《古兰经》译解 - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

அல்ஹஜ்

external-link copy
1 : 22

یٰۤاَیُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ ۚ— اِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَیْءٌ عَظِیْمٌ ۟

மக்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். நிச்சயமாக மறுமையின் அதிர்வு மிகப்பெரிய ஒன்றாகும். info
التفاسير:

external-link copy
2 : 22

یَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّاۤ اَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَی النَّاسَ سُكٰرٰی وَمَا هُمْ بِسُكٰرٰی وَلٰكِنَّ عَذَابَ اللّٰهِ شَدِیْدٌ ۟

நீங்கள் அதை (அந்த அதிர்வை) பார்க்கின்ற நாளில் பால் கொடுப்பவள் எல்லோரும் தாம் பால் கொடுத்ததை (-அந்த குழந்தையை) மறந்து விடுவார்கள் (-விட்டு விடுவார்கள்). கர்ப்பம் தரித்த பெண்கள் எல்லோரும் தமது கர்ப்பத்தை (குறை மாதத்தில்) ஈன்று விடுவார்கள். மக்களை மயக்கமுற்றவர்களாக நீர் பார்ப்பீர். அவர்கள் (மதுவினால்) மயக்கமுற்றவர்கள் அல்லர். என்றாலும் அல்லாஹ்வுடைய தண்டனை மிகக் கடினமானது. info
التفاسير:

external-link copy
3 : 22

وَمِنَ النَّاسِ مَنْ یُّجَادِلُ فِی اللّٰهِ بِغَیْرِ عِلْمٍ وَّیَتَّبِعُ كُلَّ شَیْطٰنٍ مَّرِیْدٍ ۟ۙ

அல்லாஹ்வின் (ஆற்றல்) விஷயத்தில் கல்வியறிவு இன்றி தர்க்கிக்கின்றவன் மக்களில் இருக்கின்றான். (இது விஷயத்தில்) திமிரு பிடித்த கிளர்ச்சிக்காரனாகிய எல்லா ஷைத்தான்களையும் அவன் பின்பற்றுகிறான். info
التفاسير:

external-link copy
4 : 22

كُتِبَ عَلَیْهِ اَنَّهٗ مَنْ تَوَلَّاهُ فَاَنَّهٗ یُضِلُّهٗ وَیَهْدِیْهِ اِلٰی عَذَابِ السَّعِیْرِ ۟

அவன் மீது (-ஷைத்தான் மீது) விதிக்கப்பட்டு விட்டது: யார் அவனை பின்பற்றுகின்றாரோ அவரை நிச்சயமாக அவன் வழிகெடுப்பான், அவருக்கு கொழுந்துவிட்டெரியும் நெருப்பின் வேதனையின் பக்கம் வழிகாட்டுவான். info
التفاسير:

external-link copy
5 : 22

یٰۤاَیُّهَا النَّاسُ اِنْ كُنْتُمْ فِیْ رَیْبٍ مِّنَ الْبَعْثِ فَاِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَیْرِ مُخَلَّقَةٍ لِّنُبَیِّنَ لَكُمْ ؕ— وَنُقِرُّ فِی الْاَرْحَامِ مَا نَشَآءُ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ۚ— وَمِنْكُمْ مَّنْ یُّتَوَفّٰی وَمِنْكُمْ مَّنْ یُّرَدُّ اِلٰۤی اَرْذَلِ الْعُمُرِ لِكَیْلَا یَعْلَمَ مِنْ بَعْدِ عِلْمٍ شَیْـًٔا ؕ— وَتَرَی الْاَرْضَ هَامِدَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَیْهَا الْمَآءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَاَنْۢبَتَتْ مِنْ كُلِّ زَوْجٍ بَهِیْجٍ ۟

மக்களே! நீங்கள் (மறுமையில்) எழுப்பப்படுவதில் சந்தேகத்தில் இருந்தால்... நிச்சயமாக நாம்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தோம். பின்னர் இந்திரியத்திலிருந்தும் பின்னர் இரத்தக் கட்டியிலிருந்தும் பின்னர் முழுமையான உருவம் கொடுக்கப்பட்ட, முழுமையான உருவம் கொடுக்கப்படாத சதைத் துண்டிலிருந்தும் (படைத்தோம்). (இவ்வாறு முழுமையான உருவம் பெற்றதாகவும் உருவம் பெறாததாகவும் சதைத் துண்டை நாம் ஆக்குவது ஏனெனில் நமது ஆற்றலை) உங்களுக்கு விவரிப்பதற்காக ஆகும். (முழு குழந்தையாக பிறக்கவேண்டும் என்று) நாம் நாடியதை கர்ப்பப் பைகளில் குறிப்பிட்ட (முழு) தவணை வரை தங்க வைக்கிறோம். பிறகு உங்களை குழந்தைகளாக உங்களை வெளியாக்குகிறோம். பிறகு, நீங்கள் உங்களது (முழு அறிவையும்) வலிமையை(யும்) அடைவதற்காக (உங்களை வெளியாக்குகிறோம். உங்களில் (வாலிபத்தை அடைவதற்கு முன்னரே) உயிர் கைப்பற்றப்படுகின்றவரும் உண்டு. இன்னும் உங்களில் தள்ளாத வயது வரை (வாழ்வு அளிக்கப்பட்டு, பின்னர் குழந்தையாக இருந்ததைப் போன்ற பலவீனமான நிலைக்கு) திருப்பப்படுகின்றவரும் உண்டு. முடிவில் (பலவற்றை) அறிந்து இருந்ததற்குப் பின்னர் எதையும் அறியாமல் ஆகிவிடுகிறார். பூமியை அழிந்து போனதாக (-காய்ந்து போனதாக) பார்க்கிறீர். அதன்மீது நாம் மழைநீரை இறக்கினால் அது (உயிர்ப்பெற்று தாவரங்களால்) அசைகிறது. (அழகுறுகிறது.) இன்னும் (அதிக மழை பொழிவதைக் கொண்டு புற்பூண்டுகளையும் விளைச்சல்களையும்) அதிகப்படுத்துகிறது. இன்னும் எல்லா விதமான அழகிய தாவரங்களை முளைக்க வைக்கிறது. info
التفاسير: