கு கற்றுத்தருவாயாக!. எங்களின் பாவங்களையும், வணக்கங்களில் ஏற்பட்ட குறைபாடுகளையும், மன்னித்தருள்வாயாக. நிச்சயமாக நீ உன் அடியார்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கின்றாய். அவர்கள் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றாய்.
阿拉伯语经注:
رَبَّنَا وَابْعَثْ فِیْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ یَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِكَ وَیُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَیُزَكِّیْهِمْ ؕ— اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
2.129. எங்கள் இறைவனே, இஸ்மாயீலின் சந்ததியிலிருந்து அவர்களில் ஒரு தூதரை அவர்களிடையே அனுப்புவாயாக. அவர் நீ இறக்கிய வசனங்களை எடுத்துரைக்க வேண்டும்; குர்ஆனையும் சுன்னாவையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்; அவர்களை ஷிர்க்கிலிருந்தும் இழிவான விஷயங்களிலிருந்தும் தூய்மைப்படுத்த வேண்டும். நிச்சயமாக நீ யாவற்றிலும் வலிமைமிக்கவனாகவும், மிகைத்தவனாகவும் உன்னுடைய கட்டளைகளில், செயல்களில் ஞானம்மிக்கவனாகவும் இருக்கின்றாய்.
阿拉伯语经注:
وَمَنْ یَّرْغَبُ عَنْ مِّلَّةِ اِبْرٰهٖمَ اِلَّا مَنْ سَفِهَ نَفْسَهٗ ؕ— وَلَقَدِ اصْطَفَیْنٰهُ فِی الدُّنْیَا ۚ— وَاِنَّهٗ فِی الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِیْنَ ۟
2.130. மடமையினாலும் சத்தியத்தை விட்டு அசத்தியத்தை எடுத்து தவறான திட்டமிடலினாலும் தனக்குத்தானே அநியாயம் இழைத்துக்கொண்டவனையும் இழிவை ஏற்றுக்கொண்டவனையும் தவிர வேறு எவரும் இப்ராஹீமின் மார்க்கத்தை விட்டு வேறு மார்க்கங்களின் பக்கம் செல்லமாட்டான். நாம் இவ்வுலகில் இப்ராஹீமை தூதராகவும், உற்ற நண்பராகவும் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். மறுமையில் அவர், இறைவன் விதித்த கடமைகளை நிறைவேற்றி, உயர்ந்த அந்தஸ்தைப் பெற்ற நல்லவர்களுடன் அவர் இருப்பார்.
阿拉伯语经注:
اِذْ قَالَ لَهٗ رَبُّهٗۤ اَسْلِمْ ۙ— قَالَ اَسْلَمْتُ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟
2.131. அவர் அல்லாஹ்வுக்கு விரைந்து அடிபணிந்ததால் அவன் அவரை தேர்ந்தெடுத்துக் கொண்டான். இறைவன் அவரிடம் வணக்க வழிபாட்டை எனக்காக மாத்திரம் நிறைவேற்று. கட்டுப்பட்டு எனக்கு அடிபணி என்று கூறியபோது அடியார்களைப் படைத்து, வாழ்வாதாரம் வழங்குகின்ற, அவர்களின் விவகாரங்களை நிர்வகிக்கின்ற அல்லாஹ்வுக்கு நான் அடிபணிந்துவிட்டேன்என்று பதிலளித்தார்.
阿拉伯语经注:
وَوَصّٰی بِهَاۤ اِبْرٰهٖمُ بَنِیْهِ وَیَعْقُوْبُ ؕ— یٰبَنِیَّ اِنَّ اللّٰهَ اصْطَفٰی لَكُمُ الدِّیْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟ؕ
2.132. அகிலங்களின் இறைவனுக்க நான் அடிபணிந்துவிட்டேன் என்ற இந்த வார்த்தையைத்தான் இப்ராஹீம் தம் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தினார். இந்த வார்த்தையைத்தான் யஃகூபும் தம் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தினார். இருவரும் தங்கள் பிள்ளைகளிடம் கூறினார்கள்,அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாம் என்னும் மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளான். எனவே மரணிக்கும்வரை இதனைப் பற்றிக் கொள்ளுங்கள். வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர்களாக இருங்கள்.
阿拉伯语经注:
اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ یَعْقُوْبَ الْمَوْتُ ۙ— اِذْ قَالَ لِبَنِیْهِ مَا تَعْبُدُوْنَ مِنْ بَعْدِیْ ؕ— قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَآىِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ— وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
2.133. யஃகூபுக்கு மரணவேளை நெருங்கியபோது நீங்கள் அங்கே இருந்தீர்களா? அப்போது அவர் தம் பிள்ளைகளிடம் கேட்டார்,நான் மரணித்த பிறகு நீங்கள் யாரை வணங்குவீர்கள்? அதற்கு அவர்கள், உங்கள் இறைவனும் உங்கள் முன்னோர்களான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமான ஒரே இறைவனையே நாங்கள் வணங்குவோம். அவனுக்கு யாரையும் நாங்கள் இணையாக்க மாட்டோம். நாங்கள் அவனுக்கு மட்டுமே அடிபணிந்தவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்.
阿拉伯语经注:
تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ ۚ— لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَّا كَسَبْتُمْ ۚ— وَلَا تُسْـَٔلُوْنَ عَمَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
2.134. அந்த சமூகம் உங்களுக்கு முன்னால் சென்ற சமூகங்களுடன் கடந்துவிட்டது. அவர்கள் செய்த செயல்களின் பக்கம் அவர்கள் சென்றுவிட்டார்கள். அவர்கள் சம்பாதித்த நன்மையும் தீமையும் அவர்களுக்கு. நீங்கள் சம்பாதித்தது உங்களுக்கு. அவர்களின் செயல்களைக் குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். உங்களின் செயல்களைக் குறித்து அவர்கள் விசாரிக்கப்பட மாட்டார்கள். எவரும் மற்றவரின் பாவத்திற்காக தண்டிக்கப்பட மாட்டார். மாறாக ஒவ்வொருவரும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்கப்படுவார்கள். உங்களின் செயல்களை விட்டுவிட்டு உங்களுக்கு முன்னர் வாழ்ந்த மற்றவர்களின் செயல்களைக் குறித்து ஆர்வம் காட்டாதீர்கள். அல்லாஹ்வின் கருணைக்குப் பின் ஒருவர் செய்த நற்செயல்தான் அவருக்குப் பயனளிக்கக்கூடியது.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• المؤمن المتقي لا يغتر بأعماله الصالحة، بل يخاف أن ترد عليه، ولا تقبل منه، ولهذا يُكْثِرُ سؤالَ الله قَبولها.
1. அல்லாஹ்வை அஞ்சும் நம்பிக்கையாளன் தன் நற்செயல்களைக் கொண்டு ஏமாற மாட்டான். அவை ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சுவான். எனவே அல்லாஹ்விடம் அவற்றை ஏற்றுக்கொள்ளும்படி அதிகமாக மன்றாடுவான்.

