《古兰经》译解 - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

页码:close

external-link copy
26 : 19

فَكُلِیْ وَاشْرَبِیْ وَقَرِّیْ عَیْنًا ۚ— فَاِمَّا تَرَیِنَّ مِنَ الْبَشَرِ اَحَدًا ۙ— فَقُوْلِیْۤ اِنِّیْ نَذَرْتُ لِلرَّحْمٰنِ صَوْمًا فَلَنْ اُكَلِّمَ الْیَوْمَ اِنْسِیًّا ۟ۚ

இன்னும் நீர் (அதை) புசிப்பீராக! (அந்த ஊற்றிலிருந்து) பருகுவீராக! கண் குளிர்வீராக! மனிதரில் யாரையும் நீர் பார்த்தால் நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பை -பேசாமல் இருப்பதை- நேர்ச்சை செய்துள்ளேன். ஆகவே, இன்று நான் எந்த மனிதனிடமும் அறவே பேசமாட்டேன் என்று கூறுவீராக! info
التفاسير:

external-link copy
27 : 19

فَاَتَتْ بِهٖ قَوْمَهَا تَحْمِلُهٗ ؕ— قَالُوْا یٰمَرْیَمُ لَقَدْ جِئْتِ شَیْـًٔا فَرِیًّا ۟

அதை (அக்குழந்தையை)க் கொண்டு அவர் (-மர்யம்) தனது மக்களிடம் அதைச் சுமந்தவராக வந்தார். அவர்கள் கூறினார்கள்: “மர்யமே! நீ ஒரு பெரிய காரியத்தைச் செய்து விட்டாய்!” info
التفاسير:

external-link copy
28 : 19

یٰۤاُخْتَ هٰرُوْنَ مَا كَانَ اَبُوْكِ امْرَاَ سَوْءٍ وَّمَا كَانَتْ اُمُّكِ بَغِیًّا ۟ۖۚ

ஹாரூனுடைய சகோதரியே! உமது தந்தை கெட்டவராக இருக்கவில்லை. உமது தாயும் நடத்தை கெட்டவளாக இருக்கவில்லை. info
التفاسير:

external-link copy
29 : 19

فَاَشَارَتْ اِلَیْهِ ۫ؕ— قَالُوْا كَیْفَ نُكَلِّمُ مَنْ كَانَ فِی الْمَهْدِ صَبِیًّا ۟

அவர் (-மர்யம்) அ(ந்)த (குழந்தையி)ன் பக்கம் ஜாடை காண்பித்தார். அவர்கள் கூறினார்கள்: “மடியில் குழந்தையாக இருக்கின்றவரிடம் நாங்கள் எப்படி பேசுவோம்!” info
التفاسير:

external-link copy
30 : 19

قَالَ اِنِّیْ عَبْدُ اللّٰهِ ۫ؕ— اٰتٰىنِیَ الْكِتٰبَ وَجَعَلَنِیْ نَبِیًّا ۟ۙ

அவர் (ஈஸா) கூறினார்: “நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமை, அவன் எனக்கு வேதத்தைக் கொடுப்பான்; என்னை நபியாக ஆக்குவான்.” info
التفاسير:

external-link copy
31 : 19

وَّجَعَلَنِیْ مُبٰرَكًا اَیْنَ مَا كُنْتُ ۪— وَاَوْصٰنِیْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَیًّا ۟ۙ

இன்னும் அவன் நான் எங்கிருந்தாலும் என்னை அருள்மிக்கவனாக (மக்களுக்கு நன்மையை ஏவுகின்றவனாக) ஆக்குவான். நான் உயிருள்ளவனாக இருக்கின்றவரை தொழுகையைக் கொண்டும் ஸகாத்தைக் கொண்டும் அவன் எனக்கு கட்டளையிட்டுள்ளான். info
التفاسير:

external-link copy
32 : 19

وَّبَرًّا بِوَالِدَتِیْ ؗ— وَلَمْ یَجْعَلْنِیْ جَبَّارًا شَقِیًّا ۟

என் தாய்க்கு நன்மை செய்பவனாகவும் (என்னை ஆக்கினான்). அவன் என்னை பெருமையுடையவனாக தீயவனாக ஆக்கவில்லை. info
التفاسير:

external-link copy
33 : 19

وَالسَّلٰمُ عَلَیَّ یَوْمَ وُلِدْتُّ وَیَوْمَ اَمُوْتُ وَیَوْمَ اُبْعَثُ حَیًّا ۟

நான் பிறந்த நாளிலும் (எனக்கு ஈடேற்றம் கிடைத்தது. அவ்வாறே,) நான் மரணிக்கின்ற நாளிலும் நான் உயிருள்ளவனாக எழுப்பப்படுகின்ற நாளிலும் எனக்கு ஈடேற்றம் உண்டாகுக! info
التفاسير:

external-link copy
34 : 19

ذٰلِكَ عِیْسَی ابْنُ مَرْیَمَ ۚ— قَوْلَ الْحَقِّ الَّذِیْ فِیْهِ یَمْتَرُوْنَ ۟

இவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா. (இந்த) உண்மையான கூற்றையே கூறுங்கள். இதில்தான் அவர்கள் தர்க்கிக்கின்றனர். info
التفاسير:

external-link copy
35 : 19

مَا كَانَ لِلّٰهِ اَنْ یَّتَّخِذَ مِنْ وَّلَدٍ ۙ— سُبْحٰنَهٗ ؕ— اِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟ؕ

குழந்தையை எடுத்துக் கொள்வது அல்லாஹ்விற்கு தகுந்ததல்ல. அவன் மகா பரிசுத்தமானவன். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம் “ஆகு” என்றுதான் அது ஆகிவிடும். info
التفاسير:

external-link copy
36 : 19

وَاِنَّ اللّٰهَ رَبِّیْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ— هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟

நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனையே வணங்குங்கள். இதுதான் நேரான பாதையாகும். info
التفاسير:

external-link copy
37 : 19

فَاخْتَلَفَ الْاَحْزَابُ مِنْ بَیْنِهِمْ ۚ— فَوَیْلٌ لِّلَّذِیْنَ كَفَرُوْا مِنْ مَّشْهَدِ یَوْمٍ عَظِیْمٍ ۟

ஆனால், பல பிரிவினர் தங்களுக்கு மத்தியில் (இது பற்றி) தர்க்கித்தனர். ஆகவே, மகத்தான நாளை அவர் (ஈஸா) காணும்போது (அந்த) நிராகரிப்பாளர்களுக்குக் கேடுதான். info
التفاسير:

external-link copy
38 : 19

اَسْمِعْ بِهِمْ وَاَبْصِرْ ۙ— یَوْمَ یَاْتُوْنَنَا لٰكِنِ الظّٰلِمُوْنَ الْیَوْمَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

அவர்கள் நன்றாக செவிசாய்ப்பார்கள், நன்றாக பார்ப்பார்கள் அவர்கள் நம்மிடம் வருகின்ற நாளில். எனினும், இன்றைய தினம் அநியாயக்காரர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருக்கின்றனர். info
التفاسير: