Check out the new design

《古兰经》译解 - 泰米尔语翻译-欧麦尔·谢里夫 * - 译解目录

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

含义的翻译 章: 隋法提   段:

அஸ்ஸாபாத்

وَالصّٰٓفّٰتِ صَفًّا ۟ۙ
அணி அணியாக அணிவகுப்பவர்கள் (-வானவர்கள்) மீது சத்தியமாக!
阿拉伯语经注:
فَالزّٰجِرٰتِ زَجْرًا ۟ۙ
கடுமையாக விரட்டுகின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக!
阿拉伯语经注:
فَالتّٰلِیٰتِ ذِكْرًا ۟ۙ
வேதத்தை ஓதுபவர்கள் மீது சத்தியமாக!
阿拉伯语经注:
اِنَّ اِلٰهَكُمْ لَوَاحِدٌ ۟ؕ
நிச்சயமாக உங்கள் கடவுள் ஒருவன்தான்.
阿拉伯语经注:
رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ ۟ؕ
(அவன்தான்) வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் (-அதிபதி) ஆவான். இன்னும் (அவன்) சூரியன் உதிக்கும் இடங்களையும் (அது மறையும் இடங்களையும் அந்த சூரியனையும்) நிர்வகிப்பவன் ஆவான்.
阿拉伯语经注:
اِنَّا زَیَّنَّا السَّمَآءَ الدُّنْیَا بِزِیْنَةِ ١لْكَوَاكِبِ ۟ۙ
நிச்சயமாக நாம் கீழுள்ள வானத்தை நட்சத்திரங்களின் அலங்காரத்தால் அலங்கரித்துள்ளோம்.
阿拉伯语经注:
وَحِفْظًا مِّنْ كُلِّ شَیْطٰنٍ مَّارِدٍ ۟ۚ
இன்னும், (இறைவனுக்கு) அடங்காத எல்லா ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவும் (நட்சத்திரங்களால் வானத்தை அலங்கரித்தோம்).
阿拉伯语经注:
لَا یَسَّمَّعُوْنَ اِلَی الْمَلَاِ الْاَعْلٰی وَیُقْذَفُوْنَ مِنْ كُلِّ جَانِبٍ ۟
மிக உயர்ந்த (வானவக்) கூட்டத்தினரின் பக்கம் (அவர்களின் பேச்சை) அவர்களால் செவியுற முடியாது. எல்லா பக்கங்களில் இருந்தும் (அந்த ஷைத்தான்கள் வால் நட்சத்திரங்களால்) எறியப்படுவார்கள்.
阿拉伯语经注:
دُحُوْرًا وَّلَهُمْ عَذَابٌ وَّاصِبٌ ۟ۙ
(வானத்தை விட்டு) தடுக்கப்படுவதற்காக (அவர்கள் மீது நட்சத்திரங்கள் எறியப்படும்). இன்னும், அவர்களுக்கு (மறுமையில்) நிரந்தரமான தண்டனை உண்டு.
阿拉伯语经注:
اِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَاَتْبَعَهٗ شِهَابٌ ثَاقِبٌ ۟
எனினும், (வானவர்களின் பேச்சை) யார் திருட்டுத்தனமாக திருடுகிறாரோ (கள்ளத்தனமாக ஒட்டுக்கேட்க முயற்சிக்கிறாரோ) எரிக்கின்ற நெருப்புக் கங்கு அவரை பின்தொடர்ந்து (அவரை எரித்து)விடும்.
阿拉伯语经注:
فَاسْتَفْتِهِمْ اَهُمْ اَشَدُّ خَلْقًا اَمْ مَّنْ خَلَقْنَا ؕ— اِنَّا خَلَقْنٰهُمْ مِّنْ طِیْنٍ لَّازِبٍ ۟
ஆக, (மறுமையை மறுக்கின்ற) அவர்கள் படைப்பால் பலமிக்கவர்களா? அல்லது, (வானம் பூமி, வானவர்கள் போன்ற) நமது படைப்புகளா? என்று அவர்களிடம் விளக்கம் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களை (-மனிதர்களை) பிசுபிசுப்பான (ஒட்டிக்கொள்கின்ற நல்ல) மண்ணிலிருந்து படைத்தோம்.
阿拉伯语经注:
بَلْ عَجِبْتَ وَیَسْخَرُوْنَ ۪۟
அன்றி, (நபியே! இந்த குர்ஆன் உமக்கு கொடுக்கப்பட்டபோது) நீர் ஆச்சரியப்பட்டீர். இன்னும் அவர்கள் (உம்மையும் இந்த வேதத்தையும்) கேலி செய்தனர்.
阿拉伯语经注:
وَاِذَا ذُكِّرُوْا لَا یَذْكُرُوْنَ ۪۟
அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் அறிவுரை பெறமாட்டார்கள்.
阿拉伯语经注:
وَاِذَا رَاَوْا اٰیَةً یَّسْتَسْخِرُوْنَ ۪۟
அவர்கள் (நபியிடம்) ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் (தாங்களும் அதை) ஏளனம் கேலி செய்(து அதை கேலி செய்யும்படி பிறரிடமும் கூறு)கிறார்கள்.
阿拉伯语经注:
وَقَالُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟ۚۖ
இன்னும், “தெளிவான சூனியமாகவே தவிர இது இல்லை” என்று கூறுகிறார்கள்.
阿拉伯语经注:
ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ ۟ۙ
“நாங்கள் இறந்து, எலும்புகளாகவும், (எங்கள் சதைகள்) மண்ணாகவும் மாறிவிட்டால் நிச்சயமாக நாங்கள் (மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு) எழுப்பப்படுவோமா?”
阿拉伯语经注:
اَوَاٰبَآؤُنَا الْاَوَّلُوْنَ ۟ؕ
“இன்னும், எங்கள் முந்திய முன்னோர்களுமா (எழுப்பப்படுவார்கள்)?” (என்று அவர்கள் கேட்கிறார்கள்.)
阿拉伯语经注:
قُلْ نَعَمْ وَاَنْتُمْ دَاخِرُوْنَ ۟ۚ
“ஆம், (நீங்கள் அனைவரும் எழுப்பப்படுவீர்கள். அப்போது) நீங்கள் மிகவும் சிறுமைப்பட்டவர்களாக இருப்பீர்கள்” என்று கூறுவீராக!
阿拉伯语经注:
فَاِنَّمَا هِیَ زَجْرَةٌ وَّاحِدَةٌ فَاِذَا هُمْ یَنْظُرُوْنَ ۟
ஆக, (மறுமை நிகழ்வு) அதுவெல்லாம் ஒரே ஒரு பலமான சத்தம்தான். அப்போது அவர்கள் (மறுமையின் காட்சிகளை கண்கூடாகப்) பார்ப்பார்கள்.
阿拉伯语经注:
وَقَالُوْا یٰوَیْلَنَا هٰذَا یَوْمُ الدِّیْنِ ۟
இன்னும், எங்கள் நாசமே! என்று அவர்கள் கூறுவார்கள். (அப்போது அவர்களுக்குக் கூறப்படும்:) “இதுதான் கூலி கொடுக்கப்படும் நாள்.”
阿拉伯语经注:
هٰذَا یَوْمُ الْفَصْلِ الَّذِیْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟۠
“இதுதான் தீர்ப்பு நாள் ஆகும். இதை நீங்கள் பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்கள்.”
阿拉伯语经注:
اُحْشُرُوا الَّذِیْنَ ظَلَمُوْا وَاَزْوَاجَهُمْ وَمَا كَانُوْا یَعْبُدُوْنَ ۟ۙ
அநியாயம் செய்தவர்களையும் அவர்களின் இனத்தவர்களையும் (அவர்களைப் பின்பற்றியவர்களையும் அவர்களைப் போன்று நிராகரித்த மற்றவர்களையும்) இன்னும், அவர்கள் வணங்கி வந்தவர்களையும் ஒன்று திரட்டுங்கள்!
阿拉伯语经注:
مِنْ دُوْنِ اللّٰهِ فَاهْدُوْهُمْ اِلٰی صِرَاطِ الْجَحِیْمِ ۟
அல்லாஹ்வை அன்றி (அவர்கள் வணங்கியவர்களை கொண்டுவாருங்கள்)! ஆக, அவர்களுக்கு நரகத்தின் பாதையின் பக்கம் வழிகாட்டுங்கள்.
阿拉伯语经注:
وَقِفُوْهُمْ اِنَّهُمْ مَّسْـُٔوْلُوْنَ ۟ۙ
இன்னும், அவர்களை நிறுத்துங்கள்! நிச்சயமாக அவர்கள் (நிந்திக்கப்படுவதற்காக) விசாரிக்கப்படுவார்கள்.
阿拉伯语经注:
 
含义的翻译 章: 隋法提
章节目录 页码
 
《古兰经》译解 - 泰米尔语翻译-欧麦尔·谢里夫 - 译解目录

由谢赫欧麦尔·谢里夫·本·阿布杜·赛拉姆翻译。

关闭