Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አን-ኒሳዕ   አንቀጽ:
وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ اَزْوَاجُكُمْ اِنْ لَّمْ یَكُنْ لَّهُنَّ وَلَدٌ ۚ— فَاِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنْ بَعْدِ وَصِیَّةٍ یُّوْصِیْنَ بِهَاۤ اَوْ دَیْنٍ ؕ— وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ اِنْ لَّمْ یَكُنْ لَّكُمْ وَلَدٌ ۚ— فَاِنْ كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ مِّنْ بَعْدِ وَصِیَّةٍ تُوْصُوْنَ بِهَاۤ اَوْ دَیْنٍ ؕ— وَاِنْ كَانَ رَجُلٌ یُّوْرَثُ كَلٰلَةً اَوِ امْرَاَةٌ وَّلَهٗۤ اَخٌ اَوْ اُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ ۚ— فَاِنْ كَانُوْۤا اَكْثَرَ مِنْ ذٰلِكَ فَهُمْ شُرَكَآءُ فِی الثُّلُثِ مِنْ بَعْدِ وَصِیَّةٍ یُّوْصٰی بِهَاۤ اَوْ دَیْنٍ ۙ— غَیْرَ مُضَآرٍّ ۚ— وَصِیَّةً مِّنَ اللّٰهِ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌ حَلِیْمٌ ۟ؕ
4.12. கணவன்மார்களே! உங்கள் மனைவியருக்கு உங்கள் மூலமோ முன்னைய கணவர் மூலமோ குழந்தைகள் இல்லையென்றால் அவர்கள் விட்டுச் சென்றவற்றில் உங்களுக்குப் பாதி உண்டு. அவர்களுக்குக் குழந்தைகள் இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றில் நான்கில் ஒருபங்குதான் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனத்தையும் அவர்களின் கடனையும் நிறைவேற்றிய பிறகே உங்களுக்கான பங்கீடு கிடைக்கும். கணவன்மார்களே! உங்களுக்குப் பிள்ளைகள் இல்லையென்றால் நீங்கள் விட்டுச் சென்ற சொத்தில் உங்கள் மனைவியருக்கு நான்கில் ஒரு பங்கு உண்டு. உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தால் நீங்கள் விட்டுச் சென்ற சொத்தில் அவர்களுக்கு எட்டில் ஒருபங்குதான் உண்டு. நீங்கள் செய்த மரண சாசனத்தையும் உங்கள் மீதுள்ள கடனையும் நிறைவேற்றிய பிறகே சொத்து பங்கீடு செய்யப்படும். இறந்தவர் ஆணோ பெண்ணோ அவருக்கு தந்தையோ பிள்ளைகளோ இல்லையெனில் ஒரு தாய்வழிச் சகோதரனோ அல்லது சகோதரியோ மட்டும் இருந்தால் அவருக்கோ அவளுக்கோ ஆறில் ஒருபங்கு தரப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட தாய்வழிச் சகோதரர்களோ சகோதரிகளோ இருந்தால் மூன்றில் ஒருபங்கை அவர்களுக்குச் சமமாக பங்கிட்டுக் கொடுத்துவிட வேண்டும். இதில் ஆண், பெண் இருவருக்கும் சமஅளவு பங்குதான் கிடைக்கும். இறந்தவரின் மரண சாசனத்தையும் அவர்மீதுள்ள கடனையும் நிறைவேற்றியபிறகே இந்தப் பங்கீடு செய்யப்படும். இறந்தவரின் மரண சாசனம் மூன்றில் ஒரு பங்கைவிட அதிகமாக இருந்து வாரிசுதாரர்களுக்கு தீங்கிழைக்கக்கூடியதாக இருந்துவிடக்கூடாது. இவ்வசனம் உள்ளடக்கியுள்ள இச்சட்டம் அல்லாஹ் உங்கள்மீது விதித்த கடமையாகும். இவ்வுலகிலும் மறுவுலகிலும் தன் அடியார்களுக்கு நன்மை தரக்கூடியவற்றை அவன் நன்கறிந்தவன். அவன் சகிப்புத்தன்மைமிக்கவன். குற்றவாளிகளை உடனுக்குடன் தண்டித்துவிட மாட்டான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
تِلْكَ حُدُوْدُ اللّٰهِ ؕ— وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ یُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ— وَذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
4.13. அநாதைகள், ஏனையவர்கள் தொடர்பாக மேற்கூறப்பட்ட சட்டங்கள் அல்லாஹ் தன் அடியார்கள் எடுத்து நடப்பதற்காக அவர்கள் மீது விதித்த சட்டங்களாகும். யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி இருக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் சுவனங்களில் பிரவேசிக்கச்செய்வான். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களை அழிவு நெருங்கவும்மாட்டாது. இறைவன் அளித்த இந்தக் கூலிதான் மகத்தான வெற்றியாகும். இதற்கு இணையான வெற்றி எதுவும் இல்லை.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَمَنْ یَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَیَتَعَدَّ حُدُوْدَهٗ یُدْخِلْهُ نَارًا خَالِدًا فِیْهَا ۪— وَلَهٗ عَذَابٌ مُّهِیْنٌ ۟۠
4.14. அல்லாஹ் வழங்கிய சட்டங்களை வீணாக்கி அதன் அடிப்படையில் செயல்படாமல் அவற்றில் சந்தேகம் கொண்டு அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறாகச் செயல்பட்டவர்கள், அவன் விதித்த வரம்புகளை மீறியவர்கள் நரகத்தில் நுழைவார்கள். அங்கு நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். அவர்களுக்கு இழிவுதரும் வேதனையுண்டு.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• لا تقسم الأموال بين الورثة حتى يقضى ما على الميت من دين، ويخرج منها وصيته التي لا يجوز أن تتجاوز ثلث ماله.
1. இறந்தவரின் மரணசாசனமும், கடனும் நிறைவேற்றிய பிறகே அவர் விட்டுச் சென்ற சொத்து பங்கீடு செய்யப்பட வேண்டும். இறந்தவரின் மரண சாசனம் அவர் விட்டுச் சென்றவற்றில் மூன்றில் ஒருபகுதியைத் தாண்டிவிடக்கூடாது.

• التحذير من التهاون في قسمة المواريث؛ لأنها عهد الله ووصيته لعباده المؤمنين؛ فلا يجوز تركها أو التهاون فيها.
2. வாரிசுரிமைச் சட்டங்களில் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில் இது அல்லாஹ்வை நம்பிக்கைகொண்ட தன் அடியார்களுக்கு வழங்கிய கட்டளையாகும். எனவே அதனை விட்டுவிடவோ அதில் அலட்சியம் செய்துவிடவோ கூடாது.

• من علامات الإيمان امتثال أوامر الله، وتعظيم نواهيه، والوقوف عند حدوده.
3. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்துவது, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பது, அவனது வரம்புகளைப் பேணுவது ஈமானின் அடையாளங்களில் உள்ளவையாகும்.

• من عدل الله تعالى وحكمته أن من أطاعه وعده بأعظم الثواب، ومن عصاه وتعدى حدوده توعده بأعظم العقاب.
4. அல்லாஹ் தனக்குக் கட்டுப்படுபவருக்கு மகத்தான கூலியை வாக்களித்திருப்பதும் அவனுடைய வரம்பை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை உண்டென எச்சரித்திருப்பதும் அவனது நீதியையும் ஞானத்தையும் சார்ந்ததாகும்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አን-ኒሳዕ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት