Check out the new design

《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 * - 译解目录


含义的翻译 章: 盖萨斯   段:
وَنُمَكِّنَ لَهُمْ فِی الْاَرْضِ وَنُرِیَ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا مِنْهُمْ مَّا كَانُوْا یَحْذَرُوْنَ ۟
28.6. பூமியில் அவர்களை ஆட்சிசெய்பவர்களாக ஆக்கி, ஃபிர்அவ்னுக்கும் அவனது ஆட்சியில் பெரிய உதவியாளனான ஹாமானுக்கும் அவர்கள் இருவருக்கும் ஆட்சிபுரிய உதவும் படையினருக்கும் அவர்கள் அஞ்சிக்கொண்டிருந்த, இஸ்ராயீலின் மக்களில் பிறக்கும் ஒரு ஆண் குழந்தையால் தங்களின் ஆட்சியதிகாரம் அழிவதைக் காட்ட நாடுகின்றோம்.
阿拉伯语经注:
وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اُمِّ مُوْسٰۤی اَنْ اَرْضِعِیْهِ ۚ— فَاِذَا خِفْتِ عَلَیْهِ فَاَلْقِیْهِ فِی الْیَمِّ وَلَا تَخَافِیْ وَلَا تَحْزَنِیْ ۚ— اِنَّا رَآدُّوْهُ اِلَیْكِ وَجَاعِلُوْهُ مِنَ الْمُرْسَلِیْنَ ۟
28.7. நாம் மூஸாவின் தாயாருக்குப் பின்வருமாறு உள்ளுதிப்பு ஏற்படுத்தினோம்: “நீர் அவருக்குப் பாலூட்டும். ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகமும் அவரைக் கொன்றுவிடுவார்கள் என்று நீர் அஞ்சினால் அவரை ஒரு பெட்டியில் வைத்து நைல் நதியில் போட்டு விடும். அவர் மூழ்கிவிடுவார் என்றோ ஃபிர்அவ்ன் அவரைக் கொன்றுவிடுவான் என்றோ நீர் அஞ்சாதீர். அவரது பிரிவால் கவலைப்படாதீர். நிச்சயமாக நாம் அவரை உம்மிடம் உயிருடன் திரும்பக் கொண்டு வருவோம். அவரை அல்லாஹ் தனது படைப்பினங்களுக்கு அனுப்பும் தூதர்களில் ஒருவராக ஆக்குவோம்.”
阿拉伯语经注:
فَالْتَقَطَهٗۤ اٰلُ فِرْعَوْنَ لِیَكُوْنَ لَهُمْ عَدُوًّا وَّحَزَنًا ؕ— اِنَّ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا كَانُوْا خٰطِـِٕیْنَ ۟
28.8. நாம் அவருக்கு ஏற்படுத்திய உள்ளுதிப்பை அவள் செயல்படுத்தினாள். ஒரு பெட்டியில் வைத்து அவரைக் நதியில் போட்டுவிட்டார். ஃபிர்அவ்னின் குடும்பத்தினர் அவரைக் கண்டெடுத்தனர். அது அவர் ஃபிர்அவ்னுக்கு எதிரியாகி அவனது ஆட்சியதிகாரத்தை அழிக்க வேண்டும் என்பதற்காகவும் அவனது கவலைக்குக் காரணமாக இருந்து அல்லாஹ் நாடியவாறு நிகழ வேண்டும் என்பதற்காகவும்தான். நிச்சயமாக ஃபிர்அவ்னும் அவனுடைய அமைச்சர் ஹாமானும் அவர்களுடைய படையினரும் நிராகரிப்பினாலும் அக்கிரமத்தினாலும் பூமியில் குழப்பம் விளைவித்ததனாலும் பாவிகளாக இருந்தார்கள்.
阿拉伯语经注:
وَقَالَتِ امْرَاَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَیْنٍ لِّیْ وَلَكَ ؕ— لَا تَقْتُلُوْهُ ۖۗ— عَسٰۤی اَنْ یَّنْفَعَنَاۤ اَوْ نَتَّخِذَهٗ وَلَدًا وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
28.9. ஃபிர்அவ்ன் அந்தக் குழந்தையைக் கொல்ல நாடியபோது அவனுடைய மனைவி அவனிடம் கூறினாள்: “இந்தக் குழந்தை உங்களுக்கும் எனக்கும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கலாம். இதனைக் கொன்று விடாதீர்கள். இது உதவி புரிந்து நமக்குப் பயனளிக்கலாம் அல்லது இதனை நம் மகனாக தத்தெடுத்துக் கொள்ளலாம்.” அவர்கள் அவரால் தங்களின் ஆட்சியதிகாரத்திற்கு நிகழப் போவதை அறியாதவர்களாக இருந்தார்கள்.
阿拉伯语经注:
وَاَصْبَحَ فُؤَادُ اُمِّ مُوْسٰی فٰرِغًا ؕ— اِنْ كَادَتْ لَتُبْدِیْ بِهٖ لَوْلَاۤ اَنْ رَّبَطْنَا عَلٰی قَلْبِهَا لِتَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
28.10. மூஸாவுடைய தாயாரின் உள்ளம் அவரைப்பற்றிய விஷயத்தைத் தவிர மற்ற எல்லா உலக விஷயங்களை விட்டு வெறுமையாகிவிட்டது. அவரால் பொறுமையாக இருக்க முடியவில்லை. அவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனை மட்டுமே சார்ந்து, அவனது விதியை பொறுமையுடன் தாங்குவோரில் ஒருவராகிவிட வேண்டும் என்பதற்காக நாம் அவரது உள்ளத்தை உறுதிப்படுத்தியிருக்கவில்லையென்றால் மூஸாவின் மீதுள்ள பாசத்தினால் நிச்சயமாக அது தனது குழந்தையே என்று அவர் வெளிப்படுத்த முனைந்தார்.
阿拉伯语经注:
وَقَالَتْ لِاُخْتِهٖ قُصِّیْهِ ؗ— فَبَصُرَتْ بِهٖ عَنْ جُنُبٍ وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟ۙ
28.11. மூஸாவின் தாய் அவரைக் கடலில் போட்டபிறகு மூஸாவின் சகோதரியிடம் கூறினார்: “இந்தக் குழந்தைக்கு என்ன நிகழும் என்பதை அறிந்துகொள்வதற்காக இதனைப் பின்தொடர்ந்து செல்.” அவள் ஃபிர்அவ்னும் அவனது சமூகமும் நிச்சயமாக தான் மூஸாவின் தகவலைத் தேடும் அவரது சகோதரி என்பதை அறியாதவண்ணம் தூரத்திலிருந்தே அக்குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
阿拉伯语经注:
وَحَرَّمْنَا عَلَیْهِ الْمَرَاضِعَ مِنْ قَبْلُ فَقَالَتْ هَلْ اَدُلُّكُمْ عَلٰۤی اَهْلِ بَیْتٍ یَّكْفُلُوْنَهٗ لَكُمْ وَهُمْ لَهٗ نٰصِحُوْنَ ۟
28.12. அல்லாஹ்வின் திட்டத்தால் மூஸா தனது தாயிடம் திரும்பிச் செல்வதற்கு முன் பாலூட்டும் எந்தப் பெண்ணிடமும் பால்குடிக்கவில்லை. அவருக்கு பாலூட்டுவதில் அவர்களின் ஆர்வத்தைக் கண்ட மூஸாவின் சகோதரி அவர்களிடம் கூறினாள்: “நான் உங்களுக்கு இக்குழந்தைக்கு சிறந்த முறையில் பாலூட்டி, வளர்க்கும் ஒரு குடும்பத்தாரைக்குறித்து அறிவிக்கட்டுமா? அவர்கள் இக்குழந்தைக்கு விசுவாசமானவர்கள்.”
阿拉伯语经注:
فَرَدَدْنٰهُ اِلٰۤی اُمِّهٖ كَیْ تَقَرَّ عَیْنُهَا وَلَا تَحْزَنَ وَلِتَعْلَمَ اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟۠
28.13. இவ்வாறு மூஸாவை அவரது தாயாரிடமே கொண்டு சேர்த்தோம். அது அருகிலிருந்து அவரைப் பார்த்து கண் குளிர்ச்சியடைவதற்காகவும் பிரிவால் அவர் கவலைகொள்ளாமல் இருப்பதற்காகவும் மீண்டும் அவரை அவளிடம் சேர்ப்போம் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி சந்தேகம் இல்லாமல் உண்மையானது என்பதை அறிந்துகொள்வதற்காகவும்தான். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் இந்த வாக்குறுதியைக்குறித்து அறியவில்லை. நிச்சயமாக அவர்தான் மூஸாவின் தாய் என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• تدبير الله لعباده الصالحين بما يسلمهم من مكر أعدائهم.
1. தன் நல்லடியார்களை எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாக்கும் விதத்தில் அல்லாஹ்வின் திட்டம்.

• تدبير الظالم يؤول إلى تدميره.
2. அநியாயக்காரனின் திட்டம் அவனையே அழித்துவிடும்.

• قوة عاطفة الأمهات تجاه أولادهن.
3. தங்களின் குழந்தைகள் மீது தாய்மார்கள் கொண்டுள்ள தாய்ப்பாசத்தின் வலிமை.

• جواز استخدام الحيلة المشروعة للتخلص من ظلم الظالم.
4. அநியாயக்காரர்களின் அநியாயத்திலிருந்து தப்பிக்கும்பொருட்டு தந்திரங்களைப் பயன்படுத்துவது கூடும்.

• تحقيق وعد الله واقع لا محالة.
5. அல்லாஹ்வின் வாக்குறுதி சந்தேகமின்றி நிறைவேறும்.

 
含义的翻译 章: 盖萨斯
章节目录 页码
 
《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 - 译解目录

古兰经注释研究中心发行。

关闭