• بركة دعوة أبي الأنبياء إبراهيم عليه السلام، حيث أجاب الله دعاءه وجعل خاتم أنبيائه وأفضل رسله من أهل مكة.
2. தூதர்களின் தந்தை என்று அழைக்கப்படக்கூடிய இப்ராஹீமின் பிரார்த்தனையால் ஏற்பட்ட பரக்கத். அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு இறுதித்தூதராகவும் தூதர்களில் சிறந்தவராகவும் மக்காவைச் சார்ந்த ஒருவரை ஆக்கினான்.

• دين إبراهيم عليه السلام هو الملة الحنيفية الموافقة للفطرة، لا يرغب عنها ولا يزهد فيها إلا الجاهل المخالف لفطرته.
3. இப்ராஹீமின் மார்க்கம் மனித இயல்புக்கேற்ற தூய மார்க்கமாகும். தனது இயல்புக்கு மாறாக செயல்படுகின்ற மூடனைத்தவிர வேறு யாரும் இதனைப் புறக்கணிக்க மாட்டார்கள்.

• مشروعية الوصية للذرية باتباع الهدى، وأخذ العهد عليهم بالتمسك بالحق والثبات عليه.
4. நேர்வழியைப் பின்பற்றுமாறும் சத்தியத்தை உறுதியுடன் பற்றிப்பிடிக்குமாறும் சந்ததியினருக்கு மரணசாசனம் செய்வது மார்க்கத்திலுள்ள விடயமாகும்.

 
含义的翻译 章: 拜格勒
章节目录 页码
 
《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 - 译解目录

古兰经注释研究中心发行。

关闭