Check out the new design

《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 * - 译解目录


含义的翻译 章: 讨拜   段:
اَلتَّآىِٕبُوْنَ الْعٰبِدُوْنَ الْحٰمِدُوْنَ السَّآىِٕحُوْنَ الرّٰكِعُوْنَ السّٰجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ وَالْحٰفِظُوْنَ لِحُدُوْدِ اللّٰهِ ؕ— وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ ۟
9.112. இந்தக் கூலியைப் பெறக்கூடியவர்கள்தாம் அல்லாஹ் வெறுப்பவற்றிலிருந்து அவன் விரும்புபவற்றின் பக்கம் மீண்டவர்கள்; பணிவு இறை அச்சம் என்பவற்றின் காரணமாக உயர்ந்த பட்ச பணிவை வெளிப்படுத்தி அவனது வழிபாட்டில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியவர்கள்; எல்லா நிலைகளிலும் தங்கள் இறைவனைப் புகழக்கூடியவர்கள், நோன்பு நோற்கக்கூடியவர்கள்; தொழக்கூடியவர்கள்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கட்டளையிட்டதைக் கொண்டு கட்டளையிடுபவர்கள்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்தவற்றை தடுப்பவர்கள்; பின்பற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் ஏவல்களைப் பேணக்கூடியவர்கள். தவிர்ந்து கொள்வதன் மூலம் அவனது விலக்கல்களைப் பேணக்கூடியவர்கள். -தூதரே!- இந்த பண்புகளைப் பெற்ற நம்பிக்கையாளர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் மகிழ்ச்சியளிப்பவற்றைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக.
阿拉伯语经注:
مَا كَانَ لِلنَّبِیِّ وَالَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ یَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِیْنَ وَلَوْ كَانُوْۤا اُولِیْ قُرْبٰی مِنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟
9.113. இணைவைத்த நிலையிலேயே மரணித்த இணைவைப்பாளர்களுக்காக அவர்கள் நரகவாசிகள் என்பது தெளிவான பின்னர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவது தூதருக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ உகந்ததல்ல. அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே.
阿拉伯语经注:
وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِیْمَ لِاَبِیْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَاۤ اِیَّاهُ ۚ— فَلَمَّا تَبَیَّنَ لَهٗۤ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُ ؕ— اِنَّ اِبْرٰهِیْمَ لَاَوَّاهٌ حَلِیْمٌ ۟
9.114. இப்ராஹீம் தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியது அவர் தம் தந்தை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையில், அவருக்காக பாவமன்னிப்பைக் கோருவேன் என அவருக்கு அளித்த வாக்குறுதியினாலாகும். ஆனால் தம் தந்தைக்கு அறிவுரை பலனளிக்கவில்லை என்பதனால் அல்லது அவர் நிராகரிப்பாளராகவே மரணிப்பார் என்ற இறை செய்தியை அவர் அறிந்ததன் காரணத்தால் அவர் அல்லாஹ்வின் எதிரி என்று இப்ராஹீமுக்கு தெளிவான பின்னர் அவர் தம் தந்தையை விட்டும் விலகிக் கொண்டார். இப்ராஹீம் தனது தந்தைக்குச் செய்த பாவமன்னிப்பு அவரது ஒரு முடிவே தவிர அல்லாஹ் அவருக்கு வழங்கிய தீர்ப்புக்கு மாறாக தம் தந்தைக்காக பாவமன்னிப்புக் கோரவில்லை. இப்ராஹீம் அல்லாஹ்விடம் அதிகம் மன்றாடக் கூடியவராக, அநியாயக்கார தம் சமூகத்தை சகித்துக் கொள்பவராக, அவர்களை மன்னிக்கக்கூடியவராக இருந்தார்.
阿拉伯语经注:
وَمَا كَانَ اللّٰهُ لِیُضِلَّ قَوْمًا بَعْدَ اِذْ هَدٰىهُمْ حَتّٰی یُبَیِّنَ لَهُمْ مَّا یَتَّقُوْنَ ؕ— اِنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
9.115. அல்லாஹ் ஒரு சமூகத்திற்கு நேர்வழிகாட்டிய பின் தடைசெய்யப்பட்டவற்றை அவர்களுக்குத் தெளிவாக்கும் வரை அவர்களை வழிகேடர்கள் என தீர்ப்பு வழங்கமாட்டான். தடைசெய்யப்பட்டதை விளக்கிய பின்னர் அவர்கள் தடைசெய்யப்பட்ட செயல்களில் ஈடுபட்டால் அவர்களை வழிகேடர்கள் எனத் தீர்ப்பளித்துவிடுவான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. நீங்கள் அறியாமலிருந்தவற்றை அவன் உங்களுக்குக் கற்றுத் தந்துள்ளான்.
阿拉伯语经注:
اِنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— یُحْیٖ وَیُمِیْتُ ؕ— وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟
9.116. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவற்றில் அவனுக்கு எந்த பங்காளியும் இல்லை. அவையிரண்டிலும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. தான் வாழ்வளிக்க நாடியவர்களுக்கு அவன் வாழ்வளிக்கிறான்; தான் நாடியவர்களை மரணிக்கச் செய்கிறான். -மனிதர்களே!- உங்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பாளன், தீங்கிலிருந்து உங்களைக் காத்து உதவிபுரிபவன் உங்கள் எதிரிகளுக்கு எதிராக உங்களுக்கு உதவுபவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை.
阿拉伯语经注:
لَقَدْ تَّابَ اللّٰهُ عَلَی النَّبِیِّ وَالْمُهٰجِرِیْنَ وَالْاَنْصَارِ الَّذِیْنَ اتَّبَعُوْهُ فِیْ سَاعَةِ الْعُسْرَةِ مِنْ بَعْدِ مَا كَادَ یَزِیْغُ قُلُوْبُ فَرِیْقٍ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَیْهِمْ ؕ— اِنَّهٗ بِهِمْ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟ۙ
9.117. நயவஞ்சகர்களுக்கு தபூக் போரை விட்டுப் பின்தங்க அனுமதியளித்த தூதர் முஹம்மதை அல்லாஹ் மன்னித்து விட்டான். பின்தங்காத முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் அவன் மன்னித்துவிட்டான். அவர்கள் தூதரை விட்டுப் பின்தங்காமல் கடுமையான வெப்ப காலத்திலும், குறைந்த வசதியுடனும் எதிரிகள் பலமாக இருந்த போதும், அவர்களில் ஒரு பிரிவினர் போரை விட்டுவிட நாடிய பின்னரும் தபூக் போரில் அவரைப் பின்தொடர்ந்தார்கள். பின்னர் உறுதியாக நிலைத்து நிற்பதற்கும் போருக்குப் புறப்படுவதற்கும் அல்லாஹ் அவர்களுக்கு உதவி புரிந்தான். மேலும் அவன் அவர்களை மன்னித்து விட்டான். அவர்களின் விஷயத்தில் அவன் பரிவுடையவனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். அவர்களுக்குப் பாவமன்னிப்புக் கோரும் பாக்கியத்தை அளித்ததும் அதனை ஏற்றுக்கொண்டதும் அவனது அருளின் வெளிப்பாடாகும்.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• بطلان الاحتجاج على جواز الاستغفار للمشركين بفعل إبراهيم عليه السلام.
1.இணைவைப்பாளர்களுக்கு பாவமன்னிப்புத் தேடுவதற்கு இப்ராஹீம் அலை அவர்களது செயலை ஆதாரமாகக் கொள்வது தவறாகும்.

• أن الذنوب والمعاصي هي سبب المصائب والخذلان وعدم التوفيق.
2. துன்பங்களுக்கும், பலவீனத்துக்கும், உதவியில்லாமல் செல்வதற்கும், பாவங்களும் தீமைகளுமே காரணமாக அமைகின்றன.

• أن الله هو مالك الملك، وهو ولينا، ولا ولي ولا نصير لنا من دونه.
3. அல்லாஹ்தான் ஆட்சியின் சொந்தக்காரன். அவனே நமது பாதுகாவலனும் ஆவான். அவனைத் தவிர வேறு எந்த பொறுப்பாளனோ உதவியாளனோ நமக்கு இல்லை.

• بيان فضل أصحاب النبي صلى الله عليه وسلم على سائر الناس.
4. ஏனைய மனிதர்களை விட நபித் தோழர்கள் சிறந்தவர்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 
含义的翻译 章: 讨拜
章节目录 页码
 
《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 - 译解目录

古兰经注释研究中心发行。

关闭