Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አን-ኒሳዕ   አንቀጽ:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوّٰمِیْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ وَلَوْ عَلٰۤی اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَیْنِ وَالْاَقْرَبِیْنَ ۚ— اِنْ یَّكُنْ غَنِیًّا اَوْ فَقِیْرًا فَاللّٰهُ اَوْلٰی بِهِمَا ۫— فَلَا تَتَّبِعُوا الْهَوٰۤی اَنْ تَعْدِلُوْا ۚ— وَاِنْ تَلْوٗۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟
4.135. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! எல்லா சூழ்நிலைகளிலும் நீதியை நிலைநாட்டி,அனைவருக்கும் உண்மையான சாட்சி சொல்லக்கூடியவர்களாக இருங்கள். அது உங்களுக்கோ உங்களின் தாய்தந்தையருக்கோ உறவினருக்கோ எதிராக உண்மையை ஏற்றுக்கொள்வதாக இருந்தாலும் சரியே. ஒருவரின் ஏழ்மையோ செல்வமோ சாட்சியளிக்கவோ அதனை விட்டுவிடவோ உங்களைத் தூண்டிவிட வேண்டாம். உங்களை விட அல்லாஹ்வே ஏழைக்கும் செல்வந்தனுக்கும் நெருக்கமானவன். அவர்கள் இருவரின் நலன்களையும் அவனே நன்கறிந்தவன். சாட்சி கூறும்போது உங்களின் மனஇச்சையைப் பின்பற்றாதீர்கள். அவ்வாறு செய்தால் சத்தியத்தைவிட்டும் பிறழ்ந்துவிடுவீர். நீங்கள் உரிய முறைப்படி சாட்சிகூறாது அதனைத் திரிபுபடுத்தினால் அல்லது சாட்சிகூறாமல் நீங்கள் புறக்கணித்துவிட்டால் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِیْ نَزَّلَ عَلٰی رَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِیْۤ اَنْزَلَ مِنْ قَبْلُ ؕ— وَمَنْ یَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰٓىِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْیَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًا بَعِیْدًا ۟
4.136. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் தன் தூதரின்மீது அவன் இறக்கிய குர்ஆனின்மீதும் முந்தைய தூதர்களின்மீது அவன் இறக்கிய வேதங்களின்மீதும் கொண்ட நம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருங்கள். அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் வேதங்களையும் தூதர்களையும் மறுமைநாளையும் நிராகரிப்பவர் நேரான பாதையைவிட்டும் வெகுதூரமாகிவிட்டார்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّمْ یَكُنِ اللّٰهُ لِیَغْفِرَ لَهُمْ وَلَا لِیَهْدِیَهُمْ سَبِیْلًا ۟ؕ
4.137. திரும்பத் திரும்ப இஸ்லாத்தை ஏற்ற பின் அதனை நிராகரித்தவர்கள்- இஸ்லாத்தை ஏற்று பின்னர் நிராகரித்து பின்னர் இஸ்லாத்தை ஏற்று பின்னர் நிராகரித்து-அந்நிராகரிப்பிலேயே நிலைத்திருந்து மரணித்தும் விட்டவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அவர்களுக்கு தன்பக்கம் வரக்கூடிய நேரான வழியையும் காட்ட மாட்டான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
بَشِّرِ الْمُنٰفِقِیْنَ بِاَنَّ لَهُمْ عَذَابًا اَلِیْمَا ۟ۙ
4.138. தூதரே! ஈமானை வெளிப்படுத்தி நிராகரிப்பை மறைக்கும் நயவஞ்சகர்களுக்கு மறுமைநாளில் அல்லாஹ்விடத்தில் வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது என்ற நற்செய்தியைக் கூறிவிடுவீராக.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
١لَّذِیْنَ یَتَّخِذُوْنَ الْكٰفِرِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِیْنَ ؕ— اَیَبْتَغُوْنَ عِنْدَهُمُ الْعِزَّةَ فَاِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِیْعًا ۟ؕ
4.139. இந்த வேதனை ஏனெனில், அவர்கள் நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பாளர்களை உதவியாளர்களாக ஆக்கிக் கொண்டார்கள். அந்த நிராகரிப்பாளர்களை தமது உதவியாளர்களாக ஆக்கிக்கொள்வதற்கு இவர்களைத் தூண்டிய காரணம்தான் ஆச்சரியமானது. தாம் உயர்வதற்காக அவர்களிடமே பலத்தையும் பாதுகாப்பையும் வேண்டுகிறார்கள்? உதவியும் பாதுகாப்பும் முழுமையாக அல்லாஹ்விடமல்லவா உள்ளது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَقَدْ نَزَّلَ عَلَیْكُمْ فِی الْكِتٰبِ اَنْ اِذَا سَمِعْتُمْ اٰیٰتِ اللّٰهِ یُكْفَرُ بِهَا وَیُسْتَهْزَاُ بِهَا فَلَا تَقْعُدُوْا مَعَهُمْ حَتّٰی یَخُوْضُوْا فِیْ حَدِیْثٍ غَیْرِهٖۤ ۖؗ— اِنَّكُمْ اِذًا مِّثْلُهُمْ ؕ— اِنَّ اللّٰهَ جَامِعُ الْمُنٰفِقِیْنَ وَالْكٰفِرِیْنَ فِیْ جَهَنَّمَ جَمِیْعَا ۟ۙ
4.140. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் குர்ஆனில் உங்களுக்குப் பின்வரும் விஷயத்தை இறக்கியுள்ளான்: நீங்கள் ஒரு அவையில் இருக்கும்போது அல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுவதையும் கேலி செய்யப்படுவதையும் செவியுற்றால் அந்த அவையைவிட்டு வெளியேறிவிடுங்கள். அவர்கள் வேறு பேச்சில் ஈடுபடும்வரை அங்கு அமர்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. அதனைச் செவியுற்ற பிறகும் நீங்கள் அங்கு அமர்ந்திருந்தால் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதில் நீங்களும் அவர்களைப் போன்றவர்கள்தாம். ஏனெனில் அவர்கள் தமது நிராகரிப்பின் மூலம் மாறுசெய்ததைப்போன்று அவர்களுடன் சேர்ந்து அமர்ந்ததின் மூலம் நீங்கள் மாற்றம்செய்துவிடுகிறீர்கள். இஸ்லாத்தை வெளிப்படுத்தி நயவஞ்சகத்தை மறைத்திருக்கும் நயவஞ்சகர்களையும் நிராகரிப்பாளர்களையும் மறுமைநாளில் நரக நெருப்பில் ஒன்றுசேர்த்திடுவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• وجوب العدل في القضاء بين الناس وعند أداء الشهادة، حتى لو كان الحق على النفس أو على أحد من القرابة.
1. மக்களிடையே தீர்ப்பளிக்கும்போதும் சாட்சி சொல்லும்போதும் நீதியுடன் செயல்பட வேண்டும். அது தனக்கு எதிராகவோ தன் நெருங்கிய உறவினருக்கு எதிராகவோ இருந்தாலும் சரியே.

• على المؤمن أن يجتهد في فعل ما يزيد إيمانه من أعمال القلوب والجوارح، ويثبته في قلبه.
2. நம்பிக்கையாளன் தன் ஈமானை அதிகப்படுத்தி உள்ளத்தில் அதனை உறுதிப்படுத்தும் உள, உடல் ரீதியான செயல்களில் ஈடுபடுவதற்கு முழுமுயற்சி செய்ய வேண்டும்.

• عظم خطر المنافقين على الإسلام وأهله؛ ولهذا فقد توعدهم الله بأشد العقوبة في الآخرة.
3. நயவஞ்சகர்கள் மூலமாக இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பாரிய ஆபத்துண்டு. எனவேதான் அவர்களுக்கு மறுமையில் கடுமையான வேதனை உண்டு என எச்சரிக்கப்பட்டுள்ளது.

• إذا لم يستطع المؤمن الإنكار على من يتطاول على آيات الله وشرعه، فلا يجوز له الجلوس معه على هذه الحال.
4. அல்லாஹ்வின் வசனங்களுக்கும் அவனுடைய மார்க்கத்திற்கும் எதிராக பேசப்படுவோருக்கு மறுப்புத்தெரிவிக்கச் சக்தியற்ற ஒரு நம்பிக்கையாளன், அதேநிலையில் அவர்களுடன் அமர்ந்திருக்கக்கூடாது.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አን-ኒሳዕ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት