Check out the new design

《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 * - 译解目录


含义的翻译 章: 讨拜   段:
وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِیْنَ وَالْاَنْصَارِ وَالَّذِیْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ— رَّضِیَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِیْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ— ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
9.100. தங்களின் நாட்டையும் வீடுகளையும் விட்டு விட்டு அல்லாஹ்வின்பால் புலம்பெயர்ந்தவர்களிலும் தூதருக்கு உதவி செய்த அன்சாரிகளிலும் நம்பிக்கைகொள்வதில் முந்திக்கொண்டவர்கள், மற்றும் முஹாஜிரீன்கள், அன்சாரிகள் என இரு சாராரையும் கொள்கையிலும் சொல்லிலும் செயலிலும் அழகிய முறையில் பின்பற்றியவர்கள் ஆகியோரின் விஷயத்தில் அல்லாஹ் திருப்தியடைந்துவிட்டான். அவர்களின் கீழ்ப்படிதலை ஏற்றுக் கொண்டான். அவர்களுக்கு அவன் வழங்கிய மகத்தான வெகுமதியின் காரணமாக அவர்கள் அவனைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்காக அவன் சுவனங்களை தயார்படுத்தி வைத்துள்ளான். அதன் மாளிகைகளுக்குக் கீழ் ஆறுகள் ஓடும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இந்த வெகுமதியே மகத்தான வெற்றியாகும்.
阿拉伯语经注:
وَمِمَّنْ حَوْلَكُمْ مِّنَ الْاَعْرَابِ مُنٰفِقُوْنَ ۛؕ— وَمِنْ اَهْلِ الْمَدِیْنَةِ ؔۛ۫— مَرَدُوْا عَلَی النِّفَاقِ ۫— لَا تَعْلَمُهُمْ ؕ— نَحْنُ نَعْلَمُهُمْ ؕ— سَنُعَذِّبُهُمْ مَّرَّتَیْنِ ثُمَّ یُرَدُّوْنَ اِلٰی عَذَابٍ عَظِیْمٍ ۟ۚ
9.101. மதீனாவைச் சுற்றி வசிக்கும் நாட்டுப்புறவாசிகளிலும் நயவஞ்சகர்கள் காணப்படுகிறார்கள். மதீனாவாசிகளிலும் நயவஞ்சகத்தில் ஊறியிருக்கும் நயவஞ்சகர்கள் காணப்படுகிறார்கள். -தூதரே!- அவர்களை நீர் அறியமாட்டீர். அல்லாஹ்வே அவர்களை அறிவான். அவன் அவர்களுக்கு இருமுறை தண்டனையளிப்பான். இவ்வுலகில் அவர்களின் நயவஞ்சகத்தனத்தை வெளிப்படுத்தியும் அவர்களைக் கொன்றும் கைதிகளாகப் பிடித்தும் அவர்களைத் தண்டிப்பான். பின்னர் மண்ணறையின் வேதனை மற்றும் மறுமை நாளில் நரகத்தில் அடித்தளத்தில் கடும் வேதனைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள்.
阿拉伯语经注:
وَاٰخَرُوْنَ اعْتَرَفُوْا بِذُنُوْبِهِمْ خَلَطُوْا عَمَلًا صَالِحًا وَّاٰخَرَ سَیِّئًا ؕ— عَسَی اللّٰهُ اَنْ یَّتُوْبَ عَلَیْهِمْ ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
9.102. மதீனாவில் காரணமின்றி போரை விட்டுப் பின்தங்கிய வேறு மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் பொய்யான சாக்குப்போக்குகளைக் கூறாமல் தங்களிடம் போரை விட்டுப் பின்தங்கியதற்கான காரணங்கள் எதுவும் இல்லை என்பதை ஒத்துக் கொண்டுள்ளார்கள். அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு அவனது சட்டதிட்டங்களைப் பற்றிப்பிடித்து அவனது பாதையில் போரிட்ட தங்களின் முந்தைய நற்செயல்களோடு தீய செயலையும் கலந்துவிட்டார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பை எதிர்பார்க்கிறார்கள். நிச்சயமாக தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
阿拉伯语经注:
خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّیْهِمْ بِهَا وَصَلِّ عَلَیْهِمْ ؕ— اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْ ؕ— وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
9.103. -தூதரே!- அவர்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தைப் பெற்று அதன் மூலம் பாவங்கள் என்னும் அழுக்குகளிலிருந்து அவர்களைத் தூய்மைப்படுத்தி அவர்களின் நன்மைகளை அதிகரிப்பீராக. அவர்களிடமிருந்து வாங்கிய பிறகு அவர்களுக்காக பிரார்த்தனை புரிவீராக. நிச்சயமாக உமது பிரார்த்தனை அவர்களுக்கு அருளாகவும் நிம்மதியாகவும் இருக்கின்றது. அல்லாஹ் உம் பிரார்த்தனையை செவியேற்கக்கூடியவன். அவர்களின் செயல்களையும் எண்ணங்களையும் நன்கறிந்தவன்.
阿拉伯语经注:
اَلَمْ یَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ هُوَ یَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَیَاْخُذُ الصَّدَقٰتِ وَاَنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟
9.104. போரை விட்டுப் பின்தங்கி அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரும் இவர்கள், அவன் பாவமன்னிப்புக் கோரும் தன் அடியார்களை மன்னித்துவிடுகிறான் என்பதையும் அவன் தர்மங்களை விட்டுத் தேவையற்றவனாக இருந்த போதும் அவற்றை ஏற்றுக் கொள்கிறான், தர்மம் செய்ததற்காக அவர்களுக்கு அவன் கூலி வழங்குகிறான் என்பதையும் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.
阿拉伯语经注:
وَقُلِ اعْمَلُوْا فَسَیَرَی اللّٰهُ عَمَلَكُمْ وَرَسُوْلُهٗ وَالْمُؤْمِنُوْنَ ؕ— وَسَتُرَدُّوْنَ اِلٰی عٰلِمِ الْغَیْبِ وَالشَّهَادَةِ فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟ۚ
9.105. -தூதரே!- போரை விட்டுப் பின்தங்கிய தமது தவறிலிருந்து மீண்ட இவர்களிடம் கூறுவீராக: “உங்களுக்குத் தவறிச் சென்றவற்றினால் ஏற்பட்ட இழப்புக்களை சீர் செய்துவிடுங்கள். உங்களின் செயல்களை அல்லாஹ்வுக்காக ஆக்கிக் கொள்ளுங்கள். அவனை திருப்திப்படுத்தும் செயல்களில் ஈடுபடுங்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்பிக்கையாளர்களும் உங்களின் செயல்களைக் கவனிப்பார்கள். மறுமை நாளில் எல்லாவற்றையும் அறிந்த உங்களின் இறைவனின் பக்கம் நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் இரகசியமாகச் செய்ததையும் வெளிப்படையாகச் செய்ததையும் அவன் அறிவான். நீங்கள் உலகில் செய்து கொண்டிருந்த செயல்களைக் குறித்து அவன் உங்களுக்கு அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
阿拉伯语经注:
وَاٰخَرُوْنَ مُرْجَوْنَ لِاَمْرِ اللّٰهِ اِمَّا یُعَذِّبُهُمْ وَاِمَّا یَتُوْبُ عَلَیْهِمْ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
9.106. எவ்வித காரணமும் இன்றி தபூக் போரை விட்டுப் பின்தங்கிய வேறு சிலரும் இருக்கிறார்கள். அவர்களின் விவகாரம் அல்லாஹ்வின் தீர்ப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தான் நாடியவாறு அவன் அவர்கள் விஷயத்தில் தீர்ப்பளிப்பான். அவர்கள் மன்னிப்புக் கோரவில்லையெனில் அவன் அவர்களைத் தண்டிக்கலாம். அவர்கள் மன்னிப்புக் கோரினால் அவன் அவர்களை மன்னிக்கலாம். தன் தண்டனைக்கும் மன்னிப்பிற்கும் தகுதியானவர்களை அவன் நன்கறிவான். தான் வழங்கும் சட்டங்களில், தன் நிர்வாகத்தில் அவன் ஞானம் மிக்கவன். அவர்கள் முராரா இப்னு ரபீஃ, கஅப் இப்னு மாலிக், ஹிலால் இப்னு உமைய்யா ஆகியோராவர்.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• فضل المسارعة إلى الإيمان، والهجرة في سبيل الله، ونصرة الدين، واتباع طريق السلف الصالح.
1. ஈமான் கொள்வதன்பால் விரைதல், அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்தல், மார்க்கத்திற்கு உதவி செய்தல், முன்சென்ற நல்லவர்களின் ஸலபுகளின் வழியைப் பின்பற்றுதல் ஆகியவற்றின் சிறப்பு தெளிவாகிறது.

• استئثار الله عز وجل بعلم الغيب، فلا يعلم أحد ما في القلوب إلا الله.
2. மறைவானவற்றின் ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் மட்டுமே அறிவான்.

• الرجاء لأهل المعاصي من المؤمنين بتوبة الله عليهم ومغفرته لهم إن تابوا وأصلحوا عملهم.
3. பாவத்தில் ஈடுபட்ட இறை நம்பிக்கையாளர்கள் பாவமன்னிப்புக் கோரி தமது செயல்களை சீராக்கினால் அவர்களது பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்கலாம்.

• وجوب الزكاة وبيان فضلها وأثرها في تنمية المال وتطهير النفوس من البخل وغيره من الآفات.
4. ஸகாத் கட்டாயக் கடமையாகும் என்பதுடன் அதன் சிறப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் செல்வத்தில் வளர்ச்சி மற்றும் கஞ்சத்தனம், ஏனைய ஆபத்தானவற்றிலிருந்து உள்ளங்களைப் பரிசுத்தப்படுத்தல் போன்ற அதன் தாக்கங்களும் கூறப்பட்டுள்ளன.

 
含义的翻译 章: 讨拜
章节目录 页码
 
《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 - 译解目录

古兰经注释研究中心发行。

关闭