Check out the new design

《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 * - 译解目录


含义的翻译 章: 尼萨仪   段:
اَلرِّجَالُ قَوّٰمُوْنَ عَلَی النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰی بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ ؕ— فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلْغَیْبِ بِمَا حَفِظَ اللّٰهُ ؕ— وَالّٰتِیْ تَخَافُوْنَ نُشُوْزَهُنَّ فَعِظُوْهُنَّ وَاهْجُرُوْهُنَّ فِی الْمَضَاجِعِ وَاضْرِبُوْهُنَّ ۚ— فَاِنْ اَطَعْنَكُمْ فَلَا تَبْغُوْا عَلَیْهِنَّ سَبِیْلًا ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَلِیًّا كَبِیْرًا ۟
4.34. அல்லாஹ் ஆண்களுக்கு வழங்கியுள்ள பிரத்யேக சிறப்புகள் காரணமாகவும், பெண்களுக்கு செலவளித்து அவர்களது காரியங்களைக் கவனிப்பது அவர்கள் மீதே கடமை என்பதனாலும் ஆண்களே பெண்களை நிர்வகிப்பவர்களாவர். நல்ல பெண்கள் தங்கள் இறைவனுக்குக் கட்டுப்படுவார்கள். தங்களின் கணவனின் சொல்படியும் நடப்பார்கள். அவர்கள் இல்லாத சமயத்தில் அல்லாஹ்வின் உதவியினால் தங்கள் கற்பை பாதுகாத்துக் கொள்வார்கள். கணவர்களே! சொல்லிலோ செயலிலோ தமது கணவனுக்குக் கட்டுப்படமாட்டாள் என்று நீங்கள் அஞ்சும் பெண்களுக்கு முதலில் உபதேசம் செய்து அல்லாஹ்வைக் கொண்டு அச்சமூட்டுங்கள். அவர்கள் அதற்குப் பதிலளிக்கவில்லையெனில் படுக்கையில் அவர்களை ஒதுக்கி நடந்துகொள்ளுங்கள். அவளுடன் உடலுறவில் ஈடுபடாது திரும்பிப் படுத்துக்கொள்ளவும். அவர்கள் அதற்கும் பதிலளிக்கவில்லையெனில் அவர்களை காயமேற்படாதவாறு அடியுங்கள். அவர்கள் கட்டுப்பட்டுவிட்டால் அநீதியாகவோ கண்டிப்பதன் மூலமோ அவர்கள் மீது வரம்புமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் விட மிக உயர்ந்தவன், தனது உள்ளமையிலும் பண்புகளிலும் மிகப் பெரியவன். எனவே அவனையே அஞ்சுங்கள்.
阿拉伯语经注:
وَاِنْ خِفْتُمْ شِقَاقَ بَیْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَحَكَمًا مِّنْ اَهْلِهَا ۚ— اِنْ یُّرِیْدَاۤ اِصْلَاحًا یُّوَفِّقِ اللّٰهُ بَیْنَهُمَا ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا خَبِیْرًا ۟
4.35. தம்பதியினரின் பொறுப்பாளர்களே! கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு பகைமைக்கு இட்டுச்செல்லும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் குடும்பத்திலிருந்து நேர்மையான ஒருவரையும் மனைவியின் குடும்பத்திலிருந்து நேர்மையான ஒருவரையும் நடுவர்களாக நியமனம் செய்யுங்கள். இருவரும் சேர்ந்துவாழ்வது சிறந்ததா அல்லது பிரிந்துவிடுவதா? என அந்த நடுவர்கள் முடிவுசெய்யட்டும். சேர்ந்து வாழ்வதே விருப்பத்திற்குரியதும் சிறந்ததுமாகும். நடுவர்கள், அவ்விருவரும் சேர்ந்து வாழ்வதை விரும்பி அதற்குரிய சிறந்த வழிமுறையையும் கடைபிடித்தால் அல்லாஹ் அந்த கணவன் மனைவிக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்திவிடுவான். அவ்விருவருக்கும் மத்தியிலுள்ள கருத்து வேறுபாடு நீங்கிவிடும். தன் அடியார்கள் செய்யும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவர்களின் உள்ளங்களில் மறைத்து வைத்திருக்கும் நுணுக்கமானவற்றையும் அவன் நன்கறிந்தவன்.
阿拉伯语经注:
وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَیْـًٔا وَّبِالْوَالِدَیْنِ اِحْسَانًا وَّبِذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَالْجَارِ ذِی الْقُرْبٰی وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْۢبِ وَابْنِ السَّبِیْلِ ۙ— وَمَا مَلَكَتْ اَیْمَانُكُمْ ؕ— اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۟ۙ
4.36. அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு அவனை மட்டுமே வணங்குங்கள். அவனைத்தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள். தாய்தந்தையரை கௌரவித்து, பணிவிடை செய்து நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். உறவினர்கள், ஏழைகள், அநாதைகள், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், உங்களுடன் சேர்ந்து பயணிக்கும் தோழர், பிரயாணத்தின் இடைநடுவில் அநாதரவாகிவிட்ட வழிப்போக்கன், உங்களின் அடிமைகள் ஆகியோருடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். தற்பெருமை மிக்கவனையும், தனது அடியார்களுடன் அகங்காரத்துடன் நடந்துகொள்பவனையும், மக்களிடம் பெருமையடிப்பதற்காக தன்னைத்தானே புகழ்ந்து கொள்பவனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
阿拉伯语经注:
١لَّذِیْنَ یَبْخَلُوْنَ وَیَاْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ وَیَكْتُمُوْنَ مَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ— وَاَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ عَذَابًا مُّهِیْنًا ۟ۚ
4.37. அல்லாஹ் தங்களுக்கு வழங்கியவற்றில் அவன் கடமையாக்கியதைச் செலவுசெய்யாமல் கஞ்சத்தனம் செய்பவர்கள், தமது சொல்லாலும் செயலாலும் பிற மக்களையும் கஞ்சத்தனம் செய்யத் தூண்டுபவர்கள், அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய வாழ்வாதாரத்தையும், அறிவையும் இன்னபிற விஷயங்களையும் மறைப்பவர்கள், மக்களிடம் சத்தியத்தை வெளிப்படுத்தாமல் அதனை மறைத்து அசத்தியத்தை வெளிப்படுத்துவோர் ஆகியோரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. இவைகள் நிராகரிப்பின் தன்மைகளாகும். இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு நாம் இழிவுதரும் வேதனையைத் தயார்படுத்தி வைத்துள்ளோம்.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• ثبوت قِوَامة الرجال على النساء بسبب تفضيل الله لهم باختصاصهم بالولايات، وبسبب ما يجب عليهم من الحقوق، وأبرزها النفقة على الزوجة.
1. பெண்களை நிர்வகிக்கும் பொறுப்பு ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. காரணம், அவர்களுக்கு பொறுப்புக்களை வழங்கி அவர்களை அல்லாஹ் சிறப்பித்துள்ளான். இன்னும் பல கடமைகளும் அவர்கள் மீது உள்ளன. மனைவிக்குச் செலவுசெய்வது அவற்றில் மிகப்பிரதானமானதாகும்.

• التحذير من البغي وظلم المرأة في التأديب بتذكير العبد بقدرة الله عليه وعلوه سبحانه.
2. அடியானின் மீது அல்லாஹ்வின் ஆற்றலையும் அவனது உயர்வையும் ஞாபகமூட்டி, மனைவியைத் திருத்தும்போது அநீதியிழைப்பதையும் வரம்புமீறுவதையும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

• التحذير من ذميم الأخلاق، كالكبر والتفاخر والبخل وكتم العلم وعدم تبيينه للناس.
3.பெருமிதம், ஆணவம், கஞ்சத்தனம், அறிவை மறைத்து அதனை மக்களுக்கு தெளிவுபடுத்தாமை போன்ற தீயகுணங்களை எச்சரிக்கப்பட்டுள்ளது.

 
含义的翻译 章: 尼萨仪
章节目录 页码
 
《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 - 译解目录

古兰经注释研究中心发行。

关闭