Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አን-ኒሳዕ   አንቀጽ:
لَا یُحِبُّ اللّٰهُ الْجَهْرَ بِالسُّوْٓءِ مِنَ الْقَوْلِ اِلَّا مَنْ ظُلِمَ ؕ— وَكَانَ اللّٰهُ سَمِیْعًا عَلِیْمًا ۟
4.148. தீய வார்த்தையை வெளிப்படையாக கூறுவதை அல்லாஹ் விரும்புவதில்லை. மாறாக அதனை அல்லாஹ் வெறுப்பதோடு அதனை எச்சரித்துமுள்ளான். ஆனால் அநீதி இழைக்கப்பட்டவர் தனக்கு அநீதி இழைத்தவனைப் பற்றி முறைப்பாடாகவோ சாபமாகவோ அதைப் போன்ற வார்த்தையினால் பதிலளிப்பதாகவோ வெளிப்படையாகக் கூற அனுமதி உண்டு. ஆயினும் அநீதி இழைக்கப்பட்டவன் தீய வார்த்தையை வெளிப்படையாகக் கூறாமல் பொறுமையாக இருப்பதே சிறந்ததாகும். நீங்கள் பேசுவதை அல்லாஹ் செவியேற்பவனாகவும் உங்களின் எண்ணங்களை நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். எனவே தீயதைக் கூறுவதிலிருந்தும் நாடுவதிலிருந்தும் எச்சரிக்கையாக இருங்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِنْ تُبْدُوْا خَیْرًا اَوْ تُخْفُوْهُ اَوْ تَعْفُوْا عَنْ سُوْٓءٍ فَاِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا قَدِیْرًا ۟
4.149. நீங்கள் நன்மையான சொல்லையோ செயலையோ வெளிப்படுத்தினாலும் அல்லது மறைத்தாலும் அல்லது உங்களுக்குத் தீங்கிழைத்தவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாலும் - நிச்சயமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் வல்லமையுடையவனாகவும் இருக்கின்றான். எனவே மன்னிப்பதை உங்களின் பண்பாக ஆக்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வும் உங்களை மன்னிக்கலாம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِنَّ الَّذِیْنَ یَكْفُرُوْنَ بِاللّٰهِ وَرُسُلِهٖ وَیُرِیْدُوْنَ اَنْ یُّفَرِّقُوْا بَیْنَ اللّٰهِ وَرُسُلِهٖ وَیَقُوْلُوْنَ نُؤْمِنُ بِبَعْضٍ وَّنَكْفُرُ بِبَعْضٍ ۙ— وَّیُرِیْدُوْنَ اَنْ یَّتَّخِذُوْا بَیْنَ ذٰلِكَ سَبِیْلًا ۙ۟
4.150. அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு அவனுடைய தூதர்களை நிராகரித்து அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர்களுக்குமிடையே பிரிவினை ஏற்படுத்த நினைப்பவர்கள், தூதர்கள் சிலரின்மீது நம்பிக்கை கொள்வோம், சிலரை நிராகரித்துவிடுவோம் என்று கூறுபவர்கள், தம்மைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் ஈமானுக்கும் நிராகரிப்பிற்குமிடையே ஒரு பாதையை உருவாக்க நினைக்கின்றார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اُولٰٓىِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ حَقًّا ۚ— وَاَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ عَذَابًا مُّهِیْنًا ۟
4.151. இவ்வழியை மேற்கொள்ளும் அவர்கள்தாம் உண்மையில் நிராகரிப்பாளர்கள். இது ஏனெனில், தூதர்கள் அனைவரையும் அல்லது அவர்களில் சிலரை நிராகரித்தவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்தவர்களாவர். மறுமைநாளில் நிராகரிப்பாளர்களுக்கு இழிவு தரும் வேதனையை நாம் தயார் செய்து வைத்துள்ளோம், அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின்மீதும் நம்பிக்கைகொள்ளாமல் கர்வம் கொண்டதற்குத் தண்டனையாக அமையும் பொருட்டு.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَالَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ وَلَمْ یُفَرِّقُوْا بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ اُولٰٓىِٕكَ سَوْفَ یُؤْتِیْهِمْ اُجُوْرَهُمْ ؕ— وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠
4.152. அல்லாஹ்வை ஈமான்கொண்டு அவனை ஒருமைப்படுத்தி அவனுக்கு யாரையும் இணையாக்காமல், அவன் அனுப்பிய தூதர்கள் அனைவரையும் - நிராகரிப்பாளர்கள் செய்வதுபோன்று அவர்களிடையே பாகுபாடு காட்டாமல் - உண்மைப்படுத்தியவர்களுக்கு அவர்களின் நம்பிக்கை மற்றும் அதனூடாக வெளிப்பட்ட நற்செயல்களுக்குக் கூலியாகப் பெரும் நன்மையை அல்லாஹ் வழங்கிடுவான். தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
یَسْـَٔلُكَ اَهْلُ الْكِتٰبِ اَنْ تُنَزِّلَ عَلَیْهِمْ كِتٰبًا مِّنَ السَّمَآءِ فَقَدْ سَاَلُوْا مُوْسٰۤی اَكْبَرَ مِنْ ذٰلِكَ فَقَالُوْۤا اَرِنَا اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ بِظُلْمِهِمْ ۚ— ثُمَّ اتَّخَذُوا الْعِجْلَ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنٰتُ فَعَفَوْنَا عَنْ ذٰلِكَ ۚ— وَاٰتَیْنَا مُوْسٰی سُلْطٰنًا مُّبِیْنًا ۟
4.153. தூதரே! யூதர்கள் உம்மிடம், “நீர் உண்மையாளர் என்பதற்கு அடையாளமாக மூஸாவுக்கு நிகழ்ந்தது போல் வானத்திலிருந்து ஒரேயடியாக ஒரு வேதத்தை அவர்களுக்கு இறக்கிக்காட்டுமாறு வேண்டுகின்றனர். இவ்வாறான அவர்களது வேண்டுதலை நீர் பெரிதாக எண்ண வேண்டாம். ஏனெனில் இவர்களின் முன்னோர்கள் மூஸாவிடம், அல்லாஹ்வைக் கண்ணெதிரில் காட்டுங்கள் என இவர்கள் கேட்டதை விட பெரிய விஷயத்தைக் கேட்டனர். அவர்கள் செய்த இக்காரியத்துக்குத் தண்டனையாக மயக்கமுற்று வீழ்ந்தனர். பின்னர் அல்லாஹ் அவர்களை உயிர்த்தெழச் செய்தான். அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன், அவனே படைத்துப் பராமரிக்கக்கூடியவன் என்பதை எடுத்துரைக்கக்கூடிய தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்னரும் அவர்கள் அல்லாஹ்வை விடுத்து காளைக் கன்றை வணங்கினர். அதன் பின்னரும் நாம் அவர்களை மன்னித்தோம். தன் சமூகத்தினருக்கு எதிராக தெளிவான ஆதாரத்தை நாம் மூஸாவுக்கு வழங்கினோம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَرَفَعْنَا فَوْقَهُمُ الطُّوْرَ بِمِیْثَاقِهِمْ وَقُلْنَا لَهُمُ ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُلْنَا لَهُمْ لَا تَعْدُوْا فِی السَّبْتِ وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟
4.154. அவர்களிடம் செய்யப்பட்டிருந்த உறுதியான உடன்படிக்கைப் பிரகாரம் அவர்கள் செயல்பட வேண்டும் என்பதற்காக, அவர்களை அச்சமூட்டும் பொருட்டு மலையை அவர்கள் மீது உயர்த்திவிட்டு, நாம் அவர்களிடம் கூறினோம், “பைத்துல் முகத்தஸின் வாயிலில் தலைகுனிந்து பணிந்தவர்களாக நுழையுங்கள்.” ஆனால் அவர்கள் தங்கள் பிட்டத்தால் தவழ்ந்தவாறு உள்ளே நுழைந்தார்கள். “சனிக்கிழமையில் வரம்புமீறி வேட்டையாடாதீர்கள்.” என்றும் நாம் அவர்களிடம் கூறினோம். ஆனால் அவர்கள் வரம்புமீறி வேட்டையாடினார்கள். அது சம்பந்தமாக நாம் அவர்களிடம் உறுதியான உடன்படிக்கை செய்திருந்தும், அவர்கள் அதனை மீறினார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• يجوز للمظلوم أن يتحدث عن ظلمه وظالمه لمن يُرْجى منه أن يأخذ له حقه، وإن قال ما لا يسر الظالم.
1. அநீதி இழைக்கப்பட்டவன் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப்பற்றி, அநியாயக்காரர்களைப்பற்றி, தனக்கு உரிமைகளைப் பெற்றுத்தருவார் என்று நம்புபவரிடம் எடுத்துரைக்கலாம். அதனை அநீதி இழைத்தவன் விரும்பாவிட்டாலும் சரியே.

• حض المظلوم على العفو - حتى وإن قدر - كما يعفو الرب - سبحانه - مع قدرته على عقاب عباده.
2. தனது அடியார்களைத் தண்டிப்பதற்குச் சக்தியிருந்தும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குவது போன்று, அநீதி இழைக்கப்பட்டவன் சக்தியிருந்தாலும் மன்னிக்குமாறு ஆர்வமூட்டப்பட்டுள்ளது.

• لا يجوز التفريق بين الرسل بالإيمان ببعضهم دون بعض، بل يجب الإيمان بهم جميعًا.
3. தூதர்கள் சிலரின் மீது நம்பிக்கைகொண்டு சிலரை நம்பாமல் பாகுபாடு காட்டுவது நிராகரிப்பாகும். தூதர்கள் அனைவரின் மீதும் நம்பிக்கைகொள்வது கட்டாயமாகும்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አን-ኒሳዕ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት