Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል-አንዓም   አንቀጽ:
ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ ۚ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ— خَالِقُ كُلِّ شَیْءٍ فَاعْبُدُوْهُ ۚ— وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ وَّكِیْلٌ ۟
6.102. மனிதர்களே! இந்த பண்புகளை உடையவன்தான் உங்கள் இறைவன். அவனைத் தவிர உங்களுக்கு வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. அவனை தவிர உண்மையாக வணங்கப்படுவதற்கு வேறு யாரும் கிடையாது. அவன்தான் எல்லாவற்றின் படைப்பாளன். எனவே அவனை மட்டுமே வணங்குங்கள். அவனே வணக்கத்திற்குத் தகுதியானவன். அவன் எல்லாவற்றின் பாதுகாவலனாக இருக்கின்றான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
لَا تُدْرِكُهُ الْاَبْصَارُ ؗ— وَهُوَ یُدْرِكُ الْاَبْصَارَ ۚ— وَهُوَ اللَّطِیْفُ الْخَبِیْرُ ۟
6.103. அவனைப் பார்வைகள் சூழ்ந்தறிய முடியாது. ஆனால் அவன் பார்வைகளை சூழ்ந்தறிந்து கொண்டிருக்கிறான். அவன் தன் நல்லடியார்களுடன் மென்மையாளனாகவும் அவர்களைக் குறித்து நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
قَدْ جَآءَكُمْ بَصَآىِٕرُ مِنْ رَّبِّكُمْ ۚ— فَمَنْ اَبْصَرَ فَلِنَفْسِهٖ ۚ— وَمَنْ عَمِیَ فَعَلَیْهَا ؕ— وَمَاۤ اَنَا عَلَیْكُمْ بِحَفِیْظٍ ۟
6.104. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான ஆதாரங்களும் சான்றுகளும் உங்களிடம் வந்துவிட்டன. யார் அவற்றைப் புரிந்து கீழ்ப்படிந்தாரோ அதன் பயன் அவருக்கே. யார் அவற்றைக் கண்டுகொள்ளாமலும் புரியாமலும் அவற்றுக்குக் கீழ்ப்படியவில்லையோ அதன் தீங்கு அவருக்கே. உங்களின் செயல்களைக் கணக்கிடுவதற்கு நான் உங்கள் மீது கண்காணிப்பாளன் அல்லன். என் இறைவனிடமிருந்து வந்த தூதராவேன். அவனே உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَكَذٰلِكَ نُصَرِّفُ الْاٰیٰتِ وَلِیَقُوْلُوْا دَرَسْتَ وَلِنُبَیِّنَهٗ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
6.105. அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கக்கூடிய ஆதாரங்களையும் சான்றுகளையும் நாம் விதம் விதமாக தெளிவுபடுத்தியது போன்று, வாக்குறுதிகள், எச்சரிக்கைகள், அறிவுரைகள் அடங்கிய வசனங்களையும் நாம் விதம் விதமாக எடுத்துரைக்கிறோம். ஆனாலும் “இது வஹியே அல்ல. உமக்கு முந்தைய வேதக்காரர்களிடமிருந்தே நீர் இதை கற்றுக் கொண்டீர்” என்று இணைவைப்பாளர்கள் கூறுவார்கள். நம்பிக்கைகொண்ட முஹம்மதுடைய சமூகத்தினருக்கு விதம் விதமான அத்தாட்சிகளை தெளிவுபடுத்துவதன் மூலம் நாம் மக்களுக்கு சத்தியத்தை விதம் விதமாகத் தெளிவுபடுத்துகிறோம். அவர்களே சத்தியத்தை ஏற்றுக் கொண்டு அதனைப் பின்பற்றுகிறார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِتَّبِعْ مَاۤ اُوْحِیَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ ۚ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ— وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِیْنَ ۟
6.106. தூதரே! உம் இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படும் சத்தியத்தைப் பின்பற்றுவீராக. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. நிராகரிப்பாளர்களையும் அவர்களின் பிடிவாதத்தையும் எண்ணி கவலையுறாதீர். அவர்களின் விடயம் அல்லாஹ்விடமே.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَلَوْ شَآءَ اللّٰهُ مَاۤ اَشْرَكُوْا ؕ— وَمَا جَعَلْنٰكَ عَلَیْهِمْ حَفِیْظًا ۚ— وَمَاۤ اَنْتَ عَلَیْهِمْ بِوَكِیْلٍ ۟
6.107. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களில் யாரும் இணைவைத்திருக்க மாட்டார்கள். தூதரே! அவர்களின் செயல்களைக் கணக்கிடும் கண்காணிப்பாளராக நாம் உம்மை அனுப்பவில்லை. நீர் அவர்களைக் கவனிப்பவருமல்ல. நீர் தூதர் மாத்திரமே. எடுத்துரைப்பதே உம்மீதுள்ள பொறுப்பாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَلَا تَسُبُّوا الَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَیَسُبُّوا اللّٰهَ عَدْوًا بِغَیْرِ عِلْمٍ ؕ— كَذٰلِكَ زَیَّنَّا لِكُلِّ اُمَّةٍ عَمَلَهُمْ ۪— ثُمَّ اِلٰی رَبِّهِمْ مَّرْجِعُهُمْ فَیُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
6.108. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடன் இணைவைப்பாளர்கள் வணங்கும் தெய்வங்கள் அற்பமானவையாக, திட்டுவதற்கு உரியவையாக இருந்தாலும் அவற்றைத் திட்டாதீர்கள். இதனால் இணைவைப்பாளர்கள் வரம்புமீறி அறியாமையால் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். இவர்களுக்கு அவர்களின் வழிகேடுகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது போல ஒவ்வொரு சமூகத்தினருக்கும் அவர்களின் செயல்களை நலவோ தீமையோ நாம் அலங்கரித்தோம். நாம் அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டியதையே அவர்கள் செய்வார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் மறுமை நாளில் தங்கள் இறைவனிடமே திரும்ப வேண்டும். இவ்வுலகில் அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் அவர்களுக்கு அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ لَىِٕنْ جَآءَتْهُمْ اٰیَةٌ لَّیُؤْمِنُنَّ بِهَا ؕ— قُلْ اِنَّمَا الْاٰیٰتُ عِنْدَ اللّٰهِ وَمَا یُشْعِرُكُمْ ۙ— اَنَّهَاۤ اِذَا جَآءَتْ لَا یُؤْمِنُوْنَ ۟
6.109. “முஹம்மது நாங்கள் கூறும் சான்றுகளில் ஏதேனும் ஒன்றை எங்களிடம் கொண்டு வந்தால் நாங்கள் அவரை நிச்சயம் உண்மைப்படுத்துவோம்” என்று இணைவைப்பாளர்கள் கடுமையான சத்தியம் செய்து கூறுகிறார்கள். தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “சான்றுகளை நான் இறக்குவதற்கு அவை என்னிடம் இல்லை. அவை அல்லாஹ்விடமே இருக்கின்றன. அவன் தான் நாடிய போது அவற்றை இறக்குகிறான். நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு என்ன தெரியும்? அவர்கள் கூறுவது போன்று சான்றுகள் இறக்கப்பட்டாலும் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். தங்களின் நிராகரிப்பிலும் பிடிவாத்திலுமே நிலைத்திருப்பார்கள். ஏனெனில் அவர்கள் நேர்வழியை விரும்பவில்லை.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَنُقَلِّبُ اَفْـِٕدَتَهُمْ وَاَبْصَارَهُمْ كَمَا لَمْ یُؤْمِنُوْا بِهٖۤ اَوَّلَ مَرَّةٍ وَّنَذَرُهُمْ فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟۠
6.110. இதற்கு முன்னர் அவர்களின் பிடிவாதத்தினால் அவர்களுக்கும் குர்ஆனுக்குமிடையே நாம் தடுப்பை ஏற்படுத்தியது போன்று சத்தியத்தை அடைய முடியாதவாறு அவர்களின் உள்ளங்களையும் கண்களையும் நாம் திருப்பிவிடுவோம். அவர்களின் வழிகேட்டிலும் அவர்களது இறைவனுக்கு முரண்படுவதிலும் தடுமாறித் திரியுமாறு அவர்களை விட்டுவிடுவோம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• تنزيه الله تعالى عن الظلم الذي ترسِّخُه عقيدة (الجَبْر)، وبيان أن كفر العباد وشركهم أمر يحدث باختيارهم.
1. நிர்ப்பந்த கொள்கை அழுத்திக்கூறும் அநீதி என்பதிலிருந்து அல்லாஹ்வைப் பரிசுத்தப்படுத்தல். அடியார்களின் நிராகரிப்பும் இணைவைப்பும் அவர்களின் தெரிவினால் ஏற்பட்டதே என்பதைத் தெளிவுபடுத்தல்.

• ليس بمقدور نبي من الأنبياء أن يأتي بآية من عند نفسه، أو متى شاء، بل ذلك أمر مردود لله تعالى، فهو القادر وحده على ذلك، وهو الحكيم الذي يُقَدِّر نوع الآية ووقت إظهارها.
2. தங்களின் புறத்திலிருந்து அல்லது தாங்கள் விரும்பிய சமயத்தில் எந்தவொரு சான்றையும் கொண்டுவரும் ஆற்றல் எந்த நபியிடமும் இல்லை. அது முழுக்க முழுக்க அல்லாஹ்வின் விருப்பத்திற்கு உட்பட்டவையாகும். அவன் மட்டுமே சான்றுகளைக் கொண்டு வருவதற்கு முழு சக்தியுடையவன். என்ன விதமான அத்தாட்சி அதனை எப்பொழுது வெளிப்படுத்த வேண்டும் என்பதை நிர்ணியிக்கும் ஞானமிக்கவன் அவனே.

• النهي عن سب آلهة المشركين حذرًا من مفسدة أكبر وهي التعدي بالسب على جناب رب العالمين.
3. பெரும் தீமையைத் தவிர்ப்பதற்காக இணைவைப்பாளர்கள் வணங்கும் தெய்வங்களைத் திட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. வரம்புமீறி அல்லாஹ்வைத் திட்டுவதே அந்த பெரும் தீமையாகும்.

• قد يحول الله سبحانه وتعالى بين العبد والهداية، ويُصرِّف بصره وقلبه على غير الطاعة؛ عقوبة له على اختياره الكفر.
4. அடியானுக்கும் நேர்வழிக்குமிடையே சில வேளை அல்லாஹ் குறுக்கிடுகிறான். அடியான் நிராகரிப்பைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதற்குத் தண்டனையாக அவனது பார்வையையும் உள்ளத்தையும் இறைவழிபாட்டை விட்டும் திருப்பிவிடுகிறான்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል-አንዓም
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት