《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

页码:close

external-link copy
102 : 4

وَاِذَا كُنْتَ فِیْهِمْ فَاَقَمْتَ لَهُمُ الصَّلٰوةَ فَلْتَقُمْ طَآىِٕفَةٌ مِّنْهُمْ مَّعَكَ وَلْیَاْخُذُوْۤا اَسْلِحَتَهُمْ ۫— فَاِذَا سَجَدُوْا فَلْیَكُوْنُوْا مِنْ وَّرَآىِٕكُمْ ۪— وَلْتَاْتِ طَآىِٕفَةٌ اُخْرٰی لَمْ یُصَلُّوْا فَلْیُصَلُّوْا مَعَكَ وَلْیَاْخُذُوْا حِذْرَهُمْ وَاَسْلِحَتَهُمْ ۚ— وَدَّ الَّذِیْنَ كَفَرُوْا لَوْ تَغْفُلُوْنَ عَنْ اَسْلِحَتِكُمْ وَاَمْتِعَتِكُمْ فَیَمِیْلُوْنَ عَلَیْكُمْ مَّیْلَةً وَّاحِدَةً ؕ— وَلَا جُنَاحَ عَلَیْكُمْ اِنْ كَانَ بِكُمْ اَذًی مِّنْ مَّطَرٍ اَوْ كُنْتُمْ مَّرْضٰۤی اَنْ تَضَعُوْۤا اَسْلِحَتَكُمْ ۚ— وَخُذُوْا حِذْرَكُمْ ؕ— اِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْكٰفِرِیْنَ عَذَابًا مُّهِیْنًا ۟

4.102. தூதரே! போர்ச்சமயத்தில் நீர் படையில் இருந்து அவர்களுக்குத் தொழுகை நடத்த விரும்பினால் அவர்களை இரண்டு அணியினராக பிரித்துக் கொள்வீராக. ஒரு அணியினர் உம்முடன் தொழுவதற்காக நிற்கட்டும். தங்களுடைய ஆயுதங்களையும் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். மற்றொரு அணியினர் உங்களைப் பாதுகாக்கட்டும். முதல் அணியினர் இமாமுடன் ஒரு ரக்அத் தொழுதபிறகு இரண்டாவது ரக்அத்தை தாமாகவே நிறைவேற்றிக் கொள்ளட்டும். அவர்கள் தொழுதவுடன் உங்களுக்குப் பின்னாலிருந்து எதிரிகளின் திசையை நோக்கி நிற்கட்டும். உங்களைப் பாதுகாத்துக் கொண்டிருந்த இரண்டாவது அணியினர் வந்து இரண்டாவது ரக்அத்தில் இமாமுடன் இணைந்துகொள்ளட்டும். இமாம் சலாம் கொடுத்தபிறகு அவர்கள் மீதமுள்ள ஒரு ரக்அத்தை நிறைவேற்றிக் கொள்ளட்டும். அவர்கள் தங்களின் ஆயுதங்களை வைத்துக் கொண்டு எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கட்டும். நிராகரிப்பாளர்கள் நீங்கள் உங்களின் ஆயுதங்களையும் தளபாடங்களையும் விட்டு கவனக்குறைவாக இருக்கும் சமயத்தில் உங்களைத் திடீரெனத் தாக்கிவிடலாம் என்று ஆசைகொள்கிறார்கள். மழையினாலோ உங்களுக்கு ஏற்பட்ட நோயினாலோ நீங்கள் உங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் உங்கள்மீது எவ்விதக் குற்றமுமில்லை. உங்களால் இயன்றவற்றின் மூலம் உங்கள் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு இழிவுதரும் வேதனையைத் தயார்செய்து வைத்துள்ளான். info
التفاسير:

external-link copy
103 : 4

فَاِذَا قَضَیْتُمُ الصَّلٰوةَ فَاذْكُرُوا اللّٰهَ قِیٰمًا وَّقُعُوْدًا وَّعَلٰی جُنُوْبِكُمْ ۚ— فَاِذَا اطْمَاْنَنْتُمْ فَاَقِیْمُوا الصَّلٰوةَ ۚ— اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَی الْمُؤْمِنِیْنَ كِتٰبًا مَّوْقُوْتًا ۟

4.103. நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகையிலிருந்து நிறைவேற்றிவிட்டால் நின்றநிலையிலும் அமர்ந்தநிலையிலும் ஒருக்களித்துப் படுத்தநிலையிலும் - என எல்லா நிலைகளிலும் துதித்துப் புகழ்வதன் மூலம் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். பயம் உங்களைவிட்டு நீங்கி அமைதிநிலை ஏற்பட்டுவிட்டால் தொழுகையை அதன் நிபந்தனைகளோடும் கடமைகளோடும் சுன்னத்துக்களோடும் உங்களுக்குக் கட்டளையிட்டபடி முழுமையாக நிறைவேற்றுங்கள். நிச்சயமாக தொழுகை நம்பிக்கையாளர்கள்மீது நேரங்குறிக்கப்பட்ட கடமையாகும். எனவே காரணமின்றி அதனைத் தாமதப்படுத்திவிடாதீர்கள். இது ஊரில் உள்ள சமயத்திற்குரிய சட்டமாகும். ஆனால் பயண சமயத்தில் நீங்கள் சேர்த்தும் சுருக்கியும் தொழுதுகொள்ளலாம். info
التفاسير:

external-link copy
104 : 4

وَلَا تَهِنُوْا فِی ابْتِغَآءِ الْقَوْمِ ؕ— اِنْ تَكُوْنُوْا تَاْلَمُوْنَ فَاِنَّهُمْ یَاْلَمُوْنَ كَمَا تَاْلَمُوْنَ ۚ— وَتَرْجُوْنَ مِنَ اللّٰهِ مَا لَا یَرْجُوْنَ ؕ— وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟۠

4.104. நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களான உங்களது எதிரிகளைத் தேடுவதில் பலவீனமடைந்து விடாதீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட உயிர்ச் சேதங்களினாலும் காயங்களினாலும் நீங்கள் வலியை உணர்ந்தால் உங்களைப்போல நிராகரிப்பாளர்களும் வலியை உணரத்தான் செய்கிறார்கள். உங்களுக்கு ஏற்பட்டதுபோன்று அவர்களுக்கும் ஏற்பட்டே உள்ளது. அவர்களின் பொறுமை உங்களின் பொறுமையைவிட அதிகமாகிவிடக்கூடாது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்விடம் எதிர்பார்க்காத உதவியையும் நன்மையையும் நீங்கள் அவனிடம் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் தன் அடியார்களின் நிலமைகளை நன்கறிந்தவன். தனது நிர்வாகத்திலும் சட்டமியற்றுவதிலும் அவன் ஞானம்மிக்கவன். info
التفاسير:

external-link copy
105 : 4

اِنَّاۤ اَنْزَلْنَاۤ اِلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَیْنَ النَّاسِ بِمَاۤ اَرٰىكَ اللّٰهُ ؕ— وَلَا تَكُنْ لِّلْخَآىِٕنِیْنَ خَصِیْمًا ۟ۙ

4.105. தூதரே! சத்தியத்தை உள்ளடக்கியுள்ள குர்ஆனை உம்மீது இறக்கியுள்ளோம், மக்களின் ஒவ்வொரு விவகாரங்களிலும் அல்லாஹ் உமக்குக் கற்றுத்தந்தபடி - உம் மனஇச்சைப்படியோ சுயஅறிவின்படியோ அல்ல - நீர் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக. தமக்குத் தாமே துரோகம் செய்து, நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றில் மோசடி செய்பவர்களிடத்தில் தமது உரிமையைக் கேட்போரைத் தடுத்து வாதாடுபவராக ஆகிவிடாதீர். info
التفاسير:
这业中每段经文的优越:
• استحباب صلاة الخوف وبيان أحكامها وصفتها.
1. யுத்தநேரத் தொழுகைக்கான அனுமதியும், அதற்கான சட்டங்கள் அமைப்பு பற்றிய தெளிவுபடுத்ததலும் info

• الأمر بالأخذ بالأسباب في كل الأحوال، وأن المؤمن لا يعذر في تركها حتى لو كان في عبادة.
2. எல்லா சூழ்நிலைகளிலும் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. வணக்கத்தில் ஈடுபட்டிருந்தாலும் கூட நம்பிக்கையாளன் அவற்றை விடுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. info

• مشروعية دوام ذكر الله تعالى على كل حال، فهو حياة القلوب وسبب طمأنينتها.
3. எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவுகூர வேண்டும். அதுதான் உள்ளத்திற்கு உயிரூட்டும், நிம்மதியை ஏற்படுத்தும். info

• النهي عن الضعف والكسل في حال قتال العدو، والأمر بالصبر على قتاله.
4.எதிரியுடன் போரிடும் போது பலவீனம், சோம்பல் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளதுடன் பொறுமையைக் கடைபிடிக்குமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது. info