Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል-አንዓም   አንቀጽ:
وَلَا تَقْرَبُوْا مَالَ الْیَتِیْمِ اِلَّا بِالَّتِیْ هِیَ اَحْسَنُ حَتّٰی یَبْلُغَ اَشُدَّهٗ ۚ— وَاَوْفُوا الْكَیْلَ وَالْمِیْزَانَ بِالْقِسْطِ ۚ— لَا نُكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ۚ— وَاِذَا قُلْتُمْ فَاعْدِلُوْا وَلَوْ كَانَ ذَا قُرْبٰی ۚ— وَبِعَهْدِ اللّٰهِ اَوْفُوْا ؕ— ذٰلِكُمْ وَصّٰىكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟ۙ
6.152. அநாதைகள் - பருவமடைவதற்கு முன்பே தந்தையை இழந்தவர்கள் - பக்குவ வயதை அடையும் வரை அவர்களின் செல்வங்களை நெருங்குவதையும் அல்லாஹ் தடைசெய்துள்ளான். ஆயினும் அவர்களுக்குப் பயனளிக்கும், அவர்களது செல்வத்தை வளர்க்கும் விதத்தில் அவர்களின் செல்வங்களை நீங்கள் நெருங்கலாம். அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்வதையும் தடைசெய்துள்ளான். கொடுக்கல் வாங்கலில், விற்றல் வாங்கலில் நீதியாக நடந்து கொள்வதே உங்கள் மீது கடமையாகும். ஒருவர் மீது அவர் தாங்கும் அளவுக்கே நாம் பொறுப்பு சாட்டுவோம். அளவு, நிறுவை மற்றும் ஏனையவைகளில் தவிர்க்க முடியாத கூடுதல் குறைவு ஏற்படுவது குற்றமில்லை. நீங்கள் ஒரு தகவல் அல்லது சாட்சி கூறினால் உண்மைக்குப் புறம்பானதைக் கூறுவதையும் அவன் உங்களுக்குத் தடைசெய்துள்ளான்.எந்தவொரு உறவினருக்கோ, நண்பருக்கோ பாரபட்சம் காட்டக்கூடாது. அல்லாஹ்விடம் செய்த அல்லது அவனது பெயரினால் செய்த ஒப்பந்தங்களை முறித்துவிடுவதையும் அவன் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். அவற்றை முழுமையாக நிறைவேற்றுவதே உங்கள் மீது கடமையாகும். உங்களது செயலின் விளைவுகளை நீங்கள் நினைவுகூர வேண்டும் என்பதற்காக மேற்கூறப்பட்டவற்றைக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு உறுதியான கட்டளையிடுகிறான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاَنَّ هٰذَا صِرَاطِیْ مُسْتَقِیْمًا فَاتَّبِعُوْهُ ۚ— وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِیْلِهٖ ؕ— ذٰلِكُمْ وَصّٰىكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟
6.153. வழிகேட்டின் பாதைகளைப் பின்பற்றுவதையும் அவன் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். மாறாக கோணலற்ற அல்லாஹ்வின் நேரான வழியையே நீங்கள் பின்பற்ற வேண்டும். வழிகேட்டின் பாதைகள் உங்களைப் பிரிவினையின் பக்கமும் சத்தியத்தை விட்டுத் தூரமாகவும் கொண்டு சென்றுவிடும். நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்ச வேண்டும் என்பதற்காக அவன் தன்னுடைய நேரான வழியைப் பின்பற்றும்படியே உங்களுக்கு அறிவுரை வழங்குகிறான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ثُمَّ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ تَمَامًا عَلَی الَّذِیْۤ اَحْسَنَ وَتَفْصِیْلًا لِّكُلِّ شَیْءٍ وَّهُدًی وَّرَحْمَةً لَّعَلَّهُمْ بِلِقَآءِ رَبِّهِمْ یُؤْمِنُوْنَ ۟۠
6.154. மேற்கூறப்பட்டவற்றை அறிவித்த பின்னர் நாம் மூஸாவுக்கு வழங்கிய அருட்கொடைகளை நிறைவு செய்வதற்காகவும் அவர் செய்த நற்செயல்களுக்குக் கூலி கொடுப்பதற்காகவும் மார்க்க விஷயங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்துவதற்காகவும் சத்தியத்தை அறிவிப்பதற்காகவும் அருளாகவும் அவர்கள் மறுமை நாளின்மீது நம்பிக்கைகொண்டு அதற்காக நற்செயல்களில் ஈடுபடுவதற்காகவும் தவ்ராத்தை வழங்கினோம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَهٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ فَاتَّبِعُوْهُ وَاتَّقُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟ۙ
6.155. இந்த குர்ஆன் அருள் வளமிக்க நாம் இறக்கிய வேதமாகும். உலக மற்றும் மார்க்க ரீதியான நன்மைகளை இது உள்ளடக்கியுள்ளது. எனவே அதில் இறக்கப்பட்டவற்றைப் பின்பற்றுங்கள். அவனுடைய கட்டளைகளுக்கு மாறாகச் செயல்படுவதிலிருந்து விலகியிருங்கள். அருளைப்பெறுவீர்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اَنْ تَقُوْلُوْۤا اِنَّمَاۤ اُنْزِلَ الْكِتٰبُ عَلٰی طَآىِٕفَتَیْنِ مِنْ قَبْلِنَا ۪— وَاِنْ كُنَّا عَنْ دِرَاسَتِهِمْ لَغٰفِلِیْنَ ۟ۙ
6.156. -அரபு நாட்டின் இணைவைப்பாளர்களே!- “தவ்ராத்தையும் இன்ஜீலையும் அல்லாஹ் எங்களுக்கு முன்னிருந்த யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும்தான் இறக்கினான். எங்களுக்கு எந்த வேதத்தையும் இறக்கவில்லை. எங்களது மொழியிலன்றி அவர்களது மொழியில் இருந்ததனால் அவர்களது வேதங்களை எங்களுக்குப் படிக்கத் தெரியவில்லை” என்று நீங்கள் கூறிவிடக்கூடாது என்பதற்காகவே. (இக்குர்ஆனை உங்கள் மீது இறக்கினோம்).
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اَوْ تَقُوْلُوْا لَوْ اَنَّاۤ اُنْزِلَ عَلَیْنَا الْكِتٰبُ لَكُنَّاۤ اَهْدٰی مِنْهُمْ ۚ— فَقَدْ جَآءَكُمْ بَیِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ وَهُدًی وَّرَحْمَةٌ ۚ— فَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَذَّبَ بِاٰیٰتِ اللّٰهِ وَصَدَفَ عَنْهَا ؕ— سَنَجْزِی الَّذِیْنَ یَصْدِفُوْنَ عَنْ اٰیٰتِنَا سُوْٓءَ الْعَذَابِ بِمَا كَانُوْا یَصْدِفُوْنَ ۟
6.157. யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது ஒரு வேதம் இறக்கப்பட்டது போன்று எங்கள் மீதும் ஒரு வேதம் இறக்கப்பட்டிருந்தால் நாங்களும் அவர்களை விட உறுதியாக இருந்திருப்போம் என்று நீங்கள் கூறாமல் இருப்பதற்காகவும்தான். உங்களின் தூதர் முஹம்மது மீது உங்களின் மொழியிலேயே ஒரு வேதத்தை அல்லாஹ் இறக்கிவிட்டான். அது தெளிவான ஆதாரமாகவும் சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடியதாகவும் இந்த சமூகத்திற்கு அருளாகவும் இருக்கின்றது. எனவே பலவீனமான சாக்குப் போக்குகளையும் தவறான காரணங்களையும் கூறாதீர்கள். அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து பொய்யெனக் கூறுபவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் வேறு யாருமில்லை. நம்முடைய வசனங்களைப் புறக்கணித்ததற்குக் கூலியாக அவர்களை நரக நெருப்பில் நுழைத்து கடுமையாகத் தண்டிப்போம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• لا يجوز التصرف في مال اليتيم إلّا في حدود مصلحته، ولا يُسلَّم ماله إلّا بعد بلوغه الرُّشْد.
1. அநாதைகளுக்கு நன்மை தரும் விஷயங்களில் தவிர அவர்களின் செல்வங்களைப் பயன்படுத்தக்கூடாது. அவர்கள் பக்குவ வயதை அடைந்த பின்னரே அவர்களின் செல்வங்களை அவர்களின் வசம் ஒப்படைக்க வேண்டும்.

• سبل الضلال كثيرة، وسبيل الله وحده هو المؤدي إلى النجاة من العذاب.
2. வழிகேட்டின் வழிகள் பல. அல்லாஹ்வின் பாதை மாத்திரமே வேதனையிலிருந்து பாதுகாப்பதாகும்.

• اتباع هذا الكتاب علمًا وعملًا من أعظم أسباب نيل رحمة الله.
3. இவ்வேதத்தை அறிந்து செயற்படுத்திப் பின்பற்றுவது அல்லாஹ்வின் அருளைப் பெரும் முக்கியமான காரணிகளில் ஒன்றாகும்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል-አንዓም
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት